சனி, ஜூன் 24, 2017

3.5 லட்சம் பார்வைகளைக் கடந்த அந்தப்புர ரகசியம்


ன்னர்கள் காலத்தில் கோலோச்சிய அந்தபுரங்களைப் பற்றிய விவரங்கள் படு ரகசியமாகவே இருக்கிறது. இதற்கான விவரங்களை சேகரிக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது. வரலாற்று பக்கங்களில் இது குறித்த தகவல்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றன. என்னதான் அந்தப்புரம் என்பது இன்றைய ஆண்களுக்கு கிளுகிளுப்பை தந்தாலும் அன்றைய காலத்தில் அது மரண பயத்தை தரும் ஒரு இடமாகவே இருந்திருக்கிறது. அதனால்தான் அது குறித்த தகவல்கள் வெளியுலகுக்கு வராமலே போயிருக்கிறது. 


கிடைத்த தகவல்களை வைத்து எனது யுடியூப் சேனலில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டிருந்தேன். ஒன்று நமது இந்திய மன்னர்களின் அந்தப்புரம் பற்றி, மற்றொன்று சுல்தான்களின் அந்தப்புரம் பற்றி இந்த இரண்டுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சுல்தான்களின் அந்தப்புரம் 16,500 பார்வைகளை பெற்றிருக்கும் அதேவேளையில் இந்திய மன்னர்களின் அந்தப்புரம் 3.5 லட்சம் பார்வைகளைக் கடந்திருக்கிறது. வெளியிட்ட மூன்று நாட்களில் மூன்றரை லட்சம் பேர் பார்த்திருப்பது ஒரு சாதனையே.

அதோடு சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் 10,000-தைக் கடந்திருக்கிறது. இதுவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றமே. இந்த மகிழ்ச்சியான செய்தியை பதிவுலக நண்பர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். வழக்கம்போல் தங்களின் பேராதரவை சேனலுக்கு சந்தாதாரர் ஆவதன் மூலம் தெரிவிக்கவும். 

நன்றி!

இனி, சாதனைப் படைத்த அந்தப்புர ரகசிய வீடியோக்கள். பொதுவாக மன்னர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலாருக்கும் தெரியாது. அதிலும் அந்தப்புரம் போன்ற பெண்கள் உலவும் பகுதி வெளியுலகுக்கு புரியாத ஒரு புதிராகவே இருந்திருக்கிறது. அந்தப் புதிரை இந்த வீடியோக்கள் கொஞ்சம் அவிழ்த்திருக்கிறது என்றே நம்புகிறேன். 


பாகம் - 1
இந்திய மன்னர்களின் அந்தப்புர ரகசியம்
3,50,000 பார்வைகள்
பாகம் - 2 
சுல்தான்களின் அந்தப்புர ரகசியம்
16,500 பார்வைகள் 


இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்து தங்களின் கருத்துக்களை பதிவிடவும். 


5 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...