Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மனிதனை மெல்லக் கொல்லும் கார்பன்


வ்வொரு விளைவுக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு. இது நியூட்டனின் விசை பற்றிய தத்துவம். இதே கோட்பாடு தான் தற்போது கார்பன் வெளியேற்றத்துக்கும் பொருந்துகிறது. மனித குலம் தற்போது அடைந்திருக்கும் மிகப்பெரிய வளர்ச்சிக்கு 'எனர்ஜி' என்று சொல்லகூடிய சக்தி மூலங்களே காரணம். இந்த மூலங்கள் இல்லாவிட்டால் மனிதன் இன்னமும் மாட்டு வண்டியிலும், குதிரையிலும் தான் பயணப்பட்டு கொண்டிருப்பான்.


நமக்கு கார், ரெயில், ஏரோப்ளேன், கம்ப்யூட்டர் என்று எதுவும் கிடைத்திருக்காது. இப்படி எல்லாவற்றிற்கும் அடிப்படை ஆதாரமாக விளங்கும் இந்த சக்தி மூலத்திற்கு எதிர்வினை உள்ளது. அது தான் கார்பன் வெளியேற்றம். ஆக்கபூர்வமான சக்தியை உருவாக்கும்போது பெரிய அளவில் கார்பன் வெளியேற்றப்படுகிறது.


உலகமே தற்போது கவலைப்பட்டு கொண்டிருக்கும் ஒரு விஷயம் இந்த கார்பன் வெளியேற்றம் தான். உலக வெப்பமயமாக்கலுக்கும் இது தான் காரணம். மனிதன் பயன்படுத்தும் எரிசக்தியின் விளைவாக வெளியேறும் கார்பன் அளவை கட்டுபடுத்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.

என்றைக்கு தொழிற்புரட்சி ஏற்பட்டதோ, அன்றே கார்பன் வெளியேற்றமும் வேகமாக தொடங்கிவிட்டது. தொழிற்சாலைகள் வெளிப்படுத்திய கார்பன் அளவு மட்டுமே 50 ஆயிரம் கோடி டன் உள்ளது.


கார்பன் வெளியேற்றத்துக்கும் இறுதி அளவு என்று ஒன்று உள்ளது. அதன்படி இந்த உலகம் அதிகபட்சமாக ஒரு லட்சம் கோடி டன் அளவு உள்ள கார்பனை மட்டுமே தாங்கும். அளவுக்கு மேல் போனால் பூமியில் கற்பனைக்கு எட்டாத விளைவுகள் எல்லாம் ஏற்படும் என்று பயமுறுத்துகிறார்கள், விஞ்ஞானிகள்.


தற்போது வெளியேறும் விதத்திலேயே தொடர்ந்து கார்பன் வெளியேறினால் அடுத்த 40 ஆண்டுகளுக்குள் இந்த அபாய அளவை நமது பூமி தொட்டுவிடும். அந்தளவிற்கு ஏராளமான கார்பனை தொழிற்சாலைகள், வாகனங்கள், நிலக்கரி ஆலைகள், சமையல் புகை போன்றவை வெளியேற்றுகின்றன.

பூமியின் வெப்பநிலை 2 டிகிரி உயர்ந்தால் ஆர்டிக் கடல் மறைந்து போய்விடும். வெப்பக்காற்று வீசும், வறட்சி ஏற்படும். இதுவே 3 டிகிரி என்றால் வெப்பக்காற்று தொடர்ந்து வீசும், கடல்களில் அமிலத்தன்மை அதிகமாகும். கிரீன்லாந்தில் உள்ள பனிப்படிவங்கள் காணாமல் போய்விடும். காடுகள் அழிந்து உலகமே பாலைவனமாகிவிடும்.


இதுவே 4 டிகிரி உயர்ந்தால், பனிப்படிவுகள் உருகி நன்னீர் ஆறாய் வழிந்தோடிவிடும். 5 டிகிரி அதிகரித்தால் மீதேன் வாயு அதிகமாக வெளியேறும். தெற்கு ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு பகுதிகள் மனித வாழ்க்கைக்கு தகுதியற்றவையாக மாறிப்போகும்.

6 டிகிரிக்கு மேல் அதிகரித்தால் உலகின் சராசரி வெப்பநிலை 5 ஆயிரம் கோடி வருடங்களுக்குப்பின் ஏற்படும் வெப்பத்தை விட அதிகமாகிவிடும். பூமியில் மனிதன் இருந்ததற்கான அடையாளமே இருக்காது. மனிதன் மட்டுமல்ல...உயிரினங்கள் எதுவுமே இருக்காது. அந்த இலக்கை நோக்கித்தான் நமது விஞ்ஞானம் நம் விரல்நுனியை பிடித்து அழைத்துச்சென்று கொண்டிருக்கிறது.

நாம் இன்னமும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் மிக விரைவில் நமது பூமி பாலைவனமாக மாறி அதன்பின் சுடுகாடாக மாறிவிடும். 





17 கருத்துகள்

  1. மிகப்பொருத்தமான படங்களுடன் விழிப்புணர்வு ஊட்டிடும் பதிவு. இவற்றையெல்லாம் நினைக்கவே மிகவும் பயமாகவும் பயங்கரமாகவும்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வை கோ.ஐயா பயப்பட வேண்டாம் தொழில்நுட்ப அதிரடியான கன்டுபிடிப்பு களுடன் உள்ளது இதை சரியாக்கும் வல்லமை மனிதனுக்கு உள்ளது

      நீக்கு
    2. பயம்தான் அய்யா! அந்தளவிற்கு இயற்கையை கெடுத்து வைத்திருக்கிறோம். இனிமேலாவது இயற்கைக்கு மதிப்பு கொடுத்து இயற்கையை பாதுகாக்க வேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
    3. நாச்சியப்பன் நாராயணன் அய்யா அவர்களுக்கு, இப்படித்தான் எல்லோருமே தங்களுக்கு தாங்களே ஆறுதல் சொல்லிக்கொள்கிறார்கள். எல்லாவற்றுக்குமே விஞ்ஞானம் தீர்வு கண்டுபிடித்துவிடும் என்று. நாம் செயற்கையாக உருவாக்கும் எந்த பொருளுக்கும் மூலம் இயற்கைதான். பூமியை அழித்துவிட்டு கண்டுபிடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு மனிதன் வாழமுடியாது.
      வேண்டுமானால் ஒன்று செய்யலாம். பூமியை போன்றே இன்னொரு கிரகத்தைக் கண்டுபிடித்து அதையும் கெடுக்கலாம்.

      நீக்கு
  2. அருமை ஒரு தத்துவ பார்வையில் எதிர்காலம் இதை பின் பற்றும்

    பதிலளிநீக்கு
  3. முன்னேற்றத்தின் பக்க விளைவுகள்....

    அச்சுறுத்தும் தகவல்கள் தான்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  4. ஒருபக்கம் முன்னேறுவதாகச் சொல்லிக்கொண்டு இன்னொரு பக்கம் நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம். வேதனைதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !

      நீக்கு
  5. வானத்தை ஓட்டை போட்டு
    ஓசோன் (O3) படையைத் துளைக்கும்
    காபன் (CO2)
    மனிதனை மெல்லக் கொல்லாமல்
    விட்டுவிடுமா?
    ஓ! மனிதர்களே!
    முற்காப்பு எடுங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை