Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இருட்டு நல்லது..!

உலகளாவிய 
மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 
முதல் பரிசு கட்டுரை



இருட்டு நல்லது..!


சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பொருட்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது. அந்த பட்டியலில் வெகு சமீபமாக சேர்ந்திருப்பது ஒளி; அதாவது வெளிச்சம். 

வெளிச்சம் எப்படி சுற்றுச்சூழலை பாதிக்கிறது?

பகலில் தோன்றும் சூரிய ஒளி இயற்கையானது. அதில் அத்தனை பாதிப்பில்லை. மனிதன் இயற்கையை சீண்டியதால் சூரியன் கொஞ்சம் கோபமாக நம்மை தாக்கிக்கொண்டிருக்கிறான். மற்றபடி சூரியன் நல்லவன்தான். 

ஆனால் இரவில் அவனுக்கு தெரியாமல் நாம் நம் உலகை பகல் போல் வெளிச்சமாக்கிக் கொள்கிறோமே, அங்குதான் இருக்கிறது ஆபத்து. அந்த ஆபத்தைப் பற்றிய பதிவுதான் இது.

இரவும் அடர்ந்த இருளும்தானே நமக்கு ஆபத்தையும் பயத்தையும் தருகிறது. மாறாக, ஒளி அச்சத்தை போக்குகிறது. துணிவை தருகிறது. இரவில் கூட வேலைப்பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட ஒளி எப்படி ஆபத்தாகும்?

ஆபத்தாகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயற்கை நமக்கு 12 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளியையும், 12 மணி நேரம் அடர்ந்த இருளையும் கொடுத்திருக்கிறது. இரண்டுக்குமே இரண்டுவிதமான கடமைகள் இருக்கின்றன. நமது உடலும் ஏனைய உயிரினங்களும் 12 மணி நேர ஒளி மாற்றத்துக்கு ஏற்றபடிதான் உருவாக்கப்படிருக்கின்றன. ஆனால், நாம் செயற்கையாக ஒளிரும் விளக்குகளால் இரவின் பொழுதைக் குறைத்துவிட்டோம். இதன் மூலம் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள், மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டோம்.

மின் விளக்குகள் கண்டுபிடிக்காத காலத்திற்கு முன் இருந்த இரவு நேர வானத்திற்கும், இப்போது உள்ள இரவு வானத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். வானத்திலும் ஒளி மாசு பிரதிபலிக்கிறது. இதனால் நட்சத்திரத்தையும் கிரகங்களையும் ஆய்வு செய்யும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

அவர்கள் மட்டுமல்ல, இரவில் வேட்டையாடும் விலங்குகளும், பறவைகளும் இந்த செயற்கை வெளிச்சத்தால் குழம்பிப்போகின்றன. கடல் ஆமைகள் கடலில் இருந்து சற்று தொலைவில் அடர்ந்த இருளான இடத்தில்தான் கூட்டை உருவாக்கி, முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். இந்த ஆமைகள் கலங்கரை விளக்கு ஒளியாலும், கடலுக்கு அருகில் இருக்கும் கட்டடத்தின் விளக்கு ஒளியாலும் பாதிக்கப்பட்டு, இனப்பெருக்கத்தையே குறைத்து வருகின்றன.


பறவைகள் நிலவின் ஒளியை வைத்து அதன் மூலம் தாங்கள் உருவாக்கிக்கொண்ட திசை வழியாக இரவு நேரத்தில்தான் இடம்பெயர்கின்றன. அந்த பறவைகளின் பாதையில் குறுக்கிடும் பெரிய கட்டடங்களின் ஒளியால் கவரப்பட்டு, திசை மாறி அதில் மோதி இறக்கின்றன. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பறவைகள் வருடந்தோறும் இப்படி மடிகின்றன.

வீட்டின் வெளிப்புறம் உள்ள மின்விளக்குகள் அதாவது, தெரு விளக்கு, விளம்பர பலகைகளின் விளக்கு ஒளி போன்றவற்றால் கவரப்படும் பூச்சிகள், விடியும் வரை அந்த விளக்கையே சுற்றிச்சுற்றி வருகின்றன. அதனால் உணவும் எடுத்துக் கொள்ளாமல், இனச்சேர்க்கையும் நடைபெறாமல் பூச்சி இனங்கள் வெகுவேகமாக அழிகின்றன. பூச்சிகள் தானே அழிந்தால் அழியட்டும் என்று விட்டுவிட முடியாது. உயிரினங்களின் உணவுச் சங்கிலி சுழற்சி பாதிக்கப்படும்.

சரி, பறவைகளுக்கும் பூச்சிகளுக்கும் தானே பாதிப்பு நமக்கு எதுவும் இல்லையே?! என்று நாம் நிம்மதியாக இருந்துவிட முடியாது. இது மனிதர்களுக்கு என்னென்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தி சொல்கிறார்கள்.

உலகிற்கு எப்படி 12 மணி நேரம் ஒளி, 12 மணி நேரம் இருள் என்று இருக்கிறதோ, அதேபோல் உயிரினங்களின் உடலுக்குள்ளும் ஒரு உயிர் கடிகாரம் இருக்கிறது. அதுதான் நமக்கு தூக்கத்தையும் விழிப்பையும் தெரிவிக்கிறது. 

செயற்கை ஒளியால் முதலில் பாதிப்பது இந்த உயிர் கடிகாரம்தான். நமது உடல் 12 மணி நேரம் வெளிச்சத்திலும், 12 மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருளில் இருக்கவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி. சூரிய ஒளி  உடல் வளர்ச்சி மற்றும் வலிமைக்கான காரணிகளை தூண்டிவிடுகிறது. இதே தூண்டுதல் நாம் உபயோகிக்கும் ஒளியிலும் உண்டு.

1860-ல் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதில் இருந்து 19 வயதாக இருந்தது. இப்போது அது 8 வயதில் இருந்து 15 வயதாக குறைந்திருக்கிறது. இதற்கு உணவு உட்பட பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணமாக சொல்லபடுவது ஒளிதான்.

சூரிய ஒளி பெண்ணின் ஹார்மோனை தூண்டிவிடுகிறது. அதனாலே வெப்ப நாடுகளில் பெண்கள் சிறு வயதிலே வயதுக்கு வந்து விடுவார்கள். சூரிய ஒளி குறைவாக உள்ள குளிர் நாடுகளில் அதாவது ரஷ்யா, அமேரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவற்றில் பெண்கள் தாமதமாக வயதுக்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்று வெப்ப நாடுகள் குளிர் நாடுகள் என்ற எல்லா இடங்களிலும் ஒரேவிதமாக பெண்கள் விரைவாகவே வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

அதற்கு காரணம் இரவிலும் பகல் போல் ஒளிரும் விளக்குகள்தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வகுப்பறைகள், வீடு, கடைகள் என எங்கும் இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்றவை வெளியிடும் கதிர்வீச்சுகளும் சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை உண்டாக்குகின்றன.


தொடர்ந்து ஒளியின் தாக்கம் உடல் மீது பட்டுக்கொண்டே இருப்பதால் ஹார்மோன் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் சின்ன வயதிலே வயதுக்கு மீறிய சதைப் பிடிப்போடு பெண்கள் வளர்கிறார்கள். விரைவிலே பருவத்துக்கும் வந்துவிடுகிறார்கள்.

சின்ன வயதில் பெரிய மனுஷியாவதில் என்ன தப்பு? என்று கேட்கலாம். சிறுமிகள் வயதுக்கு வந்ததும் பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகம் சுரக்கத் தொடங்கி விடுகின்றன. இந்த சுரப்புகள் எலும்புகளின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன. இதனால் இந்த சிறுமிகள் வளர்ந்து பெரிய பெண்கள் ஆனதும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம். 14 வயதுக்கு பின் பருவம் அடைந்த பெண்களைவிட அதற்கு முன்பே பருவம் அடைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 4 மடங்கு அதிகம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.

ஒளியின் பாதிப்பு இதோடு முடிந்து விடவில்லை. வெளிச்சம் அற்ற அடர்ந்த இருட்டில் தூங்கும் போது நமது உடலில் மெலடோனின் என்ற  ஹார்மோன் சுரப்பு சுரக்கத் தொடங்குகிறது. இதுதான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இது உதவிபுரிகிறது. மேலும் தைராய்டு,  பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் நன்றாக செயல்பட இந்த மெலடோனின் மிக முக்கியம்.

ஆனால், தொடர்ந்து இரவிலும் உடல் மீது வெளிச்சம் பட்டுக் கொண்டே இருக்கும்போது இந்த சுரப்பு வெகு வேகமாக குறைந்து போகிறது. மிக குறைவாகவே சுரக்கிறது. இதனால், தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடற்பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மைக் குறைவு, மலட்டுத்தன்மை போன்ற பல பாதிப்புகள் உருவாகின்றன.

இப்படி தோன்றும் அத்தனை நோய்களையும் ஒரு பைசா செலவில்லாமல் சரி செய்து விடலாம்; விளக்கை அணைப்பதன் மூலம். கூடவே நமது பழக்க வழக்கங்களையும் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் போதும். இரவு 11 மணிக்கு, 12 மணிக்கு தூங்கப் போகிறவர்கள் தொலைக்காட்சி, கணினிக்கு விடைக் கொடுத்து 10 மணிக்கு முன்பே தூங்கிவிடுங்கள். படுக்கை அறையில் இரவு விளக்கும் அணைக்கப்பட்டு அடர் இருளில் தூங்கப் பழகுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். போக போக நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய், மன அழுத்தம் எல்லாம் குறையத் தொடங்கும். இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும் எல்லா வியாதியும் நம்மை விட்டு ஓடிவிடும்.

ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்தப் பின் மேலைநாடுகளில் இப்போதே 'பாரம்பரிய இரவை மீட்போம்..!' என்ற பெயரில் பல இயக்கங்களை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவில் அதற்கான அடிச்சுவடு கூட இன்னும் ஏற்படவில்லை.

இதனை 'ஒளி மாசு' என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவீதம் விளக்குகள் தேவைக்கு அதிகமாக ஒளிர்கின்றன என்கிறது 'சர்வதேச இருள்-வான் அமைப்பு'. நியூயார்க் நகரில் மட்டும் வீடுகளுக்கு வெளிப்புறம் எரியும் மின் விளக்குகள்  வருடத்திற்கு 2.1 கோடி டன் கார்பன் டைஆக்சைடை வெளியேற்றுகின்றன. இந்த ஒரு நகரின் மாசை மட்டும் சரி செய்வதற்கே 87.5 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு.

அதைவிட  சில எளிமையான வழிகள் இருக்கின்றன. தேவையில்லாத இடங்களில் இருக்கும் விளக்குகளை அகற்றுவது, வான் நோக்கிப் பாயும் ஒளியை தடுத்து நிலத்தில் மட்டும் விழும்படி விளக்கைச் சுற்றி கவசமிடுவது, வீடு மற்றும் அலுவலகங்களின் உட்புறத்தில் தேவையில்லாமல் எரியும் விளக்குகளை அணைப்பது போன்றவற்றை செய்தால் 60 முதல் 70 சதவீத ஒளி மாசுபடுதலை தவிர்க்கலாம் என்கிறது ஆய்வு முடிவுகள்.

எது எப்படியோ இயற்கைதான் மீண்டும் வலியது என்பதையே இது காட்டுகிறது. இதனால் நாமும் தேவையற்ற ஒளிகளை குறைத்து, இருளில் படுத்து பாரம்பரிய இரவை மீட்போம்.

இருட்டு நல்லது..!!




82 கருத்துகள்

  1. அருமை நண்பரே மிக முக்கியமான பிரட்சினையை அழகாக ஆராய்ந்து எழுதி இருக்கின்றீர்கள் இயற்க்கையை மறந்து செயற்க்கையில் புகுந்து விட்டோம் மீள முடியுமா ? 80 கடினமே... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்

    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும், முதல் வாக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நன்றி...

    நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

    இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம். நண்பரே!! மிக முக்கிய பிரச்சினையை அருமையாக சொல்லியுள்ளீர்கள்!! வெளிச்சத்தால் வயதுக்கு வருவது அதிர்ச்சியளிக்கிறது!! வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயதுக்கு வர பல காரணங்கள் இருக்கின்றன. ஒளி முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  4. வெளிச்சம் ஆபத்து
    படிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது நண்பரே
    ஆனாலும் உண்மை சுடுகிறது
    தேவையற்ற வெளிச்சத்தைக் குறைப்போம்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே, இது அறியாத ஆபத்து.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  5. வெளிச்சத்தின் ஆபத்து பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர்கள்!
    வாழ்த்துகள் செந்தில்குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  6. இரவைப் பகலாக்கும் வண்ண விளக்குகள் உமிழும் வாயுக்களால் ஏற்படும் பாதிப்புகள் ஏராளம்.
    புதிய கோணத்திலான ஆய்வுக் கட்டுரை. வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. விழிப்புணர்வுக் கட்டுரை. இந்தக் காலத்தின் இளைய சமுதாயம் அறிய வேண்டிய விஷயங்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவில் விடிய விடிய விழித்திருக்கும் இளைய சமுதாயம் உணரவேண்டிய விஷயம்தான்.
      வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  8. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முனைவர் அய்யா!

      நீக்கு
  9. தற்போதைக்குத் தேவையான விழிப்புணர்வுப் பதிவு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுற்றுச்சூழலில் விழிப்புணர்வு பெற்றே ஆக வேண்டிய காலம் இது.
      வாழ்த்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  10. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. ஒளியினால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக விளக்கும் அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே, வாழ்த்துக்கு நன்றி!

      நீக்கு
  11. மின்சாரம் சிக்கனம் தேவை இப்போது என்று எப்படி எழுதிவைத்தாலும் நாம் கேட்பதில்லை. எங்கும் கண் கூசவைக்கும் வெளிச்சம் தான்.இருளின் மகிமையையும் அதனால் நமக்கு உடலில் ஏற்பட்ட நன்மைகளையும் குறிப்பிட்ட நல்லதொரு விழிப்புணர்வுப்பகிர்வுக்கு நன்றிங்க சகோ.
    கண்டிப்பாக போட்டியில் வெற்றி உங்களுக்கே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  12. பதிவு போட்டிக்கு எழுதப்பட்டதானாலும் நாட்டுக்கு நலம் தரும் பதிவு! வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  13. எதுஎப்படியோ, இயற்கை வலியது,,,,,,,,
    அருமை சகோ, நல்ல பதிவு, வாழ்த்துக்கள்,,,,,, நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கையை மிஞ்சியது எதுவும் இல்லை. இதை மனிதன் மிக தாமதமாகத்தான் உணர தொடங்கியுள்ளான்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  14. இருளில் இருப்பதில் இத்தனை நன்மைகளா? அருமையான படைப்பு. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாம் இருளைத் தொலைத்துவிட்டோம். முடிந்த அளவு இருளில் இருப்போம்.
      வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  15. அன்புள்ள அய்யா,

    ஒளி மாசு பற்றி அருமையான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.
    நன்றி.
    த.ம.11.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  16. படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

    இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

    நன்றி...

    புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
    அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
    http://dindiguldhanabalan.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி நேரத்தில் அவசரமாக இதுவும் இனப்படுகொலைதான் என்ற கட்டுரை எழுதி போட்டிக்கு அனுப்பிவிட்டேன்.
      நினைவூட்டலுக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  17. சிறப்பான கட்டுரை.....

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் செந்தில்.

    பதிலளிநீக்கு
  18. போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பு வேண்டிய தேதியை மேலும் இரண்டு நாள் நீட்டித்திருக்கிறார்கள் நண்பரே... http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_1.html

    ஏற்கனவே அனுப்பியவற்றைப் போன்று மேலும் சில அருமையான படைப்புகளை அனுப்ப முயற்சியுங்கள்.

    வாழ்த்துக்களோடு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  19. போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பு வேண்டிய தேதியை மேலும் இரண்டு நாள் நீட்டித்திருக்கிறார்கள் நண்பரே... http://bloggersmeet2015.blogspot.com/2015/10/blog-post_1.html

    ஏற்கனவே அனுப்பியவற்றைப் போன்று மேலும் சில அருமையான படைப்புகளை அனுப்ப முயற்சியுங்கள்.

    வாழ்த்துக்களோடு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் நண்பரே!

    ஒளிமாசு என்பது பரவலாக அறியப்படாத ஒரு விடயம்.

    பறவைகள் வலசை போதலின் போது இப்பெரொளிகள் அவற்றின் பாதைகளைத் திசைதிருப்புகின்றன என்று அறிந்திருக்கிறேன். மற்றபடி நீங்கள் சொல்லும் செய்திகள் புதியன. அறியப்பட வேண்டியன.

    இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம், நண்பரே ஒளிமாசு பற்றி பலருக்கும் தெரியாதுதான். எனக்கு தெரிந்ததை சொல்லியிருக்கிறேன்.
      கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  21. இயற்கை வலியது, இருட்டு நல்லது என்று இடித் துரைத் துள்ளீர்கள். சிறப்பான கட்டுரை பிரமிப்பாகவே உள்ளது அனைத்தும் புதிது. நன்றி நன்றி !

    போட்டியில் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையில் இயற்கைதான் மிக வலியது. அதை கொஞ்சமாவது உணரவைக்கும் முயற்சிதான் இந்த பதிவு.
      கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  22. இருட்டு நல்லது அதிக ஒளி உடலுக்குத் தீங்கு செய்கிறது என்ற புதிய செய்திகளை அறிந்துகொண்டேன். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

      நீக்கு
  23. முதல் பரிசு வென்றமைக்கு நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  24. போட்டியில் முதல் பரிசு பெற்று வெற்றி பெற்றமைக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  25. போட்டியில் முதலிடம் பெற்ற தங்களுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  26. வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  27. வெற்றி பெற்றமைக்கு புதுகை பதிவர் விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  28. வலைப்பதிவர் சந்திப்பு போட்டியில் வெற்றி பெற்ற உங்களுக்கு எனது மனமார்ந்தவாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  29. உளப்பூர்வமான வாழ்த்துகள் ஐயா!

    தங்களின் சீரிய எழுத்துப்பணி தொடரட்டும்!

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி! முதல் பரிசும் தங்களின் வாழ்த்தும் என்னை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்னும் எழுத தூண்டுகிறது. நன்றி!

      நீக்கு
  30. அன்புள்ள அய்யா,

    முதல் பரிசு பெற்றதற்கு என்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  31. அருமையான, இன்றைக்கு மிகப் பொருத்தமான தகவல்களுடன் கூடிய கட்டுரை!
    வெற்றிபெற்றதற்கு மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி சகோ! தாங்கள் பரிசு வென்றதற்கும் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  32. முதலிடம்பிடித்து வெற்றிபெற்றசகோவிற்கு எனது மனம் நிறைந்தவாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றமைக்கு எமது பாராட்டுக்கள்.

    அன்புடன்
    முனைவர் துரை.மணிகண்டன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  34. கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  35. கட்டுரைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று வெற்றியீட்டியமைக்கு
    உளமார்ந்த நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  36. கட்டுரைப் போட்டியில் வெற்றி வாகை சூடியதற்கு வாழ்த்துக்கள் ! இரவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளீர்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் உளங்கனிந்த வாழ்த்துக்கு நன்றி அய்யா!

      நீக்கு
  37. வாழ்த்துகள்!
    முதல்ப்பரிசுக்கு முழுமையாகத்தகுதி பெற்ற
    கட்டுரை!

    பதிலளிநீக்கு
  38. இப்போதுதான் வாசித்தோம் செந்தில்! அதனால்தான் அன்று உங்களுடன் அதிகம் எதைப் பற்றியும் பேச முடியவில்லை...

    நல்ல தகவல்கள் அடங்கிய கட்டுரை. இப்போதைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமான ஒன்று. அடர்ந்த இருளில்தான் தூங்க வேண்டும். நல்ல கட்டுரை..முதல் பரிசுக்குத் தகுதியான கட்டுரை. சுற்றுப்புறச் சூழல் என்றாலே உலக வெப்பம், ப்ளாஸ்டிக் கேடு என்று பல பேசப்படும்...ஆனால் ஒளி மாசு பற்றி யாரும் பேசுவதில்லை...அதைப் பற்றித் தாங்கள் சொல்லியது அருமை....அது போன்று ஒலி மாசு பற்றியும் யாரும் சொல்லுவதில்லை. சரி அது பற்றி இங்கு பேசினால் இடுகை போல் ஆகிவிடும்...எனவே இங்கு முற்றுப் புள்ளி....இங்கு ஏன் இதைப் பற்றிப் பேசிகின்றோம் என்றால் போட்டிக்குத் தலைப்புகள் கொடுத்தவுடன், இந்தத் தலைப்பிற்கு நாங்கள் யாராவது ஒளி, ஒலி மாசு பற்றி எழுதுகின்றார்களா என்று எதிர்பார்த்த்க் கொண்டிருந்தோம். நீங்கள் இது பற்றி தலைப்பைப் பார்த்ததும் வாசிக்கவில்லை என்றாலும் ஆஹா என்று சொல்லிக் கொண்டோம்...ஒலி பற்றி யாரும் எழுதியதாகத் தெரியவில்லை.

    மனமார்ந்த வாழ்த்துகள்!!!

    கீதா: சர்கேடியன் ரிதம் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நம் உடலில் இருக்கும் இயற்கையான ரிதம். பயலாஜிக்கல் கடிகாரம். சூரிய ஒளிக்கு ஏற்பவும், தட்பவெப்ப நிலைக்கு ஏற்பவும் (அதுவும் சூரிய ஒளி சார்ந்தது..குளிர்காலத்தில் சூரியன் ஒளி குறைவாகவும், கோடை காலத்தில் கூடுதலாகவும், பகல் இரவு...உள்ளதால் நம் ரிதம் அதற்கேற்ப மாறுபடும்....மெதுவாக அட்ஜஸ்ட் ஆகும்...அத்னால் தான் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது அந்த நாட்டுச் சூரிய ஒளிக்கு ஏற்ப நம் சர்கேடியன் ரிதம் அட்ஜஸ்ட் ஆவதற்கு நேரம் எடுத்துக் கொள்கின்றது..ஜெட் லாக் என்கின்றோம்...இதுஇயற்கை....ஆனால் நீங்கள் இங்கு சொல்லி இருக்கும் இந்த செயற்கை ஒளி விளக்குகள், அதிகமாக அதிகமாக நமது சர்கேடியன் ரிதம் பாதிக்கப்படுகிறது என்பதால் தான் தூக்கம் இல்லாததால் வரும் உடல் உபாதைகள் பெருகுகின்றன. அதனால் தான் Early to bed and Early to rise makes a man healthy, wealthy and wise! என்று சொன்னார் பெஞ்சமின் ஃப்ராங்க்ளின். ஆனால் இதற்கும் எதிர்வாதங்க்ள் உண்டுதான். ஐயோ இதுவே பதிவு போல் ஆகிவிட்டதோ...சரி இங்கு இதற்கு முற்றுப் புள்ளி...ஒலி மாசு எதிர்ப்பார்த்தோம் ...கட்டுரைகளில் இல்லை என்று நினைவு...தளத்தில் எழுதிவிட்டால் போச்சு...அதோ போன்று பொது சுகாதாரம் பற்றி யாராவது எழுதுவார்கள் என்று எதிர்ப்பார்த்தோம் அதுவும் இல்லை என்று நினைக்கின்றோம்...இனிதான் எல்லாம் பார்க்க வெண்டும்...அதுவும் உண்டு எங்கள் லிஸ்டில்....

    மனமார்ந்த வாழ்த்துகள்! .தகுதி உள்ள கட்டுரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம்போல் விரிவான கருத்துரை ஏகப்பட்ட தகவல்களுடன் தங்களிடமிருந்து வந்திருக்கிறது. ஒலி மாசுப் பற்றியும் எழுதலாம் என்றிருந்தேன். ஆரம்பத்தில் இந்த போட்டிக்காக 10 கட்டுரைகளை எழுதுவது என்று முடிவு செய்திருந்தேன். நேரமின்மையால் 4 மட்டுமே முடிந்தது.
      கீதா அவர்களின் சர்கேடியன் ரிதம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தாலும் விளக்கமாக கூறியது அருமை. வாழ்த்துக்கு நன்றி!

      நீக்கு
  39. எஸ்.பி. எஸ் செய்தால் எதையும் தெளிவாக செறிவாக செய்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணம் ஆகிவிட்டது..
    வாழ்த்துக்கள் தோழர்...
    தேவியர் இல்லம் அருகே நீங்கள் இருந்ததை தாமதமாத்தான் உணர்தேன்
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
    த ம +

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! அருமையான மறக்க முடியாத நிகழ்வை அளித்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

      நீக்கு
  40. இப்போதுதான் தங்கள் கட்டுரையைப் படித்தேன். (நடுவர் குழுவினரின் கருத்துகளைப் பெற்று வெளியிடும் வரை எந்தப் போட்டிப் படைப்புகளையும் படிப்பதில்லை, அளவு மட்டும் பார்ப்பது என்றே ஒரு வரையறை வைத்துக்கொண்டேன்) ஏராளமான தேவையான தகவல்களை எளிய இனிய முறையில் அழகாகத் தந்திருக்கிறீர்கள். பரிசுக்குத் தகுதியான படைப்பு என்பதில் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து தொடர்பில் இருப்போம் நண்பரே. இந்த விழாவில் தங்கள் நட்பும் எங்கள் விழாக்குழுவிற்கு மகிழச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி அய்யா!
      தொடர்ந்து தொடர்பில் இருப்போம். நான் அடிக்கடி ஏதாவது வெளியூர்களுக்கு சென்று விடுவேன். அந்த நாட்களில் பின்னூட்டம் இட முடியாமல் போகும். மற்றபடி பெரும்பாலும் பதிவுகளை படித்துவிடுவேன்.
      வருகைக்கும் தங்களின் மேலான கருத்துக்கும் அற்புதமான வலைப்பதிவர் சந்திப்பின் மூலம் பலரையும் சந்திக்க முடிந்ததும், தங்களின் அறிமுகத்திற்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  41. என் பதிவில் வெற்றி கேடயத்தோடு புத்தகமும் கிடைத்ததாக பின்னூட்டம் இட்டு இருந்தீர்கள். அதை படித்தவுடன், தம் வெற்றிக்கான கட்டுரையை தேடி வந்தேன். அருமை ஐயா...ஒரு ஆபத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். எழுத்துக்கும் பரிசுக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை