Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கண்ணை மூடிக்கொண்டு சினிமா பார்த்தவர்கள்


முதல் உலகப்போர் முடிந்திருந்த நேரம். ஆப்ரிக்காவில் பிரெஞ்சுக்காலனி நாடுகள் ஏராளமாய் இருந்தன. பிரெஞ்சுக்காரர்கள் இந்த காலனி நாடுகளில் அடிக்கடி சினிமா காட்சிகளை காட்ட ஏற்பாடு செய்வார்கள். சினிமா அப்போது மேற்கத்திய  நாடுகளுக்கு சொந்தமான ஒன்றாக இருந்தது. 

பெரும்பாலும் அதில் வெள்ளையர்கள்தான் நடித்திருப்பார்கள். வெள்ளையர்களை உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் அடிமை என்பது போலவும் சித்தரித்திருப்பார்கள். சினிமாவில் அதிகமாக காண்பிப்பதும்  வெள்ளயர்களைத்தான். அதிகமாக புகழ்  பாடியதும் வெள்ளயர்களைத்தான்.


இந்த சினிமா காட்சிகள் ஆப்ரிக்காவின் முக்கியப் பிரமுகர்களுக்கும் மற்ற மதத் தலைவர்களுக்கும் போட்டுக்காடப்பட்டன அவர்களில் பெரும்பானவர்கள் மத அடிப்படைவாதிகள். அவர்கள் மதப்படி மனித உருவத்தை இறைவனைத் தவிர மற்றவர்கள் படைக்கக்கூடாது. அப்படி  படைப்பது தடை செய்யப்பட்ட ஒன்று. இருப்பினும் அவர்களால் தங்கள் ஆட்சியாளர்களின் உத்தரவை மீற முடியவில்லை. சினிமா காட்சிக்கு வந்திருந்தார்கள். 

வெப்பம் மிகுந்த அந்த முன்னிரவுகளில் திடீரென்று இரண்டு தூண்களுக்கு இடையே வெண்திரை கட்டுவார்கள். விளக்குகள் அணைக்கப்படும். அதிசயக்கருவி ஒன்றில் இருந்து ஒளிக்கற்றை வெண்திரையில்  பாயும். உடனே ஆப்ரிக்க மதத் தலைவர்களும் மற்றவர்களும் தங்கள் கண்களை  மூடிக்கொள்வார்கள். 

இதனால் திரையில் என்ன காட்டப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தொடர்ந்து சினிமா காட்டப்பட போது அவர்கள் மனதிலும் ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. தைரியம் மிகுந்த சிலர் படிப்படியாக கண்களை திறந்து லேசாக படம் பார்க்கத் தொடங்கினர். 

திரையில் காட்டப்பட்ட  உருவம் தெரிந்தனவே தவிர அவர்களால் கதையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. ஒரு கார், ஒரு ஆண், ஒரு பெண் ,ஒரு குதிரை என்று ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மவுன பிம்பங்களைத்தான் அவர்கள் அன்று பார்த்தனர். இவற்றை இணைத்து கதையை தெரிந்து கொள்ள இயலவில்லை. திகைப்பும் குழப்பமுமே அவர்களுக்கு மிஞ்சியது. தொடர்ந்து சினிமா பார்கத்தொடங்கிய பின்னர் தான் அவர்களுக்கு கதை புரியத் தொடங்கியது. சினிமா பார்க்காமல் கண்களை மூடிக்கொண்ட அந்த இருண்ட கண்டத்திலிருந்தும் கூட பின்னாளில் தரமான சினிமாக்கள் வெளிவந்தன என்பது தனிக்கதை!


11 கருத்துகள்

  1. அறியாத விடயம் அறிந்தேன் நண்பரே
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. இதுவரை தெரியாத புதிய செய்தி. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அறியாத தகவல். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. என்றுமே உங்கள் பதிவு வித்தியாசமானதும், ஆச்சர்யப்படவைப்பதும் ஆகும். இன்றும் அப்படியே. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வித்தியாசமான தகவல் தேடித் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. படிப்படியான முன்னேற்றங்கள்.

    இன்று எல்லோர் வீடுகளிலும்கூட சினிமா பார்க்கும் அளவுக்கு விஞ்ஞான முன்னேற்றம்.

    கண்ணைத் திறந்திருந்தாலும், மூடியிருந்தாலும் அது டி.வி யில் ஓடிக்கொண்டே உள்ளது.

    அபூர்வமான பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை