முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்


லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அதைவிட மிகப் பிரமாண்டமான  பேருந்து நிலையம் இந்திய தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டுள்ளது.


சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக பலவித பிரமாண்டமான ஸ்டேடியங்கள் உருவாக்கப் பட்டன. அப்போது உருவான ஒரு பிரமாண்டம்தான் இந்த பேருந்து நிலையம். 

கிழக்கு டெல்லியில் இந்திரப்பிரஸ்தா பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும். காமன்வெல்த் கிராமத்தில்தான் இந்த பேருந்து நிலையம் உள்ளது. இதில் உள்ள மூன்று பிரதான வாசல்கள் தனித்தனியாக கிழக்கு டெல்லி, வடக்கு டெல்லி, தெற்கு டெல்லி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.

இந்த பேருந்து நிலையத்தின் பரப்பளவு 61 ஏக்கர். இதில் சாதாரணமான பேருந்துகளைவிட கூடுதலான அகலமும் நீளமும் கொண்ட தாழ்தள பேருந்துகளை ஆயிரத்துக்கும் மேல் தாரளமாக நிறுத்தலாம். அதனால் இந்த பேருந்து நிலையத்திற்கு 'மில்லினியம் பஸ் டெப்போ' என்று பெயர் வைத்தார்கள். ஏதாவது பழுது என்றால் அதை சரிசெய்வதற்கு வசதியாக பேருந்து நிலையத்திற்குள்ளே 5 பணி மனைகள் இயங்கி வருகின்றன. 

இது போக ஒரு சரக்கு மையம் வேறு இருக்கிறது. பயணிகள் கொண்டு வரும் லக்கேஜ்களில் அபாயகரமான பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்பதை கண்காணிப்பதற்காகவே அதிநவீன கண்காணிப்பு மையம் ஒன்றும் இயங்கி வருகிறது 

டெல்லி வாகனங்கள் டீசலுக்கு விடை கொடுத்து பல ஆண்டுகள் ஆகின்றன. அங்கு இயக்கப்படும் வாகனங்களில் சி.என்.ஜி. என்ற கேஸ் மட்டுமே பயன்படுத்தப் படுகிறது. இந்த கேஸிலும் மிகக் குறைந்த பட்சமாக கார்பன் வெளியிடக்கூடிய 'சி.என்.ஜி. ஹை-பிரிட்' பேருந்துகள் வந்துவிட்டன. குறைவான மாசுக்குறியீடும் சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பேருந்து ஒன்றின் விலை ரூ.1.5 கோடியாகும். இத்தகைய சிறப்பான பேருந்துகளை உலகிலேயே முதன்முதலாக இயக்கிய பெருமையும் டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கே உரியது.


காமன்வெல்த் போட்டிகளுக்காக இந்த பேருந்துகளை மாநகரில் வலம் வர வைத்திருக்கிறது, டெல்லி மாநகர போக்குவரத்துக் கழகம். நமது ஊரில் ஓடும் தாழ்தள சொகுசு பேருந்துகள் மத்திய அரசின் திட்டம் மூலம் வழங்கப்பட்டவை. இவற்றையெல்லாம் பின்னுக்கு தள்ளி விடும் அதிநவீன சொகுசு மற்றும் சுற்றுச்சூழலை கெடுக்காத பேருந்துகள் காமன்வெல்த் போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப் பட்டன.

இந்த பேருந்துகளும் அவை நிறுத்தி வைக்கப்படும் பிரமாண்டமான பேருந்து நிலையமும் காமன்வெல்த்தால் இந்தியாவுக்கு கிடைத்த பெருமை. இவற்றையெல்லாம் மூடிமறைத்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது காமன்வெல்த் முறைகேடு என்பது சற்று வருத்தத்திற்கு உரியதுதான்.

யமுனை நதிக்கரையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதால் சுற்றுச்சூழல் மாசுப்பட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. 


கருத்துகள்

 1. நம்ம ஊரில் ஓடும் சொகுசுப் பேருந்துகள் பழசாகிவிட்டன ,புதிய பேருந்துகளை மீண்டும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டு வாங்கினால் பயணிகளுக்கு நல்லது !உலக அளவில் , பொதுப் போக்குவரத்து அதிகப் படுத்தப்பட வேண்டுமென்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் சொல்வது நன்மை தரக்கூடியதே !

  பதிலளிநீக்கு
 2. ஒவ்வொரு நாட்டு வீண் பெருமைக்கு மட்டும் குறைச்சலே இல்லை ....

  பதிலளிநீக்கு
 3. ஒரு காரியம் செய்தால் வரவேற்பு இருக்கும் அதே அளவு எதிர்ப்பும் இருக்கும் என்று தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 4. நம்ம ஊர் சொகுசு பேருந்துகள் அரதப் பழசாக ஆகிவிட்டது! டெல்லி பேருந்து நிலையத் தகவல்கள் அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 5. பெருமையான விடயம் நண்பரே இதுவே டெல்லியைவிட தேவகோட்டையில் இருந்தால் மேலும் சிறப்பு.
  த.ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேவகோட்டையில் இது போன்ற ஒரு பேருந்து நிலையத்தை கில்லர்ஜி என்பவர் உருவாக்கியதாக நாளை சரித்திரம் சொல்லும் என்று நினைக்கிறேன்.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 6. காமன்வெல்த் சமயம் துவங்கப்பட்டது. அதிலும் நிறைய குளறுபடிகள் உண்டு! யமுனையின் படுகையில் தற்காலிகமாக அமைக்கப்பட்டது என்றாலும் தொடர்ந்து செயல்படுகிறது - கோர்ட்டில் இன்னும் கேஸ் நடந்து கொண்டிருக்கிறது! அப்போது வாங்கப்பட்ட பல பேருந்துகள் இப்போதும் இருந்தாலும் சரியான பராமரிப்பு இல்லாததால் பழுதடைந்து போய்விட்ட பேருந்துகள் பல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் அங்கேயே இருப்பதால் பலவற்றை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்திருப்பீர்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

   நீக்கு
 7. பிரமாண்டமான பேருந்து நிலையம் உள்ள நாடுகள் தகவல் உங்க பதிவு மூலமே முதல் தடவையாக அறிந்து கொண்டேன். நன்றி. நீங்க தயாரித்த குறும்படத்தில் இந்திய குழந்தைகளின் யதார்த்தமான வாழ்கை நிலை, இஸ்ரேல் குழந்தைகளின் வசதியான வாழ்கை நிலைகளை பார்க்கவேண்டி ஏற்பட்டதால் உலக அளவிலே பிரமாண்டமான பேருந்து நிலையம் உள்ள நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு வந்தததில் மகிழ்ச்சியடைய முடியவில்லை.
  சிந்துவின் வெற்றியை நோக்கிய நகர்வு மகிழ்ச்சியை தருகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிந்துவின் வெற்றியும் நம்மை ஏமாற்றி விட்டது. தங்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 8. நல்ல விஷயம்தான் ஆனால் இதிலும் நிறைய பிரச்சனைகள் இருப்பது தெரிகிறதே! ஏதோ கேஸ் கூட நடப்பதாகத் தெரிகிறது ஆற்றின் படுகையில் கட்டப்பட்டது என்று...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. வருகைக்கு நன்றி !

   நீக்கு
 9. சீக்கிரமே மற்ற மாநிலங்களும் இவற்றைப் பயன்படுத்தவது நல்லது

  பதிலளிநீக்கு
 10. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு

அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.
கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.
தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.
இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள்…

பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை

யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம். 

பத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..!

பொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ காய்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம். 
அப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது  என்கிறார்கள்.  இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தன…

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2

இந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..
கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1
காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவ…

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...