செவ்வாய், மே 19, 2015

உதய்பூர் - பிசோலா ஏரி அரண்மனைமாலை நேரத்தில் ஏரி அரண்மனை 
சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக நீரில் வலம் வர உன்னதமான இடம் பிசோலா ஏரி. ராஜஸ்தான் மாநிலத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட அழகிய ஏரி இது. இந்த ஏரி சிறிய கால்வாய் மூலம் ஃபதே சாஹர் ஏரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஏரிகளுமே கோடை சுற்றுலாவின் சொர்க்கம்.

ஏரியின் மையத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் ஒரு அரண்மனை அமைந்திருக்கிறது. இதை ஏரி அரண்மனை என்கிறார்கள். முன்பு 'ஜஹ் நிவாஸ்' என்று அழைக்கப்பட்ட இந்த  அழகு அரண்மனை பொக்கிஷம், தற்போது 83 அறைகளை கொண்ட ஆடம்பர ஹோட்டலாக மாறியுள்ளது. 'தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ்' என்ற நிறுவனம் 1971-ல் இருந்து இதனை ஆடம்பர ஹோட்டலாக நடத்தி வருகிறது.

படகில் பயணம்
அரண்மனை நுழைவாயில்
சிட்டி அரண்மனையில் உள்ள தோட்டத்தில் இருந்து படகுப் பயணத்தை தொடங்கலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் ரூ.25. அதன்பின் படகில் ஒரு மணி நேரம் சுற்றி வர ரூ.300 கட்டணம். அதுவே சூரியன் அஸ்தமிக்கும் அந்தி நேரம் என்றால் ரூ.500. இதுபோக மோட்டார் போட், பெடல் போட், துடுப்பு போட் போன்றவையும் நமது விருப்பத்திற்கு வாடகைக்கு கிடைக்கிறது. சிட்டி அரண்மனையை ஏரிக்குள் இருந்து பார்க்கும்போது அது நீரில் மிதப்பது போலவே தோன்றும். பிசோலா ஏரியில் படகில் பயணம் செய்வது ஓர் அருமையான அனுபவமாக இருக்கும்.

நீச்சல் குளம்
அரண்மனை முற்றம்
சூரியக் குளியல்
சென்னையிலிருந்து உதய்பூருக்கு விமான சேவை உண்டு. ஜெட் ஏர்வேஸில் ரூ.17,666 கட்டணம். 5 மணி நேர பயணம். சென்னை சென்ட்ரலில் இருந்து உதய்பூருக்கு நேரடி ரயில் சேவை இல்லை. மும்பை சென்று மாறிப் போகலாம். 2662 கி.மீ. தொலைவை 47 மணி 20 நிமிடத்தில் கடக்கிறது.ஏரி அரண்மனையில் உள்ள தாஜ் ஹோட்டலே தாங்கும் இடம்தான். குறைந்தபட்சம் இரண்டு நாட்டகள் தங்க வேண்டும். இருவர் ஓர் இரவு  தங்குவதற்கு ரூ.67,000 கட்டணமாக பெறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு ரூ.1,35,000 ஆகும்.

இந்த கோடையை குளுகுளுவென்று கழிப்பதற்கு ஏற்ற இடம்.

அறையின் உட்தோற்றம்
உணவகம்10 கருத்துகள்:

 1. ஏரியில் நான்கு ஏக்கரா ? பிரமாண்டமாக இருக்கிறது புகைப்படங்கள் அனைத்தும் அருமை நண்பரே நலம்தானே... ? பயணம் சிறப்பாக இருந்ததா ?
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நலம் நண்பரே!

   பயணம் முடிந்தது. ஆனாலும் வேலைப் பளு அதிகம் இருப்பதால் வலைப்பூ பக்கம் அதிகம் வரமுடியவில்லை.

   வருகைக்கும் வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. படங்கள் அனைத்தும் அருமை. அழகான ஏரி + அரண்மனை....நாங்களும் இனிமையாய் பயணித்து பார்த்தோம்...நன்றி தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி சகோ!

   நீக்கு
 3. ஹப்பா நாங்க பார்க்காத ஒரு இடம். படித்திருக்கின்றோம் இந்த பிரம்மாண்டமான இடத்தைப் பற்றி! அருமையான தகவல் வழக்கம் போல தங்கள் அழகிய விளக்கங்களுடன் படங்களுடன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 4. நிறய திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன் ..
  படங்கள் அருமை..
  தம +

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...