• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், ஏப்ரல் 28, 2015

  சிக்கிம் - கஞ்சன் ஜங்கா


  வைரச் சிகரம்  லகின் மூன்றாவது மிக உயர்ந்த சிகரமான கஞ்சன் ஜங்காவை வைரச் சிகரம் என்றுதான் அழைக்கிறார்கள். பனி மூடிய இந்த சிகரத்தில் பட்டுத் தெறிக்கும் சூரியக் கதிர்களால் ஏற்படும் ஜொலிப்பு வைரம் மின்னுவது போலவே இருக்கும் என்கிறார்கள். அந்த சிகரத்தை சிக்கிம் மாநிலத்திலிருந்து பார்க்கலாம். கஞ்சன் ஜங்கா சிகரத்தில் ஏறி சாகஸம் புரிபவர்களும் சிக்கிம் வழியாகத் தான் மேலே ஏற முடியும்.


  மலையேறுபவர்களுக்காக கோச்சாலா என்ற பகுதியை அரசு திறந்து விட்டிருக்கிறது. இதனால் இந்தியப் பகுதியில் இருந்து கஞ்சன் ஜங்கா சிகரம் ஏறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடியுள்ளது.


  கஞ்சன் ஜங்காதான் உலகின் அழகான சிகரம் என்று பெயர் பெற்றது. காலையில் சூரியன் உதிக்கும் போது சிகரத்தின் உச்சியில் மட்டுமே சூரிய ஒளி படும்போது கீழே இருக்கம் இடங்கள் எல்லாம் மறைந்து விடும். சிகரம் அந்தரத்தில் தொங்குவது போல் காட்சியளிப்பது வாழ்நாளில் காணக்கிடைக்காத அற்புதக் காட்சி.


  எப்படி செல்வது?

  அருகில் உள்ள ரயில் நிலையம் நியூ ஜல்பைகுரி, (221 கி.மீ.) சிலிகுரி (137 கி.மீ.), அருகில் இருக்கும் நகரம் சிக்கிம் தலைநகர் காங்டாக். ஏப்ரல், மே மாதங்கள் சீஸன் காலமாகும்.

  எங்கு தங்குவது?

  காங்டாக் நகரில் உள்ள ஹோட்டல் சகோரிகா (03592 206958) தங்குவதற்கு ஏற்ற 2 ஸ்டார் ஹோட்டல். இருவர் ஓர் இரவு தங்க கட்டணம் ரூ.1,926.
  ===

  படங்கள் : கூகுள் இமேஜ்


  20 கருத்துகள்:

  1. ஆகா பள்ளி நாட்களில் பாடப் பகுதியில் படித்த மலைச்சிகரம், எத்துனை அழகாக தங்கள் பதிவில். அருமை,அழகு. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் அழகான கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி மகேஸ்வரி சகோ!

    நீக்கு
  2. மிக அழகான மனதை அள்ளும் படங்கள். சிக்கிம் வழியாகச் செல்ல வில்லை என்றாலும், மேற்குவங்காளம் டார்ஜீலிங்க் வழியாகக் காக்ங்க்டேக் செல்ல இருந்த பயணத்திட்டத்தில் பனிச் சரிவினால் செல்ல இயலாமல் போனது. டார்ஜிலிங்க் சென்று டீஸ்டா ஆறு ஓடும் இடம் டீஸ்டா பசார் செல்லும் முன்பே நிலச் சரிவு ஏற்பட்டு த்டை பட்டது. அங்கிருந்து தூரமாகக் கண்டதோடு சரி....

   மிக அழகானப் பயணக் குறிப்பு. இன்னும் இதில் நிறைய தகவல்கள் இருக்கின்றன. ப்ரைவேட் டாக்சிகள் கேங்க்டாக் நகருக்குள் 2 கிமீ தொலைவிலேயே விட்டுவிடுவார்கள். அதன் பின் அங்கிருந்து சிக்கிம் டாக்சிகளில் தான் பயணிக்க வேண்டும் நகரை அடைய இல்லை நாம் தங்கப் போகும் இடத்தை அடைய. ஒரு வேளை நீங்கள் சிக்கிம் வழி சொல்லி இருப்பதால் அதில் தடங்கல் இருக்காது. நான் சொல்லுவது மேற்குவங்காளம் வழியாக.

   எங்கள் லிஸ்டில் பல இடங்கள் உள்ளன அதில் இதுவும் ஒன்று. அன்று தடைபட்டதால். மகன் இன்னும் செட்டில் ஆகாததால் எல்லாம் அப்படியே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

   மிக அழகான ஒரு சிகரத்தைக் குறித்த பதிவு அழகான படங்கள். மிக்க நன்றி! நண்பரே!

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பெரும்பாலான சுற்றுலா தளங்களை தாங்கள் பார்த்திருப்பது பெரும் மகிழ்ச்சியே! இது ஒரு கொடுப்பினை என்றுதான் சொல்ல வேண்டும். பலரிடம் வசதி இருந்தும் போக நேரம் இருக்காது. சிலரிடம் இரண்டும் இருந்தாலும் உடல் ஒத்துழைக்காது. அதனால் சுற்றுலா செல்வது ஒரு பாக்கியம் என்றுதான் சொல்வேன்.

    கஞ்சன் ஜங்கா பற்றி இன்னும் பல தகவல்கள் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது விரிவாக பதிவிடுகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா மேம்!

    நீக்கு
  3. நண்பரே இந்த இடம் போய் வந்துவிட்டீர்களா? ஆஹா! இனி போவதென்றால் சொல்லுங்கள் நண்பரே முடிந்தால் சேர்ந்து கொள்வேன்......ஹஹஹஹ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களுடன் இணைந்து பயணிப்பதில் எனக்கு மகிழ்ச்சியே! இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், எனது பெரும் பகுதி சுற்றுலா தொழில்முறையில் செல்வது. பயணக் கட்டுரைக்காகவே பயணிப்பது. ஒரு இடத்தை ரசிப்பதைவிட அது குறித்த தகவல்கள் கிடைக்க வேண்டுமே என்பதுதான் எனது கவலையாக இருக்கும்.

    மேலும் எனது நிறுவனத்தில் எனக்கு ஒதுக்கப்படும் நிதியை வைத்துதான் எங்கு போவது என்று திடீர் முடிவு எடுப்பேன். கட்டுரை புகைப்படம் இரண்டையும் நான் ஒருவனே செய்து விடுவதால். நினைத்த இடத்திற்கு நினைத்த போது சென்றுவிடுவேன். அதனால் மற்றவர்களை சேர்த்துக் கொள்வதில்லை.

    சுற்றுலா என்பது எந்தஒரு கமிட்மெண்டும் இல்லாமல் சென்றால் தான் ரசனையாக இருக்கும். எனைப்போல் தகவல் சேகரித்து கொண்டே சென்றால் நன்றாக இருக்காது. பல அருவிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மனதார குளித்தது மிகக் குறைவே. அதற்கு நேரமின்மை போன்ற பல கரணங்கள் இருக்கின்றன.

    நீக்கு
   2. ஹஹஹ் நண்பரே சும்மாதான் சொன்னேன் நண்பரே! தங்கள் பணி அறிவோம். நீங்கள் சொல்லுவதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஆம் இனி எங்களுக்கும் முன்பு போல் காண முடியுமா என்று தெரியவில்லை. முன்பு சென்றதெல்லாம் உறவினர்கள் இப்படி அப்படி என்று.....மகனுக்கும் மிகுந்த ஆர்வம் உண்டு. நாங்கள் சிம்லா, மணாலி சென்றது, நான் ரிவர் க்ராசிங்க் செய்தது, (குரங்கு போல் பியாஸ் ரிவரை கயிற்றில் கட்டிக் கொண்டு க்ராஸ் செய்தேன்), பின்னர் பாராக்ளைடிங்க் செய்தது, ரிவர் ராஃப்டிங்க். என்று ஒரு சில சாகசங்கள். புகைப்பட்ங்கள் தேடி எடுத்துக் கிடைத்தால் பதிவு இடுகின்றேன். பார்ப்போம்....இன்னும் வயதாவதற்குள் பல இடங்கள் காண வேண்டும் என்ற ஆவல். மகன் ஒரு நிலைக்கு வந்து விட்டால் செல்லலாம்....பார்ப்போம்.....

    நீக்கு
   3. பலவித சாகசங்களை செய்திருக்கிறீர்களே, மிக்க மகிழ்ச்சி! பலரும் பயணம் என்பது வீட்டில் இருப்பது போலவே சொகுசாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நம் உடலை எல்லாவற்றுக்கும் ஏற்றபடி மாற்றுவதே பயணத்தின் முதல் நிலை.
    எப்போதும் தனியாகவே சுற்றுலா செல்லும் நான், சமீபத்தில் ஒரு குழுவோடு ஒரு மாதம் முழுக்க வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலா சென்றேன். எங்கள் குழுவில் எல்லோருமே வயதானவர்கள். நான் கூட எப்படி இவர்கள் எல்லாம் இந்த வயதில் வருகிறார்கள் என்று யோசித்தேன். எங்கள் குழுவில் இருந்த 80 வயது இளைஞர் (அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும்) எல்லாவற்றிலும் முதன்மையாக இருந்தார். வயது ஒரு தடையல்ல என்று எனக்கு உணரவைத்த சுற்றுலா அது.

    அதனால் இனி எங்களுக்கும் முன்பு போல் காண முடியுமா என்று கவலை படாதீர்கள்.
    நன்றி!

    நீக்கு
   4. கஞ்சன் ஜங்காவின் சிகரம் இது எனத் தொலைவில் இருந்து பார்த்திருக்கிறேன் ஐயா..!
    சுற்றுலாவின் போது!
    துளசிதரன் ஐயா சொல்வது போல் நாங்கள் உங்களோடு சேர்ந்து கொள்ளத் தடைவிதித்து விட்டீர்களே :(

    பரவாயில்லை.
    ““““சுற்றுலா என்பது எந்தஒரு கமிட்மெண்டும் இல்லாமல் சென்றால் தான் ரசனையாக இருக்கும். எனைப்போல் தகவல் சேகரித்து கொண்டே சென்றால் நன்றாக இருக்காது. பல அருவிகளுக்கு சென்றிருக்கிறேன். ஆனால் மனதார குளித்தது மிகக் குறைவே. அதற்கு நேரமின்மை போன்ற பல கரணங்கள் இருக்கின்றன.“““““

    என்ற குறை உங்களுக்கு இருக்கிறது அல்லவா..?

    அந்தக் குறை நீங்க எங்காவது சென்றால் சொல்லுங்கள்.


    நாங்களும் தொத்திக் கொள்கிறோம்.

    சரிதானே ஆசானே.!

    நன்றி

    நீக்கு
   5. கில்லர்ஜி தலைமையில் ஒரு சுற்றுலா போவோம் நண்பரே!

    நீக்கு
  4. அருமையான புகைப்படங்கள் தேவகோட்டையில் இந்த மா3 காலையில் காண முடிவதில்லை பார்ப்போம் வில்லங்கம் கோஷ்டிகள் கூட்டணி அமைந்தால் கண்டிப்பாக போகலாம் என்று நினைக்கிறேன் நண்பரே..
   தமிழ் மணம் 2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தேவகோட்டை எல்லாவிதமான சுற்றுலாவிற்கும் ஏற்ற இடம் என்பதை ஒவ்வொரு கருத்துரையிலும் கூறிக்கொண்டே வருகிறீர்கள். போகிறப் போக்கைப் பார்த்தால் தேவகோட்டையை துணை கண்டம் என்று அழைக்கவேண்டி வரும்போல் தெரிகிறதே.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

    நீக்கு
   2. நண்பரே நம் கில்லர்ஜி சொல்லும் அந்த வில்லங்கக் கோஷ்டிகள் யாரென்று தெரிகின்றதா...ஹஹஹஹ்....வேறு யாரும் இல்லை சாஷ்டாத் நாங்களேதான்.....ஹஹஹ்

    கில்லர்ஜி ப்ரதர் கண்டிப்பாக. அப்போ எங்கள் கூட்டணி ஓகே அப்படின்றீங்க...ரொம்ப சந்தோஷம் ப்ரதர்.....

    கீதா

    நீக்கு
   3. அப்போ கில்லர்ஜி தலைமையில் இந்த வருட சுற்றுலாவை திட்டமிட்டுவிட வேண்டியதுதான். கில்லர்ஜி, அபுதாபிக்கு பல டிக்கெட் எடுத்து அனுப்புங்கள். ஹஹஹ..!

    நீக்கு
  5. மனதை கொள்ளை கொள்ளும் படங்கள் நண்பரே
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகை தந்து வாக்களித்த நண்பருக்கு நன்றி!

    நீக்கு
  6. நாங்கள் ஒருமுறை ,காங்டாக்கில் இருந்து சங்க் ஏரியை பார்த்தே ஆகணும்னு புறப்பட்டோம் ,பனிச் சரிவு காரணமாக பயணத்தைத் தொடர முடிய வில்லை ,பனிச் சரிவால் மூடப் பட்ட சாலையை ராணுவம்தான் சரி செய்ய வேண்டும் ,சில நேரங்களில் அந்த பணிமுடிய சில நாட்கள் ஆகலாம் .அப்போது ,ராணுவ முகாம்களில் அடைக்கலம் ஆக வேண்டி வரும் ,இரவு பனிப் பொழிவைத் தாங்கிக் கொள்ள முடியாது என்ற தகவலும் அறிய முடிந்தது !

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பொதுவாக இதுபோன்ற மலைப் பகுதிகளில் நிலச்சரிவு பனிச்சரிவு ஏற்படுவது சகஜம். இதனால் பல அழகிய இடங்களுக்கு நாம் போகமுடியாமல் போவதும் உண்டு.

    நீக்கு
  7. பதில்கள்
   1. வாழ்நாளில் பார்க்க வேண்டிய அருமையான இடம்!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்