ஒரு தேசத்தின் அரசாங்கம் மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும்? அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதில் வளர்ந்த நாடுகள் எப்போதுமே முன்னோடியாக திகழ்கின்றன. அது தனது மக்கள் பக்கமே செயல்படுகிறது. அதிலும் ஜப்பான் மற்ற வளர்ந்த நாடுகளுக்கே முன்னோடியாக திகழ்கிறது.
![]() |
ஒரு மாணவியை மட்டும் ஏற்றிச் செல்லும் ரயில் |
அப்படியொன்றுதான் ஒரேயொரு பள்ளி மாணவிக்காக ஒரு ரயில் இயங்குவது. நமது ஊரில் பள்ளி நிர்வாகம் கூட ஒரு மாணவிக்காக ஒரு சிறிய மினி பஸ்ஸை கூட இயக்க மாட்டார்கள். ஆனால், ஜப்பான் ஒரு மாணவிக்காக மட்டுமே தினமும் 80 கி.மீ. தொலைவுக்கு ரயிலை இயக்கி வருகிறது. ஹராடா கானா என்ற அந்த பள்ளி மாணவி இறுதி வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜப்பானின் வடக்கு தீவில் உள்ள ஹொக்காய்தோ என்ற கிராமத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள தனது பள்ளிக்கு ரயில் மூலம் சென்று வருகிறார்.
![]() |
குளிர் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம் |
இந்த தீவுக்கு இப்போது படகு போக்குவரத்து அதிகம் இருப்பதால் ரயிலை யாரும் பயன்படுத்துவதில்லை. அதனால் இந்த ரயில் தடத்தை 2012-ல் மூடிவிட ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. அப்போதுதான் இந்த கிராமத்தில் உள்ள 'காமி-ஷிரதகி' ரயில் நிலையத்தில் இருந்து 'ஷின்-அசஹிகவா' ரயில் நிலையம் வரை ஒரேயொரு மாணவி மட்டும் தினமும் பயணம் செய்வது தெரிய வந்தது. உடனே தனது மூடுவிழாவை தள்ளிப் போட்டது நிர்வாகம்.
![]() |
மாணவி ஹராடா கானா |
அதோடு மட்டும் நின்று விடாமல் அந்த மாணவியின் பள்ளி நேரத்துக்கு ஏற்றபடி ரயிலின் நேரத்தை மாற்றி அமைத்தது. முதலில் 50 கி.மீ. வரை சென்று வந்த மாணவி மேற்படிப்புக்காக வேறு பள்ளியில் சேர்ந்தார். உடனே ரயில் நிர்வாகமும் அந்த பள்ளி இருக்கும் ஊர் வரை ரயிலை நீடித்து இயக்கியது. அதாவது 30 கி.மீ. கூடுதலாக, இப்போது இந்த ரயில் ஒரு மாணவிக்காக 80 கி.மீ. தொலைவு சென்று வருகிறது.
ஜப்பான் ரயில் தடங்கள் நமது ரயில் தடங்கள் போல் இல்லை. வருடத்தில் 6 மாதங்கள் பனித் துகள்கள் கொட்டி ரயில் தண்டவாளத்தை இரண்டடி உயரத்திற்கு மூடிவிடும். தினமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் அந்த பனித் துகள்களை அகற்ற வேண்டும். அப்போதுதான் ரயில் செல்ல முடியும். இந்த ஒரு மாணவி பயணிப்பதற்காக தினமும் 300-க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் இந்த 80 கி.மீ. பாதையில் உழைக்கிறார்கள்.
![]() |
தினமும் 300 தொழிலாளர்களின் உழைப்பு |
இந்த மாணவியின் படிப்பு இந்த மார்ச் மாதம் 26-ம் தேதியோடு முடிவடைகிறது. அன்று தான் இந்த ரயிலின் கடைசி ஓட்டம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஒரேயொரு மாணவிக்காக இத்தனை பெரிய உழைப்பைத் தரும் ஜப்பானை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
![]() |
கோடைக் காலத்தில் காமி-ஷிரதகி ரயில் நிலையம் |
இந்த செய்தி வெளிவந்ததும் ஜப்பான் மக்கள் பலரும் முகநூலில் 'எங்களுக்காக உழைக்கும் இந்த நாட்டுக்காக நான் ஏன் என் உயிரைத் தரக்கூடாது?' என்றுதான் கமெண்ட் போட்டார்கள்.
ஆனால், நம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி மக்களை அடிமைகளாக நடத்தினார்களோ அதே மனநிலைதான் சுதந்திரத்திற்கு பின் வந்த நமது அரசாங்கங்களும் நமது மக்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இப்போதும் அந்த மனநிலை கொஞ்சமும் மாறவில்லை. தனது சொந்த மக்கள் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை.
ஆனால், நம் இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்யும்போது எப்படி மக்களை அடிமைகளாக நடத்தினார்களோ அதே மனநிலைதான் சுதந்திரத்திற்கு பின் வந்த நமது அரசாங்கங்களும் நமது மக்களை அடிமைகளாகவே நடத்தி வருகின்றன. இப்போதும் அந்த மனநிலை கொஞ்சமும் மாறவில்லை. தனது சொந்த மக்கள் என்ற எண்ணம் எந்த அரசுக்கும் எந்த அரசியல் வாதிக்கும் இல்லை.
இந்த அடிமைகளை அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் விலைக்கு வாங்க தேர்தல் என்ற பெயரில் அரசியல்வாதிகள் தயாராகிவிட்டார்கள். அடிமை மனோபாவம் மாறாத மக்கள் எஜமான் கொடுக்கும் அந்த பிச்சை காசுக்காக தன்னையும் தன் நாட்டையும் விற்று அடிமை வாழ்வு வாழ தயாராகி வருகிறார்கள்.
வாழ்க பணநாயகம்..!
ம்ம்ம்... பெருமூச்சு தான் வருகிறது நண்பரே...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குWat a great Japan?
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குவாழ்த்துக்கள் ஜப்பானுக்கு!
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குஜப்பான் வாழ்க! உங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியே! நம்மூர் ஹும்...என்ன சொல்ல. அந்த மக்களுக்கு இயற்கையாகவே நாட்டுப்பற்றும் உண்டு..அவர்கள் நாடு இப்படி எல்லாம் செய்தால் இன்னும் அது கூடத்தானே செய்யும்!! நாடு எவ்வழி அவ்வழி மக்கள்! இங்கு ஹும்...
பதிலளிநீக்குஏற்கனவே இந்தச் செய்தி தங்களின் தளத்தில் சொல்லியிருந்தீர்கள் இல்லையா...அப்படித்தான் நினைவு..மீண்டும் இது போன்ற செய்திகளைப் படிப்பதில் நல்லதுதான்..குறிப்பாக நம்மூர் ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் படித்தால் அப்படியாவது உறைக்காதா என்ற ஏக்கம் ஆதங்கம்...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே!
நீக்குமிகவும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களாக உள்ளன.
பதிலளிநீக்குஜப்பானியர்களும், அவர்களின் கடும் உழைப்பும், இதுபோன்ற மனிதாபிமானச் செயல்களும், நாட்டுப்பற்றும் மிகவும் வியப்பளிக்கின்றன. பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குபடித்திருக்கிறேன். எங்கள் பாஸிட்டிவ் செய்திகளிலும் பகிர்ந்திருக்கிறேன்!
பதிலளிநீக்குநம்ப மனம் மறுக்கின்றது நண்பரே
பதிலளிநீக்குத.ம.வ.போ
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குஏற்கனவே வாசித்தது என்றாலும் ..உங்கள் நடையில் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குஏற்கனவே வாசித்தது என்றாலும் ..உங்கள் நடையில் அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குவாழ்க..... இந்தீய ஜனநாயகம்.........
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குஜப்பான் அரசாங்கம் இத்தனை நாள் செலவு செய்ததற்கு அந்த பெண் படிக்கும் இடத்திலேயே ஒரு வீடே கட்டி கொடுத்திருக்கலாம்? இருந்தாலும் அரசுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇது நல்ல ஐடியாவா இருக்கே!
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
வியப்புதான்
பதிலளிநீக்குவருகுதைய்யா!
வருகைக்கு நன்றி நண்பரே!
நீக்குஜப்பான் நாட்டின் ரயில்சேவைக்கு வாழ்த்துப்பூக்கள் கொடுப்போம்.புதிய தகவல் இது பகிர்வுக்கு நன்றி பணநாயகம் கருத்தினை சொல்லத்தேனல))
பதிலளிநீக்குநல்லரசு அது...
பதிலளிநீக்குஆனால் இங்கே...
பெட்ரோல் பேரல் விலை எல்லா இடத்திலும் குறைந்தாலும் நாம சின்சியரா விலை ஏத்திக்கிட்டுதானே இருக்கோம்.
பாகிஸ்தானில் விற்பதைவிட நாம் இரண்டு மடங்காக அல்லவா விற்கிறோம்...
உண்மைதான் நண்பரே!
நீக்குவருகைக்கு நன்றி!
ம். அது நாடு. வேறென்ன சொல்ல?
பதிலளிநீக்குஉண்மைதான்.
நீக்குவருகைக்கு நன்றி
அதிசிய தகவல். நன்றி!
பதிலளிநீக்குமக்கள் எவ்வழியோ நாடும் அவ்வழி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
நீக்குகருத்துரையிடுக