கிழக்கு
நாகாலாந்து - யாங் கிராமம்
வழக்கமான சுற்றுலா பெரும்பாலானவர்களுக்கு போரடிக்க தொடங்கிவிட்டது. வித்தியாசமாக எங்காவது போய் வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஏற்ற இடம்தான் ´யாங் கிராமம்.
பழங்குடிகளின் கிராமமான இங்கு நாம் தங்கலாம்; அவர்களின் அன்றாட செயல்பாடுகளில் கலந்து கொள்ளலாம்; அவர்களுடன் சென்று ஆரஞ்சு மரத்தில் ஆரஞ்சு பழங்களைப் பறிக்கலாம்; நெல் வயல்களில் ஏர் உழலாம்; களை எடுக்கலாம்; காட்டுக்குள் சென்று தேன் எடுக்கலாம்; பசுக்களில் பால் கறக்கலாம்; அடுப்பெரிக்க சுள்ளிகளைப் பொறுக்கி வரலாம். இப்படி அவர்களின் அன்றாட வேலைகளை செய்வதன் மூலம் அவர்களின் வாழ்வோடு ஒன்றலாம்.
´யாங் கிராமத்தினர் ஒருகாலத்தில் விலங்குகள் மற்ற பழங்குடி மனிதர்களின் தலையை வேட்டையாடி வருவார்களாம். மிகக் கொடுமையான இந்த வேட்டையில் ஈடுபட்டவர்கள் இன்னமும் அந்த கிராமத்தில் இருக்கிறார்கள். இவர்கள் தங்களை 'கோன்யாக் பழங்குடி' என்று கூறுகிறார்கள். அவர்களை பார்க்கலாம், அவர்களுடன் பேசலாம், ஆனால் அவர்கள் தலைகளை வேட்டையாடியதை மட்டும் தப்பி தவறிகூட கேட்டுவிடக்கூடாது. அது அவர்களை கோப படுத்தும்.
நீங்கள் விரும்பினால் வீட்டுப் பெண்கள் தயாரிக்கும் ரைஸ் பீர் நிகழ்வில் கலந்து கொள்ளலாம். இங்கு உணவுக்காக பயன்படுத்தப்படும் காய்கறிகள்
இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டது. சுத்தமான சுகாதாரமான காய்கள் குறைந்த விலைக்கு கிடைக்கிறது.
இங்கு செல்லும் சுற்றுலாவாசிகளுக்கு சில நடைமுறைகளை கைடுகள் சொல்லித் தந்து விடுகிறார்கள். அதன்படி நாம் அவர்கள் முன்பு செய்து வந்து தலைகளை வேட்டையாடுவது பற்றி கேட்கக் கூடாது. கிராமத்து டார்மிட்டரியில் ஆண்களும், பெண்களும் கலந்து தங்கும் அவர்களின் பாரம்பரிய வழக்கம் பற்றி விவாதிக்கக்கூடாது.
வித்தியாசமாக மலைக்கிராமத்தில் பழங்குடி வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற இடம் ´யாங்!
எப்படி போவது?
நாகாலாந்து தலைநகர் கொஹிமாவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் ´யாங்' கிராமம் உள்ளது. வாடகை காரில் 8 மணி நேரம் பயணம் செய்து ´யாங்' சேரலாம். காரைத் தவிர வேறு போக்குவரத்து வசதி இங்கில்லை.
எங்கு தங்குவது?
பழங்குடியினரின் வீடுகளிலே தங்கலாம். வீடுகளின் வசதியைப் பொறுத்து ரூ.1,500 முதல் ரூ.7,000 வரை வீடுகள் உள்ளன. முன்பதிவு கட்டாயம்.
அழகான கிராமம் எங்கும் பசுமையாக காட்சி தருகிறது. காணும் ஆவலைத்தூண்டுகிறது. தங்கள் பகிர்வின் மூலம் தான் படங்களிலாவது கண்டுகளிக்கிறோம்.
பதிலளிநீக்குகருத்துரையிடுக