Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கடமை தவறியதா ? கணிக்கத் தவறியதா ?


பிரதமரின் நவம்பர் 8ம் தேதியிட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு வருவதை தவிர்க்க இயலவில்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டப்படி ரிசர்வ் வங்கியிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியின் மூலமாக தெரியவந்துள்ள தகவல், ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஒருங்கே அளிப்பதாக உள்ளதை மறுக்க இயலாது. அதாவது பிரதமர் நவம்பர் 8-ம் தேதி ரூபாய் நோட்டு செல்லாது என்கிற அறிவிப்பை வெளியிடுவதற்கு மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திலேயே இந்திய ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு அதற்கு ஒப்புதல் அளித்ததாக வந்த தகவலே அது.



அதிகபட்ச ரகசியம் காக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த முடிவு குறித்து தீர்மானிப்பதற்காக கூட்டப்பட்ட மத்திய அமைச்சரவையும் கூட பிரதமர் இந்த செய்தியை நாட்டு மக்களுக்கு தெரிவித்து முடிக்கும் வரை களையவில்லை என்கிற செய்திகள் ஏற்கனவே வெளியாகி இருந்ததை ஒரளவுக்கு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும் கூட இந்திய நிதித்துறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கிய முடிவுக்கு அதன் பிரதானமான பொறுப்பை கைவரக் கொண்டிருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அவசரக் கோலத்தில் ஒப்புதல் அளித்தது எவ்வாறு என்கிற கேள்வி தற்போது மேலோங்கியுள்ளது.

இயக்குநர் குழு உறுப்பினர்களில் எத்தனை பேர் இந்த செல்லாத அறிவிப்பிற்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறித்தோ அல்லது எத்தனை பேர் எதிராக இருந்தனர் என்பது குறித்தோ எந்த விதமான குறிப்பும் பராமரிக்கப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஒரு கேள்விக்கு பதில் அளித்து உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.


உர்ஜித் படேல் கவர்னரான பின்னர் இத்தகைய பெரும் முடிவு எடுக்கப்பட்டது குறித்தே ஏற்கனவே விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல் ரிசர்வ் வங்கியை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. இவ்வளவு குறைந்த கால அவகாசத்தில் இவ்வளவு பிரம்மாண்டமான முடிவு குறித்து தீர்மானம் மேற்கொண்ட ரிசர்வ் வங்கி அதற்கு பின்னர் எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து எந்த அளவிற்கு தயாராக இருந்திருக்கும் என்பதையும் இந்த தகவல் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.

அதே போல் ஒவ்வொரு நாளும் எவ்வளவு புதிய 2000, 500 நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன என்கிற விவரத்தையோ அல்லது எத்தனை மணி நேரம் இத்தகைய நோட்டு அடிக்கும் அச்சகங்கள் நவம்பர் 8-ம் தேதிக்கு முந்தைய மாதத்தில் இயங்கின என்பது குறித்தோ எந்த தகவலும் இல்லாத நிலையில் இவ்வளவு பெரும் எடுப்பிலான முடிவுக்கு ரிசர்வ் வங்கி தயாராக இருந்ததா என்கிற கேள்வியும் எழுகிறது.

50 நாட்கள் கடந்த பின்னரும் கூட நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை என்பதும், வாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 24,000 ரூபாயை, சேமிப்பு கணக்குகளிலிருந்து எடுத்துக்கொள்ள முடியும் என்கிற அறிவிப்பை கூட செயல்படுத்த முடியாத சூழலில் வங்கிகள் உள்ளதையும் கருத்தில் கொண்டால் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பிற்கு பிந்தைய செயல்பாடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் தயாராக இல்லை என்ற முடிவுக்கே வரஇயலும்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி அதிகம் ஆராய்ந்து, பல்வேறு விவாதங்களுக்கு பிறகு எடுத்திருக்க வேண்டிய ஒரு முடிவை அவசரமாக எடுத்ததன் காரணமாக கடமை தவறியதா அல்லது நிர்பந்தத்திற்கு உள்ளானதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்க முடியும்.


பொதுவாகவே ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்னர் ரிசர்வ் வங்கியின் கவர்னர் நேரடியாக ஊடகங்களிடம் பேசியது அரிதாகவே இருந்து வந்துள்ள நிலையில் வெளிப்படை தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் ரிசர்வ் வங்கி நடந்து கொள்ள வேண்டியது அவசியம் என்பதையும் உணர்தல் நலம். மிகநீண்ட பாரம்பரியமும், மதிப்பு வாய்ந்ததுமான ஒரு நிதித்துறை அமைப்பாக இந்திய ரிசர்வ் வங்கி சிறப்புற செயலாற்றி வரும் சூழலில் அதன் கண்ணியத்தை கேள்விக் குறியாக்கும் தகவல்கள் அல்லது செய்திகள் குறித்து அது மவுனமாக இருக்க முடியாது.


கட்டுரையாளர்: எம்.ஜே.வாசுதேவன் 


* * * * * * * * * *


வெண்ணிற இரவுகள் 

"தஸ்தாயெவ்ஸ்கியை வாசிப்பது என்பது பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும்." என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். 

தஸ்தாயெவ்ஸ்கியின் படைப்புகளில் மிக முக்கியமானது 'வெண்ணிற இரவுகள்'. கிட்டத்தட்ட 168 வருடங்களாக உலகை ஆட்டிப்படைத்த முக்கோண காதல் கதையின் தொடக்கம். இதை அடிப்படையாக வைத்து ஏகப்பட்ட முக்கோண காதல் கதைகள் பிற்காலத்தில் தோன்றின. இந்த நாவல் பற்றிய அறிமுகமாக காணொளியை இணைத்துள்ளேன்.

காணுங்கள்..! கருத்திடுங்கள்..!!


                                                             வெண்ணிற இரவுகள்








6 கருத்துகள்

  1. // பதற்றமுற்ற மனிதன் ஒருவனுடன் கைகுலுக்குவது போன்றது. அவனது நடுக்கமும் துயரமும் வலியும் நம்மிடம் உடனே தொற்றிக் கொண்டுவிடும் //

    இதற்கும் மேலே உள்ள தகவலுக்கும் சம்பந்தம் உள்ளதோ...?

    காணொளிக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. செல்லா நோட்டு அறிவிப்பிற்குப் பிறகு பல கேள்விகள் எழத்தான் செய்தது செய்கிறது. இந்தக் கட்டுரையின் விவரங்கள் சொல்லுவது இன்னும் ஏற்கனவே இருக்கும் ஐயங்களுக்கு ஆதரவு தருவது போல் இருக்கிறது..என்ன நடக்கப் போகிறது என்று தெரியவில்லை. ..நல்ல பகிர்வு...

    கதையின் விமர்சனம் அருமை குரல் உட்பட..தங்களுடைய மகளிற்கு..வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  3. இரு வேறுபட்ட ஆனால் முக்கியமான செய்திப்பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ரிசர்வ் வங்கி Reserved (கமுக்கக்கார) வங்கியாக மாறி சில மாதங்கள் ஆகிவிட்டதைத்தான் இது காட்டுகிறது.
    காணொளி மூலம் புதிய தகவலை அறிய உதவியமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. ரிசர்வ் வங்கியின் செயல்படாத்தன்மை வேதனையளிக்கிறது நண்பரே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை