உலகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள் வைத்திருக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த 'பெண்ணின் மொழி'.
மனித நாகரிக வளர்ச்சியில் எழுத்துக்கள் தோன்றிய காலத்தில் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் பெண்களை ஒதுக்கி வைக்க ஆரம்பித்தார்கள். இதை புரிந்து கொண்ட பெண்கள் எதுவும் தெரியாத அப்பாவிப் பெண்கள் போல் நடிக்கத் தொடங்கினார்கள்.
நுஷு எழுத்துக்கள் |
சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது. அப்போது பெண்கள் தங்களுக்கு என்று தனி எழுத்து வடிவம் பயன்படுத்த தொடங்கினார்கள்.
பெண்கள் பேசுவதற்கும் எழுதுவதற்கும் என்று தனியாக ஒரு மொழியை உருவாக்கினார்கள். அந்த மொழிக்கு 'நுஷு' என்று பெயர் வைத்தார்கள். நுஷு என்றால் சீன மொழியில் 'பெண்ணின் எழுத்து' என்று அர்த்தம்.
தங்கள் பெண்கள் இப்படி எழுத்துரு கொண்ட மொழியை பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் என்பதை 700 வருடங்களாக எந்த ஆணாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யார் சொன்னார்கள் பெண்களால் ரகசியத்தை காப்பாற்றமுடியாது என்று.
சீன மொழி எழுத்துக்கள் பெரிதாகவும் கம்பீரமாகவும் இருக்கும். 'நுஷு' எழுத்துக்கள் பெண்களால் உருவாக்கப்பட்டதால், மெலிதாகவும் நிறைய அழகோடு கிறுக்கியது போல் இருக்கும். ஓவியங்களிலும் தலையணை எம்பிராய்டரி வேலைப் பாடுகளிலும் இந்த எழுத்துக்களை பார்க்கலாம். பார்டர் போல் எழுத்துக்களை பயன்படுத்தி தகவலை சொல்லிவிடுவார்கள்.
விசிறியில் நுஷு எழுத்துக்கள் |
பெண்கள் ஆண்களின் கண்ணில் படும்படியே ஓவியங்களில் இந்த எழுத்துக்களை பயன்படுத்தினார்கள். திருமணம் முடிந்து கணவன் வீட்டிற்கு போன பெண்கள் அங்கு தங்களுக்கு நேரும் கொடுமைகளையும் அரவணைப்பையும் தன் தாய்க்கு இந்த எழுத்தின் மூலம் ரகசியமாக தெரிவித்தார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் இந்த மொழியை தனது மகளுக்கும் பேத்திக்கும் கற்று தந்து வழிவழியாக காப்பாற்றி வந்தார்கள். பெண்ணுக்கு மட்டுமே இருக்கும் பல தனிப்பட்ட விஷயங்களை கூசாமல் பேசிய மொழி இது.
தற்போது நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லை என்பது வேதனையான ஒன்று. யாங் ஹுஅன்ய் என்ற 98 வயது பெண் 2004-ம் ஆண்டு இறந்த போது நுஷு மொழியும் இறந்தது. இவர்தான் நுஷு மொழி தெரிந்த கடைசி பெண்.
பெண்களின் வலிகளையும் காதலையும் திகட்ட திகட்ட சொன்ன ஒரு மொழி இன்று உயிர்ப்போடு இல்லை. நூற்றாண்டுகள் கடந்து ரகசியமாக வளர்ந்த மொழியை இப்படி சாக விட்டுவிட முடியுமா..! அதற்காகத்தான் சீன அரசு நுஷு மொழியை பாரம்பரிய மொழியாக அறிவித்து அதற்காக ஒரு அருங்காட்சியகம் அமைத்துள்ளது.
ஏகப்பட்ட கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் இருக்கும் இன்றைய பெண்கள் கூட இப்படி ஒன்றை உருவாக்கமுடியுமா என்பது சந்தேகமே! அதனால் தான் சீன ஒரு வித்தியாசமான நாடு.
பெண்களிடம் ரகசியம் இருக்காது என்று சொன்னவன் முட்டாளாகி விட்டானே...
பதிலளிநீக்குஅபூர்வமான ஆச்சர்யமான விடயமே நண்பரே.... பதிவிட்டமைக்கு நன்றிகள்.
த.ம.2
அதிலும் 700 வருடங்களுக்கு மேலாக பெண்கள் இனம் முழுவதும் ஒரு ரகசியத்தை கட்டிக்காப்பது சாதாரண விஷயமில்லை.
நீக்குகருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
பெண்களுக்கு என்று ஒரு தனி மொழி
பதிலளிநீக்குவியப்பாக இருக்கின்றது நண்பரே
நன்றி
தம ’+1
மிக மிக வியப்பான விஷயமே!
நீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
வித்தியாசமான, சுவாரஸ்யமான + வருத்தமான தகவல்...
பதிலளிநீக்குநுஷு மொழியை மீண்டும் மீட்டெடுப்பதற்காக சீன அரசு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கியிருக்கிறது என்பது ஆறுதலான செய்தி.
நீக்குவருகைக்கும் வாக்குக்கும் நன்றி டிடி சார்!
700 வருடங்களாக வாழ்ந்த மொழி...ஆச்சரியம் தான்
பதிலளிநீக்குபல விஷயங்களை அறியத்தந்தீர்கள்...நன்றி சகோ
தம +1
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி சகோ.!
நீக்குஅய்யா வணக்கம்.
பதிலளிநீக்குஎப்பொழுதும் போலவே சுவாரசியமான அறிந்திராத செய்திகளைத் தந்து போகிறீர்கள்.
இந்த நுஷூ மொழிபற்றி இதற்கு முன் அறிந்ததில்லை.
நம் நாட்டுப் பெண்களுக்கும் இந்தமாதிரி கற்பிதம் போதிக்கப்பட்டு வந்தது.
அவள் அறிந்தாலும் அறியாதது போலவே தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்று.
பெண்களுக்கு வேண்டும் என்று சொல்லப்பட்ட நான்கு குணங்களில் மடம் என்பது இதுதான்.
சீனமும் தமிழும் நுட்பமான இலக்கிய மரபினை தம்முள் கொண்டன. சங்கப்பாடல்களைப் போலவே சீனமொழியில் 2000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையை உடைய Book of Odes என்னும் பாடற்றொகை நூல் உண்டு. நம் மரபினைப் போலவே இத்தொகுப்பிலும் அகப்பாடுபொருளில் காதலும் பிரிவும் இயற்கையும் என தொடர்ந்து செல்லும் பாடல்கள் உள்ளன.
இதன் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பாடல்கள், “வாரிச்சூடினும் பார்ப்பவர் இல்லை “ எனுந்தலைப்பில் ஸ்ரீதரன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது.
இந்த நுஷூ மொழி பற்றி பார்க்கும் போது, ஐந்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் இறந்து போன மரியா ஸ்மித் என்ற பெண்மணியின் நினைவு வந்தது. அலாஸ்காவின் பழங்குடி மக்களால் பேசப்பட்ட ஏயக் என்னும் மொழியை அறிந்த கடைசிப் பெண்மணி அவராகத்தான் இருந்தார்.
அவரது மக்கள் எவரும் அம்மொழியைக் கற்றுக் கொள்ள விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்வாங்கு வாழ்ந்த மக்களின் நாவில் உயிர்ப்போடு இருந்த அம்மொழி அப்பெண்மணியோடு தன்வாழ்வை முடித்துக் கொண்டது.
. அலாஸ்கா பழங்குடியினரின் கடைசி அடையாளத்தைக் காலம் அடித்துக் கொண்டு போய்விட்டது. ஒரு மொழியின் மரணம் என்பது ஒரு இனத்தின் மரணம் என்பதற்கு சமீப காலச் சாட்சியாய் நான் மரியாவைக் காண்கிறேன்.
தங்களின் பதிவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது.
தங்களுக்கு நன்றி.
த ம 7
வாருங்கள் அய்யா,
நீக்குவழக்கம் போல் பல வரலாற்று சம்பவங்களை மேற்கோள் காட்டி அற்புதமாக பின்னூட்டம் இட்டுள்ளீர்கள், மிக்க நன்றி அய்யா!
இதன் மூலம் பல தகவல்களை தெரிந்து கொண்டேன்.
இது புதிய தகவல் என்பது மட்டுமல்ல! புதுமையான தகவல்! நன்றி!
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குஅன்றைக்கும் அறிவில் சிறந்து விளங்கிய பெண்களை ஆண்களுக்கு பிடிக்கவில்லை. சீனப் பெண்கள் ஒருபடி மேலே போய் தங்களுக்கு எழுதப் படிக்கக் கூட தெரியாது என்பது போல் நடித்தார்கள். ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல. பல நூற்றாண்டுகள் இந்த நடிப்பு தொடர்ந்தது என்ற செய்தி வியப்பாகவே உள்ளது. நுஷு மொழி தெரிந்த ஒரு பெண் கூட உலகில் இல்லையென்பதும்... பத்தாண்டுக்கு முன்பே இந்த மொழி தெரிந்த கடைசிப் பெண்மணியும் இறந்த செய்தி வேதனையானதே!
-நன்றி.
பெண்கள் நினைத்தால் எந்த எல்லை வரையும் போக முடியும் என்பதற்கான வரலாற்று சான்று போல்தான் இதை பார்க்கத் தோன்றுகிறது.
நீக்குத.ம. 9.
பதிலளிநீக்குவருகைக்கும் வாக்கு பதிவுக்கும் நன்றி அய்யா!
நீக்குஎத்தனையோ மொழிகள் அழிந்து இருந்தாலும் பெண்களுக்கான ஒரே மொழியும் அழிந்தது ,வேதனையிலும் வேதனை!
பதிலளிநீக்குபெண்கள் தங்களுக்கென்று ஒரு மொழியை உருவாக்கியது பெரும் ஆச்சர்யம் என்றால், இன்றைய நவீன பெண்கள் அதை கற்றுக்கொள்ளாமல் கொன்றுவிட்டார்களே என்பது மிகப் பெரிய வருத்தம்தான்.
நீக்குமிக நல்ல தகவல்களைத் தந்து கொண்டிருக்கின்றீர்கள் நண்பரே! சுவாரஸ்யமான தகவல்களும் கூட! அருமையான பதிவு!
பதிலளிநீக்குகீதா: நண்பரே! இதைப் பற்றித் தாங்கள் அருமையாக தமிழில் எழுதி உள்ளீர்கள். என் மகன் 7 ஆம் வகுப்பு அமெரிக்காவில் பயின்ற போது, பள்ளியில் வரலாறு, பூகோளம், சமூகவியல் பாட வகுப்பில், பெரும்பாலும் அவனது செமினார், அசைன்மெட்ன், ப்ராஜக்ட், சைனா, ஜப்பான் பற்றித்தான் இருக்கும். சில சமயம் ரஷ்யா. ஸ்பேஸ் சம்பந்தப்பட்டதென்றால். அமெரிக்காவிற்கும் சைனாவிற்கும் நிறைய போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி உண்டல்லவா உறவும்....அது போன்று ஜப்பான்....அதனால். அதில் ஒன்று இந்த மொழி பற்றிய செமினார். இவன் வகுப்பு எடுக்க வேண்டியதாக இருந்தது. அதற்காகத் தயார் செய்ததால் அறிந்து கொண்டது...நாங்கள் நிறைய திரட்டினோம். நீங்கள் இங்கு கொடுத்துள்ளத் தகவல்கள் உட்பட...அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்தக் கடைசிப் பெண் இறந்த செய்தி இல்ல அப்பொது (2001). கொஞ்சம் சைன மொழியிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் கொஞ்சம் அவர்களாகவே கண்டுபிடித்து அப்படி உருவாக்கியதாகவும். மேலிருந்து இது கீழே எழுதப்படும். அப்படி எழுதப்பட்டு உருவாக்கப்படும் காலங்கள் (columns)வலமிருந்து இடமாக அந்தக் கால்ங்கள் எழுதப்படு அர்த்தம் கொள்ளப்படும். அவனது பள்ளியில் மிகப் பெரிய நூலகம் உண்டு + இணையம். அப்படி கொஞ்சம் திரட்டி.....ஒரு அர்த்தம் கிடைத்தது புத்தகத்திலிருந்து. அந்த நூஷு எழுத்துருக்களை இந்தப் பின்னூட்டத்தில் தர இயலவில்லை. அர்த்தம் மட்டும் ""They taught her to apply makeup and comb her hair; on her head she was wearing pearls that are shining magnificently; she is sitting like Guany in (a Buddhist goddess) out of a Buddhist Shrine". இப்படிச் சென்றது. இன்னும் உண்டு. எல்லாமே ஆங்கிலத்தில். இந்த எழுத்துரு Jiangyong county of Hunan Province ல் உருவாக்கப்பட்டது என்றும். என்னால் தமிழில் சரியாக மொழி பெயர்க்க முடியாததால் அதைப் பற்றிச் சொல்ல முடியவில்லை. நீங்கள் மிக அழகாகத் தமிழில் தந்திருக்கின்றீர்கள். அதே போன்று மகன் ஜப்பானில் அவர்கள் பாரம்பரியமான Tea Ceremony பற்றியும் வகுப்பில் பாடம் எடுக்க வேண்டி வந்தது. மாணவர்களை அதற்குத் தயார் படுத்தி ஜப்பான் மக்கள் எப்படி அதை நடத்துவார்கள் என்று செய்து, நடித்துக் காட்டி அதை ஆங்கிலத்தில் விளக்கி என்று. அதைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன.....அதைத் தமிழில் மொழி பெயர்த்து எங்கள் தளத்தில் தர முயற்சி செய்கின்றேன். அந்த ஒரு வருடம் தான்...பின்னர் மீண்டும் இங்கு...மிக்க நன்றி நண்பரே! நூஷு பற்றிய தகவல்களுக்கு. )
விரிவான விளக்கம் தந்துவிட்டீர்கள்! நுஷு மொழியை பற்றி ஏற்கனவே தெரிந்து வைத்திருப்பது. நீங்கள் பல நூல்களை படித்தவர்கள் என்பதையே கட்டுகிறது. மிகதத் தெளிவான பின்னூட்டம்!
நீக்குநன்றி!
எனக்கு இது புத்தம்புதிய செய்தி.. சுவாரசியமாக தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...
பதிலளிநீக்குபுராதாணமொழிகளான சீனம்,தமிழ்,பழங்குடிஇன மொழிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறப்பான பதிவு மற்றும் பின்னுடனடங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குசீனப்பெருஞ்சுவரைப் போல இன்னும் எத்தனை ரகசியங்கள் அவர்களிடம் புதைந்து கிடக்கிறதோ? ஆச்சரியமான தகவல்.
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குகருத்துரையிடுக