Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 1


மிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரை திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது. 

நண்பர் குணா அமுதனின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் கவிதை. அந்த கவிதையை கொண்டு படங்களுடன் கூடிய சிறிய திருவிழா பதிவு இது. 

சித்திரை திருவிழாவின் முதல் இரண்டு நாள் நிகழ்வுகள் இங்கே படங்களுடன்.

கொடியேற்றம்


திருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக உணர்த்துவதே கொடியேற்றத்தின் நோக்கமாகும். உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் ஆயத்தமாக இருப்பதையும் கொடியேற்றம் அறிவிக்கிறது.


முதல் நாள்
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம் 


சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம்



சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு...


யானை முகன் முன்னே போக...


காமதேனு பின் தொடர்கிறாள்!


சிறுமிகளின் கோலாட்டம்..


இசைப் பாடலுடன் இளம் பெண்கள்...


இது பெண்களின் தாண்டியா...


கள்ளர் வேடமிட்ட பக்தர்கள்


 சிம்ம வாகனத்தில் மீனாட்சி


கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை


நோக்கம்
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.


இரண்டாம் நாள்
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்


மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா


கரகாட்டம்..


கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண்


அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா..




சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம்


 தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர்


சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது


நோக்கம்
ஐந்து பூதங்களையும் மனிதன் அடக்கி வாழ்வில் முத்தி பெற வேண்டும் என்பதற்காக அய்யன் பூத வாகனத்திலும், நீரும் பாலும் கலந்திருந்தாலும் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல் நல்லதும் கேட்டதும் கலந்திருக்கும் இந்த உலகில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வருவதாக ஐதீகம். 

படங்கள்: நன்றி குணா அமுதன்.

நாளை மூன்றாம் நாள், நான்காம் நாள் திருவிழா படங்களுடன்...




20 கருத்துகள்

  1. மதுரை சித்திரை திருவிழா
    ஏதுரை முத்திரைப் பதித்தே
    தோதுரை உரைப்பதற்கு உம்போலே!
    மாமதுரை அருள்பதிவால் அகமகிந்தேனே!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..! அருமை நண்பர் புதுவை வேலுவின் கவிதை வாழ்த்தும், முதல் வருகையும் வாக்கும் என்னை உவகை கொள்ளச் செய்கிறது.

      நன்றி நண்பரே!

      நீக்கு
  2. பதில்கள்
    1. படங்கள்தான் இந்த பதிவை எழுத தூண்டியது டிடி சார்!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! படங்களில் லயித்து வாக்கை மறந்து விட்டீர்கள் போல..!

      நீக்கு
  3. படங்கள் ஒவ்வொன்றும் பேசுகின்றன நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பேசும் படங்கள் இருப்பதால்தான் இது கேமரா கவிதையாக மலர்ந்தது நண்பரே!

      வருகைக்கும் பாராட்டுக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. கேமராவின் மெளன மொழி
    படங்கள் கவிதையாய் பேசியது....
    பதிவு தந்தீர்கள் அதன் ஈர்ப்பில்
    பார்த்தும், படித்தும் மிகிழ்ந்தோம் நாங்கள்.

    நன்றி சகோ
    தம + 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகை தந்து பாராட்டி வாக்கு தந்த சகோவுக்கு நன்றி!

      நீக்கு
  5. படங்கள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அய்யாவின் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி!

      நீக்கு
  6. புகைப்படங்கள் அனைத்தும் அழகு நண்பரே பதிவிற்க்கு நன்றி தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  7. மதுரையின் முத்திரைகளில் ஒன்றான – சித்திரைத் திருவிழாவினை கேமராக் கவிதைகளாக வடித்திட்ட குணா அமுதன் அவர்களுக்கும், அவற்றை தமது வலைப் பதிவில் பகிர்ந்திட்ட ’கூட்டாஞ்சோறு’ S.P. செந்தில் குமார் அவர்களுக்கும் நன்றி.
    த.ம.7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, குணாவின் படங்களைப் பார்த்த போதுதான் இதை படங்களின் பதிவாக தர விரும்பினேன். வெறும் படங்களை மட்டும் கொடுத்தால் புரியாது என்று சிறு விளக்கம் கொடுத்தேன்.

      பெரிய கூட்டம் கூடும் திருவிழாக்களில் இப்படி படம் எடுப்பது சாதாரண விஷயமில்லை. அதை வெகு இலகுவாக செய்தது போல் சாதித்துள்ளார் குணா அமுதன்.

      வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  8. ஐயா வணக்கம்.

    இரு நாட்களாகத் தமிழ் மணம் என்னை உள்ளே விடவில்லை.

    ஆகவே வரவும் கருத்திடவும் இயலவில்லை.

    தங்கள் படங்களின் துல்லியக் காட்சிப்படுத்துதல் வியக்க வைக்கிறது.

    மிக அருமை.

    தொடர்கிறேன்.

    த ம 8

    நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் அய்யா!
      தங்கள் கருத்துரை காணாமல் மிகுந்த வேதனைக் கொண்டேன். அது தீர்ந்தது. வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    சித்திரை திருவிழா திருமிகு.குணா அமுதனின் அவர்களின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் முத்திரை பதிக்கும் விசித்திரம். விழாவை நேரில் கண்டு களிப்பது போன்ற எண்ணம் தோன்றியது. அந்த அருமைக்கு அழகூட்டிக்காட்டியது உமக்குப் பெருமை.

    நன்றி.
    த.ம. 9.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்கள் கடந்து எனது பதிவுக்கு வருகை தந்து பாராட்டி வாக்கும் தந்த அய்யாவுக்கு நன்றிகள்!

      நீக்கு
  10. முதல் ஃபோட்டோ ரொம்பவே அழகு! கூட்டத்தின் நடுவில் ஆங்கிள் பார்த்து எடுப்பது மிகவும் சிரமம் என்பது எங்கள் அனுபவம்......அதுவும் நகர்ந்துகொண்டே இருக்கும் வாகனங்கள், மற்றும் இடித்துத் தள்ளும் மக்கள் கூட்டம்....அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புகைப்படக் கலை தெரிந்தவர்களுக்கு தான் இந்த படங்களின் சிறப்பு தெரியும். தாங்களும் ஒரு கலைஞர் என்பதால் இதன் மகத்துவம் தெரிந்திருக்கிறது. நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை