Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தப்பு செய்தவன் இவர்களிடம் தப்பமுடியாது - 1


துரை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக ஒரு மர்ம தொலைபேசி அழைப்பு..! காவல்துறை பரபரப்பானது. விடுமுறை காலம் என்பதால் ரயில் நிலையத்தில் கூட்டம் முண்டியடித்தது. அத்தனை கூட்டத்திலும் நிதானம் இழக்காமல் ஒவ்வொரு நடைமேடையாக அலைந்து ஆராய்ந்ததில் அந்த வெடிகுண்டை எடுத்துவிட்டார் கண்ணகி. ஒருவேளை அந்த வெடிகுண்டு மட்டும் வெடித்திருந்தால்..!! 


இன்னொரு சம்பவம்; மதுரையின் மையப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில்.. ஒருவர் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அருகே அவரது மனைவியும் மகளும் அழுது புரண்டு கொண்டிருந்தனர். காவல்துறைக்கு புகார் பறந்தது. மர்ம மனிதன் ஒருவன் வீடு புகுந்து தன் கணவரை கொன்று விட்டதாக அந்தப் பெண் கூறினாள். 

சம்பவ இடத்துக்கு அழகர் வந்தார். கொலையாளி இந்நேரம் எந்த ஊரில் இருக்கிறானோ..! என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்க.. சுற்றும் முற்றும் பார்த்த அழகர் நேராக கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த தாயையும் மகளையும் பிடித்தார். விசாரித்ததில் அந்தப் பெண்தான் மகளுடன் சேர்ந்து கணவரை கொன்றது தெரியவந்தது. 

இப்படி பல்வேறு சம்பவங்களில் குற்றவாளியை கண்டுபிடித்து தந்த கண்ணகியும், அழகரும் வேறு யாருமல்ல. மதுரை மாநகர் காவல்துறையின் துப்பறியும் படையின் மோப்ப நாய்கள். பல சிக்கலான குற்றங்களை சுலபமாக கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கொலை, கொள்ளை, வெடிகுண்டு, போதைப்பொருள் என்று எந்தவொரு தகவல் போலீஸை எட்டினாலும் அடுத்த நொடியில் தயார்படுத்தப்படுபவர்கள் இவர்கள்தான்..! சேரன், செழியன், பாண்டியன், கண்ணகி, அழகர், திருமலை, மங்கை இந்த ஏழு பேர் கொண்ட குழுவிடம் இருந்து தப்பு செய்த எவனும் தப்பமுடியாது!

இத்தனை சாதனைக்கு சொந்தமானவர்களை சந்திக்காமல் இருக்கமுடியுமா? மதுரை மாநகர் துப்பறியும் நாய்ப்படை பிரிவின் தலைவராக அப்போதிருந்த ஆய்வாளர் முத்துலெட்சுமியை தொடர்பு கொண்டேன். "காலை 6 மணிக்கு முன்பே ரிசர்வ் லைன் கிரவுண்டுக்கு வந்துடுங்க. அங்கேதான் 'டாக் ஸ்குவாட்' இருக்கு. உங்களுக்கு தேவையான விவரம் அங்கே கிடைக்கும்." என்று கூறினார். 


விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் அங்கு சென்று சேர்ந்தேன். இந்த பிரிவில் மொத்தம் 7 மோப்பநாய்கள் இருக்கின்றன. இவற்றை பராமரிக்க பயிற்சி கொடுக்க என்று ஒரு நாய்க்கு இரண்டு காவலர்கள் வீதம் மொத்தம் 14 பேர் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசியதில் ஏராளமான விவரங்கள் எனக்கு கிடைத்தன. 

மதுரை துப்பறியும் நாய்ப்படை பிரிவில் இருக்கும் எல்லா நாய்களும் டாபர்மேன் வகையை சேர்ந்தவை. பொதுவாக இந்த மாதிரி வேலைக்கு நான்கு வகையான நாய்கள்தான் பொருத்தமாக இருக்குமாம். டாபர்மேன், லேபராடார் ரெட்ரீவர், ஜெர்மன் செஃபெர்ட், ராட் வீவர் என்பவைதான் அவைகள். இவற்றுக்குத்தான் பயிற்சி கொடுத்து பழக்கப்படுத்துகிறார்கள்.

மூன்று மாதக்குட்டியில் இருந்து இதற்கான பயிற்சியை தொடங்குகிறார்கள். குட்டியை தேர்ந்தெடுக்கும் முன் அதன் தாய்-தந்தை பற்றிய விவரம், அவைகளின் தன்மை, புரிந்து கொள்ளும் சக்தி, உடல்நலம், மோப்ப சக்தி, பார்வை மற்றும் கேட்கும் திறன், முறையாக எல்லா தடுப்பூசிகளும் போடப்பட்டு உள்ளனவா? என்று தெரிந்து கொண்டு தகுதி உள்ள குட்டிகளாக இருந்தால் மட்டுமே தங்கள் படையில் சேர்த்துக் கொள்கிறார்கள்.


குட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் ஒரு குட்டிக்கு 2 காவலர்களை பொறுப்பாளிகளாக நியமிக்கிறார்கள். இவர்கள்தான் இதற்கான பயிற்சிகளை கச்சிதமாக கொடுக்கிறார்கள். நாய்களுக்கு பயிற்சி கொடுப்பது சாதாரண காவலர்கள் அல்ல.  இதற்காகவே பிரத்யேகமாக பயிற்சி முடித்தவர்கள். இவர்கள் மோப்ப நாய்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது என்ற பாடத்தை சென்னை எழும்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் கற்று வந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த முறையில் குட்டிகளை பயிற்றுவிக்கிறார்கள்.


முதலில் குட்டிக்கு நல்ல தமிழில் ஒரு பெயரை சூட்டுகிறார்கள். மூன்று மாத குட்டிகளில் இருந்து 6 மாத குட்டி வரை அடிப்படை பயிற்சியை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்தக் குட்டியை பெயரைச் சொல்லிக் கூப்பிடுவது, விளையாட பயிற்சி கொடுப்பது போன்றவற்றை கற்றுத்தந்து, அந்தக் குட்டியுடன் நன்றாக பழக, கட்டளைக்கு கீழ்ப்படிய வைக்கிறார்கள்.

முழுமையாக குட்டிகளுக்கு 6 மாதம் முடித்த பின்தான் அவைகளை வெடிகுண்டு பிரிவு, கிரைம் பிரிவு, கஞ்சா பிரிவு என்று பிரிக்கிறார்கள். பிரிக்கப்பட்ட குட்டிகளுக்கு அதாதற்கான பயிற்சிகளை தனித்தனியாக கொடுக்கிறார்கள். 

                                                                                   

                                                                                                    - அந்த பயிற்சி நாளைய பதிவில்..



23 கருத்துகள்

  1. எந்த நிலையிலும் நாங்கள் அறிய முடியாத செய்தி. தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. சுவாரஸ்யமாக செல்கிறது நாளை வருகிறேன் நண்பரே
    த.ம.3

    பதிலளிநீக்கு
  3. நாக்குச் சுளுக்கிக் கொள்ளும் அளவுக்கு விந்தையான வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதையே இன்றைய தமிழர்கள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் நிலையில், மோப்பநாய்களுக்கு மதுரைக் காவல்துறையினர் அழகழகான தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. இதிலிருந்து இன்னொன்றும் தெளிவாகிறது. ஜிம்மி, டாமி, சீசர் எனக் குறிப்பிட்ட ஒலிப்புத்தன்மை கொண்ட பெயர்களை மட்டுமல்ல தமிழில் பெயர் சூட்டினால் நாய்களால் புரிந்து கொள்ள முடியும் என்பதே அது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பெயர்களை முதன் முதலாக கேட்டபோது எனக்கும் இப்படித்தான் தோன்றியது. அந்தப் பெயரை கொண்டு நாய்களை அழைக்கும்போது அது வாலை ஆட்டிக்கொண்டு ஓடி வருவதே தனி அழகு!
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  4. ஆகா
    நாளைய பதிவிற்காகக் காத்திருக்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் நண்பரே!

    இராணுவத்திலும் (நானறிந்து இந்திய விமானப்படை ) இதுபோன்ற படைப்பிரிவு உண்டு.

    அவற்றிற்கு Rank உண்டு.

    அதற்கேற்றபடி அதனிலும் குறைந்த Rank உடைய இராணுவ வீர்கள் அந்நாய்களுக்கு Salute செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது.

    ஆங்கிலேயர்கள் காலத்திய வழக்கம்.

    ஒவ்வொரு நாயையும் வளர்க்க பராமரிக்க எனச் செலவிடப்படும் தொகை பல லட்சங்கள்.

    இராணுவத்தின் ஓர் உயரதிகாரின் ஊதியத்தைவிடப் பலமடங்கு.

    ஆனால், அவை செய்யும் சேவை அளப்பரிது.

    வழக்கம்போலவே புதிய செய்திகளோடு ஒரு தொடர்..

    தொடர்கிறேன்.

    தம

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாதுகாப்பு சம்பந்தமான வேலைகளில் இப்படிப்பட்ட நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. தங்களின் மேலதிக தகவல்களுக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  6. சுவராஸ்யமான பகிர்வு சார்...
    பெயர்கள் எல்லாம் அழகு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனிதர்களில் கூட நிறைய தமிழ் பெயர்கள் உள்ளன. ஆனால், நாய்களில் இருப்பதில்லை. இங்கு சூட்டியிருப்பது அழகு!
      வருகைக்கு நன்றி !

      நீக்கு
  7. வாயில் நுழையமுடியாத பெயர்களைக் கொண்டிருக்கும் நம்மிடையே, அழகு தமிழில் பெயர் உள்ள இந்த துப்பறியும் நாய்கள் பற்றிய புதிய, அறிந்திராத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
    தொடர்கிறேன்,.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

      நீக்கு
  8. ஆஹா அருமை ஐயா.ஆர்வத்துடன் அடுத்த பதிவை படிக்கவுள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  9. இதுவரை நானறிந்திராத புதிய தகவல்கள்! சுவாரசியமானவையும் கூட. அழகிய தமிழில் பெயர்கள்! பகிர்வுக்கு நன்றி செந்தில்குமார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  10. பேரிடர் குழுவில் இருக்கும் இந்த மாதிரி செல்லங்களை ஒரு முறை சென்று பார்த்திருக்கிறேன்... இரண்டாம் பகுதியும் இதோ படிக்கிறேன்....

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை