Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தென்னாப்ரிக்காவில் நீங்களே கார் ஓட்டலாம்

சுற்றுலாவிற்காக நீங்கள் வெளிநாடு சென்றிருந்தால் உங்கள் நண்பர் காரை நீங்கள் ஓட்டமுடியாது.

ஒரு வெளிநாட்டிற்கு சென்று அங்கு கார் ஓட்டுவது அவ்வளவு சுலபமல்ல. முதலில் இன்டர்நேஷனல் டிரைவிங் லைசன்ஸ் வேண்டும். அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் தெரிந்திருக்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட கெடுபிடிகள் இருக்கும்.

ஆனால், தென்னாப்ரிக்காவில் அப்படி எதுவும் இல்லை. உங்களுக்கு கார் ஓட்ட தெரிந்திருந்தால் போதும். கூடுதலாக இந்திய டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். இவை இருந்தால் போதும். தென்னாப்ரிக்காவில் தாரளமாக கார் ஓட்டலாம்.


இந்திய சாலைகளில் இடது பக்கம் வாகனங்கள் செல்வது போலத்தான் அங்கேயும்... அதனால் பிரச்சனை இல்லை. விமானத்தில் இருந்து இறங்கிய உடனே இங்கே விரும்பிய காரை ஓட்டலாம். கெம்ப்பெர் என்ற வேனும் வாடகைக்கு கிடைக்கும்.

நீங்கள் அந்த நாட்டில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு சென்று அங்கிருந்து விமானத்தில் பயணம் மேற்கொள்பவராக இருந்தாலும் கார் வாடகைக்கு கிடைக்கும். காரை திரும்ப வந்து ஒப்படைக்க வேண்டியதில்லை.  நினைத்த இடத்தில் விட்டுச் செல்லலாம். காரை எந்த இடத்திலும் எடுக்கலாம். இப்படி நிற்கும் கார்களை எடுத்துச் செல்வதற்காகவே ஆட்கள் இருக்கிறார்கள்.


சுற்றுலா பயணிகளே கார் ஓட்டும் இந்த திட்டத்தை 'யூரோப் கார் சவுத் ஆப்பிரிக்கா' என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

Post a Comment

புதியது பழையவை