சனி, ஆகஸ்ட் 01, 2015

தாய்ப்பால் ஏன் அவசியம்?


னது குழந்தை எல்லாவற்றிலும் முதன்மையாக, முதலவனாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தாய்க்கும் உள்ளுர ஊரும் கனவு. அதற்காக எத்தகைய துயரத்தையும் தாங்கிக் கொள்வாள். 

அறிவில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக கல்வியோடு தனியாக ஒரு படிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, நன்றாக வளர வேண்டும் என்பதற்காக சத்தான மாத்திரைகள், டானிக்குகள் என்று சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் இதிலே கொட்டுகிறார்கள். 

வளரும் குழந்தைகளுக்கு இத்தனை மெனக்கெடும் தாய்மார்கள் அது குழந்தையாய் இருக்கும் போது  கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் போதும். இப்போது இவ்வளவு பணம் கொடுத்து வாங்கும் அனைத்தையும் விட வலுவான ஆரோக்கியமான குழந்தையை வளர்த்திருக்கலாம். அவர்கள் மெனக்கெட மறந்தது தாய்ப்பாலைதான்.


எல்லா உயிரினங்களிலும் மேன்மையானதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் மனிதன்தான் தாய்ப்பால் விஷயத்தில் விலங்குகளைவிட மோசமாக நடந்த கொள்கிறான். எந்த விலங்கும் தனது குட்டிக்கு போதுமான அளவு பால் கொடுக்க மறுப்பதில்லை. மனித இனத்தின் பெண் மட்டும்தான் தன் குழந்தைக்கு பால் கொடுக்க மறுக்கிறாள். 

பிறந்த குழந்தைக்கு குறைந்த பட்சம் 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வேறு எந்த உணவும் கொடுக்க தேவையில்லை. போதுமான அளவு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு தண்ணீர்கூட கொடுக்க வேண்டியதில்லை. பெரும்பாலான பெண்கள் பால் சுரப்பதில்லை என்கிறார்கள். அதற்கு அவர்கள் மனமே காரணம். 

'என் குழந்தை ஆரோக்கியமாக வளர சத்தான தாய்ப்பால் வேண்டும். அதை என் குழந்தைக்கு குறைவில்லாமல் கொடுக்க வேண்டும்' என்று மனதார நினைத்தாலே போதும். பால் சுரக்கத் தொடங்கும். குழந்தை பிறந்த அரைமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். 

சிசேரியன், உடல்நிலை சரியில்லை என்று பிறந்த சில நாட்கள் பால் கொடுக்கவில்லை என்றால் தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். அதனால் சிசேரியன் என்றாலும் மயக்கம் தெளிந்தப்பின் பால் கொடுக்காலாம். குழந்தை உறிஞ்ச, உறிஞ்ச பால் அதிக அளவில் சுரக்கத் தொடங்கிவிடும்.


குழந்தையின் பசியை அறிந்து இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பாலுட்ட வேண்டும். பால் குடித்த ஒன்றரை மணி நேரத்தில் மீண்டும் பால் சுரந்துவிடும். தாய்ப்பால் இயற்கை தரும் முதல் தடுப்பூசி. அது நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணும். கலப்படமற்றது, சுத்தமானது.  எளிதில் ஜீரணமாகக்கூடியது.

குழந்தையின் மலம், சிறுநீர் வெளியேற்றத்திலும் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். முதலில் வரும் சீம்பால்தான் குழந்தைக்கு வரும் எல்லா நோய்களிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்றக்கூடிய அருமருந்து. தாய்ப்பால் கொடுப்பதால் உடலாலும், மனதாலும் குழந்தை முழு வளர்ச்சியடையும். பார்வை கோளாறு ஏற்படாது. 


அதில் வைட்டமின் டி இருப்பதால் எலும்பை பாதிக்கும் 'ரிக்கட்ஸ்' எனும் நோய் வராது. தன்னம்பிக்கை கூடும். ஞாபக சக்தி அதிகரிக்கும். மூளைத்திறன் கூடும். இவற்றோடு தாயின் அன்பு, பாசம், அரவணைப்பு எல்லாமே குழந்தைக்கு போய்சேரும். 

தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் நன்மைகள் ஏராளம். மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படாது. பிரசவத்திற்குப்பின் அதிகமாக வெளியேறும் ரத்தப் போக்கு தாய்ப்பால் கொடுப்பதால் நின்று விடும். தாய்ப்பால் கொடுக்கும் வரை கணவருடன் கூடினாலும் கருத்தரிக்காது. இது இயற்கை தரும் குடும்பக் கட்டுப்பாடு. இத்தனையும் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள். 

எனவே, தாய்ப்பாலை கொடுங்கள். பால் கொடுத்தால் மார்பகத்தின் கவர்ச்சி குறைந்து போகும் என்ற ஆதாரமற்ற வதந்தியை நம்புவதைவிட தாய்ப்பால் கொடுத்து வலிமையான பாரதத்தை உருவாக்குவோம். அது பெண்கள் கையில்தான் இருக்கிறது.


படங்கள் : கூகுள் இமேஜ்.


30 கருத்துகள்:

 1. தாய்ப்பால் முக்கியத்துவத்தினை உணர்த்தும் பதிவு நன்று. மார்பகக்கவர்ச்சி என்ற மாயைக்காக இட்டிருந்தாலும்கூட பாலூட்டுவது ஒரே மாதிரியான புகைப்படங்கள் அதிகமாக இருப்பது போன்ற உணர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் கருத்தை கண்டதும் மிகவும் கவர்ச்சியாக இருந்த படங்களை நீக்கிவிட்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

   நீக்கு
 2. இன்றைய இளம் பெண்கள் பலரும் செய்யத்தவறியதை ஆணியடித்தது போல சுட்டிக்காண்பித்திருக்கிறீர்கள்! சில பெண்களாவது தன் மனப்போக்கை மாற்றிக்கொண்டால் இந்தப் பதிவு எழுதியதற்கான பலன் கிடைத்து விடும், நல்ல பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தாய்ப்பால் வாரத்திற்காக எழுதிய கட்டுரை இது. நாளை நாளிதழில் வெளிவருகிறது.

   நீக்கு
 3. நண்பர் செந்தில் குமார்,

  உலகிலேயே கலப்படம் இல்லாத ஒன்று என்றால் அது தாய்ப்பால்தான் என்று சொல்வார்கள். தாய்ப்பால் குழந்தைகளுக்கு செய்யும் நன்மைகள் தெரிந்ததே. நாமெல்லாம் அப்படி வளந்தவர்கள்தான். இன்றைக்கும் சில அல்ட்ரா மாடர்ன் பெண்மணிகள் தவிர பெரும்பாலும் பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்ப்பதில்லை என்றே எண்ணுகிறேன். நல்ல பதிவு. ஆனால் இத்தனை படங்கள் தேவையில்லை என்பது என் எண்ணம். ஒரு ஆணின் பார்வை எப்படிப் பட்டது என்று பெண்கள் நன்கறிவார்கள். நான் எழுதியதாக இருந்தால் (கண்டிப்பாக எழுதமாட்டேன்) படமே இல்லாமல்தான் இந்தப் பதிவையே வெளியிட்டிருப்பேன். இதைச் சொல்வதற்காக என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாருங்கள் நண்பரே! நான் நினைத்தது ஒன்று. நடந்தது ஒன்று. படங்கள் இணைத்ததற்கும் அதுதான் காரணம். ஆனால், வேறுமாதிரி புரிந்து கொள்ளப்பட்டதால் நீக்கிவிட்டேன். நன்றி!

   நீக்கு
 4. நல்லதொரு பகிர்வு... இன்னும் சில படங்களை நீக்கி விடுங்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 5. பிள்ளைப் பெற்றால் மட்டும் தாய் இல்லை .தாய்ப் பாலைக் கொடுத்தால்தான் தாய் !

  பதிலளிநீக்கு
 6. பெண்கள் மார்பக அழகு முக்கியமா குழந்தையின் ஆரோக்கியம் முக்கியமா என்று உணர்ந்தாலே போதும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்றைய பெண்களில் பலரும் புரிந்து கொண்டதாகவே தெரிகிறது. சிலர் மட்டும் மாறினால் போதும்.

   நீக்கு
 7. சிறந்த உளநல வழிகாட்டல்
  தொடருங்கள்

  புதிய முகவரியில் மீண்டும் சந்திப்போம்!
  http://yppubs.blogspot.com/2015/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 8. தாய்ப் பாலின் முக்கியத்துவத்தை
  அவசியத்தை உணர்த்தும் அருமையான பதிவு
  நன்றிநண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தாய்ப்பால் விழிப்புணர்வு வாரத்திற்காக எழுதியது. வருகைக்கு நன்றி!

   நீக்கு
 9. வணக்கம்,
  அனைவரும் அவசயம் படிக்கனம், நேற்று புகைப்படங்கள் அதிகமாக இருந்தது, குறைத்து இருக்கலாம் என்று சொல்ல நினைத்தேன், குறைத்துவிட்டீர்கள் போலும்,
  பதிவு அருமை,
  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. நன்றாக சொன்னீர்கள் சகோ ஒவ்வொருவரும் இதை உணர்ந்தால் ஆரோகியமான சமுதாயம் யம் உருவாகும். வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 11. மிகச் சிறப்பான பதிவு நண்பரே! ஒவ்வொரு பெண்ணும் இதை உணர்ந்தால் போதும். பலரும் தங்கள் அழகு கெடுகின்றது என்று பால் கொடுக்கத் தவறுகின்றார்கள்...ஆனால் கட்டித் தேங்கும் பாலை எப்படியும் வெளியில் எடுத்துத்தானே ஆக வேண்டும்..!! அதை பம்ப் செய்து எடுப்பதை விட குழந்தைகளுக்கு ஊட்டலாமே...இதுதான் பெண்களிடம் புரிவதில்லை...இதனால் மணமே புரிந்துகொள்ளாத, புரிந்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ளாத பெண்களும் இருக்கின்றார்கள்...

  நல்ல கருத்துள்ள பதிவு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெண்களிடம் மன மாற்றம் ஏற்படவேண்டும் என்பது உண்மையே!
   வருகைக்கு நன்றி நண்பர்களே!

   நீக்கு
 12. அனைவரும் உணர வேண்டிய அருமையான கருத்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 13. பணம் சம்பாதிப்பதும் இன்று முக்கிய காரணமாக ஆகிவிட்டது பெற்றுபோட்டுவிட்டு ஆபிஸ் செல்கிறேன் என்று கிளம்பிவிடுகிறார்கள் என்ன சொல்வது?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுவும் மிக பெரிய உண்மைதான். பணம் இன்று எல்லா வற்றையும் பின்னுக்குத் தள்ளி விடுகிறது. வருகைக்கு நன்றி சகல!

   நீக்கு
  2. நன்றி சகோ! என்பது தட்டச்சில் தவறுதலாக வந்துவிட்டது. தவறாக எண்ணவேண்டாம்.

   நீக்கு
 14. நல்லதொரு பயனுள்ள பதிவு. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள முடிந்தது.

  எனது வலைப்பூவில் பயனுள்ள பதிவொன்று:

  கம்ப்யூட்டர் ஷார்ட்கட்கள் அனைத்தும் ஒரே இடத்தில்

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...