Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஹிட்லரும் நல்ல மனிதர்தான்..!


லகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வளர்ச்சிக்கு அடிப்படையானவர். பின்னாளில் அவர் நடத்திய கொடுங்கோல் ஆட்சி காரணமாக அவரது சாதனைகள் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது. 


ஹிட்லரின் ஆரம்பக்கால சாதனைகளை பார்த்தால் ஜெர்மனியின் சரித்திரத்தில் தோன்றிய மிகச்சிறந்த மாமனிதராகவே இருந்தார். முதலாம் உலகப்போர் முடிந்திருந்த காலத்தில் ஜெர்மனியின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது. மக்களை வறுமை வாட்டியெடுத்தது. 

இதை மூன்றே வருடங்களில் சரி செய்தவர், ஹிட்லர் 1933-ல் ஹிட்லர் 'சான்சலர்' பதவியை ஏற்றபோது 60 லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருந்தார்கள். 1936-ல் ஜெர்மனியில் வேலையில்லாதவர் என்று ஒருவர்கூட இல்லை. இத்தனைக்கும் ஹிட்லருக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. அவரது அமைச்சரான ஜால்மர் ஷ்ஹாக்ட் என்பவர்தான் ஜெர்மனியை அடியோடு மாற்றிக் காட்டினார்.


ஹிட்லரின் ஆட்சியில் வேலைக்கேற்ற ஊதியம், போனஸ், விலைவாசி எல்லாம் சரியாக நிர்ணயிக்கப்பட்டது. வாகனங்கள் வேகமாக செல்ல நீண்ட சாலைகளை உலகில் முதன்முதலாக அமைத்தவர் ஹிட்லர்தான். இன்றைய நமது நான்கு வழிச்சாலை அறிமுகப்படுத்தியவர் ஹிட்லர்தான். 

முதியவர்களுக்கு பென்ஷன், அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இலவச மருத்துவம், எல்லோருக்கும் மருத்துவ காப்பீடு என்று வரிசையாக ஹிட்லர் அறிவித்த ஒவ்வொன்றும் மிகப் பெரிய புரட்சி திட்டங்கள்.


போர்ஷ் கார் நிறுவன அதிபர் பெர்டினான்ட் போர்ஷை அழைத்து சாமானியர்களும் வாங்கும் விலையில் கார் தயாரிக்குமாறும், அது ஒரு காலன் பெட்ரோலுக்கு 40 மைல் செல்ல வேண்டும் என்றும் கூறினார். பின்பகுதியில் என்ஜின் வைத்து தயாரிக்கப்பட்ட அந்த சிறிய காருக்கு 'போக்ஸ்வேகன்' என்று பெயரிட்டார். இன்று அந்தக் கார்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்று விளங்குகிறது. 

தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பபடக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தவர். அதற்கென சட்டமும் கொண்டுவந்தார். அன்றைய தொழிற்சாலைகளும் அதற்கான சாதனங்களை போருத்திக்கொண்டன. அன்று ஜெர்மனியில் ஓடிய நதிகள் அனைத்தும் சுத்தமாக இருந்தன. 

ஹிட்லர் காலத்தில் எந்த தொழிற்சாலையிலும் சம்பள பிரச்சனை, வேலை நிறுத்தம் கிடையாது. முதலாளிகள் பக்கமும் சாயாமல், தொழிலாளர்கள் பக்கமும் சாயாமல் நடுநிலை வகித்தார். பிரச்சனை ஏற்படுத்துபவர்கள் முதலாளியாக இருந்தாலும் தொளிலளியாக் இருந்தாலும் சிறையில் தள்ளினார்.


ஹிட்லர் ஆட்சி ஏற்ற போது ஜெர்மனி ராணுவத்தில் ஒரு லட்சம் வீரர்கள் இருந்தனர். அவர்களிடம் நவீனரக துப்பாக்கிகள் கிடையாது. நான்கே ஆடுகளில் நவீன போர் விமானங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், டாங்கிகள் கொண்ட ஐரோப்பாவில் மிக சக்தி வாய்ந்த இராணுவமாக மாற்றினர். 

ஹிட்லரின் 12 வருட ஆட்சியில் முதல் 5 வருடமும் அவர் செய்த சாதனைகள், உலக பொருளாதார மேதைகளை வியப்பில் ஆழ்த்தின. ஆனால், அதன்பின்னர், ஹிட்லர் ஒரு கொலைகார சாத்தானாக மாறத் தொடங்கியதால், அது மட்டுமே இன்றும் பேசப்படுகிறது. சாதனைகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுவிட்டன.




14 கருத்துகள்

  1. ஜெர்மனிக்கு அவர் நல்லது செய்திருக்கலாம் ,பல லட்சம் பேரைக் கொன்று குவித்த அவர் கெட்டவர்,கெட்டவரே :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹிட்லர் ஒரு கொடுங்கோலன் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இப்படியும் ஒரு நல்ல தலைவனாக அவன் இருந்திருக்கிறான் என்பது மட்டுமே இந்தப் பதிவு.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் அதிகமாக இருந்ததால் நல்ல விஷயங்கள் மறைந்து விட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு சரியான உதாரணம் ஹிட்லர்தான்!
      வருகைக்கு நன்றி வெங்கட்ஜி!

      நீக்கு
  3. அருமையான பதிவு நண்பரே,

    ஹிட்லர் அமெரிக்க-ரஷ்ய-ஆங்கில ஏகாதிபத்தியங்களின் சுலபமான பலிகடா வாக ஆக்கப்பட்டவர். இரண்டாம் உலகப் போரில் இந்த நாடுகள் செய்த படுகொலைகளை அவர்கள் எளிதாக ஹிட்லரின் மீது திருப்பிவிட்டு தங்களை எதோ உலகை ரட்சித்த நல்லவர்கள் போல காட்டிக்கொள்கின்றனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் நண்பரே!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  4. என்னதான் விருந்து படைத்தாலும்அதில் ஒரு துளி நஞ்சு கலந்தாற் போல்தான்
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      நீக்கு
  5. சாதித்தவர்கள் பாதை மாறும் போது சாதனைகள் எல்லாம் மறக்கப்பட்டு விடும் என்பதற்கு ஹிட்லர் சிறந்த உதாரணம்...

    நாமும்தான் ஒரு ஹிட்லரை தூக்கி வைத்திருக்கிறோம்... சாதிக்கவே இல்லாமல் சோதிக்கும் தாயை... ம்....

    பதிலளிநீக்கு
  6. அதுதானே உலகம்....சாதித்தவை எல்லாம் ஒரு நொடியில் வீழ்ந்துவிடும் ஒரே ஒரு கெட்டதைச் செய்யும் போது....ஒரு துளி விஷம் போதுமே...இல்லையா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறு ஒரு முறை செய்தாலும் தவறுதான்!
      அதுதான் உலக இயல்பு. வருகைக்கு நன்றி சகோ!

      நீக்கு
  7. தவறுகளை செய்பவர்களும் செய்ய தூன்டுபவர்களும் மனிதர்கள் தானே? ??

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை