• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, மே 22, 2015

  பழங்குடிகளுடன் ஒரு நாள்  சன்டூரி சாய் ரிஸார்ட்

  ரிஸார்ட் அமைந்திருக்கும்  கெளடகுடா பழங்குடிகள் கிராமம்
  டிஸா பழங்குடியினரின் ஆடம்பரமான ரிஸார்ட் தான் சன்டூரி சாய். சன்டூரி என்பது மருத்துவ குணம் மிக்க மாமரத்தின் பெயர். திறந்த புல்வெளிகளுடன் இணைந்தவாறு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த புல்வெளிகளில் பழங்குடிப் பெண்கள் உழவு வேலைகளில் ஈடுபட்டிருப்பதைக் காணலாம்.

  தங்கும் அறைகள்

  ரிசார்ட்டின் லிவ்விங் ரூம் 
   சுற்றுலா பயணிகளுக்கு மண்பாண்டம் செய்யும் தொழில் வேலைகளையும், நுணுக்கமான பயிற்சியாக இங்கு கற்றுத்தரப்படுகிறது.

  விவசாயத்தில் பழங்குடி இன பெண்கள்
  இங்குள்ள மார்க்கெட்டுகளில் இவர்களின் பாரம்பரிய உடைகளும், அணிகலன்களும் விற்கப்படுகின்றன. சுவை மிகுந்த ஒரியா உணவு வகைகளான 'தால்மா' மற்றும் 'மச்சா கன்டா' உண்பதற்கு ஏற்றது.  இங்குள்ள 'போராஜா'  அல்லது 'கோன்டா' இன பெண்களிடம் நாம் நட்புறவு கொண்டால் அவர்கள் அணிந்திருக்கும் வெள்ளி நகைகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு கொடுக்கும் அளவிற்கு பாசம் மிகுந்தவர்கள். இந்த மார்க்கெட்டில் நாம் கண்டிப்பாக வாங்கி வேண்டிய பொருள் என்றால் அது "போர்வை' தான். அந்த அளவிற்கு வேலைப்பாடுகள் நிறைந்திருக்கும்.

  கோன்டா' இன பெண்
  புவனேஸ்வரில் இருந்து 500 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது கெளடகுடா கிராமம்.

  போண்டா பழங்குடிப் பெண்
  சன்டூரி சாயில் இருவர் ஓர் இரவு தங்குவதற்கு ரூ.5,000 கட்டணமாகப் பெறப்படுகிறது.

  14 கருத்துகள்:

  1. அருமையான பதிவு நண்பரே பழங்குடி இன பெண்கள் புடவை கட்டி எவ்வளவு அழகாக நம்மூர்ப் பெண்கள் மாறிவிட்டார்களே.... என்ற வேதனையை தருகிறது.
   தமிழ் மணம் 1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வருகைதந்து பாராட்டி வாக்களித்த கில்லர்ஜிக்கு நன்றிகள் பல!

    நீக்கு
  2. அத்துனையும் அருமை, புகைப்படங்கள் சூப்பர். ஏன் சகோ பாலமகிபக்கங்களில் தங்களைக் காணவில்லை. நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இன்று காலைதான் முதன் முதலாக தங்களின் வலைதளத்திற்கு வந்திருந்தேன். புணர்ச்சி விதிப் பற்றி கூறியிருந்தீர்கள். எனக்கு மிகவும் உபயோகமான தகவல். கருத்து பதிவிடுவதற்குள் நண்பர் ஒருவர் வந்துவிட்டார். அப்படியே மறந்து போனேன். இனி தொடர்கிறேன். சகோதரி!

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  3. வழமைபோல எங்களையும் கூட்டிக் கொண்டு தொடரும் உங்கள் பயணத்தில்...
   நானும் ஓர் பயணியாய்..!

   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. எனது பயணத்தில் இணைந்து வாக்கும் அளித்த நண்பருக்கு நன்றி!

    நீக்கு
  4. அருமையான பதிவு! அதுவும் பழங்குடியினர் பற்றி அவர்களுடன்....ஒடிசா போனதில்லை நானும் மகனும். கணவர் போயிருக்கின்றார். ஒடிசாவில் சண்டிப்புர் கடற்கரையில் கடல் நம் கண் முன்னடே கூட திடீரென்றுக் காணாமல் போய் விடும்...5 கிலோமீட்டர் வரை லோ டைடின் போது....மீண்டும் மெதுவாக வரும் ஹைடைடின் போது.....அதைப் பார்க்க மிக அழகாக இருக்கும்...இது அமெரிக்காவில் மியாமி பீச்சில் இன்னும் அழகாக இருக்கும்...திடீரென்று கடல் உள்வாங்கும்.....பின்னர் மீண்டும் மெதுவாக வரும்....சண்டிப்புர் பீச்சில் செல்லும் தூரத்தை விடவும்....இப்படிக் கடல் வெகு தூரம் உள்வாங்கும் போது கரையில் நாம் நடந்து செல்லலாம். நிறைய சிப்பிகளும், சங்குகளும் இருப்பதைப் பார்க்கலாம்...

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சுற்றுலா பிரியரான நீங்கள் போகாத இடம் உலகில் இல்லை என்றே நினைக்கிறேன். எல்லா இடங்களைப் பற்றியும் கூடுதலான தகவல் கொடுப்பதற்கு நன்றி.

    வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி!

    நீக்கு
  5. வணக்கம்

   பதிவை படித்த போது நாங்களும் சென்று வந்த ஒரு உணர்வு அழகிய படங்கள் பகிர்வுக்கு நன்றி
   த.ம 6

   -நன்றி-
   -அன்புடன்-
   -ரூபன்-

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  6. படங்களும் பதிவும் பார்த்த தில் நானே நேரில் சென்றது போன்ற உணர்வைக் கொண்டேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி அய்யா!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்