புதன், மார்ச் 25, 2015

இப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம்

னித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 'கற்பு' என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது 'மானுடவியல்' படித்தவர்களுக்கு தெரியும்.

மாதொருபாகனில் வரும் வறடிக்கல் சுற்றும், பதினாலாம் நாள் திருவிழாவும் பலவடிவங்களில் பல்வேறு சமூகங்களில் இருந்தவைதான். இன்றைக்கும் கூட இப்படிப்பட்ட சமூகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஒரு ஆண் பல பெண்களை மணந்து கொள்வது, சில வருடங்களுக்கு முன்பு வரை ஆணுக்கு பெருமையான சமாச்சாரமாக இருந்தது. அதைப் போலவே சில சமூகங்களில் ஒரு பெண் பல ஆண்களை மணந்து கொள்வதும் சாதாரண நிகழ்வாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு இனம் தான் 'டுரோக்பா'.

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இன மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இவர்கள் கொண்டாடும் 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.


விழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.
பின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.

அதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.

இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

படம்: felix features

===


46 கருத்துகள்:

 1. மகாபாரதத்தின் தொடக்கமே ஒரு மாதொருபாகன் கதை தானே !!! வியாசரோடு விசித்திரவீரயனின் விதவை மனைவிகள் புணர்ந்து தான் கௌரவ, பாண்டவ வம்சமே உருவானது. அக்காலங்களில் விந்து தானம், சோதனைக் குழாய் குழந்தைகள் என்றெல்லாம் இல்லை என்பதால் வம்சம் தழைக்க இப்படியான முறையை கைக்கொண்டனர். இதனை வெளிப்படையாக கூறும் மகாபாரத நூலை யாரும் தடை செய்யவோ, தீயிலிட்டு கொளுத்தவோ மாட்டார்கள் என நம்புகின்றேன். நன்றிகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..!

   இது போன்று நிறைய கதைகள் உண்டு. நாகரிகமாக சூரியன் கொடுத்தது. சந்திரன் கொடுத்தது என்று சொல்லிக் கொள்வார்கள்.

   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 2. செந்தில் குமார்,

  நல்ல வேலை லடாக் என்பதால் பிழைத்தீர்கள். தமிழ் நாட்டில் இன்னொரு இடத்தில் இதே போல் நடக்கிறது என்று எழுதினால் முருகன் பெருமாள் கூட உங்கள் பக்கம் வரமாட்டார்.

  அறியாத தகவல். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. புராணக் கதைகளில் இல்லாததா? பெரும்பான்மையான பழங்குடி மக்களிடம் ஒரு காலகட்டத்தில் இருந்ததுதான்....ஆம் இது பற்றியும் வாசித்டது உண்டு. மிக அழகாகச் சொல்லி உள்ளீர்கள். அழகான பதிவுகளாகத் தருகின்றீர்கள். வாழ்த்துக்கள்!

  நீங்கள் சொல்லுவது போல் கற்பு என்பதெல்லாம் மிக லேட்டாக வந்ததுதான்.....சமூகம் என்று வந்து கோட்பாடுகள் வரையறுக்கப்பட்ட போதுதான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் ஆழமானதாக உள்ளது. பாராட்டுகளுக்கும் நன்றி!

   நீக்கு
 4. உலகப் பழங்குடிகள் மத்தியில் இன்றளவும் இப் பழக்கம் உள்ளது. அதேபோல் பெண்ணின் கணவனால் குழந்தை கிட்டவில்லையெனில் , கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் குழந்தையைப் பெற்று சந்ததி விருத்தியையும், சொத்தையும் பேணும் பழக்கம், இலைமறைகாயாக இன்றளவும் மிக மேம்பட்ட சமுதாயங்களில் கூட மிக நாசூக்காக ,நடக்கிறது. அது கணவனுக்கும் தெரியும் ஆனாலும்- வீட்டுக்கு வெளியே உள்ள ஆணுடன் செல்வதிலும் இது கேவலமில்லை எனும் எண்ணம்- முழுக்குடும்பத்தையும் இதைக் கண்டும் காணாமல் சகித்துக் கொள்ள வைக்கிறது.
  அப்பெண்ணைப் பொறுத்தமட்டில் மலடிப் பட்டத்தில் இருந்து விடுதலை என்பதே! தலையான உளப் பிரச்சனை! அத் தீர்வுக்காக அவர்களும் தயாராகிறார்கள்.
  இப்போதுள்ள நவீன வைத்திய வசதிகளில் இத் தேவைகள் குறைந்துள்ளன. ஆனால் அங்காங்கே இவை இருந்துள்ளது.
  மறைக்க முடியாத உண்மை!
  காலம் கடந்து வந்த மாதொருபாகன் பிரச்சனை, பெருமாள் முருகனில் வஞ்சம் தீர்க்க காத்திருந்தோர் எடுத்த தும்பு!!!


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக நேர்த்தியான கருத்துப் பதிவு. மனித சமூகம் தாங்கிக் கொண்டுள்ள பல இன்னல்களை பதிவு செய்திருக்கிறீர்கள். குடும்பத்திற்குள் நடக்கும் இது போன்ற சம்பவங்களையும் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். மானிடவியல் பற்றி தெரியாதவர்கள் போடும் கூப்பாடுதான் மாதொருபாகன் பிரச்சனை.

   தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
  2. யோகன் பாரிஸ் மிக தெளிவான விமர்சனம். தொலை நோக்கு பார்வையும் கூட.

   நீக்கு
 5. அன்புள்ள அய்யா,

  'டுரோக்பா'. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில்தான் இந்த இனத்தைச் சேர்ந்த பெண் தன் விருப்பத்துக்குகேற்ப எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பதை சொல்லியிருந்தீர்கள் .

  அருமையாகச் சொல்லியிருந்தீர்கள்...! உண்மையை எழுத்தாளர்கள் சொல்லக் கூடாது... கோபம் வரும்...! பொய்யைக் கடவுள் பெயரால் கூறலாம்... எந்தக் கடவுளாவது எப்படிப் பிறந்தார் என்று அவர்கள் கூறும் கதையை/உண்மைக்கு புறம்பானதை நம்பும்படியாக உள்ளதா?

  பொய் கூறுபவனுக்கத்தான் காலம்...!

  நன்றி.
  த.ம. 5.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையை எழுத்தாளர்கள் சொல்லக் கூடாது... கோபம் வரும்...! பொய்யைக் கடவுள் பெயரால் கூறலாம்... எந்தக் கடவுளாவது எப்படிப் பிறந்தார் என்று அவர்கள் கூறும் கதையை/உண்மைக்கு புறம்பானதை நம்பும்படியாக உள்ளதா?

   அருமையான கருத்து!

   வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 6. எவ்வளவு ஒற்றுமை ...மேம்பட்ட நாகரீகம் என்று காசு கொளுத்தவனும்,பழங்குடிகாரனும் ஒரே காரியத்தைத் தான் செய்கிறார்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான், பண்பாடு, கலாச்சாரம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்துக்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கிறது. பெரிய இடத்திலும் அது கண்டுகொள்ளப் படவில்லை. அடிமட்டத்திலும் கண்டுகொள்ளவதில்லை.

   வருகைக்கு நன்றி பகவான்ஜி!

   நீக்கு
 7. ****இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.***

  இதற்காக இம்முறையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையே. அரசாங்கம் இந்த மக்களுக்கு "காண்டம்" சப்ளை பண்ணி, இதைத் தொடர்ந்து நடத்தச் சொல்லி இவ்வினத்தை காப்பாற்றலாம்..இவ்வளவு தூரம் திறந்த வெளி உடலுறவு கொள்ளும் இவர்களுக்கு தேவையான செக்ஸ் கல்வி அறிவு இல்லாதது பரிதாபம்தான்.

  I think "Mr. Murugan" should take this responsibility for teaching this tribes how to use condom during groups sex intercourse properly so that they can continue this "tradition" successfully. I think he is wasting his time here sitting in brutal Tamilnadu!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Ha! Ha!
   Pease read the article first sir and then give your loose comments!

   ///இவர்கள் கொண்டாடும் 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.///

   What an intelligent advice from a brainy person to use condom and get pregnant?

   நீக்கு
  2. You need to read what I have quoted. If they sleep around on that particular day just for "getting pregnant" I don think they will lead to this "extinct situation". I think their culture itself so fucked up, they get involved in "orgy" and "unprotected sex" all year long, not just that day. Certainly they need to learn how to use condom to avoid becoming a "history"! Murugan is needed there. Send him over there with a big bag of condoms! lol

   நீக்கு
  3. ////இவர்கள் கொண்டாடும் 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' மாதொருபாகனை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் வினோதம். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த திருவிழா நடைபெறும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் தான் அதற்கென்று ஒதுக்கப்பட்ட நாட்கள். இந்த விழாவில் கருத்தரிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன.

   விழா நாட்களில் திறந்தவெளியில் பவுர்ணமி நிலவு வெளிச்சத்தில் அனைத்து ஆண்களும் பெண்களும் ஒன்று கூடுவார்கள். முதலில் இதற்கென்றே ஸ்பெஷலாக தயாரிக்கப்பட்ட மதுவகையை அனைவரும் அருந்துவார்கள்.

   பின்னர் இசைக்கருவிகள் இசைக்க ஆடிபாடுவார்கள். நேரம் ஆக ஆக போதை தலைக்கேறும். உடைகள் குறையும். முடிவில் நிர்வாண நடனம் ஆடுவார்கள்.

   அதன்பின் ஆணும் பெண்ணும் வெட்டவெளியிலே ஒன்று கூடுவார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடிய விடிய உறவு நீடிக்கும். இப்படி தாங்கள் உறவு கொள்வதை மற்ற இன மக்கள் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் ஊர் எல்லையில் பலத்த காவல் போட்டிருப்பார்கள். அதை மீறி யாரும் உள்ளே போகமுடியாது.

   இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.////

   I am sorry sir! You are quoting out of context. As per your quote///****இந்த இன மக்கள் இப்படி தாறுமாறாக உறவு கொள்வதால் இவர்களுக்கு பாலியல் நோய்கள் அதிகம் வருகின்றன. முறையற்ற உறவு மேலும் பல சிக்கல்களை அவர்களுக்கு தருகின்றன. இதனாலே இந்த இனம் வேகமாக அழிந்து வருவதாக ஜம்மு காஷ்மீர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.***/// these tribe have sex for only getting pregnant and only on that day. At least this author has no where said that they have these kind of sex on all days.

   It is funny that you take a paragraph ffor your convenience and intrepret and comment as you like!

   It would be better in comments are based on the entire context of the article. What readers would see here is your hatred fro Murugan!

   நீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  5. I dont believe whatever author has described here is what EXACTLY happened or happening there.You seem very naive and gullible as you eat whatever fed you here! That tribes do not know what is "oruvanukku oruthi culture" is all about. They are uncivilized and living like animals. That's why they all going to die like animals. They will become like dinosaurs soon! STD will kill them all unless Murugan does something about it!

   May be we had AIDS outbreak 1000 years ago. That's how we invented this culture! That's how we survive today!

   நீக்கு
  6. I accept that evryone is naive except you!

   Come on man! talk about waht the article says here;
   Please read your last statement. Dinosaur! Aids! what are youtalking man?

   let us discuss that is pertinent to this artilce not what you *think* about tribes. Accept that you llost the argument and mone on!

   நீக்கு
  7. You dont understand. I am saying this article does not describe the real sex life of those tribes completely. The article also addresses the issue that they all might die of sexually transmitted diseases as they have "uncontrolled sex". That's the price you pay for such acts. That's what matters to me. There is a reason behind why we do what we do today. We are evolving and learning lessons from past and refine our culture for "long living". Once in a while someone like this Murugan fucks up the refined culture by showing some bullshit. Some people show some other bullshit to defend whatever he says. That's what happening here. You want to overlook the part where it is talking about STDs. I want to highlight that part only. Yeah we all see what we want to see. You dont have to see what I see. You can just be a "happy winner"! Congratulations! :)

   நீக்கு
  8. /// You can just be a "happy winner"! Congratulations! :///

   At last you aceepted!

   Anyways-Thanks!

   நீக்கு
  9. Too bad you happened to be an "anonymous guy". You could not take the credit for your "great achievement" with the name you use with your "original id"! It is a pity! lol

   நீக்கு
  10. You are also an anononi! Just beacuse if you keep a name it does not mean you are Varun! I can also open an account with the name Varun!

   நீக்கு
  11. It is not easy to steal someone's identity. It is illegal too. Because you are an anonymous guy, you could say that. Otherwise, cyber police might get you easily for making such statement. BTW, you could never become "Varun" even if you do "gene therapy" and try to mimic my "genome"! ROTFL

   நீக்கு
  12. What is illegal? Are you telling me that your real name is varun?
   Ha! ha! hahahaa! Ha! ha! hahahaa! Ha! ha! hahahaa! you make me laugh!
   You are a TRUE anoni. Some of your readers may believe you are varun. But not me. By the way who wants to steal an anoni's identity like you!

   If you publish your real identifying features such as your name, working place, photohraph, etc etc then stealing your ID is crime. Cyber police konws that. Not a fake person like you!

   Examples of genuine IDs: Amuthavan, Tamil Elango, Dr. Kanthasamy, Mrs. Thulasi Gopal, Mrs. Vallisimhan, Chennaipithan, MuthuNilavan and many...bit not you..

   You may want to show your identity like these people, and till then you stop calling everyone as Anoni as you are an Anoni Mr. Varun Anoni

   One quyestios is Varun is a copyrighted name like Bill Gates?

   நீக்கு
  13. One anonymous guy says:

   ****By the way who wants to steal an anoni's identity like you!***

   Another anonymous guy said..

   ***I can also open an account with the name Varun! ****

   They all have the same name as "பெயரில்லா"!!!

   Now the first anonymous guy and second anonymous guy are the same or different guy??? Too much confusion now! LOL

   --------------------

   ***One quyestios is Varun is a copyrighted name like Bill Gates?***

   No I am saying "பெயரில்லா" can be anybody's name unlike "வருண்"! You dont seem to understand anything properly! ROTFL

   நீக்கு
  14. First, show your real ID like Amuthavan, Tamil Elango, Dr. Kanthasamy, Mrs. Thulasi Gopal, Mrs. Vallisimhan, Chennaipithan, MuthuNilavan and many... till the you are an Anoni!
   Undersatnd Anoni with a fake name Varun

   நீக்கு
 8. ***யோகன் பாரிஸ்(Johan-Paris)புதன், 25 மார்ச், 2015 ’அன்று’ 6:34:00 பிற்பகல் IST

  உலகப் பழங்குடிகள் மத்தியில் இன்றளவும் இப் பழக்கம் உள்ளது. அதேபோல் பெண்ணின் கணவனால் குழந்தை கிட்டவில்லையெனில் , கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் மூலம் குழந்தையைப் பெற்று சந்ததி விருத்தியையும், சொத்தையும் பேணும் பழக்கம், இலைமறைகாயாக இன்றளவும் மிக மேம்பட்ட சமுதாயங்களில் கூட மிக நாசூக்காக ,நடக்கிறது. அது கணவனுக்கும் தெரியும் ஆனாலும்- வீட்டுக்கு வெளியே உள்ள ஆணுடன் செல்வதிலும் இது கேவலமில்லை எனும் எண்ணம்- முழுக்குடும்பத்தையும் இதைக் கண்டும் காணாமல் சகித்துக் கொள்ள வைக்கிறது.
  அப்பெண்ணைப் பொறுத்தமட்டில் மலடிப் பட்டத்தில் இருந்து விடுதலை என்பதே! தலையான உளப் பிரச்சனை! அத் தீர்வுக்காக அவர்களும் தயாராகிறார்கள்.
  இப்போதுள்ள நவீன வைத்திய வசதிகளில் இத் தேவைகள் குறைந்துள்ளன. ஆனால் அங்காங்கே இவை இருந்துள்ளது***

  Really?

  Is that all you know? I think you need to write about more stories you know. Like father-in-law getting involved and helping the daughter-in-law to get rid of the "infertile" label. Have not you heard anything like that. Or you are just being very humble and hesitating to talk about the TRUTH?

  பதிலளிநீக்கு
 9. நண்பரே,

  உங்களின் தளத்துக்கு முதல் முறையாக வருகிறேன்...

  நண்பர் காரிகனின் பின்னூட்டத்தை சிரிப்புடன் படித்தாலும் யதார்த்தம் அதுவாக தான் இருக்கிறது !

  புராணக் கதைகளில் மட்டுமல்ல, நவீன இலக்கியமும் இது போன்ற எத்தனையோ தனிமனித, சமூக வழக்கங்களை பதிவு செய்துள்ளது... இனியும் செய்யும் !

  கற்பு என்ற வார்த்தைக்கு களங்கம் என கதறுபவர்களை நினைத்தால் " பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருண்டுவிட்டதாக நினைக்கும் " என்ற எங்கள் ஊரின் சொலவடைதான் ஞாபகம் வருகிறது...

  அதுசரி, நவீன டெஸ்ட் டியூப் முறை பற்றி இவர்களுக்கு யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும் !!!

  எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
  http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் முறையாக எனது தளத்திற்கு வருகை தரும் தங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து கருத்திடுங்கள். வேலைப் பளுவால் தங்கள் வலைப்பூவை பார்க்கமுடியாயவில்லை. நேரம் கிடைத்ததும் படிக்கிறேன்.

   நன்றி நண்பரே!

   நீக்கு
 10. இது இவ்விடம் சம்பந்தமில்லாத ஒரு தகவல், ஆனால் எங்கே இதை பதிவு செய்வது என எனக்குத் தெரியவில்லை. தமிழில் மிகவும் பிரபலமாக இருந்த பதிவர் (இக்பால்) செல்வன் கடந்த 2014 நவம்பர் மாதம், சாலை விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். பதிவுலகில் யாராவது எழுதுவார்களா என பார்த்தேன். யாரும் எழுதவில்லை. அவருடைய கல்லூரி தோழர் ஒருவர் எனக்கும் நண்பர் என்பதால், இந்த தகவலை நானும் அறிந்து அதிர்ச்சியடைந்தேன். செல்வா என்ற பெயரில் கவிதைகள் எழுதி இருக்கின்றாராம். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். திருச்சி, கோவை நகரில் கல்வி கற்று சிறிது காலம் வெளிநாட்டில் இருந்து விட்டு, சென்னையில் பணியாற்றி இருக்கின்றார். அவரது வயது 28 மட்டுமே. இந்த தகவலை இவ்விடத்தில் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். நன்றிகள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பர் இக்பால் செல்வனின் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். நான் சமீப காலமாக தான் வலைபக்கத்திருக்கு வந்துள்ளேன். இப்போதுதான் நண்பர்கள் ஒவ்வொருவரையும் தெரிந்து கொண்டு வருகிறேன். அதனால், இக்பால் செல்வனை பற்றி தெரியவில்லை.
   மன்னிக்கவும்.

   நீக்கு
  2. மிக்க நன்றி விஜய் ஆனந்த. இந்தத் தகவலுக்கு, இவர் எங்கள் தளத்தில் சில பதிவுகளுக்கு மிக அருமையான கருத்துக்களைச் சொல்லி இருக்கின்றார். கொஞ்ச நாட்களாகக் காணவில்லையே என்று நினைத்திருந்தோம்..ஆனால் பதிவுலகில் இப்படிப் பதிவர்கல் காணாமல் போவதும் (வேலைப் பளு முக்கியமாக, வயதனவர்கள் என்றால் உடல் நலக் குறைவு, ஆசிரியர்கள் என்றால் தேர்வு சமயம் இப்படி ஏதாவது ஒரு காரணம் ) பின்னர் தொடருவதும் இயல்பு என்பதால் அதை சாதாரண ஒரு நிகழ்வாக எடுட்துக் கொண்டுவிட்டோம்.

   அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனைகள். நன்றி விஜய் ஆனந்த அவர்களே!

   நீக்கு
  3. விஜய் ஆனந்த்: உங்களுக்கு எதுவும் ஒரிஜினல் ஐடி இல்லையா? திடீர்னு எங்கே இருந்து முளைத்தீர்கள்? நீங்க சொல்வதையெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை. இக்பால் செல்வனும், அவர் தளமும் மறைவது இது முதல் முறை அல்ல.

   நீக்கு
  4. ///////விஜய் ஆனந்த்: உங்களுக்கு எதுவும் ஒரிஜினல் ஐடி இல்லையா? /////
   Ha! Ha!!! Hi! Hi!! Hoo! Hoo! ore comdey pa!
   Ee_yathaip_paarthu Ilicahthaam Pthialai!   Ha! Ha!!! Hi! Hi!! Hoo! Hoo! ore comdey pa!

   //////விஜய் ஆனந்த்: உங்களுக்கு எதுவும் ஒரிஜினல் ஐடி இல்லையா? /////
   Ippadiyum sollam: Sathaan vetham othuthu!

   நீக்கு
 11. 'கர்ப்பம் தரிக்கும் திருவிழா' பற்றிய செய்திகளோடு, இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லாடக் மாவட்டத்தில் தாணு என்ற இடத்தில் வாழும் 'டுரோக்பா'
  இன மக்களின் அழிவுக்குரிய காரணத்தை அறிய தந்த நல்ல பதிவு.
  தொடருங்கள் நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...