• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், பிப்ரவரி 10, 2016

  'வாட்டர்' பாட்டில் போல் இனி 'காற்று' பாட்டில்..!  ளர்ச்சி என்ற பெயரில் நாம் பெரும் மடத்தனம் செய்து கொண்டிருக்கிறோம் என்று இயற்கை ஆர்வலர்கள் ஆட்சியாளர்களை தூற்றத் தொடங்கிவிட்டார்கள். இத்தனை காலம் நமக்கு இயற்கை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்த அனைத்தையும் காசு கொடுத்து வாங்குவதைத்தான் நாம் வளர்ச்சி என்கிறோம் என்று குமுறுகிறார்கள். 

  ஏற்கனவே தண்ணீரை விலைக்கு வாங்கிப் பழகிவிட்டோம். இப்போது அதில் காற்றும் சேர்ந்து கொண்டது. சுத்தமான காற்று பாட்டிலில் அடைத்து விற்பனைக்கு வரத்தொடங்கிவிட்டது. 


  இதற்கான முதல் பிள்ளையார் சுழியை போட்டிருக்கிறது சீனா. சீனாவில் காற்று இப்போது ஏகப்பட்ட மாசோடு இருக்கிறது. மக்கள் மூச்சு விடவே திணறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மாசு காரணமாகவே சுத்தமான காற்றுக்காக மக்கள் ஆளாய் பறக்கத்தொடங்கி விட்டார்கள். சுத்தமான காற்றைத் தேடி உயரமான மலைகள் மீதும், அடர்ந்த காடுகளிலும் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள். 

  இனி காற்றைத்தேடி இப்படி அலையாதீர்கள். உங்களுக்கு தேவையான சுத்தமான காற்றை நாங்கள் தருகிறோம் என்று சில நிறுவனங்கள் அங்கு காற்றை பாட்டிலில் தரத்தொடங்கி விட்டன.   சீனாவில் இப்போது சுத்தமான காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் பாட்டிலில் விற்கப்படும் இந்த காற்றைத்தான் வாங்கி சுவாசிக்க வேண்டும்.  


  சீனாவின் தலைநகர் பெய்ஜிங் உள்பட பல்வேறு நகரங்களில் வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள் மூலமாக அதிகமான புகை வெளியேறுகிறது. மேலும், வீடுகளில் குளிர் காய்வதற்காக நிலக்கரி எரிப்பதாலும் அதன் மூலமும் அதிக புகை வெளியேறுகிறது. இதனால், அங்கு காற்றில் மாசு பெருகி உள்ளது.

  இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பு சீனா தலைநகர் பெய்ஜிங்குக்கு காற்று மாசு காரணமாக அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால், அங்கு பள்ளிகள் மூடப்பட்டன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வெளியே வராமல், வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். 


  மாசடைந்த காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சீன மக்களுக்காக, கனடா நாட்டிலுள்ள 'பான்ப்' மற்றும் 'லேக் லூயிஸ்' ஆகிய மலைகளிலிருந்து சுத்தமான காற்றை பாட்டில் அடைத்து, கனடா நாட்டு தனியார் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

  'லேக் லூயிஸ்' மலையின் காற்று இந்திய மதிப்பின்படி ரூ.1,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 'பான்ப்' மலையின் காற்று இதைவிட அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இந்த காற்றை சுமார் 10 மணி நேரம் வரை சுவாசிக்கலாம். அதன் பிறகு அடுத்த பாட்டில் மாற்றிக் கொள்ள வேண்டும். 


  நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு பைசா கூட செலவழிக்காமல் நமக்கு கிடைக்கும் காற்றுக்கு வருங்காலத்தில் ஒரு நாளைக்கு ரூ.4,000-க்கு மேல் செலவழிக்க வேண்டும். ஒரு மனிதர் ஒரு மாதம் சுவாசிக்க  ரூ.1,25,000 சம்பாதிக்க வேண்டும். நான்கு பேர் கொண்ட சிறு குடும்பம் என்றால் ரூ.5 லட்சம் வேண்டும். 

  இது சாதாரணமான விஷயமில்லை. 10 வருடங்களுக்கு முன் நான் வெளியூர் செல்லும் போது நான் தண்ணீருக்கென்று ஒரு பைசா செலவழித்ததில்லை. இப்போது ஒரு நாளைக்கு 100 ரூபாய் தண்ணீர் பாட்டிலுக்கு மட்டுமே செலவாகிறது. நான் ஒரு மாதம் வடகிழக்கு மாநில சுற்றுலா சென்று வந்த போது தண்ணீருக்கு மட்டும் 3,000 ரூபாய் செலவாகியிருந்தது. 


  இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால் இப்படி விலைக் கொடுத்து வாங்கும் நீரும் காற்றும் கூட அதிக நாளைக்கு நமக்கு கிடைக்காது என்பதுதான். 

  இனிமேலாவது இயற்கைக்கு மதிப்பு கொடுப்போம்..!


  34 கருத்துகள்:

  1. இனி ,காற்றுக்கென்ன வேலின்னு கூட பாட முடியாது போலிருக்கே :)

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. கண்டிப்பாக பாட முடியாது. முதல் வருகைக்கு நன்றி பகவான்ஜி!

    நீக்கு
  2. நல்ல எச்சரிக்கைப் பதிவு
   படங்களுடன் பகிர்ந்த விதம்
   மிகமிக அருமை
   பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  3. வணக்கம் நண்பரே அருமையான பதிவு
   இந்த இழவுக்குதான் நண்பரே நான் தொடக்கம் முதலே விஞ்ஞான வளர்ச்சி மனிதனுக்கு வீழ்ச்சியே என்று சொல்லி வருகிறேன்
   தமிழ் மணம் 3

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. விஞ்ஞானமும் வேண்டும் நண்பரே! ஆனால், அது மனிதனை அளிக்கும் அளவிற்கு அசுர பலத்தோடு வேண்டாம்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  4. மிகவும் அருமையான நியாயமான எச்சரிக்கைப் பகிர்வு. பிற்காலத்தில் ஒருநாள் நாம் சுவாசிக்கும் காற்றுக்காகவே பல லட்சங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதை நினைத்தாலே தலையைச் சுற்றுகிறது. விழிப்புணர்வு ஊட்டிடும் பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மையிலே தலை சுற்றத்தான் செய்கிறது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  5. இந்தக் காலக் கொடுமைக்கு காரணம்.. ஆட்சியாளர்கள்தான் காரணம்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அறிவியலும், மக்களைப் பற்றி கவலைப்படாத ஆட்சியாளர்களும்தான் இதற்கு காரணம்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  6. முகத்தில் அறையும் நிஜம் இது தான், நீரின்றி உலகில்லை,காற்றின்றி உயிரில்லை, இவை இரண்டுமின்றி எதுவுமே இல்லை என உணராமல் அத்தனையையும் மாசு படுத்திக் கொண்டோம்.

   நினைக்கவே பகீர் என வைக்கும் ஆழமான விடயம் இது,
   கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே இங்கே நீரை சேமியுங்கள் என பிரச்சாரம், நீரின்றி போனால் மின்சாரமும் ஷாக் அடிக்க வைக்கும் விலையில் தான் கிடைக்கும்,

   காற்றுக்கு காசு எனும் விட்யம் சிந்திக்க வேண்டியதே! இனியேனும் விழிக்கா விட்டால் இனி என்றுமே விழித்தெழ மாட்டோம்!

   அருமையான கட்டுரை செந்தில் குமார்,பாராட்டுகள்.

   த.ம

   பதிலளிநீக்கு
  7. கிணற்று நீரை வடிகட்டி சூடு பண்ணி குடித்த காலம் போய் விடுமுறையில் ஊருக்கு போனால் குடிநீருக்கு என 30,40 ஆயிரங்கள் ஒரு மாதத்துக்கு மட்டும் செலவாகி விடுகின்றது,வசதியும் வாய்ப்பும் எத்தனை இழப்புக்களை நம்மேல் திணிக்கின்றது!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பணம் இருக்கிறது என்பதால் இயற்கையை விலைக்கு வாங்க முடியுமா? ஆனால், இந்த உண்மை பலருக்கும் புரிவதில்லை. என்பதே வேதனையான செய்தி!

    நீக்கு
  8. பதில்கள்
   1. நாம் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் இயற்கை மாசு படுகிறது.

    நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

   காற்று வாங்கப் போனேன்... ஒரு பாட்டிலில் வாங்கி வந்தேன்...!

   கொடுமையிலும் கொடுமை...!

   த.ம.7

   பதிலளிநீக்கு
  10. அருமையான பதிவு சகோ....இங்கும் கூட நல்ல காற்றுக் கிளினிக்குகள் வந்ததாகக் கேள்விப்பட்டேன் பங்களூரில்...

   தில்லியில் இது போன்று ஸ்மாக் வந்து ஒற்றைபடை எண்கள் கார்கள் ஒரு தினம், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் மற்றொருதினம் ஓட்ட வேண்டும் என்று கூட செய்தி அடிபட்டது. வெங்கட்ஜி கூட அவரது பதிவில் சொல்லியிருந்தார். அப்போதுதான் சைனாவில் பெய்ஜிங்கில் ஸ்மாக் பயங்கரமாக வந்து பள்ளிகள் எல்லாம் விடுமுறை நீங்கள் சொல்லியிருக்கும் இந்தச் செய்திகள் உட்பட...

   ஸ்மாக் அதிகமுள்ள 10 நாடுகளில்/நகரங்கள் இந்தியா, சைனா, இரான், மங்கோலியா, சௌதிஅரேபியா, போட்ஸ்வானா அடக்கம். காற்று மட்டுமல்ல, தண்ணீரும் விஷமாகி வருகின்றது.

   நாம் என்ன செய்யப்போகின்றோம் என்பதைப் பொருத்துத்தான் எதிர்காலம்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இருக்கிறது. ஆக்சிஜன் பார்லர் என்று அதை குறிப்பிடுகிறார்கள். அங்கு சென்று வந்தால் மிகவும் புத்துணர்ச்சியாக இருப்பதாக சொல்கிறார்கள். நாம் வளர்ச்சி என்ற பெயரில் உணவில் 5% நஞ்சும், காற்றில் 10% நஞ்சும் உடலில் சேர்த்துக் கொண்டே இருக்கிறோம். அது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கொன்று கொண்டிருக்கிறது. எப்படி மீளப்போகிறோம் என்று தெரியவில்லை.

    நீக்கு
  11. பதில்கள்
   1. நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கும் காலம் இது.

    நீக்கு
  12. இந்தச் செய்தியை ஏற்கெனவே படித்து எங்கள் தளத்திலும் பகிர்ந்திருந்தேன். இவ்வளவு விளக்கமாக அல்ல! "குடிக்கும் நீரை விலைகள் சொல்லி பிழைக்கும் கூட்டம் இங்கே.." என்று யேசுதாஸ் குரலில் எம் ஜி ஆர் ஒரு படத்தில் பாடினார். இந்த விஷயத்தை எப்படிப் பாடுவார்களோ!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இப்போது அப்படி சிந்திக்கும் கவிஞர்கள் இல்லை எனவே அதைப் பற்றி யாரும் எழுதப் போவதும் இல்லை.

    நீக்கு
  13. சரியான எச்சரிக்கை பகிர்வு.தீர்வாக என்ன இருக்க முடியும்?

   நிச்சயமாக அரசு/ஆடசியாளர் மட்டும் அல்ல. அப்படி அரசு மட்டும் என்பது நம் தன்னேமாற்றே ஆகும்.

   http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. அரசு நினைத்தால் இதை கடுமையான சட்டங்கள் மூலமும் விழிப்புணர்வு மூலமும் மாற்ற முடியும். அதை விட்டு மக்கள் என்னதான் முயற்சி எடுத்தாலும் அது வீண்தான்.
    வருகைக்கு நன்றி!

    நீக்கு
  14. முகத்திலறையும் உண்மை.. இயல்பாய்க் கிடைப்பதன் அருமை உணராமல் அலட்சியம் செய்து அழித்துவிட்டு பின்னாளில் இறக்குமதி செய்து வாழத்தலைப்படும் அவலத்தை என்னவென்று சொல்வது?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. உண்மை. இயற்கையாக கிடைக்கும் எல்லாவற்றையும் விலைக் கொடுத்து வாங்கும் காலம் வந்துவிட்டது. வருத்தமே!

    நீக்கு
  15. அருமையான விழிப்புணர்வு பதிவு.வருங்கால சந்ததியை மனதில் இருத்தியாவது மக்கள் இயற்கையை சூழலை பாதுகாக்கணும் .இயற்கையை மதிக்க கற்றுக்கணும் ..

   காற்று பாட்டில் எங்க ஊர்ல இருந்து இப்போ எக்ஸ்போர்ட் பண்றாங்க சைனாவுக்கு .
   நேற்று நியூசில் பார்த்து என் வலைப்பூவில் பகிர்ந்தேன் .அங்கே கோபு சார் உங்க இந்த பதிவு பற்றி சொன்னதும் இங்கே வந்தேன் .

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கோபு சாருக்கும் நன்றிகள்!

    நீக்கு
  16. அதிர்ச்சியாக இருக்கிறது என்றாலும் இதையும் நாம் எதிர்க் கொண்டுத்தான் ஆகவேண்டும் என்பதை ஜீரணிக்க முடியவில்லை.

   தோழி ஏஞ்சலின் மூலமாக உங்களின் பதிவை பார்வை இட முடிந்தது. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! ஏஞ்சலின் அவர்களுக்கும் நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்