மனிதனின் உணர்வோடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் அதிக கவனம் பெரும் என்பது உண்மையே. நேற்று முன் தினம் நான் பதிவிட்ட 'மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு' என்ற பதிவு எனது வலைப்பூ வரலாற்றில் சாதனை படைத்த பதிவாக மாறிவிட்டது.
பொதுவாக நான் வெளியிடும் பதிவுகள் அதிகபட்சமாக 500 பார்வைகள் வரை போகும். பயணம் குறித்த பதிவு என்றால் 1,000 - த்தை தாண்டும். அவ்வளவுதான். ஆனால் பதிவிட்ட 24 மணி நேரத்துக்குள், (அதாவது நேற்று ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குள்) 11,400 பேர் அந்த ஒரு பதிவை மட்டும் படித்திருக்கிறார்கள் என்றால் அது சாதனைதானே! அன்று ஒருநாள் மட்டும் மொத்தமாக 12,998 பேர் வந்திருக்கிறார்கள். எனது வலைப்பக்கத்தில் வருகை தந்தவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 38,000 லிருந்து 51,000 ஆக உயர்ந்தது.
இதெல்லாம் ஒரு சாதனையா என்று அனுபவம் வாய்ந்த பதிவர்கள் சொல்லலாம். தவழும் குழந்தைக்கு எழுந்து நிற்பதே சாதனைதான். ஓட்டமாக ஓடும் பெரியவர்களுக்கு நிற்பது சாதனையாக தெரியாது. அந்த தவழும் குழந்தை நிலையில்தான் நான் இருக்கிறேன்.
இப்போதைய கணக்குப்படி இந்த பதிவு 14,100 என்ற எண்ணிக்கையை கடந்து சென்று கொண்டிருக்கிறது.
வேதனை மிகுந்த இந்த பதிவை இத்தனை பேரிடம் கொண்டு சேர்த்ததில் பதிவர்களுக்கும், முகநூல் நண்பர்களுக்கும் நிறைய பங்கிருக்கிறது. அவர்கள் தங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டதால்தான் இது நிகழ்ந்தது.
அவர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.
அன்புடன்
எஸ்.பி செந்தில்குமார்
நேற்றே reader-ல் sharing details கவனித்து விட்டேன்...
பதிலளிநீக்குவேதனை சாதனையானதிற்கு பாராட்டுக்கள்...
முதல் கருத்துப்பதிவுக்கும் முதல் வாக்குக்கும் நன்றி டிடி சார்.
நீக்குஅது என்ன சார் ரீடர்..?
http://dindiguldhanabalan.blogspot.com/2014/05/Speed-Wisdom-8.html
நீக்குதங்களின் பதிவைப் பார்த்தேன். மிக்க நன்றி!
நீக்குஎன்ன வேதனை சாதனை எனக் காண வந்தேன்.
பதிலளிநீக்குஅந்தப் பகிர்வையும் படித்து மிகுந்த வேதனையடைந்தேன்.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ!
நீக்குகொடிய கொடுமையை வெளிகொண்டுவந்த உங்க பதிவு பலரை சென்றடைந்தது மகிழ்ச்சி..
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குயெஸ் சாதனைதான் நண்பரே! அந்தப் பதிவு பலரை சென்றடைய வேண்டும். அப்படி அடைந்தால் ஒரு விடிவு காலம் பிறக்குமா? ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்தும் அதன் பின் யாரும் அதைப் பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை. எதற்கெல்லாமோ போர் தொடுக்கும் நாடுகள், புரட்சி செய்யும் நாடுகள் இதைக் கண்டு கொள்ளாமல் இருப்பது வேடிக்கையாகத்தான் இருக்கின்றது!
பதிலளிநீக்குவாழ்த்துகள் நண்பரே!
3000 ஆயிரம் வருடங்களாகவே விடிவு பிறக்கவில்லை. மற்ற நாடுகள் விழித்துக் கொண்டு 1930-ல் தடை செய்யும் போதும் இந்த நாடுகள் விழித்துக் கொள்ள வில்லை.
நீக்குஇதற்கு முழு காரணமும் அங்குள்ள ஆண்கள் தான். அவர்கள் இதை ஒரு தவறாகவே நினைக்கவில்லை. அவர்கள் பெண் இப்படி இருப்பது புனிதம் என்று கருதுகிறார்கள். இந்த கருத்து தலைமுறை தலைமுறையாக பெண்கள் மீது திணிக்கப்பட்டே வந்திருக்கிறது. அவர்களால் அதை மீற முடியவில்லை.
மன அளவில் அங்கிருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மாற்றம் ஏற்படும் வரை என்னதான் சட்டம் போட்டாலும் தடுக்க முடியாது.
இப்படி ஒரு கொடுரம் 15,000 பேருக்கு பதிவின் மூலம் தெரிய வந்திருப்பது மகிழ்ச்சியே.!
வருகைக்கு நன்றி!
கீதா மேடம் எப்படி இருக்கிறார்கள்?
நண்பரே சாதனைதான் பாராட்டுகள் இதற்கெல்லாம் மூலகாரணம் மத உணர்வுகள் மட்டுமே வேறென்ன சொல்ல முடியும் இதனைப்பற்றி கூடுதல் வேண்டாம் மீண்டும் வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
மனம் கல்லாய் போன மக்களும் கூட நண்பரே!
நீக்குநன்றி!
///இதெல்லாம் ஒரு சாதனையா என்று அனுபவம் வாய்ந்த பதிவர்கள் சொல்லலாம். தவழும் குழந்தைக்கு எழுந்து நிற்பதே சாதனைதான். ஓட்டமாக ஓடும் பெரியவர்களுக்கு நிற்பது சாதனையாக தெரியாது. அந்த தவழும் குழந்தை நிலையில்தான் நான் இருக்கிறேன்.///
பதிலளிநீக்குஆமாம் இதுவும் ஒரு சாதனைதான் நண்பரே. அடுத்தாக அடுத்துவர்கள் என்ன சொல்லுகிறார்கள் நினைக்கிறார்கள் என்று கவலைப்படாமல் நீங்கள் எழுதி கொண்டிருங்கள்..... உங்கள் பதிவில் நான் இட்ட முதல் கருத்து என்று நினைக்கிறேன் நான் சொன்னது இதுதான் நீங்கள் தெளிவாக அதே நேரத்தில் வித்தியாசமாக புது புது தகவல்களை எழுதுகிறீர்கள் பாராட்டுக்கள் என்று.. அதேயே மீண்டும் சொல்லுகிறேன்.
மிக்க நன்றி நண்பரே,
நீக்குபத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகளைத்தான் இங்கு பதிவிட்டுக் கொண்டிருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல் எல்லா விஷயங்களையும் எழுதியிருக்கிறேன். அதைதான் இங்கும் செய்கிறேன்.
தங்களின் கருத்து எனக்கு மேலும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து எழுத தூண்டுகிறது.
வேதனைகள் மறைய வேண்டுமானால், இதுபோலும் உங்கள்
பதிலளிநீக்குசாதனைகள் தொடரவேண்டும். வாழ்த்துகள் நண்பரே.
வருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
நீக்குஇதுபோன்ற செய்திகளை பரப்புவதன் மூலம்
பதிலளிநீக்குவிழிப்புண்ர்வினை ஏற்படுத்தலாம் அல்லவா
வாழ்த்துக்கள் நண்பரே
கண்டிப்பாக விழிப்புணர்வு ஏற்படும். ஆனால் அந்த பெண்களுக்கு விடியல் என்று ஏற்படுமோ?
நீக்குதம +1
பதிலளிநீக்குவாக்குக்கு நன்றி நண்பரே!
நீக்குஅய்யா நேற்றே படித்தேன் ,முழுவதும் படிக்க முடியல, இப்ப கூட பதைபதைக்கும் மனதுடன் என்ன கொடுமையட சாமி,
பதிலளிநீக்குகாது குத்தினாலே வலிக்கும் என நினைக்கும் ,,,,,,,,,,
அய்யோ இந்நிலை எப்போ மாறும்,
ஓதுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்து அந்த பெண்கள் மாறனும்,
பதிவு ஒரு விடிவாகட்டும். நன்றி.
//ஓதுக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று மனதில் நினைத்து அந்த பெண்கள் மாறனும்,//
நீக்குமாற வேண்டியது விவரம் தெரிந்த பெரிய பெண்கள்.
அவர்கள் 'என் மகளுக்கு, என் பேத்திக்கு இதை செய்ய மாட்டேன்'. என்று தீர்க்கமாக முடிவு எடுக்க வேண்டும். எதிர்த்து நிற்க வேண்டும். நாடு முழுவதும் இந்த எழுச்சி தோன்றினால் இதை தடுக்கலாம்.
அதற்கு பெண் கல்வியும் பொருளாதார சுதந்திரமும் அடிப்படை தேவை. அது எதுவுமே இந்த பெண்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்பதில்தான் அந்நாட்டு ஆண்கள் மும்மரமாக இருக்கிறார்களே..! அவர்கள் மனதில் 'இவர்கள் நம் பெண்கள்' என்ற உணர்வு ஏற்படாத வரை எந்த மாற்றமும் நிகழாது.
இன்றைய நிலையில் அப்படியொரு உயர்ந்த எண்ணம் எதுவும் அங்கிருக்கும் ஆண்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
வருகை தந்து கருத்திட்ட தங்களுக்கு நன்றி மகேஸ்வரி பாலசந்திரன்!
எழுத்தின் வசீகரம் என்பது தான் விரும்பிய மெய்ப்பாட்டைப் பார்ப்பவனிடம் தோற்றுவித்தல்.
பதிலளிநீக்குஅது தங்கள் எழுத்துகளில் படிந்திருக்கிறது அய்யா!
பயணம் எனில் உங்கள் எழுத்தால் எங்களையும் கூட்டிப் போகிறீர்கள்.
அவலம் என்றால் பதற வைக்கிறீர்கள்.
இது உங்கள் எழுத்தின் வெற்றி.
த ம கூடுதல் 1
நன்றி.
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி அய்யா!
நீக்குபல முறை இந்த பாராட்டுக்கு நான் தகுதியானவனா என்ற கேள்வி எழுகிறது. நான் அவசரக் கோலத்தில் அள்ளித்தெளி என்ற விதத்தில்தான் எழுதுகிறேன். திரும்பக்கூட அதை படித்து பார்ப்பதில்லை. அதற்கு சோம்பல் கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் உண்மையா..? அல்லது அய்யா வஞ்சப்புகழ்ச்சியில் சொல்கிறாரோ என்று கூட தோன்றுவதுண்டு. தவறாக இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள்.
வருகைக்கும் வாக்குக்கும் என்னை ஊக்கப்படுத்தியதற்கும் மீண்டும் நன்றி!
ஐயோ என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்!
நீக்குஇது நெஞ்சப் புகழ்ச்சி....!!!!!
அதில் ஒருபோதும் வஞ்சம் இல்லை:))
//இது நெஞ்சப் புகழ்ச்சி....!!!!!
நீக்குஅதில் ஒருபோதும் வஞ்சம் இல்லை:))//
மன நிறைவான மகிழ்ச்சி அய்யா!
தவறான வார்த்தை வந்ததற்கு மன்னித்துக் கொள்ளுங்கள்!
தம +
பதிலளிநீக்குவாக்குக்கு நன்றி நண்பரே!
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குநண்பரே!
பதிலளிநீக்குஏற்றம் தரும் எவரெஸ்ட் எழுத்துக்கள்
மேலும் எழுச்சி காணட்டும்!
உள்ளதை, நல்லதை சொல்லுவதில் நல்லவர் நீங்கள்§
துணிவுமிக்கவரும்கூட!
வாழ்த்துகள்!
நவரத்தினமாய் ஜொலிக்கட்டும் த ம 9
நட்புடன்,
புதுவை வேலு
கவிதையோடு வாழ்த்தும் வாக்கும் அளித்த அய்யாவுக்கு நன்றி!
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநல்ல விடயம் உள்ள பதிவு என்றால் பலர் பார்ப்பர்கள்... வருகை நிரலை கண்டு நானும் வியந்து விட்டேன். வாழ்த்துக்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உலகம் தழுவிய மா பெரும் கவிதைப்போட்டி-2015:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே!
நீக்குகருத்துரையிடுக