Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தானாக தீப்பிடித்து எரியும் மனிதர்கள்னிதன் எப்படி தானாக எரிவான்? இப்படி ஒரு கேள்வியை யாரிடமாவது கேட்டால், 'அது எப்படி முடியும்..?!' என்பதுதான் எல்லோரின் பதிலாக இருக்கும். அறிவியலும் கூட அப்படித்தான் சொல்லும். ஆனால் இயற்கை அவ்வப்போது வெகு அபூர்வமாக சில மனிதர்களை தானாகவே எரித்து விடுகிறது.

கடந்த 300 ஆண்டுகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக 200 மனிதர்கள் எரிந்து போய் இருக்கிறார்கள். 1673-ல் ஒரு விசித்திரமான வழக்கு ஒன்று பிரான்ஸ் கோர்ட்டுக்கு வந்தது. வழக்கமான கணவன்-மனைவி சண்டைதான் அது. மனைவி இறந்து விட்டார். கொன்றது கணவன் தான் என்பது வழக்கு. கோர்ட்டு தீர்ப்போ வேறு மாதிரி இருந்தது. கணவர் குற்றமற்றவர். அவர் மனைவி தானாக எரிந்து விட்டார் என்று தீர்ப்பளித்தது. அது எப்படி ஒரு பெண்ணால் தானாக எரிய முடியும்? என்று உலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது.

கால் மட்டும் எரியாத நிலையில்
இந்த தீர்ப்பு பிரான்ஸ் நாட்டு அறிஞர் ஜேம்ஸ் ரூபாண்ட் என்பவரை மிகவும் சிந்திக்க வைத்தது. அவர் மனித உடல் தானாக எரிவது குறித்து ஆராயத் தொடங்கினார். மனித உடலில் தானாக எரியும் அளவுக்கு எந்த வேதிப் பொருட்களும் இல்லை. பின் இது எப்படி நிகழ்கிறது?


அதிலும் மனிதன் தானாக தீப்பிடித்து எரியும் போது முழுவதுமாக எரிந்தப்பின் அந்த இடத்தில் கருகிய மண்டையோடு அல்லது கருகிய கால்கள், கைகள் மட்டுமே இருக்கும். மற்ற பகுதிகள் எல்லாமே சாம்பல் குவியலாக குவிந்து கிடக்கும்.

அதே வேளையில் வீட்டின் மற்ற பகுதிகள், இறந்தவருக்கு அருகே உள்ள பொருட்கள் போன்றவற்றில் நெருப்பு எரிந்தற்கான அடையாளம் இருக்கவில்லை. இதனை ஆங்கிலத்தில் 'ஸ்பாண்டேனியஸ் ஹுயூமென் கம்பஷன்' என்கிறார்கள்.

இப்படி தானாகவே எரிந்து போனவர்கள் பெரும்பாலும் மது அடிமைகளாகவே இருந்திருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு அதீத போதையில் இருக்கும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பதாக ஆரம்பத்தில் கருதப்பட்டது.

இந்த நிகழ்வுகள் பெரும்பாலும் நாற்காலியில் அமர்ந்த நிலையிலேயே ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி மிக மெதுவாகவும் உடல் முழுவதும் எரியும் வரையிலும் நடைபெறுகிறது. எரிந்து முடிந்தவுடன் மண்டை ஓடு, கை, கால்கள் தான் மிஞ்சுகின்றன.


சில சம்பவங்களில் முதுகெலும்பு தவிர மற்ற பகுதிகள் எரிந்து சாம்பலாகின்றன. அதனால், குடிகாரர்களுக்கு மட்டும்தான் இது ஏற்படுகிறது என்பதை ஏற்க முடிவதில்லை.

மேலும் தானாக உடல் எரியும் போது உருவாகும் வெப்பம், மின்சார சுடுகாட்டில் ஏற்படும் வெப்பத்தைவிட அதிகம். சுமார் 600 டிகிரி சென்டி கிரேடு வெப்பம். இப்படி மிதமிஞ்சிய வெப்பநிலை இருந்தும்கூட, அவர்களுக்கு அருகில் உள்ள காகிதங்கள் கூட எரியவில்லை என்பதுதான் அதிசயம்.

1951-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி புளோரிடாவில் வாழ்ந்து வந்த 67 வயதான மேரி ரீட்சர் என்ற பெண் இப்படி தான் இறந்தார். நாற்காலியின் கைபிடியை பிடித்தபடியே அவரது உடல் கருகிக் கிடந்தது. மண்டை ஓடு, இடது கால், முதுகெலும்பு கருகிய நிலையிலும், மற்ற பகுதிகள் சாம்பல் குவியலாகவும் மாறியிருந்தன. இதை சாதாரண விபத்து என்று போலீஸ் பைலை மூடியது.

1998 நவம்பர் 17-ந் தேதி கைசெல் என்ற 67 வயது பெண் தந்து இருக்கையில் அமர்ந்தபடி இறந்திருந்தார். செருப்புடன் கூடிய அவரது இடது கால் மட்டும் தரையில் ஊன்றியபடி இருந்தது. மற்ற பகுதிகள் எல்லாம் எரிந்து சாம்பலாகி இருந்தன. வீட்டின் மற்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை.

தமிழகத்தில் ராகுல்
சமீபத்தில் நமது தமிழகத்தில் கூட திண்டிவனத்தில் ராகுல் என்ற குழந்தைக்கு இதைப்போன்ற பாதிப்பு ஏற்பட்டது. ஆனாலும் இது தானாக எரியும் நோயில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டார்கள்.

மனித உடல் ஏன் இப்படி தானாக எரிகிறது? என்ற கேள்விக்கு இன்னமும் விடை கண்டுபிடிக்க முடியாமல் விஞ்ஞானம் திணறிக்கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற விஷயங்களை கடவுள் செயல் என்று கூறி விடுகின்றனர். மனிதன் தானாக எரிவதும் இப்போதைக்கு கடவுள் செயலாகவே இருக்கிறது.
14 கருத்துகள்

 1. இதை நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை பழைய காலங்களில் முனிவர்கள் சாபமிடுவார்கள் நீ எரிந்து போவக்கடவது என்று ஒருவேளை அதுவும் இதுவும் ஒண்ணுதானோ ?
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விஞ்ஞானத்துக்கே பிடிபடாத ஒரு புதிராகத்தான் இன்று வரை இது இருக்கிறது.

   முதலாவதாக வந்து முதல் வாக்கிட்டு முதல் கருத்து வழங்கிய நண்பருக்கு நன்றி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி டிடி சார்!

   நீக்கு
 3. தமிழில் வயிறு எரியுது என்பார்களே அதுபோன்று இருக்குமோ?

  But those who burnt like this had a source of fire somewhere near them. Yet it's a mystery.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், விஞ்ஞானத்துக்கே விளங்காத மர்மம்தான்.
   வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
 4. இப்படி எரித்துக் கொல்வது கடவுள் செயலானால் கடவுள் எதற்கு :)

  பதிலளிநீக்கு
 5. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
  அன்பு வணக்கம்
  உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
  இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
  நல்வாழ்த்துகள்
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் அய்யா!

   கவிதையிலே வாழ்த்துச் சொன்ன தங்களுக்கும் 'உழைப்பாளர் தினம்' வாழ்த்துக்கள்!

   வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 6. இது விஞ்ஞாத்தையே சால்ஞ்ச் செய்யும் நிகழ்வோ என்றாலும் பழைய புராணங்களில் பேசப்பட்டிருந்தாலும், கண்டிப்பாக இதற்கும் விஞ்ஞானத்தில் விடை உண்டு. ஆராய்ச்சிகள் நடக்கின்றன...ஆல்கஹால் இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. ஆனால் நிச்சயமாக நம் உடம்பில் உள்ள ஏதோ ஒரு வேதியல் ரச்யான மாற்றம்தான் இதற்குக் காரணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமாக வேதியல் மாற்றம்தான் காரணமாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்.

   நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை