• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, மே 01, 2015

  தியானத்துக்காக ஒரு சுற்றுலா  ஸ்வஸ்வரா
  தியானம் செய்வதற்கு அமைதியான இடமும் அழகான இயற்கை சூழலும் இருந்தால் போதும் என்பதைத்தான் நாம் இதுவரை கேள்விப் பட்டிருப்போம். ஆனால் அது மட்டும் போதாது, பர்ஸ் நிறைய பணம் வேண்டும் என்கிறது ஸ்வஸ்வரா..!

  பெங்களூரிலிருந்து 480 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, கோகர்ணா என்ற இடம். அங்கிருக்கும் ஓம் கடற்கரையில் ஸ்வஸ்வரா ரிஸார்ட் அமைந்திருக்கிறது. இந்த இடத்திற்கு சாலையில் பயணிப்பது ஒரு சுகமான அனுபவம். சாலையின் இருபக்கமும் இயற்கை ஓவியன் கொட்டி தீர்த்த வண்ணங்கள் பசுமை வனமாகவும்  நீலக் கடலாகவும் மாறி அழகு சேர்கின்றன.


  பசுமை நிறைந்த இந்த இடம் சொக்க வைக்கும் அழகுக்கு சொந்தக்காரன். காலை நேரத்தில் தியானம் செய்வதற்கு இதை விட சிறந்த இடம் தேடினாலும் கிடைக்காது.


  அலைகளின் இதமான தாலாட்டில் யோகா, தியானம், ஸ்பா போன்றவற்றிக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்ட இடம் இது. இங்கு பரிமாறப்படும் உணவு முழுவதும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்டவை.


  இந்த இடத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளன. இங்கு அரிய வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள் காணப்படுகின்றன. பறவைகளின் ஒலியும், பட்டாம் பூச்சிகளின் வண்ணமும் நம்மை மேலும் சிலிர்படைய செய்யும்.


  மலையேற்றமும் கடற்கரையில் உலாவுவதும் ஆனந்தமமான அனுபவம். இந்த கடற்கரையில் மண்ணால் ஆன பொம்மைகள் இருக்கின்றன. அவற்றை பார்வையிடுவதும் தனி அழகு.


  ஸ்வஸ்வரா உணவு சிறப்பு மிக்கது. அதனால் இங்கு செல்பவர்கள் அதிகாலையில் கிளம்பி மதிய உணவுக்கு அங்கு சென்று விடுவது நல்லது. அருகில் உள்ள விமான நிலையம் கோவா. இது 170 கி.மீ. தொலைவில் உள்ளது.


  ஸ்வஸ்வரா தியானத்திற்காக உருவாக்கப்பட்டதால் இங்கு குறைந்தபட்சம் 5 நாட்கள் தங்க வேண்டும். 5 நபர்கள் கொண்ட ஒரு குழு 5 இரவுகள் தங்குவதற்கு ரூ.55,000 கட்டணமாக பெறப்படுகிறது.


  ஐந்து நாட்கள் கடந்து வீடு திரும்பும்போது மனமும் உடலும் புத்துணர்ச்சி பெற்றிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த விடுமுறையை புத்துணர்ச்சியோடு கொண்டாடுங்கள். புத்துணர்ச்சிக்கு 08386-257132 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

  7 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  2. ஆஹா நம்பர் குறித்துக்கொண்டேன் நாளையே புக் செய்து விடுகிறேன்
   தமிழ் மணம் 2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஓம் பீச்சுக்கு சென்று புத்துணர்வோடு திரும்பும் கில்லர்ஜிக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. பர்ஸ் கனக்கும் போது சென்று விட வேண்டியது தான்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பர்ஸ் கனக்கட்டும், மனம் புத்துணர்ச்சி கொள்ளட்டும்.

    வருகைக்கும் வாக்குக்கும் நன்றி தனபாலன் சார்!

    நீக்கு
  4. கோகர்ணம் அருமையான இடம் நண்பரே! கடற்கரை கிராமம்....அதுவும் அந்தக் கடல் ஒட்டிய பயணம் ஆஹா! சென்றிருக்கின்றோம். அங்கிருக்கும் சிவன் கோயில் ....ஆனால் இந்த ரிசார்ட் எல்லாம் எங்கள் லிஸ்டில் எப்போதுமே கிடையாது...நம்மைப் போன்ற சாதாரண நடுத்தர வர்கத்தினருக்கு எல்லாம் பட்ஜெட் இயற்கை சுற்றுலாதான்....

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்