• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், மே 13, 2015

  சினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலி  பிரான்ஸ் நாட்டில் 1861-ல் பிறந்தவர் ஜார்ஜ் மிலி. அடிப்படையில் மேஜிக்
  நிபுணர். மேஜிக் மட்டுமல்லாமல் கதை, கவிதை, பாடல், இசை, நடனம் என அனைத்து துறையிலும் தேர்ச்சி பெற்றவர். தனது மேஜிக் நிகழ்ச்சி மக்களை சலிப்படைய வைத்தால் அவர்களை எப்படி சந்தோஷப்படுத்த வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தவர். அதனால் இவரது மேஜிக் நிகழ்ச்சிக்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. நாட்கள் செல்ல செல்ல கூட்டம் குறைந்தது. மக்கள் மனதில் ஏற்பட்ட இந்த மனநிலைக்கு காரணம் லூமியர்களின் கண்டுபிடிப்பான சினிமா. ஜார்ஜ் மிலியும் தனது தொழிலை கெடுக்க வந்த சினிமா என்ற கடுங்கோபத்தில் தான் சினிமா தியேட்டருக்குள் நுழைந்தார்.

  ஜார்ஜ் மிலி
  படம் முடிந்து வெளியே வந்த போது அவர் முற்றிலும் வேறு மனிதராக மாறி இருந்தார். மூளைக்குள் பட்டாம்பூச்சி பறந்தது. இரவு முழுக்க தூக்கம் இல்லாமல் தவித்தார். சினிமா அவரது உறக்கத்தை கலைத்துப் போட்டிருந்தது. லூமியர்கள் போல் தானும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று 10 ஆயிரம் பிராங் பணத்தை எடுத்துக் கொண்டு லூமியரை சந்திக்கச் சென்றார்.

  லூமியர் சகோதரர்கள் திமிர்த்தனத்துடன் அலட்சியமாக சிரித்து, மிலியை
  அவமானப்படுத்தி வெளியே அனுப்பி வைத்தார்கள். மிலியால் அந்த வலியை தாங்க முடியவில்லை. சினிமாவில் வெற்றி பெற்று லூமியர்களை ஓரங்கட்ட வேண்டும் என்று அப்போதே சபதம் எடுத்துக் கொண்டார். சினிமாட்டோகிராப் என்ற புரொஜக்டர் ஒன்றை 7 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கினார். சொந்தமாக தாமாகவே ஒரு அரைகுறை கேமராவையும் வடிவமைத்தார். அந்த கேமரா தானாக நின்று விடும்.தலையில் தட்டினால் மீண்டும் ஓடும்.

  ஒருநாள் சுரங்கப்பாதையில் இருந்து வெளிவரும் பஸ் ஒன்றை படம் பிடித்தார். வழக்கம் போல் கேமரா பாதியில் நின்று விட்டது. மிலி அதன் தலையில் இரண்டு முறை தட்ட கேமரா மீண்டும் ஓடியது. இப்போது சுரங்கப்பாதை முன்பு ஒரு சவஊர்வலம் சென்றதை படம் பிடித்தது. லேப்பில் டெவலப் செய்து பார்த்த மிலிக்கு பெரிய ஆச்சரியம். சுரங்கப்பாதையில் இருந்து பஸ் வந்தவுடன் அந்த இடத்தில் சவ ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. இந்த காட்சி மாற்றத்தின் இடையே ஒரு கதை ஒளிந்திருப்பதை கண்டுப்பிடித்தார். பஸ்ஸில் பயணம் செய்யும் ஒருவன் பின் அவனே சவ ஊர்வலமாக வருவதாக பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ளும்
  சாத்தியம் உண்டு என்ற முடிவுக்கு வந்தார்.

  அதுவரை ஒரு நிகழ்வை மட்டும் டாக்குமென்ட்ரியாக சொல்லும் விதமாகத்தான் சினிமாப் படங்கள் இருந்தன. கதை சொல்லும் உத்வேகம் மிகுந்த மிலி, துண்டு துண்டு காட்சிகளை ஓட வைத்து அதற்கு குரல் வழியாக பின்னணியில் கதை சொல்லத் தொடங்கினார். இது பார்வையாளர்களை கவர்ந்தது.

  சின்ட்ரல்லா' (1899)
  மிலி தனது வீட்டை இடித்து சிறிய ஸ்டூடியோ ஒன்றை உருவாக்கினார். துண்டு துண்டு காட்சிகளாக கேமராவை ஒரே இடத்தில் அசையாமல் நிறுத்தி நாடகத்தை போல கதைகளை படமாக்கினார். கதை ஓரிடத்தில் முடிந்து வேறிடத்தில் தொடர்வதை 'ஃபேட் இன்', 'ஃபேட் அவுட்' தொழில்நுட்பம் மூலம் இணைத்தார். 'கட்-டூ-கட்', 'சூப்பர் இம்போஸ்', 'ஸ்டாப் மோஷன்', 'ஓவர்லேப்', 'டிஸ்ஸால்வ்' போன்ற இன்றைய டெக்னிக்குகள் அனைத்தையும் உருவாக்கியவர் ஜார்ஜ்மிலி தான்.

  'தி ட்ரிப் டூ மூன்' (1902)
  'சின்ட்ரல்லா' (1899), 'தி ட்ரிப் டூ மூன்' (1902), 'தி பேலஸ் ஆப் அரேபியன்
  நைட்ஸ்' (1905) ஆகிய படங்கள் மிலியின் மைல் கல். மிலியின் புதிய
  வளர்ச்சியை கண்டு கொள்ளாமல் பழைய முறையிலேயே வழக்கம் போல் வெறும் நிகழ்ச்சி பதிவுகளை எடுத்து வந்த லூமியர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அவர்கள் சினிமாவை விட்டே விலகினார்.

  'சபதத்தை சாதித்து காட்டினார், ஜார்ஜ்மிலி'!


  17 கருத்துகள்:

  1. எடிட்டிங் தந்தை ஜார்ஜ்மிலி அவர்களைப் பற்றி அறிந்தேன்...

   பதிலளிநீக்கு
  2. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக வேண்டிய தாக்கம் பல சமயம் போய் விடக்கூடிய வாய்ப்புள்ளது

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மைதான். ஜார்ஜ்மிலியைப் பற்றி சொல்ல நிறைய விஷயம் இருக்கிறது.

    நீக்கு
  3. ஜார்ஜ்மிலி பற்றி அறியதந்தற்கு நன்றிகள் பல,நூற்றாண்டு தமிழ்சினிமா என்ற கருத்தரங்கிற்கு குறிப்புகள் எடுக்கும் போது இவர்பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறறன, நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனது பதிவு தங்களுக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.

    நீக்கு
  4. பதில்கள்
   1. வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே.

    நீக்கு
  5. எளக்கு தெரியாத புதிய விடயங்கள் நண்பரே நன்றி நலம்தானே....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. மீண்டும் வந்து கருத்திட்ட நண்பருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

    நீக்கு
  6. 'ஃபேட் இன்', 'ஃபேட் அவுட்' தொழில்நுட்பம் மூலம் இணைத்தார். 'கட்-டூ-கட்', 'சூப்பர் இம்போஸ்', 'ஸ்டாப் மோஷன்', 'ஓவர்லேப்', 'டிஸ்ஸால்வ்' போன்ற இன்றைய டெக்னிக்குகள் அனைத்தையும் உருவாக்கியவர் ஜார்ஜ்மிலி தான்./ இதைத்தான் நாம் இப்போது உபயோகித்துக் கொண்டிருக்கின்றோம். ஜார்ஜ் மிலி பற்றி அறிந்திருப்பதால் நண்பரே இன்னும் கொஞ்சம் கூட சொல்லி இருக்கலாமோ.....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நண்பருக்காக ஜார்ஜ் மிலியைப் பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக பதிவிடுகிறேன்.

    நீக்கு
  7. இவரைப் பற்றி ஹியூகோ என்கிற திரைப்படம் வந்தது என்று நினைக்கேன்...
   அருமையான பதிவு
   தம +

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அந்த படத்தை பற்றி தெரியவில்லை. தகவலுக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  8. Georges Méliès என்ற ஆங்கிலத்தில் தேட வசதியான பெயரை கட்டுரையுடன் சேர்ப்பது மேலதிக தகவல்களை தேட மிக வசதியாக இருக்கும். இவர் வாழ்க்கையை வைத்து எடுத்த ஹியுகோ படம் 2011இல் வந்தது. மிக அருமையாக எடுக்கப் பட்ட இந்த திரைப் படத்தில் ஜார்ஜ் மிலியாக நடித்தவர்.. காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி!

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்