சினிமா துறையில் நீண்ட காலமாய் இருக்கும் நண்பர் ஒருவரை சந்தித்தேன். பரஸ்பர நல விசாரிப்புக்கு பிறகு பேச்சு சினிமாவை நோக்கி திரும்பியது. நடிகர் நடிகைளில் தொடங்கி தொழில்நுட்பத்தில் வந்து முடிந்தது.
நமக்கெல்லாம் சினிமா ஷூட்டிங் என்றாலே நடிகர்கள் மற்றும் கேமரா தான் நினைவுக்கு வரும். அதற்கு அடுத்தபடியாக நமது நினைவுக்கு வருவது 'கிளாப்' அடிப்பதுதான். இது எதற்காக என்ற கேள்வி அடிக்கடி தோன்றும். அதையே அவரிடம் கேட்டேன். அதில் ஸீன் மற்றும் டேக் நம்பர் இருக்கும் என்பது மட்டும்தான் எனக்கு தெரியும். ஆனால், இந்த கிளாப் போர்ட் இல்லாமல் ஒரு சினிமா படத்தை உருவாக்கவே முடியாது என்று நண்பர் கூறினார். இதனால் தான் பட பூஜையின் போது கிளாப் போர்ட், ஸ்கிரிப்ட் வைத்து பூஜை போடுகிறார்கள் என்றார்.
பொதுவாக சினிமா நாம் திரையில் பார்ப்பது போல் வரிசையாக கிரமமாக எடுக்கப்படுவதில்லை. மாறி மாறி காட்சிகளை எடுப்பார்கள். இவற்றையெல்லாம் எடிட்டிங்கில் ஒன்றாக தொடுப்பார்கள். இதற்கு உதவுவதுதான் 'கிளாப் போர்ட்' என்றார்.
மேலும் அவர், "இப்போது டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் காட்சியும் ஒலியும் ஒரே இடத்தில் பதிவாகிறது. இந்த வசதியெல்லாம் ஆரம்பக் கால சினிமாவில் இல்லை. ஷூட்டிங்கில் கேமரா மூலம் பிலிமில் காட்சி பதிவாகும். வசனம் என்பது கேமராவுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத ஒலிப்பதிவு நாடாவில் பதிவாகும். இந்த இரண்டையும் ஒன்றாக இணைக்கும் மந்திரக் கோல் இந்த கிளாப் போர்ட்.
ஒரு கிளாப் போர்டில் பல விஷயங்கள் குறிப்பிடப் பட்டிருக்கும். எடுக்கப் போகும் ஷாட், ஸீன் நம்பர், டேக் நம்பர், இன்டோர், அவுட்டோர் போன்ற எல்லா விவரங்களும் அதில் இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் சத்தமாக சொல்லித்தான் கிளாப் போர்டை 'டொக்' என்று அடிப்பார்கள். அந்த 'டொக்'தான் பிலிம் காட்சிக்கும் ஒலிநாடா ஆடியோவுக்குமான இணைப்பு பாயிண்ட்.
ஷூட்டிங் முடிந்த பின்பு லேப்பில் பிலிமை பிரிண்ட் போட்டு முடிந்ததும், கிளாப் அடிக்கும் இடத்தையும், ஆடியோ டேப்பில் பதிந்திருக்கும் 'டொக்' சத்தத்தையும் சரியாக பொருத்தினால் வசனமும் வாயசைப்பும் கச்சிதமாக பொருந்திகொள்ளும்.
இந்த 'கிளாப்' அடித்தலை 'சவுண்ட் கிளாப்', 'சைலண்ட் கிளாப்', 'எண்டு கிளாப்' என்று மூன்று வகையாக பிரிக்கிறார்கள். பொதுவாக கிளாப் போர்டில் படப்பிடிப்பு நடக்கும் தேதி, காட்சியின் இரவு-பகல் அம்சம் குறித்த விவரம், வசனம் உள்ளதா இல்லையா என்ற விவரம், காட்சி எண், ஷாட் எண் மற்றும் டேக் எண் ஆகியவை இருக்கும்.
வசனம் இல்லாத காட்சி என்றால் கிளாப் அடிக்க மாட்டார்கள். ஏனென்றால், அந்தக் காட்சியில் ஒலிப்பதிவு கருவியே இருக்காது. பிறகு எதற்கு தேவையில்லாமல் 'டொக்' சத்தம். கேமரா ஓட ஆரம்பித்ததும் கிளாப் போர்டை மட்டும் கேமரா முன் சில நொடிகள் காண்பித்து எடுத்துக் கொள்வார்கள். அதில் அந்த காட்சியின் எண், ஷாட் எண் மற்றும் டேக் எண் போன்ற விவரங்கள் இருக்கும். இதைத்தான் 'சைலண்ட் கிளாப்' என்கிறார்கள்.
'சவுண்ட் கிளாப்'பில் படபிடிப்பை போலவே சத்தமும் முக்கியத்துவம் பெறுகிறது. கேமராவில் வெறும் காட்சிகளும் உருவமும் மட்டுமே பதிவாகும் வசனமோ சத்தமோ பதிவாகாது என்பதால் தனியாக 'நாகரா' என்ற ஒரு ஸ்பூல் டேப் ரிக்கார்டரில் ஒலிப்பதிவு செய்வார்கள். இந்த இரண்டையும் ஒன்றாக்குவதுதான் சவுண்டு கிளாப்பின் வேலை. கேமரா ஓடத்தொடங்கியதும் கிளாப் அடிக்கப் படுகிறது. அது படமாக பதிவாகிறது. அதே சமயம் கிளாப் அடிக்கும் சத்தம் நாகர டேப்பில் பதிவும் ஆகிறது.
'எண்டு கிளாப்' என்பது லாங் ஷாட்டாக வரும் காட்சிகளிலும் சில கஷ்டமான காட்சிகளை படமாகும் போதும் இதை பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரி காட்சிகளை படமாக்கும் போது சிலவற்றில் காட்சி தொடங்கும் நேரத்தில் கிளாப் அடிக்க முடியாது. இதனால் இத்தகைய காட்சிகளை முதலில் எடுத்து விடுவார்கள்.
ஷாட் முடிந்த பிறகும் கேமரா ஓடிக்கொண்டே இருக்கும். அப்போது பிரேமிற்குள் ஓடிச்சென்று கிளாப் போர்டை தலைகீழாக பிடித்துக் கொண்டு அடிப்பதுதான் எண்டு கிளாப். படத்தொகுப்பின் போது தலைகீழாக கிளாப் போர்ட் வந்தால் அதற்கு முன்புதான் காட்சி எடுக்கப் பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தற்போது டிஜிட்டல் கிளாப் போர்ட், அக்ரிலிக் கிளாப் போர்ட், எல்.இ.டி. கிளாப் போர்ட் என்று கிளாப் போர்டுகள் நவீன வடிவம் பெற்றுள்ளது." என்று முடித்தார் அவர்.
அம்மாடி, கிளாப் அடித்தலில் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா..!
இது சரியாக இல்லையென்றால் எடிட்டிங்க் செய்பவர் பாடு திண்டாட்டம் தான்...
பதிலளிநீக்குநிச்சயமான உண்மை, கிளாப் போர்ட் இல்லையென்றால் எடிட்டிங் செய்யவே முடியாது.
நீக்குமின்னல் வேகத்தில் வருகை தந்து வாக்களித்த தங்களுக்கு நன்றி!
நன்றி நண்பரே எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு அடுத்து எடுக்கப்போகும் ஜாக்கி ஷான் படத்திற்க்கு கால்ஷீட்டு வாங்கி விட்டேன் கையில் துட்டு இட்டாத காரணத்தால் தாமதம்.
பதிலளிநீக்குஅசத்துங்கள் ஜி!
நீக்குதாங்கள் எடுக்கப் போகும் ஜாக்கி ஷான் படத்தை பார்க்க ஆவலாய் உள்ளோம்.
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!
சினிமாவில் ‘கிளாப்’ அடித்தல் சம்பந்தமாக அறியாதன அறிந்து கொண்டேன். தகவலுக்கு நன்றி.
பதிலளிநீக்குத.ம.4
வருக அய்யா!
நீக்குஎன் தளத்திருக்கு வருகைதந்து வாக்களித்து கருத்திட்டதற்கு நன்றி!
சினிமா எடிட்டிங் பற்றி செய்திகளை அறியத் தந்தது அருமை.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஇவ்வளவு விஷயம் இருக்கா இதில் என்று நினைக்கத்தோன்றுகிறது.
பதிலளிநீக்குஇன்னும் கூட இருக்கிறது. அது சாமானியர்களுக்கு தேவையில்லை என்பதால் விட்டுவிட்டேன்.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
ஆஹா எங்கள் சப்ஜெக்ட்....நாங்கள் பதிவர்கள் நண்பர்கள் ஒரு குழுவாக குறும்படம் எடுக்கின்றோம். இப்போது கூட ஒரு குறும்படம் மே 3, 4 பாலக்காட்டில். நம் பதிவர் நண்பர்கள் அதில் பங்கெடுக்கின்றார்கள். நாங்களும் அவர்கள் எடுக்கும் படங்களில் பங்கெடுப்பதுண்டு. கிளாப் பற்றி நன்றாகவே தெரிஉந்திருந்தாலும் குறும்படத்தில் உபயோகிப்பதில்லை. ஆனால் சீன், ஷாட் பிரித்து, எத்தனை டேக் வாங்குகின்றது, எந்த டேக் ஓகே ஆகிறது....அதை காமேரா ஃபில்ம் நம்பரும் குறித்துக் கொள்வோம்....எடிட்டிங்க் செய்ய ய்பயோகமாக இருக்கும் ......இப்போதெல்லாம் நீங்கள் சொல்லி இருப்பது போல் பரவாயில்லை....ஆனால் முன்பு குரல் தனி,,,,காமெரா தனி.....ரொமப்வே கஷ்டம்.....இப்போது ம்கியவும் எளிதாக்கிவிட்டது இந்த டிஜிட்டல் யுகம்......குறும்படங்களில் கூட பல சித்து வேலைகள் செய்து சமாளிக்கலாம்....
பதிலளிநீக்குடிஜிட்டல் தொழிநுட்பம் வந்தப் பின் சினிமா எடுப்பது கூட சுலபமாகிவிட்டது. இன்று நிறைய படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வருவதற்கு பிலிம் இல்லாமலே சாதாரண ஸ்டில் கேமராவில் கூட படம் எடுக்க முடியும் என்ற வசதி இருப்பதால்தான்.
நீக்குஉங்களைப் போன்றே நாங்களும் குறும் படங்களும், சில விளம்பரப் படங்களும் நண்பர்களுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!
நான் வேண்டுமானால் 'பாக்கி ஜான் 'கால்சீட் வாங்கி தருகிறேன் ,கில்லர்ஜி,நீங்கள் கொடுத்த அருமையான தகவலைப் பயன்படுத்திக் கொள்ளட்டும் :)
பதிலளிநீக்குஆஹா..! கருத்துரையிலும் நகைச்சுவை விளையாடுகிறதே.
நீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி ஜி!
புதிதாக சிலவிடயங்கள் அறிந்துகொண்டேன்.. சூப்பர்..
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குசினிமா சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுதி வருபவர்கள் கூட இந்த தகவல்களை எழுதியதில்லை .
பதிலளிநீக்குதங்களின் கருத்துரை மேலும் இப்படிப்பட்ட பதிவுகளை எழுத தூண்டுகிறது.
நீக்குகருத்துரையிடுக