• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, ஏப்ரல் 26, 2015

  ரசிக்க சில ரயில் நிலையங்கள்  யிலில் பயணம் செய்வதே ஒரு அலாதியான அனுபவம். ரசனைமிக்க இந்த அனுபவம் ரயில் பயணத்தில் மட்டுமல்ல, அவை நின்று செல்லும் ரயில் நிலையங்களிலும் உண்டு. அதிலும் சில ரயில் நிலையங்கள் ரசிக்கத்தக்க கட்டடக்கலையில் மிளிர்கின்றன. பாரம்பரியம், பிரமாண்டம், நவீனம் என்ற மூன்று வகையிலும் முதன்மையாக விளங்கும் இந்த ரயில் நிலையங்கள் சுற்றுலாவிலும் சிறந்து விளங்குகின்றன.

  பாரம்பரியம்

  பாரம்பாரியத்தில் இந்தியாவை அடித்துக் கொள்ளமுடியாது. உலகில் பல நாடுகளை ஆங்கிலேயர்கள் அடிமைப்படுத்தி வைத்திருந்தாலும், இயற்கை வளம் நிறைந்த இந்தியாவிற்கு எல்லாமே விரைவாக கிடைத்தன. அப்படி கிடைத்தவற்றில் ரயில்வேயும் ஒன்று.

  சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்
  அவர்கள் உருவாக்கிய இந்திய ரயில் நிலையம் ஒன்று யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதன் பெயர் 'சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ்'. இது மும்பை ரயில் நிலையத்தின் பெயர். 1887-ல் கோத்திக் மற்றும் மொஹல் கட்டடக்கலையை இணைந்து உருவாக்கிய அழகின் உச்சம் இது. பெடரிக் வில்லியம் ஸ்டீபன் என்பவர்தான் இந்த பொக்கிஷத்தை வடிவமைத்தவர். 


  முதலில் விக்டோரியா டெர்மினல் என்று பிரிட்டிஷ் மகாராணியின் பெயரைத்தான் வைத்தார்கள். 1996 வரை அதே பெயர்தான் நீடித்தது. அதன்பின்தான் மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் பெயரை இதற்கு வைத்தார்கள். 


  இந்தியாவின் மிக பிஸியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று. 18 நடைமேடைகளை கொண்ட நிலையம். மும்பைக்கு சுற்றுலா செல்பவர்கள் இந்த ரயில் நிலையத்தை ரசிக்காமல் திரும்புவதில்லை.   பிரமாண்டம் 


  'கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்'
  இந்தியாவிற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ் என்றால், அமெரிக்காவிற்கு 'கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ்' தான். நியூயார்க்கின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்று இந்த சுரங்க ரயில் நிலையம். அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து போகும் இடங்களில் இது ஆறாவது இடத்தில் இருக்கிறது.


  வருடத்திற்கு 2.6 கோடி பயணிகள் இந்த ரயில் நிலையத்தின் மூலம் பயணிக்கிறார்கள். உலகத்திலேயே அதிகமான பிளாட்பாரங்கள் கொண்ட ரயில் நிலையமும் இதுதான். மொத்தம் 44 பிளாட்பாரங்கள். அமெரிக்க சுற்றுலா பட்டியலில் கிராண்ட் சென்ட்ரல் டெர்மினஸ் முதன்மையாக இருக்கிறது.
  நவீனம்

  நவீனத்தின் உச்சம் என்று சொன்னால் அது பெல்ஜியம் நாட்டில் உள்ள 'லீஜ்-கெலமைன்ஸ்' ரயில் நிலையம்தான். உலகில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் விக்டோரியா காலத்திலும் எட்வர்ட் ஆட்சியிலும் கட்டப்பட்டவையாகவே இருக்கின்றன. 

  'லீஜ்-கெலமைன்ஸ்' ரயில் நிலையம்
  நவீன ரயில் நிலையங்கள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தால் நம் கண் முன் வந்து நிற்பது லீஜ்-கெலமைன்ஸ் தான். 2009-ல் திறக்கப்பட்ட இந்த நிலையம் அதற்குள் உலக சுற்றுலா பயணிகளின் செல்லமாக மாறி இருக்கிறது. 


  ஸ்டீல், கண்ணாடி, வெள்ளை காங்கிரிட் கொண்டு அமைக்கப்பட்ட 105 அடி உயர எலிவேஷன், அனைவரையும் வசீகரித்து இழுக்கிறது. பெல்ஜியத்தின் நம்பர் ஒன் சுற்றுலா மையமாக இது திகழ்கிறது. 

  ஸ்டீல் கண்ணாடி கூரை 

  படங்கள்: கூகுள் இமேஜ்


  18 கருத்துகள்:

  1. அற்புதம் நண்பரே
   ஒவ்வொரு ரயில் நிலையமும் வியப்பில் ஆழ்த்துகிறது
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. முதலில் வருகைதந்து வாக்களித்த நண்பருக்கு நன்றி!

    நீக்கு
  2. பதில்கள்
   1. வாக்களித்து அசரவைத்த டிடி சாருக்கும் நன்றி!

    நீக்கு
  3. arumai aruami naan indiya rail nilaiyangkal patri eduthu vaithulleen. athil mumbaiyum irukku. aanaa ivlo azaga illa :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் தேனம்மை மேம்,

    முதன் முறையாக எனது தளத்திற்கு விஜயம் செய்து கருத்திட்டமைக்கு நன்றி!

    இந்தியாவின் அழகான ரயில் நிலையங்கள் என்று இன்னும் ஒரு பதிவு வைத்திருக்கிறேன். அதில் வசீகரமான சில ரயில் நிலையங்கள் பற்றி சொல்ல இருக்கிறேன். தொடர்ந்து பயணம் பற்றி எழுதும் தங்கள் சொன்னாலும் நலமே!

    நீக்கு
  4. உங்கள் ரயில் பயணம்,,,,,,,,,,,, சூப்பர்.
   புகைப்படங்கள் அத்துனையும் அருமை.
   வளர்ச்சி குறித்த பதிவு நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நவீன வளர்ச்சியும் பிரமாண்டமும் பாரம்பரியத்தை போன்றே பிரமிப்பும் தருகிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  5. ரயில் நிலைய கட்டிட வேலைப்பாடு சூப்பர் ,நம்ம விமான நிலையக் கட்டிடத்தில் நாற்பது முறை கண்ணாடி நொறுங்கி விழுந்ததும் நினைவுக்கு வந்தது :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நம்ம விமான நிலைய கட்டுமானங்களில் அரசியல் இருப்பதால் அது அவ்வப்போது விழும் எழும். பெல்ஜியத்தில் நம்ம அரசியல்வாதிகள் இல்லாததால் வலிமையாக நிற்கிறது.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி பகவான்ஜி!

    நீக்கு
  6. அருமை நண்பரே 8 வது புகைப்படத்தை காணும் பொழுது தேவகோட்டை ரயில் நிலையம்தான் ஞாபகத்திற்க்கு வருகிறது
   தமிழ் மணம் 6

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம் நண்பரே!

    இந்த ரயில் நிலையத்தை கட்டுவதற்கு முன்பு பெல்ஜிய என்ஜினியர்கள் தேவகோட்டை பக்கம் வந்ததாக வரலாறு சொல்கிறது. இப்பொது நீங்கள் கூறிதான் தெரிகிறது. அது தேவகோட்டை ரயில் நிலையம் என்று.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. பிரம்மாண்டம்....இந்தியாவில் எல்லா ரயில் நிலையங்களையும் பெரும்பாலும் பார்த்தாகிவிட்டது....வெளிநாட்டில் அமெரிக்காவில் மட்டும், மற்றவை மிக அழகாக இருக்கின்றன. ம்ம்ம்ம்ம் என்றேனும் ஒரு நாள் வாய்ப்புக் கிடைக்காதா என்ன?!!!! (ஹப்பா நாங்க பார்க்காதது....போட்டுவிட்டீர்கள்.ஹஹஹஹ்ஹ் ) என்னதான் மும்பை அழகு என்றாலும், சென்னை மிகவும் வசதி வாய்ந்த ஒன்று என்றால் அது மிகையல்ல. தலைநகர் டெல்லி கூட எனக்கு வசதி நிறைந்ததாகத் தெரியவில்லை....சென்னை சென்ட்ரல் போல எளிதான, வசதி மிக்க ஒன்று இந்தியாவில் எதுவும் இல்லை எனலாம்....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆஹா..! தாங்கள் பார்க்காத ஒரு இடத்தை சொல்லிவிட்டேனா..! மகிழ்ச்சி..! ஆனாலும் இது கணக்கில் வராது. இந்தியாவிற்குள் இந்த தீர்மானத்தை வைத்துக்கொள்வோம். எப்படியாவது நீங்கள் போகாத ஒரு இடத்திற்கு போய் வந்துவிட வேண்டும் என்ற தீர்மானம் தொடர்கிறது.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  8. நீங்கள் காட்டிய இந்திய இரயில் நிலையங்களுக்குச் சென்றிருக்கிறேன்.
   அயல்நாட்டு இரயில் நிலையங்களுக்கு உங்கள் பதிவு வாயிலாகச் சென்றேன்.
   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அயல் நாட்டு ரயில் நிலையங்களையும் நேரில் கண்டு வர வாழ்த்துக்கள் அய்யா!

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

    நீக்கு
  9. ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட்டில் மட்டுமே ரயில் பற்றிய செய்திகள் செவிகளில் செவாலியே விருது கிடைத்தது போல் தெரிய வரும்!
   ஆஹா! முதன் முறை கண்ணை பறிக்கும் கலர்புல் படத்துடன், காட்சிக்கேற்ப தகவல் கலைஞ்சியம் கைகளில் கொண்டு வந்து சேர்த்து விட்டீர்கள். சூப்பர்!
   த ம +1
   நட்புடன்,
   புதுவை வேலு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் சில ரயில் நிலையங்கள் உள்ளன. அதையும் விரைவில் பதிவிடுகிறேன்.

    வருகைக்கும் வாக்குக்கும் ரயில் நிலையங்களை ரசித்ததற்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்