வியாழன், ஜூன் 11, 2015

உயரத்தில் ஓர் உலாரு நடைபாதையை சுற்றுலாதலமாக மாற்ற முடியுமா..? முடியும் என்கிறார்கள் சீனர்கள். அங்குள்ள லூஜியாஸுய் சர்குலர் நடைமேடையைப் பார்த்தால் இது புரியும்.

இது ஒரு மிகப் பெரிய வட்ட வடிவ நடைபாதை பாலம், இது பாதைகளையும் சுற்றி இருக்கும் நிதி நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது. ஷாங்காய் பகுதியில் உள்ள புடோங் மாவட்டம் சமீபத்தில்தான் சிறப்பு பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டது.


அதனால் இந்த பகுதியில் பல நிறுவனங்களும் வணிக மையங்களும் முளைத்தன. பாதசாரிகள் சிரமமின்றி போவதற்காக 20 அடி உயரத்தில் இந்த வட்டவடிவ பாலம் கட்டப்பட்டது. இதன் அகலம் 5.5 மீட்டர். 15 மனிதர்கள் பக்கவாட்டில் ஒருவருடன் ஒருவர் இடிக்காமல் நடந்து செல்லலாம்.

நடைபாதைக்கு செல்ல படிக்கட்டுகளும், நகரும் படிகளும் உள்ளன. இரவு நேரத்தில் வண்ண மின்விளக்குகளில் பாலம் ஜொலிப்பது கண்கொள்ளாக்காட்சி. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பார்வையிடும் இடமாக இது மாறியுள்ளது.


சரி, இங்கு எப்படி போவது? சென்னையிலிருந்து புடோங் விமான நிலையத்திற்கு டிராகன் ஏர், ஏர் இந்தியா விமான சேவைகள் உள்ளன. 12 மணி நேர பயணத்தில் சென்றடையலாம். ரிட்டர்ன் டிக்கெட்டுடன் கட்டணம் ரூ.57,040-ல் இருந்து தொடங்குகிறது.

ஷாங்காய் நகரில் உள்ள கிராண்ட் சென்ட்ரல் ஹோட்டல் தங்குவதற்கு ஏற்றது. ஒருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.8,990.

நடைப்பாலத்தின் மேலே
நடைப்பாலத்தின் கீழே
46 கருத்துகள்:

 1. அறியாத அறிந்திருக்கவேண்டிய
  அற்புதமான தகவல்
  படங்களுடன் பகிர்ந்த விதம் அருமை
  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகை தந்து வாழ்த்தும் வழங்கிய நண்பருக்கு நன்றிகள்!

   நீக்கு
 2. காட்டியுள்ள படங்களும், சொல்லியுள்ள செய்திகளும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 3. பிரம்மிப்பாக ...இருக்கிறது. அழகு...நன்றி சகோ

  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 4. ஆஹா! போட வைக்கின்றன படங்கள். மனமும் ஷங்காய்க்கு பயணம் செய்ய விழைகின்றது..ஜாக்கிசான் உதவினார் என்றால் சென்று வரலாம்....நம்ம பர்ஸ் ரொம்ம்ம்ம்ம்ப கனமா இருக்கணுமே! நல்ல தகவல்! நண்பரே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜாக்கி சானுக்கு ஒரு மனு போடுவோம் நண்பரே!

   நீக்கு
  2. நண்பரே! நண்பரே????நண்பியும்தான்..ஹஹ்ஹஹ.....போட்டுருவோம் மனு ஜாக்கிக்கு...

   நீக்கு
  3. ஜாக்கியின் விலாசத்தை தேடி கொண்டிருக்கிறோம். கிடைத்ததும் மனு போடுவோம்.

   நீக்கு

 5. படங்களில் பார்க்கும்போதே அழாய் இருக்கிறது அந்த இடம். நேரில் பார்க்கும்போது இன்னும் அழகாய் இருக்கும் என எண்ணுகிறேன். தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அழகாகவே இருக்கும் நம்பிக்கையுடன் போய்வாருங்கள்.!

   நீக்கு
 6. நாங்கள் சீனா சென்றபோது ஷங்கயில் இதனைப் பார்த்தோம்

  பதிலளிநீக்கு
 7. இந்தப்பாலம் தேவகோட்டை விருசுழி ஆற்றுப்பாலத்தை விட அழகாக கட்டி இருக்கின்றார்கள் நண்பரே...
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லா கலைகளுக்குமே தேவகோட்டை ஒரு முன்னுதாரனமாக இருப்பதால் எனது அடுத்த பதிவு தேவகோட்டையைப் பற்றியதுதான். எதுவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

   நீக்கு
  2. அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பரே அது தெரியும் பிறகு சொல்கிறேன்.

   நீக்கு
  3. எப்போது நண்பரே? பதிவு வெளிவந்த பின்பா?!

   நீக்கு
 8. சீனர்கள் ,ஒரு நடைபாதையை சுற்றுலாத் தலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் ,ஆனால் .நம் நாட்டில் பல சுற்றுலாத் தலங்கள் பராமரிப்பின்றி நாசமாய் போய் கொண்டிருக்கின்றன :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் சொல்வது 100-க்கு 100 உண்மை. எனக்கும் இப்படி நிறைய முறை தோன்றி இருக்கிறது.

   நீக்கு
 9. வணக்கம் நண்பரே!

  இங்கெல்லாம் போயிருக்கிறீர்களா..?

  மிகவும் வியப்பாக உள்ளது.

  படங்களும் உங்கள் விவரணையும் அருமை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இல்லை நண்பரே, நான் இங்கெல்லாம் போனதில்லை. நான் இணை ஆசிரியராக பணியாற்றும் 'ஹாலிடே நியூஸ்' பத்திரிகையில் வெளிநாட்டு சுற்றுலா தளங்களைப் பற்றி எழுதும் போது இப்படி பல விஷயங்களை எழுதுவேன். அவ்வளவுதான்.

   நீக்கு
 10. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 11. துல்லியமான, மிக அருமையான படங்களுடனான அதிசய தகவல்.

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
 12. போகும் ஆசையைத்தூண்டும் பகிர்வு! ஆனால் விசா நிலை தனிமரத்துக்கு ஈழத்தில் பிறந்ததால் புலம்பெயர்ந்த பின்னும் சிக்கல் சகோ!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எல்லாம் சரியாகும் காலம் வரும். கவலை வேண்டாம்.

   நீக்கு
 13. எங்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்துச் சென்று உழைப்பின் மற்றொரு பரிமாணத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் செந்தில்.

  அழகாய் தான் இருக்கிறது. பாஷைப் பிரச்சினையை எப்படிச் சமாளிப்பது? உணவு சாலைகள் பற்றிய விபரங்கள், இந்த இடத்தோடு ஒட்டிய பார்க்கக் கூடிய வேறு இடங்கள்.... இப்படியும் கொஞ்சம் அறிய ஆவல். இதை மட்டும் பார்க்க என்று அவ்வளவு பணம் செலவளிக்க முடியாதில்லையா?

  இவை எல்லாவற்றையும் விட பாரதத்தின் ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கின்றன உலகின் வேறெந்த பாகத்திலும் பார்க்க முடியாத அரும் பெரும் பெருமை மிகு பொக்கிஷங்கள். ஒவ்வொரு மாநிலமும் அதற்கென கொஞ்சப் பணம் ஒதுக்கி வேலை வாய்ப்புகளைக் கொடுத்தாலே பாரதம் உலகின் முதல் தர சுற்றுலா தலமாக இருக்கும்.

  உங்களுடய இதற்கு முற்பட்ட பதிவில் இருக்கும் சனத்தொகையைப் பார்க்க மிகவும் பயமாக இருக்கு செந்தில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் மணிமேகலா,
   முதல் முறையாக வருகை தந்து உரிமையோடு பெயர் சொல்லி (வயது முதிர்ந்தவரா அல்லது ஐ.டி. ஊழியரா தெரியவில்லை) கருத்திட்ட உங்களை வரவேற்கிறேன்.
   இப்போது சீனர்களும் ஆங்கிலம் பேசத் தொடங்கிவிட்டார்கள். அதனால் பாஷை ஒரு பிரச்சனை இல்லை. சுற்றுலாவில் ஒரு இடத்தை பற்றி கூறும் போது அந்த இடத்திற்கு சென்னையில் இருந்து செல்ல எவ்வளவு செலவாகும் என்று கூறுவது இயல்பான ஒன்று. ஒரு இடத்தை மட்டும் பார்ப்பதற்காக வெளிநாட்டு சுற்றுலா செல்ல முடியாது. டிராவல் ஏஜென்டிடம் கூறி ஒரு பேக்கேஜ் டூர் தான் போக முடியும்.
   அடுத்ததாக நீங்கள் சொன்னது பாரத சுற்றுலாவைப் பற்றி, உண்மையில் நமது சுற்றுலா தளங்கள் எல்லாமே அற்புதமான பொக்கிஷம். அதை நாம் வெளிநாட்டினரைப் போல விளம்பரம் செய்வதில்லை. இதனை திறம்பட செய்தால் இந்தியா உலக அளவில் முன்னணியில் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! தொடர்ந்து வாருங்கள். நானும் தொடர்கிறேன்.

   நீக்கு
 15. எங்கள் ஊரில் ஒரு கைவிடப்பட்ட பாலம் இருக்கிறது

  எங்கள் ஊர் குடிமகன்களின் புகலிடம் அது இப்போது அங்கு ஒரு பள்ளியும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மூர் பாலங்கள் எல்லாம் குடிமகன்களின் புகழைத் தானே பாடிக்கொண்டிருக்கின்றன.

   நீக்கு
 16. காணக்கிடைக்காத படங்கள் பகிர்வுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாக்கு பதிவுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 18. இதுபோல வெளிநாட்டு சுற்றுலா தளங்களைப் பற்றி நேரம் கிடைக்கும்போது எழுதவும் சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, தொடர்ந்து படித்து வாருங்கள். கட்டாயம் உங்கள் வேண்டுகோள் அடிக்கடி நிறைவேற்றப்படும்.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...