• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஜூலை 27, 2015

  ஒரு பெண்ணுக்காக 84 கிராமங்கள் இரவோடு இரவாக..!  விகள் உலாவும் இடங்கள் என்று வெளிநாடுகளில் ஏராளமாய் இருக்கின்றன.  அந்த ஆவிகளின் கதைகளால் அந்த  இடங்கள் சுற்றுலா அந்தஸ்தையும் பெற்றுவிடுகிறன்றன.  இந்தியாவிலும்  சில இடங்கள் அப்படி இருக்கின்றன.


  அவைகளில் ஒன்றுதான் குல்தாரா.  இது ஒரு கிராமம். ராஜஸ்தான் மாநிலத்தின் புகழ்பெற்ற இடமாக விளங்கும் ஜெய்சால்மர் நகரத்தில் இருந்து 17 கி.மீ. தொலைவில் இந்த கிராமம் உள்ளது.  190 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் மனிதர்கள் யாரும் வசிக்கவில்லை.  ஒரே இரவில் ஒட்டுமொத்தமாக அவ்வளவு மக்களும் ஊரைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்.


  இந்த ஒரு கிராமம் மட்டுமல்ல. இதன் கட்டுப்பாட்டில் இருந்த 84 கிராமங்களும் இரவோடு இரவாக ஊரை காலி செய்துவிட்டு ஓடினார்கள்.  குல்தாரா மக்கள் போகும்போது இந்த கிராமத்தில் யார் தங்கினாலும் அவர்களுக்கு மரணம் நேரிடும் என்று சாபமிட்டுச் சென்றார்கள்.  அதனால்தான் இத்தனை வருடங்கள் ஆகியும் இந்த கிராமத்தில் வேறு யாரும் வந்து குடியேறவில்லை.


  1291-ம் ஆண்டு பலிவால் என்ற பிராமண மக்கள் ஒன்று சேர்ந்து இந்த கிராமத்தை நிர்மாணிக்க நினைத்தார்கள்.  அகலமான தெருக்கள், கோயில்கள் என மிக நேர்த்தியாக திட்டமிட்டு உருவாக்கிய கிராமம் இது.

  தொழில்நுட்பத்திலும் முன்னணியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். குறைந்த மழையும், அதிக வறட்சியும் கொண்ட இந்த இடத்தில் விவசாயத்தை பிரமாண்டமாக செய்து வந்திருக்கிறார்கள்.


  கிட்டத்தட்ட 600 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் போய்க்கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் இடியென வந்தவன்தான் சலீம் சிங் என்ற தலைமை மந்திரி.

  ஒருநாள் நாட்டைச் சுற்றிப்பார்க்க வந்த சலீம் சிங் இந்த கிராமத்திற்கு வந்திருக்கிறான்.  அப்போது கிராமத்து தலைவனின் மகளைப் பார்த்துவிட்டான்.  அந்தப் பெண்ணின் அழகில் மனதைப் பறிகொடுத்த சலீம் அந்த பெண்ணை தனக்கு மணம் முடித்து தரவேண்டும். இல்லையென்றால் நீங்கள் அனைவரும் வாழ்நாள் முழுவதும் உழைத்தாலும் ஈடு செய்ய முடியாத அளவிற்கு அதிகமான வரி விதித்துவிடுவேன் என்று மிரட்டினான்.


  கிராமத்து மக்களுக்கு தங்களின் தலைவர் மகளை சலீமுக்கு திருமணம் செய்து வைக்க விருப்பமில்லை. தலைவனோ தனது மக்கள் தனக்காக அதிக வரி கொடுப்பதை விரும்பவில்லை.  அதனால் 1825 ஆம் ஆண்டு இரவோடு இரவாக குல்தாரா கிராமத்தினரும் அவர்களுக்கு கீழ் இருந்த 83 கிராம மக்களும் காலி செய்துவிட்டு போனார்கள். அவர்கள் எங்கு போனார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. இன்றுவரை அது மர்மமாகவே இருக்கிறது.

  குல்தாரா கிராமத்தினர் இட்ட சாபத்திற்கு பயந்து யாரும் குடியேறவில்லை. தற்போது இந்த இடம் இந்திய தொல்லியல் துறையின் கீழ் உள்ளது. பாரம்பரியமிக்க இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.


  திரும்பிய பக்கமெல்லாம் சிதலமடைந்த வீடுகளும், இடிபாடுகளும்தான் இருக்கின்றன.  வழக்கமான சுற்றுலா இடங்களை விடுத்து புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்பவர்களுக்கு குல்தாரா ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.

  எப்படி போவது?

  ராஜஸ்தான் தலைநகரமான ஜெய்ப்பூரில் இருந்து 575 கி.மீ. தொலைவில் ஜெய்சால்மர் நகரம் உள்ளது.  ஜெய்சால்மருக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லை. ஜெய்பூர் சென்று செல்லலாம்.
  இந்த கிராமத்தைப் பற்றி ராஜஸ்தான் சுற்றுலா எடுத்திருக்கும் விளம்பர காணொளி.
  34 கருத்துகள்:

  1. வாங்க நண்பர் செந்தில்! ரொம்ப நாளா வரலை....ஓ இந்த ஊருக்குத்தான் பயணம் மேற்கொண்டிருந்தீர்களோ?!!! இந்தக க்ல்த்தாரா கிராமத்தைப் பற்றி முன்பு ஒரு முறை கேள்விப்பட்டு தெரிந்துகொண்டது உண்டு. ஆனால் இந்த அளவு விரிவாக இல்லை.

   நண்பரே நாங்கள் ஒரு இடுகை ஆவி பற்றி பதிவதாக இருக்கின்றோம். இன்னும் முடிக்கவில்லை. அதிலும் ஒரு சில இடங்களைப் பற்றிக் குறிப்பிடும் போது இந்த இடத்தின் பெயரைக் குறிப்பிட்டுள்ளோம். உங்கள் பதிவைப் பார்த்ததும் அட! என்று ஆச்சரியமாக இருந்தது..! ஆவிகளுக்கும் பேய்களுக்கும் வித்தியாசம் உண்டாம். ஆவிகள் நல்லவையாம் நல்லதுதான் செய்யுமாம். நேர்மறையானவையாம். ஆனால் பேய்கள் எதிர்மறையாம். இதைப் பற்றி எங்கள் பதிவில் சொல்லி இருக்கின்றோம். இங்கு தந்தால் பதிவு போல் நீளமாகிவிடும்..ஸோ இங்கு முற்றுப் புள்ளி..

   படங்கள் மிக அருமை. பார்க்கத் தூண்டுகின்றது..!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வழக்கம் போல் ஆழமான விரிவான கருத்துரை. முதலில் வந்து கருத்திட்டதற்கு நன்றி நண்பர்களே!

    நீக்கு
  2. சின்னதா ஒரு கேப்...
   மீண்டும் நீங்க எழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி சார்.


   வித்யாசமான கிராமம்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வேலைப்பளுதான் வரமுடியாதற்கு காரணம். இனி கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி தொடர்ந்து வர முயற்சிக்கிறேன். தங்கள் பாராட்டுக்கு நன்றி மகேஷ்!

    நீக்கு
  3. ஒரு சின்ன இடைவெளிக்கு பின் உங்கள் எழுத்துக்களை வாசித்ததில் மகிழ்ச்சி! கேள்விப்பட்டிராத நகரம்! விரிவான தகவல்களுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகையும் கருத்தும் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. நன்றி நண்பரே!

    நீக்கு
  4. இப்படியும் ஒரு இடமா...? ம்... வேதனையுடன்...

   நலம் தானே...? பேசி நாளாகி விட்டது...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நலமே தங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சியே!

    நீக்கு
  5. இவ்விடம் பற்றி முன்னர் படித்த நினைவு உள்ளது. தங்கள் தளமா...இல்லை வேறு எங்கோ...நினைவில்லை. ஆச்சரியமான இடம் தான்...
   நன்றி சகோ

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இது ஒரு சுற்றுலா தளம்தான். அதனால் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது. யார் கண்டது நான் பத்திரிகையில் எழுதியததை கூட நீங்கள் படித்திருக்கலாம்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  6. கேள்விப்படாத கிராமத்தின் கதை . படங்கள் அருமை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  7. படங்களுடன் சுவாரஸ்யமான தகவல்கள். தனி மனிதன் (சலீம் சிங்) ஒருவனின் அதிகார மிரட்டலுக்கு ஊரே பலி. அவர்கள் என்ன ஆனார்கள்? இன்னும் தேடுங்கள். கிடைத்த செய்தியைப் பகிருங்கள். நன்றி!

   த.ம. 7

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. நான் மட்டுமல்ல, வரலாற்று ஆய்வாளர்களும் தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். எப்படி அவ்வளவு மக்களும் யாருக்கும் தெரியாமல் காணமல் போனார்கள் எனபது இன்றும் மர்மமாகவே நீடிக்கிறது.

    நீக்கு
  8. மிரட்டல், ஆச்சர்யம், சுவாஸ்யம் என அனைத்தும் நிறைந்த பதிவு. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  9. கேட்கவே ஆச்சரியமாக இருக்குங்க!
   எங்கே சென்றிருப்பார்கள் அந்த மக்கள்?
   படங்கள் சிறப்பு.
   காணக்கிடைக்காத காட்சிகளை பகிர்வதற்கு நன்றிங்க.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எங்கு சென்றார்கள் என்பதுதான் யாருக்கும் தெரியவில்லை. ஆச்சர்யமான விடயம்தான்.

    நீக்கு
  10. புகைப்படங்களைப் பார்க்க செல்வராகவனது 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படத்தில் வரும் பைத்தியமாக்கும் கிராமம் போல் அல்லவா இருக்கிறது.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஒருவேளை இந்த இடத்தைப் பார்த்துதான் செல்வராகவனுக்கு அப்படியொரு ஐடியா வந்ததோ என்னவோ.!

    நீக்கு
  11. வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகத்தில் இதையும் சேர்த்து இது போன்ற நிறைய மர்மங்கள் நிறைந்த தகவல்கள் படித்துள்ளேன்.

   சுவாரஸ்யம்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்னும் அந்த புத்தகத்தை படிக்கவில்லை. தாங்கள் கொடுத்த தகவலால் கூடிய விரைவில் படிக்கிறேன். நன்றி நண்பரே!

    நீக்கு
  12. ஏற்கனவே எங்கோ படித்த ஞாபகம்
   தகவலுக்கு நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தகவல் என்பதே பெரும்பாலும் படித்ததாகவே இருக்கும். இதுவும் சுற்றுலா சம்பந்தமான தகவல்தான்.

    நீக்கு
  13. வணக்கம்

   தங்களின் தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதை மகிழ்வுடன் தெரிவித்துகொள்கிறேன்.

   http://blogintamil.blogspot.fr/2015/07/blog-post_29.html

   நன்றி
   சாமானியன்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  14. வணக்கம்

   இன்றைய வலைச்சரத்தில் என் நன்றியுரை...

   http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post.html

   உங்கள் வரவை ஆவலுடன் எதிர்நோக்கும் சாமானியன் !

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் விருப்பம் போல் வலைச்சரத்திற்கு வந்து கருத்தும் வெளியிட்டுள்ளேன். நன்றி நண்பரே!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்