15 லட்சம் பக்கப் பார்வைகள் என்பது வலைப்பக்கத்திற்கு ஒரு சாதனை எண்ணாகத்தான் இருக்கிறது. 'யூடியூபி'ல் இதுவொரு சாதாரண எண்ணிக்கை. ஒரேயொரு காணொளி மட்டுமே இந்த எண்ணிக்கையை தொட்டுவிட்டு போய்விடும். ஆனால், வலைப்பூவில் இதுவொரு சாதனைதான்.
ஏன் இப்படி? இந்தக் கேள்வி பலமுறை எனது எண்ணத்தில் வந்து போயிருக்கிறது. அதற்கான காரணமும் நாம் அறிந்ததே.
இன்றைய தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கம் குறைவு. அவர்கள் பிறந்ததில் இருந்து தொலைக்காட்சிகளை பார்த்து பழகிவிட்டார்கள். பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் வாசிப்பு பழக்கம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் பிள்ளைகளுக்கு எப்படி அந்தப் பழக்கம் வரும்?
2015 வரை வலைப்பூவிற்கு நல்ல காலம் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும். அதன் பின்னர் பெரும்பாலானவர்கள் அதில் எழுதிக்கொண்டிருந்தாலும் அதன் வாசிப்பாளர்கள் குறைவாகவே இருந்தார்கள். ஓரளவு எழுதிக்கொண்டிருந்தவர்களையும் முகநூல் தன் பக்கம் இழுத்துக்கொண்டது.
2016-ம் ஆண்டு மத்தியில் 'ஜியோ' வந்த பின் ஒட்டுமொத்த இந்தியாவும் காணொளி பக்கம் சாய்ந்துவிட்டது. அதுவரை இணையம் என்பது செலவு மிக்க ஒன்றாக இருந்தது. இலவச அதிவேக 4ஜி இணைய வசதி இந்தியர்களின் தூக்கத்தைக் கெடுத்த நவீன நோய் என்று சொல்லலாம். எல்லோரும் அந்த நோய்க்கு அடிமையானார்கள்.
இந்த இலவசத்தால் விஸ்வரூப வளர்ச்சி கண்டது 'யூடியூப்'. ஜியோவுக்குப் பின் எல்லோருக்கும் படிப்பது என்பது கசந்தது. பார்ப்பதும் கேட்பதும் மட்டுமே இனித்தது. அந்த இனிப்பை கொடுக்க பல படைப்பாளிகளும் 'யூடியூப்' பக்கம் வந்தார்கள்.
அதனால் வலைப்பூ தனது செல்வாக்கை மேலும் இழந்தது. ஆனாலும் அந்த யூடியூப்-க்கு content கொடுப்பதே வலைப்பூதான் என்பது ஓர் அறியா செய்தி.
2018-ல் தமிழ் வலைப்பூக்களுக்கு விளம்பரங்கள் கொடுக்க கூகுள் முடிவு செய்திருந்தது. இதன் மூலம் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதிவரும் வலைப்பதிவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால், அப்படி எந்த மாயமும் நடந்துவிடவில்லை.
யூடியூபில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற கூகுள் ஆட்சென்ஸ் (அதாவது விளம்பரம் மூலம் வருமானம் பெறுவது) தமிழ் வலைப்பதிவில் தோல்வியுற்றது என்றுதான் சொல்லவேண்டும். ஆங்கில வலைப்பதிவர்கள் பலர் ஒன்றுக்கு இரண்டு வீடுகளையும் கார்களையும் வலைப்பதிவு விளம்பரம் மூலம் வாங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழில் அது ஏன் எட்டாத ஒன்றாக இருக்கிறது என்று தெரியவில்லை.
இத்தனைக்கும் தமிழில் தகவல் வறட்சி இருப்பதாக கூகுள் சொல்கிறது. எதிர்காலத்தில் ஆங்கிலத்தைவிட இந்தியாவில் இந்திய மொழிகளை உபயோகிப்பவர்கள்தான் அதிகமாக இணையத்தை உபயோகிப்பார்கள் என்று கூகுள் சொல்கிறது. அப்படியொரு நிலை வரும்போது நமது மொழிகளில் தேவையான தகவல்கள் இல்லை என்பதுதான் உண்மை. அந்த வறட்சியை போக்கத்தான் இப்போது எழுதச் சொல்கிறது கூகுள்.
இன்று நாம் எழுதும் தகவல்கள் வரும் காலங்களில் வருமானமாக வரவும் வாய்ப்பிருக்கிறது. அது நமது ஓய்வு காலத்திற்கு உதவுவதாக கூட இருக்கலாம். எனவே மனம் தளராமல் எழுதுங்கள். நானும் அவ்வப்போது எழுதுகிறேன்.
ஒருகாலத்தில் அதிக பசு மாடுகள் வைத்திருந்தால் அது செல்வத்தின் அடையாளம். அதன்பின் அதிக நிலம் வைத்திருந்தாள் அது செல்வத்தின் அடையாளம், இப்போது வீடு, தங்கநகை, கார் எல்லாமே செல்வத்தின் அடையாளம். ஆனால், வருங்காலத்தில் யாரிடம் அதிக content இருக்கிறதோ அதுதான் செல்வத்தின் அடையாளம். எனவே நிறைய தகவல்களை சேகரித்து தமிழில் அல்லது உங்களுக்கு தெரிந்த இந்திய மொழிகளில் எழுதுங்கள். இது மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.
15 லட்சம் பார்வைகள் வரை என்னை அழைத்துச் சென்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்..!!!

15 லட்சம் பக்கப் பார்வைகள் - ஆஹா.... வாழ்த்துகள் செந்தில். தொடரட்டும் உங்கள் வலைப்பயணமும் வெற்றிகளும்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குமிக மகிழ்ச்சியான செய்தி நண்பரே...
பதிலளிநீக்குவலைப்பூவைக் குறித்த தங்களது விளக்கம் உண்மை, அருமை.
மிக்க நன்றி நண்பரே!
நீக்குகேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. மனமார்ந்த பாராட்டுகள்!
பதிலளிநீக்குநன்றி ஐயா!
நீக்குவாழ்த்துகள்! மனமார்ந்த வாழ்த்துகள்! மிகவும் மகிழ்வான செய்தி. உங்கள் சாதனைகள் தொடரட்டும்.
பதிலளிநீக்குதுளசிதரன்
கீதா
நன்றி நண்பர்களே!
நீக்கு'யூடியூப்'-ல் வளர்ச்சி தங்களுக்கு உரித்தான திறமை... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி நண்பரே!
நீக்குவாழ்த்துக்கள் செந்தில்.
பதிலளிநீக்குகோ.(நினைவிருக்கும் என நம்புகிறேன்)
மறக்க முடியுமா..! உங்களை...!
நீக்குபழசை மறக்காமல் வந்து பாராட்டியதற்கு நன்றி கோ!
அடுத்தடுத்த உங்களின் சாதனைகள் எங்களை பிரமிக்க வைக்கின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமொழிபெயர்ப்பில் என்னால் இயன்றவற்றைச் செய்து வருகிறேன். தமிழில் வராத, அதிகம் பேசப்படாத பொருள்களை எடுத்து மொழிபெயர்த்து (google translate மூலமாக அல்ல) எழுதுகிறேன். தொடர்ந்து செய்வேன்.
மிக்க நன்றி அய்யா!
நீக்குதொடர்ந்து எழுதுங்கள்..!
டெப்லாய்ட் போன்ற பதிவுகளை எழுதுங்கள் வித்தியாசமாக இருக்கும். தமிழுக்கும் அரிதான தகவலாக இருக்கும்..!!
வாழ்த்துகள்.. சகோ
பதிலளிநீக்கு..
வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குExcellent
பதிலளிநீக்குநன்றி!
நீக்குவாழ்த்துகள் நண்பரே! தங்களின் ஊடகப் பணிகள் இன்னும் சிறந்து மேலோங்கிட எனது அன்பான வாழ்த்துகள். தாமதத்திற்கு மன்னிக்க வேண்டுகிறேகின். “தவிர்ப்பதை விடவும் தாமதம் தவறல்ல” என்பது நல்ல ஆங்கிலப் பழமொழி அல்லவா? (Late is better than never)
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!
நீக்குகருத்துரையிடுக