ஞாயிறு, மே 15, 2016

அவர் அரசியலுக்கு வரமாட்டார்..! பயப்படாம ஓட்டுப் போடுங்க..!

டந்த இரண்டு தேர்தல்களிலும் இவர் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்தார். தென் மாவட்டங்களில் வெற்றிபெற இவரது ஆசி வேண்டுமென்று அந்த பழம் பெருங்கட்சி காத்திருக்கும். இவருக்கு வேண்டியவர்களுக்கு தேர்தலில் இடம் கொடுத்து மனத்தைக் குளிர வைக்கும். இவருக்காக நிறைய வளைந்து கொடுக்கும். கிட்டத்தட்ட எழுதப்படாத பாகப்பிரிவினைபோல்தான் அது இருந்தது. 

'இந்தக் கோட்டத்தாண்டி நீயும் வரக்கூடாது. நானும் வரமாட்டேன்.' என்று சகோதரர்கள் மானசீகமாக முடிவெடுத்துக் கொண்டார்கள். ஆனாலும், இவர் நினைத்தபோது முறுக்கிக் கொள்வார். தனக்கு சாதகமாக தலைமை வரவில்லை என்றால் போர்க்கொடி தூக்குவார். இவரை சமாளிப்பதே தலைமைக்கு பெரும் தலைவலியாக இருக்கும். தலைமைப் போலவே மக்களும் அவதியுற்றார்கள். அப்படி இருந்தாலும் இவர் விரும்பும் முடிவைத்தான் தலைமை எடுக்கும். தென் தமிழ்நாட்டின் குட்டி ராஜாவாக வலம் வந்தார். 

இன்று நிலைமையே வேறு. தற்போது ஓட்டுக் கேட்பவர்கள், 'இனி அவர் அரசியலுக்கு வரமாட்டார். எனவே பயப்படாம தைரியமா எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்..!' என்று அவரது கட்சியினரே வீடு வீடாகச் சென்று கேட்கிறார்கள். காலம் எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்..!  18 கருத்துகள்:

  1. சரி, ஒத்துக்கொள்கிறோம். இது காலத்தின் மாற்றமோ?

    பதிலளிநீக்கு
  2. அப்படிக் கேட்டும் தோற்றுவிட்டார்களே....!!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...