சனி, ஜூலை 30, 2016

வாங்க.. சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கலாம்..!ங்கள் ஏரியாவில் இருக்கும் ஒருவர் சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கியிருப்பது எனக்கு அரசல்புரசலாக தெரியவந்தது. அவரிடம் நைசாக பேசி சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கும் விவரத்தை தெரிந்து கொண்டேன். நமது வலைப்பதிவர்கள் பலரும் சுவிஸ் வங்கியில் கணக்கு வைக்க ஆவலாய் ஒற்றைக்காலில் நிற்பதால், அந்த ரகசியத்தை இங்கே பகிர்கிறேன்.  

ஊழல் அரசியல்வாதிகள், சர்வாதிகாரிகள், கறுப்புப் பணத்தைப் பதுக்குவோரின் சொர்க்கம் சுவிஸ் வங்கி. இதற்கு காரணம் வங்கியின் ரகசியத்தை பாதுகாக்கும் அந்த நாட்டின் சட்டம். 

18 வயது பூர்த்தியடைந்த எந்த நாட்டவரும் சுவிஸ் வங்கியில் கணக்கு .தொடங்கலாம். 101 நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணத்தை பாதுகாப்பாக பதுக்கி வைத்திருக்கிறார்கள். சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்குவது அவ்வளவு எளிதானதல்ல. புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதில் இந்த வங்கி ஏகப்பட்ட எச்சரிக்கையோடு இருக்கிறது. அப்படியிருந்தும் ஏராளமான கணக்குகள் தினமும் தொடங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

சட்டதிட்டமெல்லாம் சாதாரணமான கணக்கு தொடங்குபவர்களுக்குத்தான். கோடிக்கணக்கில் பணம் கொட்டும் நபருக்கு இந்த கெடுபிடிகள் எதுவும் கிடையாது. இப்படிப்பட்ட கணக்கை தொடங்கிக் கொடுப்பதற்காகவே பல நிறுவனங்கள் தரகர்களாக செயல்படுகின்றன. 

வங்கி கணக்கு தொடங்குவதற்கு முன்னர் வங்கி சேவையில் உள்ள தேவைகள், பணம் பற்றிய தகவல், அடுத்த 12 மாதங்களில் எவ்வளவு பணம் முதலீடு செய்யப்படும் என்பன போன்ற விவரங்களை கணக்கு தொடங்குபவர் அளிக்க வேண்டும். கணக்கு தொடங்க பாஸ்போர்ட் இருந்தால் போதுமானது. இருப்பிடத்தை உறுதி செய்ய சமீபத்திய டெலிபோன்  பில், மின்சார ரசீது போன்றவற்றில் ஒன்றை கொடுக்கலாம். கணக்கு தொடங்கும் நபரின் பொருளாதார பின்னணி, பணம் வரும் விவரம், அதற்கான ஆவணம் ஆகியவற்றை கொடுக்க வேண்டும்.


கொடுக்கும் விவரம் உண்மையானதாக .இருக்க வேண்டும். அளிக்கும் தகவல்கள் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும். நேரில் சென்று கணக்கை தொடங்குவதற்கு மூன்று மணி நேரம்  ஆகும். தபால் மூலம் பாஸ்போர்ட் அனுப்பியும் கணக்கை தொடங்கலாம்.

கணக்கு தொடங்க குறைந்தபட்சம் 500 சுவிஸ் ஃபிராங்க் இருந்தால் போதும். ஆனால், சில வங்கிகள் 10 லட்சம் சுவிஸ் ஃபிராங்க் டெபாசிட் செய்ய சொல்கின்றன. ஒரு சுவிஸ் ஃபிராங்க் 68 ரூபாய்க்கு சமமானது. சுவிஸ் வங்கிக்கு எந்த நாட்டிலும் கிளைகள் கிடையாது.

சுவிட்சர்லாந்து 1505-ம் ஆண்டுக்குப் பிறகு எந்த நாட்டுடனும் போரில் ஈடுபட்டதில்லை, என்பதால் இங்கு அரசியல் ஸ்திரத்தன்மை மிக வலிமையாக  உள்ளது. சுவிஸ் தன்னுடைய பணப்பரிமாற்றத்துக்கு தங்கத்தை பின்னணியாக கொண்டுள்ளது. உலக அளவில் மிகவும் நிலையான மதிப்பைக் கொண்ட பணமாக சுவிஸ் பணம் கருதப்படுகிறது.


நெட் பேங்கிங், சுலபமான முதலீட்டு முறைகள் போன்றவற்றால் சிறப்பான வங்கி சேவையை வழங்குகிறது. வாடிக்கையாளர் இறந்துவிட்டால் அவருடைய வாரிசுக்கு பணம் போய் சேரும். ஆனால், வாரிசு என்று நிரூபிப்பது சுலபமில்லை. 10 வருடங்களுக்குள் எந்த வாரிசும் வரவில்லை என்றால் பத்தாவது ஆண்டில் அந்த கணக்கு செயலற்றதாகிவிடும். இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதற்காகத்தான் வாரிசுகளிடம் வங்கிக்கணக்கு விவரங்களை தெரிவிக்கும்படி தனது வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருக்கும். தொடங்கப்பட்ட வங்கிக்கணக்கை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யலாம். அதிக அளவு பணம் கணக்கில் இருந்தால் அதனை எடுக்க ஓரிரு நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும். மற்றபடி எந்த செலவும் இல்லாமல் வங்கிக்கணக்கை முடித்துக்கொள்ளலாம்.

                                                                                                                             -தொடரும் 
23 கருத்துகள்:

 1. "பிஸ்தா சாப்பிடுற அளவுக்கு நான் என்ன மஸ்தானா?" என்கிற கவுண்டமணியின் வசனம்தான் நினைவுக்கு வருகிறது! :-)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. சீக்கிரம் விவரங்களைக் கொடுங்கள். அக்கவுன்ட் ஆரம்பிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கொடுத்துவிடுகிறேன் அய்யா! அப்படியே உங்கள் புண்ணியத்தில் எனக்கும் ஒரு அக்கவுண்ட் ஏற்படுத்திக் கொடுத்துவிடுங்கள்.
   வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 3. ம்ம்ம்.. நல்ல விவரங்கள்! பெயர் பட்டியல்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போதே ஒரு பெயர் பட்டியல் கொடுத்துவிட்டேன்.
   தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 4. தெ ாடரின் இறுதியில் அவ்வங்கியில் கணக்கு வைத்திருக்கும் நம் நாட்டின் பிரபலங்களின் பெயர் பட்டியலும் தருவீர்கள் தானே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த பதிவிலேயே நமது ஆண்டிமுத்து ராசா, முத்துவேல் கருணாநிதி, கலாநிதி மாறன், ராஜிவ் காந்தி, ஹர்சத் மேத்தா போன்ற பிரபலங்களின் விவரங்கள் இருக்கிறதே.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 5. ரகசிய புலனாய்வு செய்து நம் நாட்டின் ரகசியங்களை வெளியிடுங்கள்.

  அது சரி இம்புட்டுத்தானா...கணக்குத் தொடங்க. நம்மூரைவிட எளிதாக இருப்பது போல் உள்ளது...நாங்க ரெடி கணக்குத் தொடங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெரிய மனிதர்களுக்கு எல்லாமே சுலபம்தான். அதனால் தான் உங்களுக்கு சிரமமில்லை. ஏற்கனவே இரண்டு மூன்று கணக்கு இருப்பதாக கேள்விப்பட்டேன்.
   வருகைக்கு நன்றி நண்பர்களே!

   நீக்கு
 6. இது... இது... இதுக்குத்தான் காத்துக் கொண்டிருந்தேன். இதோ, கிளம்பிவிட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியே என் பெயரிலும் சில பல கோடிகளை போட்டு புதிய கணக்கு ஒன்றை ஆரம்பித்து கொடுத்து விடுங்கள். புண்ணியமாக போகும்.

   நீக்கு
 7. நான் செல்லும் எல்லா தளங்களிலும் தம வாக்கு எப்போதுமே அளித்துவிடுவது வழக்கம்.

  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் அப்படிதான். செல்லும் தளங்களில் எல்லாம் வாக்களித்து விடுவேன். ஆனால், த ம தான் சரியாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை.
   வாக்குக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. கம்மென்ட் போட்டு விடு தம வாக்கு அளிக்க முற்பட்டால் பல சமயங்களில் வாக்குப் பட்டை மறைந்து விடுகிறது. அதனால் நான் முதலில் தம் ஓட்டு போட்டுவிட்டு பின்னர் கம்மென்ட் இடுகிறேன்.

   நீக்கு
  3. தற்போது https என்ற முறையை கூகுள் புகுத்தியிருப்பதால் பலருக்கும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. நமது url -ல் https:// என்று வந்தால் ஓட்டுப்பட்டை காணாமல் போய்விடுகிறது. அந்த https:// மட்டும் டெலிட் செய்துவிட்டு மீண்டும் எண்டர் கொடுத்தால் ஓட்டுப்பட்டை வந்து விடுகிறது. இந்த https:// தான் பல தளங்களில் பின்தொடர்பவர்கள் பட்டியலில் பின்தொடராதே என்று வருகிறது. எதற்காக கூகுள் இப்படி நம்மை சோதிக்கிறது என்று தெரியவில்லை.

   நீக்கு
 8. உள்ளூர் பாங்கிலேயே போட காசை போட முடியலே ,ஸ்விஸ் பாங்கிலா :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் பகவானே, சுவிஸ் வங்கியில் பணம் போடுபவர்கள் உள்ளூர் வங்கியில் போட முடியாது. இங்கு வருமானம் வரும் பாதையை சொல்ல வேண்டும். அங்கு எப்படியும் வந்த பணத்தை போடலாம்.

   நீக்கு
 9. வங்கிகளின் உதவி இன்றி எப்படி வரவு வைக்கப் படுகிறது.அதை எப்படி தேவைப்படும்போது எடுக்கிறார்கள் என்ற ரகசியத்தையும் சொல்லி விடுங்கள். இந்த பதிவிற்கு இருக்கும் வரவேபைப் பார்த்தால் சுவிஸ் வங்கிக் கணக்குகளின் எணிக்கை அதிகரித்து விடும் போலிருக்கிறதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்காகவே சில ஏஜென்சிகள் இங்குண்டு. அவர்களிடம் பணத்தை கொடுத்துவிட்டால் போதும் அவர்கள் குறிப்பிட்ட தொகையை தங்களின் கமிஷனாக பெற்றுக்கொண்டு அவர்களின் கணக்கில் சேர்த்துவிடுவார்கள். அந்த விவரங்களையெல்லாம் வங்கியில் கணக்கு ஆரமிபித்ததுமே வங்கி சொல்லிவிடும். நமது பதிவர்கள் யாராவது சுவிஸ் வங்கியில் கணக்கு தொடங்கி விவரங்களை சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்.
   வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 10. பதில்கள்
  1. நீங்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம். ஆனால், அவர்களிடம் அவ்வளவு பணம் இருக்காது என்று சொல்லுமளவுக்கு அவர்கள் நம்பிக்கையானவர்களும் இல்லை.

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...