தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன். இவர் ஒரு அமெரிக்கர். ஆனால், அமெரிக்காவில் ஒரு படம் கூட எடுத்ததில்லை. இவர் தனது சினிமா தாகத்தை தீர்த்துக்கொள்ள தேர்ந்தெடுத்த இடம் இந்தியா, அதிலும் தமிழ்நாடு.
|
எல்லீஸ் ஆர்.டங்கன் |
அமெரிக்காவில் இவர் படம் எடுக்காமல் இந்தியா வந்ததற்கு காரணம் இருக்கிறது. ஆரம்பக் கால தமிழ் சினிமாவில் பிராமணர்கள் ஆதிக்கம் இருந்ததுபோல், அமெரிக்காவின் பல துறைகளிலும் யூதர்களின் கையே ஓங்கியிருந்தது. சினிமாவிலும் அவர்களே முழு ஆதிக்கம் செலுத்தினர். அவர்களுடன் போட்டிபோடுவது சாதாரணமான விஷயமில்லை. இன்றைக்கும் கூட புகழ்பெற்று விளங்கும் பல ஹாலிவுட் இயக்குநர்கள் யூதர்களே. ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
|
'சதிலீலாவதி'யில் எம்.ஜி.ஆர். |
எல்லீஸ் ஆர்.டங்கனின் முதல் படம் 1936-ல் வெளிவந்த 'சதிலீலாவதி'. ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசன் தொடராக எழுதிய கதையே அது. அந்த படத்தில்தான் எம்.ஜி.ஆர்.ஒரு துணை கதாபத்திரத்தில் அறிமுகப்படுத்தப் பட்டார்.
இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டு விலகாதவர்களாகவே அன்றைய பெண்கள் இருந்தார்கள். அதைதான் தமிழ் படங்களும் சித்தரித்து வந்தன. இதை மாற்றி மதுக் கோப்பைகளை கையில் ஏந்திய மங்கையர்கள் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடல்களை தனது முதல் படத்திலேயே அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றியைக் கொண்டாடியது.
|
'அம்பிகாபதி' படப்பிடிப்பில் |
டங்கனின் இரண்டாவது படம் 1937-ல் வெளிவந்தது. அன்றைய சூப்பர் ஸ்டாரான தியாகராஜாபாகவதர் நடித்த 'அம்பிகாவதி' படம்தான் அது. எந்த சூழ்நிலையிலும் தான் நடிக்கும் படத்தில் எந்த நடிகையுடனும் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வந்தார். ஆனால், அப்படிப்பட்ட பாகவதரையே அந்த படத்தின் கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார் டங்கன். அதனால், திரையுலகின் முதல் 'காதல் மன்னன்' என்ற பட்டம் பாகவதரை வந்து சேர்ந்தது.
அதன்பின், 1940-ல் இவர் இயக்கிய 'சகுந்தலை' படத்திலும், 1945-ல் வெளியான 'மீரா' படத்திலும் எம்.எஸ்.சுப்புலட்சுமியை முக்கியமான வேடத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில்தான் முதன்முதலாக குளோஸ்-அப் காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. திரை முழுவதும் தெரிந்த சுப்புலட்சுமியின் முகத்தைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார்கள் ரசிகர்கள்.
|
'மீரா'வில் எம்.எஸ்.சுப்புலட்சுமி |
1950-ல் இவர் இயக்கி வெளிவந்த 'மந்திரகுமாரி' படத்தில் முதன்முதலாக டிராலி ஷாட்டை அறிமுகபப்டுத்தினார். டிராக் அமைத்து அதன் மீது டிராலியில் கேமராவை வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டன.
|
'மந்திரிகுமாரி'யில் எம்.ஜி.ஆர். |
காரின் மீது பிளாட்பாரம் போன்ற அமைப்பை உருவாக்கி, கேமராவை அதன் மீது வைத்து நடிகர்கள் குதிரைகளின் மீது வேகமாக பாய்ந்துவரும் காட்சியை அற்புதமாக படமாக்கி காண்பித்தார். அதன் பின்னர்தான் இந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டன.
ஹாலிவுட் டெக்னிக்கை தமிழில் முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர், எல்லீஸ் ஆர்.டங்கன் தான். தமிழ் சினிமா புதிய உயரங்களை தொடுவதற்கு அஸ்திவாரம் அமைத்தவர், டங்கன் என்பதை மறுக்க முடியாது.
தமிழ் சினிமாவில் ஒதுக்கி புறம்தள்ள முடியாத மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் எல்லீஸ் ஆர்.டங்கன்.
பதிலளிநீக்குஆம் நண்பரே! மாற்றுக் கருத்துக்கு இடமில்லாத வரிகள் இவைகள் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
நல்ல விளக்கத்துடன் அமையப் பெற்ற மிக அருமையான பதிவு! வாழ்த்துகள்!
நட்புடன்,
புதுவை வேலு
வாருங்கள் நண்பரே,
நீக்குமுதலாவதாக வந்து முதல் கருத்திட்டு வாக்களித்தமைக்கு நன்றி!
Arumayana thagaval vaalthukal
பதிலளிநீக்குமறுக்க முடியமா...? மறக்க முடியுமா...? சொல்லப்பட்ட ஒவ்வொரு படத்தையும் பலமுறை ரசித்துள்ளேன்...
பதிலளிநீக்குமறுக்க முடியாத.. மறக்க முடியாத.. இயக்குனர்தான் எல்லீஸ் ஆர்.டங்கன்.
நீக்குவருகைக்கு நன்றி தனபாலன் சார்!
டங்கன் பற்றிய சிறிய பதிவாக இருந்தாலும் தெளிவான கருத்துக்கள் கொண்டதாக இருக்கிறது. எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். மணிரத்தினம்,ஷங்கர் தான் புதுமைகள் செய்தார்கள் என்று நம்பிக் கொண்டிருகும் இளைய தலைமுறைக்கு டங்கன் போன்றவர்களும் நவீனத்தை அறிமுகப் படுத்தியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கூறுவது அவசியமானதுதான்.
பதிலளிநீக்குபுதுமைகளை பழையவர்கள் "அந்தக் காலத்திலேயே" செய்திருக்கிறார்கள் என்று சொன்னால் சிலருக்கு அது பிடிப்பதில்லை. எங்க ஆள் மாதிரி வேற யாரும் இல்லை என்ற மனப்பான்மை அதிகம் இணையத்தில் தென்படுகிறது.
வாருங்கள் காரிகன்,
நீக்குநீங்கள் கூறுவது 100-க்கு 100 உண்மை. புதுமைகளை இன்றைய பிரமாண்ட இயக்குனர்கள்தான் கொண்டு வந்தார்கள் என்று கூறுவதில்தான் இன்றைய இளைஞர்கள் பெருமை கொள்கிறார்கள். அதற்கு காரணம் வரலாறு தெரியாததுதான்.
கருத்துக்கு நன்றி நண்பரே!
டங்கன் குறித்த பதிவு அருமை தோழர் தம+
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி தோழரே!
நீக்குஅட! எல்லிஸ் டங்கன்....அதுவும் அந்தக் காலத்திலேயே...புதிய னுணுக்கங்களோடு .12, 13 படங்கள் செய்ததாக வாசித்த நினைவு. அருமையான படங்கள் அனைத்துமே..என் எஸ் கிருஷ்ணன் அவர்களையும்( எங்க ஊராச்சே) இவர்தான் அறிமுகப்படுத்தினார் இல்லையோ?! நல்லதொரு பதிவு!
பதிலளிநீக்குநன்றி நண்பரே,
நீக்குதங்களின் மூலம் மற்றொரு தகவலை தெரிந்து கொண்டேன்.
வருகைக்கு நன்றி!
நல்ல தகவல்களை தந்தீர்கள் நண்பரே நன்றி இதில் சிந்சிக்க வேன்டிய ஒரு விடயம் கவனித்தீர்களா ? எல்லீஸ் டங்கன் சதிலீலாவத் படத்தின் மூலம் தனது சதியை தமிழ் நாட்டில் தான் துவங்கி இருக்கிறார் அதாவது தம்பிகள் ஸ்டீபன் ஸ்பீல்பர்க் மற்றும் ஜேம்ஸ் கேமரூன் போன்றவர்களிடம் பாட்சா பலிக்கவில்லை தமிழனை பாமரனாக கணித்து விட்டார்
பதிலளிநீக்கு//இந்தியாவின் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டு விலகாதவர்களாகவே அன்றைய பெண்கள் இருந்தார்கள். அதைதான் தமிழ் படங்களும் சித்தரித்து வந்தன. இதை மாற்றி மதுக் கோப்பைகளை கையில் ஏந்திய மங்கையர்கள் கவர்ச்சி நடனம் ஆடும் கிளப் டான்ஸ் பாடல்களை தனது முதல் படத்திலேயே அறிமுகம் செய்தார். படம் மாபெரும் வெற்றியைக் கொண்டாடியது//
அதாவது முதல் மயக்கம் தமிழனுக்கு....
//தியாகராஜாபாகவதர் நடித்த 'அம்பிகாவதி' படம்தான் அது. எந்த சூழ்நிலையிலும் தான் நடிக்கும் படத்தில் எந்த நடிகையுடனும் நெருங்கி நடிப்பதில்லை என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வந்தார். ஆனால், அப்படிப்பட்ட பாகவதரையே அந்த படத்தின் கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்க வைத்தார் டங்கன்//
அதாவது இரண்டாவது மயக்கம் தமிழனுக்கு....
//காரின் மீது பிளாட்பாரம் போன்ற அமைப்பை உருவாக்கி, கேமராவை அதன் மீது வைத்து நடிகர்கள் குதிரைகளின் மீது வேகமாக பாய்ந்துவரும் காட்சியை அற்புதமாக படமாக்கி காண்பித்தார். அதன் பின்னர்தான் இந்த தொழில் நுட்பங்கள் எல்லாம் தமிழ் படங்களில் பயன்படுத்தப்பட்டன//
இது பாராட்டப்பட வேண்டியதே.....
அதன் விளைவு இன்று பட்டுக்கொண்டு இருக்கிறோம்.
மாறுகோணத்தில் பார்க்கும்போது கும்பகோணம் கூட அரகோணமாக தெரியும் 80 எனது மரமண்டைக்கு புரிகிறது நன்பரே..
தமிழ் மண(ன)ம் 6தல் கொள்கிறது வேறென்ன செய்வது ?
இதுபோல் தகவல்கள் புட்டு புட்டு வைங்க நண்பா...
வாருங்கள் நண்பரே,
நீக்குமிக விரிவான கருத்துக்கு பதிவுக்கு முதலில் நன்றி நண்பரே!
டங்கன் புதுமைகளை செய்தாலும் கலாச்சார சீரழிவையும் செய்துள்ளார் என்று பட்டவர்த்தனமாக சொன்னதற்கும் கருத்திட்டு வாக்களித்ததற்கும் மீண்டும் நன்றி நண்பரே!
தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் 'எல்லீஸ் நகர்'கள் உள்ளனவே ,அவர் நினைவாகத்தானோ:)
பதிலளிநீக்குவாருங்கள் பகவான்ஜி!
நீக்குதமிழகத்தில் இருக்கும் எல்லீஸ் நகர் இவரை குறிப்பதல்ல. அவர் மிகப் பெரிய தமிழறிஞர். தன் சொத்துக்களை விற்று தமிழ் ஓலை சுவடிகளை சேகரித்தவர்.
தங்களுக்கு நேரமிருந்தால் பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் என்ற அந்த மாமனிதர் பற்றிய பதிவை படித்துப் பாருங்கள்.
http://senthilmsp.blogspot.com/2015/03/blog-post_78.html
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி ஜி!
டங்கன் பற்றி அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குகருத்துரையிடுக