வியாழன், மார்ச் 05, 2015

நர்மதை தரும் ஆனந்தம்

அஹில்யா கோட்டை

ர்மதா நதியின் கரையில் அமைந்திருக்கும் அஹில்யா கோட்டை 250 வருடங்கள் பழமை வாய்ந்தது. இது இந்தூர் மகாராணியின் இருப்பிடமாக இருந்த இடம். 18-ம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த பெண்ணரசிகளில் குறிப்பிடத்தக்கவர் அஹில்யா பாய் ஹோல்கர். அவர் வாழ்ந்த இந்த இடம் தற்போது பாரம்பரியமிக்க தங்குமிடமாக மாறியிருக்கிறது.

மொத்தம் 14 அறைகள் இங்குள்ளன. ஒவ்வொன்றும் பழமையை பறைசாற்றும். ஃபர்னிச்சர்கள், உபயோகப்பொருட்கள் அனைத்தும் பழமையின் அம்சமே! இந்த கோட்டையில் அமர்ந்து நர்மதை நதியின் அழகைப் பார்க்க பார்க்க புதுமண தம்பதிகளுக்கு காதல் அரும்பும். அதனால்தான் இந்த இடத்தை ஹனிமூன் ஜோடிகள் தங்க சிறந்த இடம் என்று பல அமைப்புகள் தேர்ந்தெடுத்திருக்கின்றன.

எப்படி போவது?
மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து இந்தூர் 194 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சாலைப்பயணத்தில் 4 மணி நேரத்தில் வந்து சேரலாம். ரயில் போக்குவரத்தும் உண்டு.
நர்மதையின் அழகு

எங்கு தங்குவது?
அஹில்யா கோட்டையே தங்கும் இடம்தான். இங்கு இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.18,060.
அஹில்யா பாய் ஹோல்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...