விடுமுறை காலங்களில் சொகுசாகப் பயணம் செய்து சுற்றுலாவை அனுபவிக்க வேண்டும் என்பது பலரின் ஆசை. ஆனால், அதற்கான கட்டணம் பலரை அந்தப் பக்கம் திரும்ப விடாமல் செய்துவிடுகிறது. ஆனாலும் சொகுசு ரயில்களில் பயணம் செய்ய பணக்காரக் கூட்டம் ஒன்று காத்துக் கிடக்கிறது.
|
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் |
ரஷ்யாவுக்கு மிகப் பெரிய வருமானத்தைத் தரக்கூடிய ரெயில் 'கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ்'தான். இந்த ரயிலை 19-ம் நூற்றாண்டில் மன்னர் இரண்டாவது ஜான் அலெக்ஸாண்டர் தொடக்கி வைத்தார். மாஸ்கோவிலிருந்து விளாடிவேஸ்டாக் வரை செல்லும் இந்த ரயிலில் எல்.சி.டி. டி.வி., பவர் ஷவர்ஸ், குளிரைக் கட்டுப்படுத்த அடித்தள ஹீட்டிங், ஏர்கண்டிஷன் என எல்லாமே மிக நவீன தொழில்நுட்பம்தான். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒருவருக்கு 15,795 அமெரிக்க டாலர் கட்டணமாக பெறப் படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,58,000.
|
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸின் உட்புறம் |
|
கோல்டன் ஈகிள் டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் உணவகம்
|
இந்தியாவில் காஸ்ட்லியான ரயில் 'மகாராஜா எக்ஸ்பிரஸ்'தான். இந்த ரயில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்கும் இந்திய ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப் பட்டது.
|
மகாராஜா எக்ஸ்பிரஸுக்காக அலங்கரிக்கப்பட்ட பிளாட்பாரம் |
ஒரு வாரம் இந்த ரயிலில் பயணம் செய்வதன் மூலம் இந்தியாவின் வட மேற்கு பகுதிகளை கண் குளிர பார்க்கலாம். டெல்லியில் புறப்பட்டு ஜெய்பூர் ஏரிகள், வனவிலங்கு சரணாலயங்கள், தார் பாலைவனம், ஆக்ரா வழியாக மீண்டும் டெல்லியை வந்தடையும்.
|
மஹாராஜாவின் படுக்கை |
|
மகாராஜாவின் 'பார்'' |
ரயிலின் உள்ளே இனிமையான இசை எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும். பாரம்பரிய நடன நிகழ்சிகளும் நடைபெறும். இந்திய மற்றும் பன்னாட்டு உணவுகளும் இங்கு பரிமாறப்படும். இந்த ரயிலில் பயணம் செய்ய ஒரு நபருக்கு ரூ.4,52,775 கட்டணமாக பெறப்படுகிறது.
|
புளு ரயில் |
ஆப்பிரிக்காவை சுற்றிப் பார்க்க 'புளு ரயில்' சிறந்த ஒன்று. இந்த ரயில் ஏழு நட்சத்திர ஓட்டல் வசதி கொண்டது. நூலகம், பெரிய டி.வி., விலையுர்ந்த மார்பிள்களால் வடிவமைக்கப்பட்ட கழிப்பறைகள் உள்ளன. கேப் டவுனில் இருந்து ஆயிரம் மைல் தொலைவில் உள்ள பிரிட்டோரியா மாகாணத்தை அடைய 27 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது.
|
புளு ரயில் உணவகம் |
இந்த ரயிலில் பயணம் செய்தால் வைரச்சுரங்கமான கிம்பர்லியில் தங்கியிருக்கும் உணர்வு ஏற்படுமாம். சீஸன் நேரத்தில் 2,420 டாலர் கட்டணமும் சீஸன் இல்லாத காலங்களில் 1,202 டாலரும் கட்டணமாக பெறப் படுகிறது. திருமணமான புதுமணத் தம்பதியினர் ஹனிமூனுக்கு இந்த ரயில் ஏற்றது.
|
புளு ரயில் கழிப்பறை |
சொகுசு இரயில்கள் பற்றி அழகான அருமையான அசத்தலான தகவல்கள். வசதிகளோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் மிகவும் மலிவாகவே உள்ளன. :) பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குநான் இந்த ரயில்களில் போக ஆசைப்படுகிறேன். ஏதாவது லாட்டரியில் பத்து கோடி ரூபாய் விழுந்தால் முதல் வேல் இதுதான்.
பதிலளிநீக்குலாட்டரி விழட்டும்..! அய்யாவின் மகாராஜா பயணம் தொடரட்டும்..!
நீக்குஐயா எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து
பதிலளிநீக்குரெயில் பயணம் செய்ததே இல்லை...
இது வேறே சொகுசாவும் புதுசாவும் இருக்கு....
அழகான பதிவு அருமையான பகிர்வு...
ரயில் ஓர் அருமையான பொது பயண வாகனம். அனுபவித்து பயணியுங்கள்..!
நீக்குஇவ்வளவு சீப்பாக இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதோ கிளம்புகிறேன்.
பதிலளிநீக்குமலிவுதான்..! எல்லாவற்றிலும் ஒருமுறை பயனித்துவிடுங்களேன்..!
நீக்குதம பட்டையையே காணோமே...!
பதிலளிநீக்குஅது அவ்வப்போது அப்படிதான் காணாமல் போய்விடுகிறது.
நீக்குசொகுசு ரயில்கள் பற்றி அறிந்தேன்! அருமையான தகவல்கள் நன்றி!
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குசொகுசான தகவல்கள்...
பதிலளிநீக்கு.
சொகுசு ரயில்களைப் பார்க்கும் போதே பயணிக்க வேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது தான் எவ்வளவு உண்மை?
பதிலளிநீக்குபொருள் இல்லாதவர்க்கு எவ்வுலகமும் இல்லை என்பதே உண்மை.
நீக்குமஹாராஜா-வில் இந்தியர்களுக்கு குறைவான கட்டணம் என நினைக்கிறேன். இந்தியன் ரயில்வே இது போல இன்னும் சில ரயில்களையும் இயக்குகிறது.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்கள்..... ஒரு முறையாவது இது போன்ற ரயிலில் பயணிக்க வேண்டும்.
அப்படி இருப்பதாக தெரியவில்லை. இருந்தாலும் உறுதி செய்து கொள்கிறேன்.
நீக்குஅருமையான தகவல்கள்....ரயிலைப் பார்த்தாலே மனசு ஆசைப்படுகிறதுதான்...ச்சே ரொம்ப விலை குறைவாக இருக்கே என்ற யோசனையாக இருக்கு நாங்கல்லாம் லார்ட் லபக்குதாஸ் இல்லையோ அதனால்...
பதிலளிநீக்குகீதா: நானும் மகனும் இந்த ரயில்களைப் பற்றித் தெரிந்து கொண்ட போது அடிக்கடிப் பார்த்து சும்மானாலும் ப்ளான் போடுவதுண்டு. நம்மூரில் உள்ள மகாராஜாவிலேனும் போக முடியுமா என்றும் பேசிக் கொள்வதுண்டு. ட்ரான்ஸ் சைபீரியன் போக வேண்டும் என்று ஆசை உண்டுதான் வானில் கோட்டை கட்ட என்ன பணமா வேண்டும் ஹஹஹஹ்ஹ்.....நல்ல தகவல்கள் சகோ
விலை ரொம்ப மலிவாக இருந்தால் எனக்கும் சேர்த்து ஒரு டிக்கெட் போட்டுவிடுங்கள் துளசி சார்!
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சகோ!
பயணம் செய்ய முடியாததை பார்த்தாவது இரசிக்க உதவியமைக்கு நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குWOW
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பதிலளிநீக்குகருத்துரையிடுக