முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்

ரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் எப்போதுமே முன்னோடியாக திகழ்கின்றன. அது தனது மக்கள் பக்கமே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற வளர்ந்த  நாடுகளுக்கே  முன்னோடியாக திகழ்கிறது. 

ஒரு மாணவியை மட்டும் ஏற்றிச் செல்லும் ரயில்
அப்படியொன்றுதான் ஒரேயொரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு சிறிய மினி பஸ்ஸை கூட இயக்க மாட்டார்கள். ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டுமே தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ரயிலை இயக்கி வருகிறது. ஹராடா கானா என்ற அந்த பள்ளி மாணவி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காய்தோ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரயில் மூலம் சென்று வருகிறார். 

குளிர் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம்
இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள 'காமி-ஷிரதகி' ரயில் நிலையத்தில் இருந்து 'ஷின்-அசஹிகவா' ரயில் நிலையம் வரை ஒரேயொரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம். 

மாணவி ஹராடா கானா
அதோடு மட்டும் நின்று விடாமல் அந்த மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரயில் நிர்வாகமும் அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரயிலை நீடித்து இயக்கியது. அதாவது 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது. 

ஜப்பான் ரயில் தடங்கள் நமது ரயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித் துகள்கள் கொட்டி ரயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும். தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித் துகள்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் ரயில் செல்ல முடியும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள். 

தினமும் 300 தொழிலாளர்களின் உழைப்பு
இந்த மாணவியின் படிப்பு இந்த மார்ச் மாதம் 26-ம் தேதியோடு முடிவடைகிறது. அன்று தான் இந்த ரயிலின் கடைசி ஓட்டம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேயொரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. 

 கோடைக் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம்
இந்த செய்தி வெளிவந்ததும் ஜப்பான் மக்கள் பலரும் முகநூலில் 'எங்களுக்காக உழைக்கும் இந்த நாட்டுக்காக நான் ஏன் என் உயிரைத் தரக்கூடாது?' என்றுதான் கமெண்ட் போட்டார்கள்.

ஆனால், நம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி மக்களை அடிமைகளாக நடத்தினார்களோ அதே மனநிலைதான் சுதந்திரத்திற்கு பின் வந்த நமது அரசாங்கங்களும் நமது மக்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இப்போதும் அந்த மனநிலை கொஞ்சமும் மாறவில்லை. தனது சொந்த மக்கள் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை. 

இந்த அடிமைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் விலைக்கு வாங்க தேர்தல் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தயாராகிவிட்டார்கள். அடிமை மனோபாவம் மாறாத மக்கள் எஜமான் கொடுக்கும் அந்த பிச்சை காசுக்காக தன்னையும் தன் நாட்டையும் விற்று அடிமை வாழ்வு வாழ தயாராகி வருகிறார்கள். 

வாழ்க பணநாயகம்..!


கருத்துகள்

  1. பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. ஜப்பான் வாழ்க! உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியே! நம்மூர் ஹும்...என்ன சொல்ல. அந்த மக்களுக்கு இயற்கையாகவே நாட்டுப்பற்றும் உண்டு..அவர்கள் நாடு இப்படி எல்லாம் செய்தால் இன்னும் அது கூடத்தானே செய்யும்!! நாடு எவ்வழி அவ்வழி மக்கள்! இங்கு ஹும்...

    ஏற்கனவே இந்தச் செய்தி தங்களின் தளத்தில் சொல்லியிருந்தீர்கள் இல்லையா...அப்படித்தான் நினைவு..மீண்டும் இது போன்ற செய்திகளைப் படிப்பதில் நல்லதுதான்..குறிப்பாக நம்மூர் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் படித்தால் அப்படியாவது உறைக்காதா என்ற ஏக்கம் ஆதங்கம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!

      நீக்கு
  3. மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களாக உள்ளன.

    ஜப்பானியர்களும், அவர்களின் கடும் உழைப்பும், இதுபோன்ற மனிதாபிமானச் செயல்களும், நாட்டுப்பற்றும் மிகவும் வியப்பளிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  4. படித்திருக்கிறேன். எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் பகிர்ந்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  5. நம்ப மனம் மறுக்கின்றது நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. ஏற்கனவே வாசித்தது என்றாலும் ..உங்கள் நடையில் அருமை

    பதிலளிநீக்கு
  7. ஏற்கனவே வாசித்தது என்றாலும் ..உங்கள் நடையில் அருமை

    பதிலளிநீக்கு
  8. ஜப்பான் அரசாங்கம் இத்தனை நாள் செலவு செய்ததற்கு அந்த பெண் படிக்கும் இடத்திலேயே ஒரு வீடே கட்டி கொடுத்திருக்கலாம்? இருந்தாலும் அரசுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இது நல்ல ஐடியாவா இருக்கே!
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  9. ஜப்பான் நாட்டின் ரயில்சேவைக்கு வாழ்த்துப்பூக்கள் கொடுப்போம்.புதிய தகவல் இது பகிர்வுக்கு நன்றி பணநாயகம் கருத்தினை சொல்லத்தேனல))

    பதிலளிநீக்கு
  10. நல்லரசு அது...
    ஆனால் இங்கே...
    பெட்ரோல் பேரல் விலை எல்லா இடத்திலும் குறைந்தாலும் நாம சின்சியரா விலை ஏத்திக்கிட்டுதானே இருக்கோம்.

    பாகிஸ்தானில் விற்பதைவிட நாம் இரண்டு மடங்காக அல்லவா விற்கிறோம்...

    பதிலளிநீக்கு
  11. அதிசிய தகவல். நன்றி!
    மக்கள் எவ்வழியோ நாடும் அவ்வழி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு

அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.
கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.
தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.
இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள்…

பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை

யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம். 

பத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..!

பொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ காய்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம். 
அப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது  என்கிறார்கள்.  இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தன…

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு

செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார்.

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2

இந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..
கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1
காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.



ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவ…

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...