வியாழன், பிப்ரவரி 11, 2016

உலகம் முழுவதும் ஒரே அவசர எண்ப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத இக்கட்டான உலகில்தான் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுற்றுலா செல்லும் போது நாம் நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து விடலாம். அப்போது உதவிக்கு யாரை அழைப்பது என்று பரிதவிப்போம். 


இதற்காகவே 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் உள்ளன. காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 044-28447200 என்ற எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்ட இந்த சேவையில் சம்பந்தப்பட்ட துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் ஒவ்வொரு துறைக்கும் இலவச அவசர அழைப்பு எண்கள் உள்ளன. இவை அனைத்தும் 24 மணி நேர சேவை கொண்டவை. 

அவசர போலீஸ் உதவிக்கு 100

தீயணைப்புத் துறைக்கு 101

ஆம்புலன்ஸ் உதவிக்கு 102 
(108 வருவதற்கு முன்பு இந்த எண்தான் இருந்தது)

போக்குவரத்து முறைகேட்டிற்கு 103

ஆம்புலன்ஸ் உதவிக்கு 108

குழந்தைகளுக்கான உதவிக்கு 1098

பெண்களுக்கான உதவிக்கு 1091

முதியோருக்கான உதவிக்கு 1253

மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு உதவிக்கு 12700

ராகிங் தொல்லை உதவிக்கு 155222 அல்லது 18001805512 

என்று ஒவ்வொரு உதவிக்கும் ஒரு எண் உண்டு. 

இவை அனைத்தையும் நினைவில் வைத்துக் கொள்வது மிகுந்த சிரமம். அதிலும் வெளிநாடு சென்றிருக்கும் போது நமது நாட்டிற்கான எந்த அவசர உதவி எண்களும் பயன்படாது. 


இன்றைக்கு வெளிநாட்டு பயணம் என்பது சர்வ சாதாரணமானதாக மாறிவிட்டது. அங்கு ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டால், அவசர உதவிக்கு என்ன செய்வது? அதற்காகத்தான் உலகம் முழுக்க ஒட்டுமொத்த உதவிக்கு ஒரு அவசர உதவி எண்ணை வைத்துள்ளனர். அந்த எண்கள் 911, 112. 


இந்த எண்ணை ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டில் இருக்கும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கோ அல்லது உதவி மையத்திற்கோ சென்றடையும் படி அமைத்திருப்பார்கள். நமது தமிழகத்தில் 911, 112 என்ற எண்களை டயல் செய்தால் தானாக அவசர எண் 100-க்கு சென்று சேர்வது போல் அமைத்துள்ளனர். இந்த எண்ணிற்கு 'மிஸ்டு கால்' கொடுத்தால்கூட போதும் அவர்கள், நம்மை தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள். 


இந்த அவசர எண்களை அழைக்க செல்போன்களில் பணம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் போனில் கீபேட் லாக் ஆகியிருந்தால் கூட 1, 2, 9 ஆகிய இந்த மூன்று எண்களை மட்டும் டயல் செய்ய முடியும். உங்கள் மொபைல் சிம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட, சிம் கார்டே இல்லாமல் இருந்தாலும் கூட இந்த 911, 112 எண்களை அழைக்க முடியும். மொபைல் சிக்னல் இல்லாத இடங்களில் கூட டயல் செய்யமுடியும். 

எனவே, உலகம் முழுவதும் அவசர உதவிக்கு அழைக்க கூடிய 911, 112 எண்களை நாம் எப்போதும் நினைவில் வைத்திருப்பது நல்லது. 
32 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் வருகைக்கும் முதல் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. இந்த எண்களை நினைவில் வைப்பது நல்லது ,தொடர்பு கொள்ள வேண்டிய நிலை வராமல் இருப்பது, ரொம்ப நல்லது :)

  பதிலளிநீக்கு
 3. அவசியமானதகவல்கள்!அவசர உதவி எண்கள் மனப்பாடமாயிருப்பது நல்லது!

  பதிலளிநீக்கு
 4. அனைவருக்கும் பயன்படும் அற்புதமான
  இதுவரை அறிந்திராத தகவல்
  பதிவுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 5. அவசியத் தகவல்கள். சில புதிய செய்திகள். (911 க்கு டயல் செய்தாலும் 100க்குச் செல்லும் என்பது)

  பதிலளிநீக்கு
 6. பயனுள்ள பதிவு தவலுக்கு நன்றி .

  தம +1

  M.செய்யது
  Dubai

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் முறை வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 7. நான் கேள்விப்பட்டது: இங்கு, 112 (GSM standard-ஆக இருந்தாலும்) dial செய்தாலும் 911-க்கு reroute ஆகும். மேலும், ரொம்ப தாமதம் வேறு ஆகும் என்பதால் அதுக்கு நேராகவே 911 dial செய்ய இங்கு அறிவுருத்திகிரார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் டயல் செய்து பார்த்தேன் உடனே கிடைத்தது. இரண்டு எண்களுமே ஒரே இடத்திற்குத்தான் போனது. ஒரே காவலர்தான் இரண்டையும் எடுத்தார். வருகைக்கு நன்றி நம்பள்கி ஜி!

   நீக்கு
  2. இந்தியாவில் 911 இருப்பது எனக்கு தெரியாது! Sorry!
   இங்கு, 911 டெஸ்ட் செய்ய டயல் செய்தால் கூட அது criminal குற்றம்! எதுக்கு 911 டெஸ்ட் செய்யணும்? யாரும் இங்கு சொன்னால் நம்பவும் மாட்டார்கள். Because, you are denying someone getting from an emergency medical aid...fire (இங்கு அரை மணியில் நெருப்பினால் வீடு காலி, police help!

   இங்கு இருப்பவர்களுக்கு இந்த எச்சரிக்கை!
   _____________
   In the United States, calling 911 for any purpose other than to report an emergency could result in criminal penalties. Each state has different penalties for 911 misuse, but in most cases, abuse can lead to jail time and stiff fines.

   நீக்கு
  3. இந்திய மக்களுக்கு அந்தளவுக்கு விழிப்புணர்வு இல்லாததால் இங்கு தண்டனை எல்லாம் கிடையாது. ஆனாலும், நான் பத்திரிகைக்கு எழுதுவதால் அந்த எண்கள் இந்தியாவில் அதிலும் தமிழகத்தில் வேலை செய்கிறதா என்று டெஸ்ட் செய்து பார்த்தேன். இதை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கும் தெரியும்.
   நன்றி நண்பரே!

   நீக்கு
 8. பயனுள்ள தகவல்கள். நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவை மீண்டும் பார்த்து எண்களை செல்போனில் சேமித்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். (இங்கு BSNL நெட் ஒர்க்கில் பல்வேறு குழப்பங்கள்; அதனால் பல தளங்களுக்கு தொடர்ந்து செல்ல இயலவில்லை)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டாயம் செய்து கொள்ளுங்கள். ஆபத்தான காலகட்டத்தில் மற்றவர்களுக்கு நாம் உதவலாம்!

   நீக்கு
 9. நல்ல பதிவு..ஆனால் நம் நாட்டில் இந்த எண்களின் இணைப்பு கிடைப்பதே குதிரைக்கொம்பாகவே இருக்கிறதே...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு குதிரை கொம்பாக இருக்கவில்லை. உடனே கிடைத்தது. வருகைக்கு நன்றி !

   நீக்கு
 10. மிகவும் பயனுள்ள தகவல்கள் நண்பரே பொதுநலத் தொண்டருக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. மிக மிக பயனுள்ள பதிவு செந்தில்....இந்த எண்கள் கைவசம் உண்டு....112 ஐ விட 911 எளிது தொடர்பு கொள்ள...112ம் 911க்குத்தான் தொடர்பை இணைக்கும்.

  மிக்க நன்றி ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 911-சேவை இருந்தால் அதை ஏன் மக்களுக்கு விளம்பரபடுத்தவில்லை?
   இங்கு மூன்று அவசர உதவிக்கும் ஒரே நம்பர்; ஏகப்பட்ட நம்பர்கள் கொடுத்தால் அவசரத்தில், பயத்தில், நம்பர் மறக்கும். இங்கு நான்கு ஐந்து வயது குழந்தைகளுக்கு கூட 911 டயால் செய்ய்த் தெரியும். எவ்வளவோ முறைகளில் அம்மா மயக்கமா உயிருக்கு போராடும் போது...குழந்தைகள் டயல் செய்து காப்பாற்றி இருக்கிறார்கள்.

   இந்தியா மாதிரி இத்தனை நம்பர்கள் கொடுத்தா எல்லாரும் ராமானானுஜம் மாதிரிதாரி இருக்கணும்! குழந்தைகள் பாடு திண்டாட்டம் தான்!

   இங்கு ஒன் அண்ட் ஒன்லி ஒன் நம்பர்: 911

   நீக்கு
  2. வருகைக்கு மிக்க நன்றி துளசி சார் மற்றும் கீதா சகோ!

   நீக்கு
  3. வாருங்கள் நம்பள்கி,
   ஒரே எண்ணை கொண்டு வருவதற்குத்தான் இந்த முயற்சி. பல துறைகளையும் ஒன்றிணைப்பதில் இன்னும் தாமதம் நிலவுகிறது. இப்போதும் கூட இந்த எண்கள் கூட காவல்துறைக்குத்தான் போகிறது. இன்னும் இது முழுவீச்சில் செயல்பட துவங்கவில்லை. அதனால்தான் இன்னும் பெரிதாக விளம்பரப்படுத்தப் படவில்லை.

   நீக்கு
 12. அசத்தல் பதிவு ஜி
  விவசாய மகுடத்திற்கும் சேர்த்தே வாழ்த்துகள்
  அந்தப் பதிவு எப்போ வரும் ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி நண்பரே!
   விரைவில் வெளிவரும்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...