Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தூக்கத்தை கைவிடாதீர்கள்..!

தூக்கம் பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்திருக்கின்றன. அந்த வகையில் இன்னொரு ஆய்வு இது. கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த பெண் பேராசிரியர் மெட்னிக் தலைமையில் சில ஆராய்ச்சியாளர்கள் தூக்கத்தினால் கிடைக்கும் பலன்கள் குறித்த ஆய்வை நடத்தினர். 


இந்த ஆய்வுக்காக ஆண்கள், பெண்கள் என்று 77 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே நடுத்தர வயது உடையவர்கள். இவர்களிடம் மூன்று வார்த்தைகள் கொண்ட சீட்டுக்கள் கொடுக்கப்பட்டன. பிஸ்கட், இதயம், பதினாறு என்பது போன்ற வார்த்தைகள் அவற்றில் இருந்தன. 

இந்த மூன்று வார்த்தைகளுக்கும் பொருத்தமான இன்னொரு வார்த்தையை அவர்கள் கொடுக்க வேண்டும். உதாரணமாக மேலே சொல்லப்பட்ட பிஸ்கட், இதயம், பதினாறு போன்ற வார்த்தைகளுக்கு பொருத்தமான வார்த்தையாக 'இனிப்பு' என்ற சொல் இருக்கும். இது போன்று ஒவ்வொரு 3 வார்த்தைக்கும்  அதற்கு பொருத்தமான இன்னொரு வார்த்தையை தெரிவிக்க வேண்டும். 

முதல்கட்டமாக எல்லோருக்கும் இந்த வார்த்தைகள் கொடுக்கப்பட்டன. அதற்குரிய பொருத்தமான மற்ற வார்த்தைகளும் அவர்களிடம் இருந்து எழுதி வாங்கப்பட்டன. இந்த ஆய்வின் போது சிலருக்கு சிறு தூக்கம் போட அனுமதி அளிக்கப்பட்டது. 


அவர்களின் தூக்கம் எப்படிப்பட்ட தூக்கம்? ஆழ்ந்த தூக்கமா? கனவு காணும் தூக்கமா? தூங்குபவர்களின் மூளை இயக்கம் எப்படி இருக்கிறது? என்பதைக் கண்டறியும் கருவிகளும் வைக்கப்பட்டிருந்தன. தூக்கத்திற்கு பிறகு மீண்டும் அதே 3 வார்த்தைகளையும், மேலும் சில புதிய மூன்று வார்த்தைகளையும் ஆராய்ச்சியாளர்கள் கொடுத்து அவற்றுக்கு பொருத்தமான இன்னொரு வார்த்தையை சொல்லச் சொன்னார்கள். 

அப்போது அவர்கள் முதலில் சொன்ன பொருத்தமான வார்த்தைகளை காட்டிலும் மேலும் பொருத்தமான வார்த்தைகளை சொன்னார்கள். குறிப்பாக கனவு காணும் நிலையில் தூங்கியவர்கள் அதைவிட மிக மிகப் பொருத்தமான வார்த்தைகளை சொன்னார்கள். 


எனவே நல்ல தூக்கம் என்பது சிறந்த கற்பனை வளத்தையும் சிந்தனை திறனையும் கொடுக்கும். கனவு காணும் வகையில் தூங்கியவர்களுக்கு இதைவிட அதிகமான கற்பனை வளமும், சிந்திக்கும் ஆற்றலும் இருக்கிறது என்று ஆய்வாளர்கள் முடிவு செய்தனர். எனவே நன்றாக தூங்குவது மிக மிக முக்கியம்.

தூங்குங்கள்..! கனவு காணுங்கள்..! கற்பனை வானில் சிறகு விரித்து பறந்து செல்லுங்கள்..! எந்த நிலையிலும் தூக்கத்தை கைவிடாதீர்கள்..!


11 கருத்துகள்

  1. சிறப்புக் கூட்டம் ஒன்றிற்கு வெளியில் சென்று விட்டு வந்தேன். மாலை வந்தவுடன் நல்ல தூக்கம். இப்போது கொஞ்சம் விழிப்பு. உங்கள் கட்டுரையைக் கண்டேன். தூக்கம் பற்றிய தூக்கலான செய்தி. இன்னும் தூங்கப் போகவில்லையா? குட் நைட். மீண்டும் தூங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. ஆஹா நண்பரே
    தூக்கம் வராமல் தானே
    நான் தவிக்கிறேன்...
    இந்த பதிவை பார்த்து
    தூங்குகிறேன்....
    குட் நைட்...

    பதிலளிநீக்கு
  3. அருமையான செய்தி
    இனி மேலும் அதிகமாகத் தூங்க வேண்டும்
    நன்றி நண்பரே
    தம+1

    பதிலளிநீக்கு

  4. நன்றாக தூங்கினால் கற்பனை வளமும், சிந்தனைத்திறனும் அதிகாரிக்கும் என்ற தகவல் புதியது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  5. தூங்கியதால் கற்பனை வளமும் சிந்திக்கும் திறனும் ஒருவழியாக ஏற்பட்டு விட்டவர்களுக்கு பிறகு சரியாகத் தூக்கமே வராதோ என்னவோ ! :)

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உணமைதான். தூக்கம் வருவது சிரமமாக சிலருக்கு இருக்கிறது. சிலருக்கு தேவைக்கு மேல் தூக்கம் வருகிறது.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. சரிதான் கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் வளரும்...ஆனால் பாருங்கள் இந்தக் கற்பனை வளம் வந்துவிடும் போது போட்டுப் பாடாய்ப் படுத்தித் தூக்கத்தைக் கெடுத்துவிடுகிறதே ஹஹ்ஹஹஹ்....

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை