Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

புதிதாக உருவாகும் பிரமாண்டமான கோயில்கள்


விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர் வளாகம்

சுற்றுலாவில் பெரும் பங்கை ஆன்மிகம் சம்பந்தமான இடங்களே பெற்றுள்ளன. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்ஹாக்கள், புனித யாத்திரை போன்றவைக்காக சுற்றுலா செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 70 % சுற்றுலா ஆன்மிகம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கிறது.

சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், மொத்த சுற்றுலாவும் படுத்துவிடும்.

தற்போது பழமையான கோயில்களுக்கு இணையாக புதிதாக கட்டிய கோயில்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. டெல்லி அக்ஷர்தம், வேலூர் தங்கக் கோயில் போன்றவற்றை இதற்கு உதரணமாக சொல்லலாம்.

அந்த வகையில் மிகப் பிரமாண்டமான மூன்று கோயில்கள் இந்தியாவில் உருவாகி வருகின்றன. எதிர்காலத்தில் இந்தக் கோவில்கள் சுற்றுலாவின் மைல் கல்லாக திகழும் என்பது நிச்சயமே!

1. விராட் ராமாயண் மந்திர் - பிஹார் 

ம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் ஆலயம் முதலில் இந்துக் கோவிலாக கட்டப்பட்டது. தற்போது அது புத்தக் கோயிலாக மாற்றப் பட்டுள்ளது. அதனை மீண்டும் மீட்டெடுக்கும் விதமாக 2006-ம் ஆண்டு அதே வடிவமைப்பில் விராட் அங்கோர்வாட் என்ற ஆலயத்தை இந்தியாவில் உருவாகக் நினைத்தனர். இதற்கு கம்போடியா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் இந்த கோயிலின் வடிவமைப்பை சற்று மாற்றினர். புதிதாக வடிவமைப்பை நிர்மாணித்தனர்.

விராட் ராமாயண் மந்திர் மாதிரி தோற்றம்
அதன்படி அங்கோர்வாட் கோயிலைவிட உயரமாக இது கட்டப்படுகிறது. 161 ஏக்கர் நிலப்பரப்பில் 2,800 அடி நீளமும், 1,400 அடி அகலமும் 405 அடி உயரமும் கொண்ட இந்த கோயில் கட்டி முடிக்கப் பட்டப்பின் இதுதான் உலகின் மிகப்பெரிய மத வழிப்பாட்டு தலமாக மாறும். இந்தக் கோயில் மண்டபத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து வழிபடலாம்.

இந்தக் கோயில் அங்கோர்வாட், மதுரை மீனாட்சியம்மன், ராமேஸ்வரம் கோயில்களின் பாணியை பின்பற்றி கட்டப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2012-ல் தொடங்கியது. பட்ஜெட் ரூ.500 கோடி. எதிர்காலத்தில் இதுதான் உலகின் மிகப் பெரிய கோயிலாக இருக்கும்.

பிஹாரின் தலைநகர் பாட்னாவிலிருந்து 120 கி.மீ. தொலைவில் இருக்கும் கேசரியா என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. இது மிகப் பெரிய சுற்றுலா மையமாக மாறும் என்று இப்போதே உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.


2. ஓம் ஆஷ்ரம் - ராஜஸ்தான்

ஓம் அஷ்ரமத்தின் முன் பகுதி
'ஓம்' என்ற சமஸ்கிருத எழுத்து வடிவில் ஒரு கோயில் உருவாகி வருகிறது. இது ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள ஜடன் என்ற இடத்தில் கட்டப்பட்டு வருகிறது. 250 ஏக்கர் நிலப்பரப்பின் மையத்தில் காட்டப்படும் இந்த கோயில்தான் மனிதன் உருவாக்கிய எழுத்து வடிவிலான கட்டுமானங்களில் மிகப் பெரியது.

சம்ஸ்கிருத 'ஓம்' எழுத்து வடிவில் ஆஷ்ரம்
இதில் பெரிய கோபுரம் 108 அடி உயரம் கொண்டது. இந்த கட்டுமானத்தில் 12 கோயில்கள் உள்ளன. அவற்றின் கோபுரங்கள் 90 அடி உயரம் கொண்டது. இதில் 108 குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில் சூரியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டப்படுகிறது.

கட்டுமானத்தில் ஓம் ஆஷ்ரம் 


3. விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர் - 
     உத்தர பிரதேசம் 


விரிந்தவன் சந்த்ரோதய  மந்திர்
லகிலேயே மிக உயரமான கோயிலைக் கட்டி வருகிறது இஸ்கான் அமைப்பு. கிருஷ்ணர் பிறந்த மதுரவில்தான் இது நடைபெறுகிறது. 700 அடி உயரம் கொண்ட கோபுரத்தை கட்டி வருகிறது. 62 ஏக்கர் நிலப்பகுதியில் 12 ஏக்கர் அளவுக்கு ஒரு ஹெலிப்பெடும் வாகனங்கள் நிறுத்தும் இடமும் இருக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் கோயில் கட்டப்படுகிறது.  26 ஏக்கர் பரப்பில் 12 வகையான  தோட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

உலகிலேயே உயரமான 700 அடி கோபுரம்
இதன் மதிப்பு ரூ.300 கோடி. கட்டுமானப் பணிகள் முடிந்து 2019-ல் பக்கதர்கள் இந்த கோயிலை தரிசனம் செய்யலாம்.

முன் பகுதியில் உருவாகி வரும் பூங்கா 


22 கருத்துகள்

  1. அருமை நண்பரே பிரமாண்டமான கோயில்கள் போல பிரமாண்டமான விடயங்களை தந்த தங்களுக்கு நன்றி.
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரமாண்டமாக முதல் வருகை தந்து முதல் கருத்திட்டு முதல் வாக்களித்தமைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நன்றி

    எப்படித்தான் இது மாதிரி செய்திகளைக் கண்டுபிடித்து எழுதுகிறீர்களோ?

    அருமையான படங்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  3. பிரமாண்டமான கோயில்கள் பற்றிய தகவல்கள் பிரமிக்க வைக்கின்றன. வருங்கால சந்ததியினருக்கு அருமையான தலங்கள்.
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே, வருங்கால சந்தியினருக்கு இந்த கோயில்கள் பிரமிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகள் இல்லை.

      வருகைக்கும் வாக்களித்து கருத்து தந்தமைக்கும் நன்றி!

      நீக்கு
  4. பதிவுலகில் எங்களுக்கொரு சங்கர் கிடைத்து விட்டார்
    பிரமாண்டத்தை பிரமாத படுத்தி தகவலோடு பொருந்திய
    படங்களோடு! படைப்பினை படைக்க!
    வாழ்த்துகள் நண்பரே!
    சுற்றுலா பதிவு!
    நெஞ்சை தொட்ட நிலா!

    தகவல் களஞ்சியம் த ம 4
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..! கவிதையுடன் கூடிய பாராட்டு, அதுவும் சங்கருடன்.. மிக்க மகிழ்ச்சி நண்பரே, வருகை தந்து வாக்களித்த நண்பர் புதுவை வேலு அவர்களுக்கு நன்றி!

      நீக்கு
  5. பிரமாண்டமான கோவில்களைப் பற்றி படித்து பிரம்மித்து விட்டேன் சகோ.
    நிறைய விஷயங்கள் பற்றி அழகாய் எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்.தொடருங்கள். நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் சகோ!

      எல்லாமே 300 கோடிக்கு மேல் பட்ஜெட் கொண்ட பிரமாண்டமான கோயில்கள்தான். வருங்காலத்தில் பெரும் பெயர் பெரும்.

      வருகை தந்து வாக்களித்த சகோவுக்கு நன்றிகள்.

      நீக்கு
  6. படங்கள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக நண்பரே,
      வருகை தந்து வாக்களித்த நண்பருக்கு நன்றிகள்!

      நீக்கு
  7. பிரம்மாண்டங்கள் , தீவிரவாதிகளின் கண்களில் படாமல் இருக்க வேண்டும் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைச் சொல்லுங்கள்!

      இன்று எந்த பிரமாண்டம் என்றாலும் தீவிரவாதம் நினைவுக்கு வந்துவிடுகிறது. அதிலும் இந்துக்களின் கோயில் என்றால் கேட்கவே வேண்டாம். நிலைமை அவ்வளவு மோசமாக இருக்கிறது.

      வருகைக்கும் வாக்கிட்டு கருத்திட்டமைக்கும் நன்றி ஜி!

      நீக்கு
  8. பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி டிடி சார்!

      நீக்கு
  9. அருமை! படங்கள் பேசுகின்றன!முதுமையால் முடங்கிய என் போன்றார் காண ச் செய்தீர்! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா!

      தங்கள் உடல்நிலை எப்படியுள்ளது? அந்நிலையிலும் வருகை தந்து வாக்களித்து கருத்துதளித்த தங்களுக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  10. நல்ல கவரிங்க்தான்...இருந்தாலும் //சுற்றுலாவில் இருந்து ஆன்மிகத்தை நீக்கிவிட்டால், மொத்த சுற்றுலாவும் படுத்துவிடும்.// என்பது ஏனோ ஏற்றுக் கொள்ள முடியவில்லை...நண்பரே! .னீங்கள் அந்தப் பணியில் இருப்பதால் அது சரியாக இருக்கலாம்...

    வேலூர் தங்கக் கோவிலை ஏனோ ஆன்மீகத்தில் சேர்க்க முடியவில்லை. பணம் விளையாடுகின்றது மட்டுமல்ல நாட்டில் எத்தனையோ மக்கள் நலிந்திருக்கும் போது இறைவன் தங்கம் கேட்டாரா என்ன? இறைவன் பெயரைச் சொல்லி பணம் வசூலிக்கும் பண்டாரங்கள். அதையும் வாய் பிளந்து பார்க்கும் முட்டாள் மக்கள்கள் இருக்கும் வரை பணம் பண்ணும் பண்டாரங்களுக்கு கோளுதான். இயற்கையே இறைவனாக இருக்கும் போது அதை விடவா இந்தக் கோயில்கள் விஞ்சி விட்டன? !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியான கருத்தை சொன்னீர்கள்.
      உண்மையிலே இந்த நவீன கோவில்கள் இறையுணர்வை ஏற்படுத்துவதில்லை, என்பது நூற்றுக்கு நூறு மெய்யே! பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமே இத்தகைய கோயில்கள் கட்டப்படுகின்றன.

      மற்றபடி சுற்றுலாவில் ஆன்மிக சுற்றுலாதான் பெரும் பங்கு வகிக்கிறது என்பது இந்த துறை சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே தெரியும். உங்கள் நண்பர்கள் சிலரிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள் அவர்கள் சுற்றுலா போன இடங்களை பற்றி... எல்லாமே கோவில்களகத்தான் இருக்கும். அதை தவிர்த்து அவர்கள் போனது ஊட்டியோ கொடைக்கானலோ தான் இருக்கும்.

      நீக்கு
  11. அறியாத தகவல்கள். பதிவுக்குப் பாராட்டுக்கள். வரவர ஆன்மீகம் சம்பந்தப் பட்ட விஷயங்கள் பணம் பண்ணும் வழிகளாகவே மாறுகிறது. இவ்வளவு செலவு செய்து நிர்மாணிப்பவர்கள் யாரென்று சொல்ல வில்லையே. அயல் நாட்டினர் தாங்கள் செல்லும் இடங்களில் கல்வி சாலைகளை நிறுவுவார்கள். ஆனால் நாம் இந்தியர்கள் கோவில்களைக் கட்டுவொம் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை