சனி, பிப்ரவரி 06, 2016

எந்த நாட்டினர் அதிகம் உழைக்கிறார்கள்?

லகம் முழுவதுமே ஒரு நம்பிக்கை இருக்கிறது கடினமான உழைப்பாளிகள் என்றால் அது ஜப்பானியர்கள்தான் என்று. அந்த அசைக்க முடியாத நம்பிக்கையில் இடி விழச் செய்திருக்கிறது, சமீபத்திய ஆய்வு ஒன்று. அதெல்லாம் பழைய கதை என்று அது  மேலும் கூறுகிறது.  

டென்மார்க் சுகவாசிகள்
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி பல மேலை நாடுகளின் வாழ்க்கை முறையையே புரட்டிப்போட்டு விட்டது. வேலைவாய்ப்பை வெகுவாக குறைத்துள்ளது. அதனால் இருக்கிற வேலையை அதே சம்பளத்தில் அதிக நேரம் பார்க்க வேண்டிய இக்கட்டான நிலை பல நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலை வளர்ந்த நாடுகளையும் விட்டுவைக்க வில்லை. 

வளர்ந்த 30 நாடுகளில் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வு இந்தியா, சீனா, பிரேசில் போன்ற வளரும் நாடுகளில் நடத்தப்படவில்லை. அந்த ஆய்வின்படி கடின உழைப்பாளிகள் என்றால் அது மெக்ஸிக்கோ நாட்டு மக்கள்தான். அலுவலகம், தொழிற்சாலை, வீட்டுவேலை என்று எதுவாக இருந்தாலும் ஒரு நாளில் 10 மணி நேரம் அசராமல் உழைப்பவர்கள் மெக்ஸிக்கோ வாசிகள்தான். 

மெக்ஸிக்கோ தொழிலாளர்கள்
இவர்களுக்கு நேர்மாறாக சுகவாசிகளாக வேலைசெய்யாமல் பொழுதை கழிப்பவர்கள் டென்மார்க் நாட்டினர். அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 3.45 மணி நேரம் மட்டுமே வேலைப் பார்க்கிறார்கள். இதற்கு டென்மார்க்கின் சீதோஷ்ண நிலையும், பூகோள அமைப்பும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். டென்மார்க்கில் அதிக விடுமுறை நாட்கள் நடைமுறையில் இருப்பதும் வேலை நேரக் குறைவுக்கு காரணமாக உள்ளது. 

மேலும், தென்கொரிய மக்கள் வருடத்திற்கு 2,913 மணி நேரமும், சிலி நாட்டு மக்கள் 2,068 மணி நேரமும், கிரேக்கர்கள் 2,017 மணி நேரமும் வேலைப் பார்க்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக பிரிட்டிஷ்காரர்கள் 1,647 மணி நேரமும், ஜெர்மானியர்கள் 1,408 மணி நேரமும் வேலை செய்கிறார்கள் என்கிறது அந்த ஆய்வு. 

ஜெர்மன் தொழிலாளர் 
மேலும், உலக தொழிலாளர் கழகம் மேற்கொண்ட மற்றொரு ஆய்வில், கடினமான உழைப்பாளிகள் அதிகம் இருப்பது ஆசியாவில்தான் என்கிறது. இவர்கள் வாரத்தில் 48 மணி நேரம் வேலைப்பார்க்கிறார்கள். அதிக நேரம் உழைப்பவர்கள் பட்டியலில் இந்தியா, சீனா, இலங்கை, வங்கதேசம், மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் இடம்பிடித்திருக்கின்றன. இவர்கள் நீண்ட நேரம் உழைத்தாலும் உற்பத்தி திறன் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்கிறது அந்த ஆய்வு. 

சீனத் தொழிலாளர்கள்
மேலை நாட்டினர் குறைவான நேரம் உழைத்தாலும் அதன் உற்பத்தி திறன் அதிகமாக இருக்கிறது. மற்றொரு ஆய்வின்படி சீனர்கள் 8.4 மணி நேரமும், அமெரிக்கர்கள் 8.3 மணி நேரமும், இந்தியர்கள் 8.1 மணி நேரமும், பிரிட்டிஷ்காரர்கள் 7.8 மணி நேரமும், பிரான்ஸ் நாட்டினர் 7.5 மணி நேரமும், ஜெர்மானியர்கள் 7.4 மணி நேரமும், ஜாப்பானியர்கள் 6.3 மணி நேரமும் தினசரி வேலை செய்கிறார்கள். ஜப்பானியர்கள் உழைப்பாளிகள் என்ற காலம் மலையேறிவிட்டது.

இந்தியத் தொழிலாளர்


42 கருத்துகள்:

 1. அதிக நேரம் வேலைப்பார்ப்போர் பட்டியலில் நம் நாடும் இருக்கு,, ஆனால் இன்னும் வளர்ச்சி????,,,

  நல்ல அருமையான தொகுப்பு சகோ,

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது நம்மை ஆளும் அரசியல்வாதிகள் கையில் இருக்கிறது. முதல் வருகைக்கு நன்றி சகோ!

   நீக்கு
 2. உழைப்பு சுரண்டலில் வேண்டுமானால் நம் நாடு முதலிடத்தில் இருக்கும் :)

  பதிலளிநீக்கு
 3. எனக்கு என்னவோ
  நம் நாட்டினர்தான் அதிகமாக உழைக்கிறார்கள் என்று எண்ணுகின்றேன் ஐயா
  ஆனால் அதன் பலன் சிலரை மட்டுமேப் போய் சேருகிறது
  பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக உயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்
  ஏழைகள் மிகவும் ஏழைகளாக தாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நம்மிடம் தரமான உழைப்பில்லை என்ற கெட்டப் பெயர் இறக்கிறது. இனி வரும் தலைமுறை மனப்பாடம் செய்து கக்கும் முறையில் இருந்து மாறி சிந்திக்கும் கல்வியை பின் பற்றினால் இந்த நிலை மாறும்!

   நீக்கு
 4. மிக கடுமையான உழைப்பாளிகள் இந்தியர்களே. அவர்கள் உழைப்பை பாதுகாத்து அவர்களுக்கு நன்மை கிடைக்க இந்திய அரசு செயற்படவில்லை. அவர்கள் உழைப்பு கொள்ளை அடிக்கபடுகிறது.

  பதிலளிநீக்கு
 5. மாங்கு, மாங்குன்னு உழைத்தும் நம் நாடு....அவ்வளவாக கண்டு கொள்வதில்லை...அயல் நாடுக்காரனையே சொல்லி பழகிவிட்ட காரணமோ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உழைப்புக்கேற்ற கூலி நம்மிடம் இல்லை என்பதுதான் காரணம். மக்கள்தொகையும் ஒரு காரணம்.

   நீக்கு
 6. நம் நாட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் மாறுபட்ட முடிவுகள் வந்திருக்குமா என்பது சந்தேகமே.....

  பதிலளிநீக்கு
 7. வணக்கம்
  அண்ணா

  தகவல் ஒவ்வொன்றும் வித்தியாசமாக உள்ளது படிக்க மகிழ்வாக உள்ளது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 8. பிரமிப்பான தகவல்தான் நண்பரே இந்தியாவும் இருப்பதில் சந்தோசமே ஆனால் மக்களின் வாழ்வில் முன்றேற்றம் இல்லையே...
  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதற்கு நிறைய மாற்றம் வேண்டும் நண்பரே! இப்போது உள்ள வளர்ச்சி வீக்கம் போன்றது ஒரு பக்கம் மட்டுமே வளர்கிறது. அதாவது பணக்கார்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் மாறும் வளர்ச்சி. யாரையும் கண்டு கொள்ளாமல் பணத்தை சேர்ப்பது இன்று ஸ்மார்ட் என்று பெயர் எடுத்துவிட்டது.

   நீக்கு
 9. இந்தியர்கள் உழைப்பாளிகள் என்றாலும் குறிப்பாக மென்பொருள் துறையில் என்றாலும் இந்தியா ஊழல் நிறைந்துவிட்டதால் அடிமட்டத்தில் போய்விடுகின்றது. ஒருவேளை ஊழலில் முதல் இடத்தைப் பிடித்துவிடுமோ என்னவோ..

  கீதா: கொரியன், சீனர், ஜப்பானியர் எல்லோரையும் மிஞ்சிவிட்டனர் மெக்சிகன்ஸ். இவர்கள் அமெரிக்காவில் நிறையபேர் பல வேலைகளிலும், ப்ளபிங்க்,தோட்ட வேலை, சுத்தம் செய்தல் வேலை, லாரி ஓட்டுதல் என்று இவர்கள் இல்லையே அமெரிககவின் இது போன்ற வேலைகளுக்குக் கஷ்டம் என்றும் சொல்லப்பட்டக் காலம் உண்டு. அமெரிக்காவின் எல்லையோரப் பகுதி தென் அமெரிக்காவிலிருந்து மெக்சிகன்ஸ் ஊடுருவிச் செல்பவர்களும் உண்டு. அதிகம் பேசாமல் வேலை செய்வதிலேயே குறியாக இருப்பார்கள்.

  நல்ல பகிர்வு சகோ

  பதிலளிநீக்கு
 10. அதெப்படி எங்கள் நாட்டைஇந்த பட்டியலில் சேர்க்காமல் விட்டார்கள்? ஸ்னோ கொட்டோ கொட்டென கொட்டினாலும், மழை பெய்யோ பெய்யென பெய்தாலும், வெயில் அடி த்தாலும் வேலை நேரம் மட்டும் கரெக்டாக இருக்கணுமே இங்கே!

  தங்கள் பதிவுகள் மூலம் நிரம்ப பொது விடயங்கள் அறிய முடிகின்றது, தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னதான் சரியான நேரத்துக்கு வேலைக்குப் போனாலும் நீங்கள் இருக்கும் நாடு சுகவாசிகள் பட்டியலில் தான் வருகிறது. வருகைக்கு நன்றி நிஷா!

   நீக்கு
 11. ஜப்பான் பற்றி பொதுவாக பல தவறான கருத்துக்கள் நம்மிடம் உள்ளன. அதிகம் உழைப்பவர்கள், இரண்டாம் உலகப் போரில் நிறைய கொடுமை அனுபவித்தவர்கள், அது எது என்று. என்னைக் கேட்டால் முதலில் ஜப்பானை நம் நாட்டுடன் ஒப்பிடுவதே தவறு என்பேன். சொல்லப் போனால் ஜப்பானில்தான் அதிக அளவு தற்கொலைகள் நடக்கின்றன.

  ஜப்பான் பற்றிய புனைவை உடைத்த பதிவு இது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்கொலைகள் அதிகம் என்பது இப்போதுதான் தெரிகிறது. வருகைக்கு நன்றி நண்பரே!

   நீக்கு
  2. எஸ்.பி காரிகன் மிக சீனியர் பதிவர்...
   நீங்கள் அவர் தளம் சென்றால் அவரின் இசையுலகம் நிச்சயம் உங்களுக்கு வியப்பை ஏற்படுத்தும்

   நீக்கு
  3. நண்பர் காரிகனை மிக நன்றாக தெரியும். அவரது இசை விமர்சனம் என்னை பலமுறை வியக்க வைத்திருக்கிறது.
   தங்களின் கருத்துக்கு நன்றி!

   நீக்கு
 12. அன்புள்ள அய்யா,

  மெக்ஸிக்கோ வாசிகளுக்கு வாழ்த்துகளைச் சொல்லி... நாமும் அவர்களைப் போல் உழைத்து வாழ்வோம்...!

  நன்றி.

  த.ம.8

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் மெக்சிக்கோ வாழ்த்துகளுக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 13. நானும் ஜப்பானியர்கள்தான் என்றுதான் நினைத்தேன். இந்தியர்கள் நெடுநேரம் உழைத்தாலும் உற்பத்திக் குறைவு என்பது வருத்தமான செய்தி. ஆசியாவில்தான் என்னும் வார்த்தையில் 'ல்' விடுபட்டிருக்கிறது!
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். ஹாலிவுட்டிலும் நம் கோலிவுட்டிலும் இசை அமைப்பதில் என்ன வித்தியாசம் என்ற கேள்விக்கு, நமது கோலிவுட்டில் காலை 9 மணிக்கு ரிகார்டிங் என்றால் 10 மணிக்குத்தான் வருவார்கள். ஒரு நாள் முழுக்கக் கூட ரிகர்சல் பார்க்க முடியும். அங்கு இரண்டு மணி நேரம் மட்டும் இசைக் கலைஞர்கள் கால்ஷீட் கொடுக்கிறார்கள். 9 மணி என்றால் 9 மணிக்கு ரிகார்டிங். ரிகர்சல் எல்லாம் கிடையாது. நேரடியாக ரிக்கார்டிங் தான். இரண்டு மணி நேரத்தில் ரிகர்சல் இல்லாமல் நேரடியாக நோட்ஸைப் பார்த்து வாசித்துவிடுகிரார்கள். அந்த தரம் நம் கலைஞர்களிடம் இல்லை என்பது வருத்தமே என்றார். இந்தியர்களின் வேலையும் அப்படித்தான் இருக்கிறது. அதை மாற்ற வேண்டும்.

   தவறை திருத்தி விட்டேன். வருகைக்கு நன்றி!

   நீக்கு
 14. ஜப்பான்,
  மெக்சிகன்
  நாட்டினர் பற்றிய தகவல் வியப்பளிக்கின்றது!

  முடிந்தால் படித்துப் பாருங்கள்:
  "தினத்தந்திக்கு ஒரு கடிதம்!"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படித்தேன் மதுரையில் அப்படி நடந்ததாக தெரியவில்லை. இருந்தாலும் நிர்வாகத்திடம் தெரிவிக்கிறேன். தகவலுக்கு நன்றி!

   நீக்கு
 15. தினத்தந்தியின் வினோத பரிசுத் திட்டம்:

  http://nizampakkam.blogspot.com/2012/06/dailythanthi102.html?m=0

  பதிலளிநீக்கு
 16. பதிவுகள் அசத்துகின்றன ..
  தொடர்க
  தம +

  பதிலளிநீக்கு

 17. நம் நாட்டவர் உழைப்பாளிகள் என்றாலும் சமீபகாலமாக அரசின் கொள்கைகளால் சோம்பேறிகளாக மாறிக்கொண்டு இருக்கிறார்களோ என்ற ஐயம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை சரியாக சொன்னீர்கள் அய்யா! இப்போது எல்லாமே ஏமாற்று வேலையாகத்தான் இருக்கிறது. ஊரக வேலைவாய்ப்பைத் தான் சொல்கிறேன். வேலையே நடப்பதில்லை. ஆனால் கூலி மட்டும் எல்லோருக்கும் சரியாக சென்று சேர்ந்துவிடுகிறது.
   வருகைக்கு மிக்க நன்றி அய்யா!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...