18 வயது நிறைந்த அந்த சீன இளைஞன் ஹாலிவுட் படத்தில் நடிக்க வேண்டும் என்ற தணியாத மோகத்துடன் அமெரிக்கா வந்து இறங்கினான். அந்த இளைஞனின் பெயர்தான் புருஸ்லீ.
புருஸ்லீக்கு அடிதடி என்றால் கொல்லைப் பிரியம். ஊரில் எங்கு சண்டை நடந்தாலும் அங்கு புருஸ்லீ தவறாமல் இருப்பார். அவரது அட்டூழியத்தை தாங்க முடியாமல் தான் அவரது பெற்றோர்கள் அவரை ஹாங்காங்கில் இருந்து அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தார்கள்.
17 வயதில் புருஸ்லீ |
'தி பிக் பாஸ்', 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி' என்ற இரண்டு படங்களில் நடித்தார். பம்பரமாக சுழன்று மின்னல் வேகத்தில் இவர் போட்ட சண்டைகள் இதுவரை சினிமாவில் பார்த்திராதவை. அந்த வேகம் சீனாவை கடந்து ஆசிய நாடுகள் முழுவதும் வசூலை அள்ளிக்குவித்தன. அப்போதும் ஹாலிவுட் அலட்டிக்கொள்ளவில்லை.
ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், திருப்பம் நிறைந்த திரைக்கதை என்று தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்த ஹாலிவுட் இந்த படங்களை குப்பை என்று ஒதுக்கித் தள்ளியது.
'தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன்' |
இந்த முறை புருஸ்லீயின் படம் ஆசிய எல்லைகளை கடந்து அமெரிக்க இளைஞர்களையும் கவர்ந்தது. வெறித்தனமான ரசிகர்களாக அவர்களை மாற்றியது. காரணம், சினிமாவில் அவர் போடும் சண்டைகளை நிஜத்திலும் செய்துகாட்டக்கூடியவர். இந்தப் படம் கொடுத்த வெற்றியில் அடுத்த படமான 'கேம் ஆஃப் டெத்' ஆரம்பித்தார்.
வெகு தாமதமாக விழித்துக் கொண்ட ஹாலிவுட், புருஸ்லீயின் வீட்டு முன் வந்து நின்றது. ஹாலிவுட் படத்தில் நடிப்பதையே லட்சியமாக கொண்டிருந்த புருஸ்லீ, 'கேம் ஆஃப் டெத்' பட வேலைகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஹாலிவுட் தயாரிப்பளர்களுக்காக 'என்டர் தி டிராகன்' படம் எடுத்தார். இரண்டு மாதத்தில் படத்தின் முழு வேலைகளையும் முடித்துக் கொடுத்தார்.
மீண்டும் தனது 'கேம் ஆஃப் டெத்' படத்தின் வேலைகளை தொடர்ந்தார். அப்போது மரணத்தின் விளையாட்டு நிஜமாகவே நடந்தது. யாருமே எதிர்பாராத வேளையில் புருஸ்லீ திடீரென்று இறந்து போனார். இறப்பும் மர்மமாகவே இருந்தது. பயிற்சியின் போது தொடர்ந்து தலையில் பட்ட அடிகளால் மூளை வீங்கி இறந்ததாக டாக்டர்கள் கூறினார்கள்.
நடிகை பெட்டீ டிங் பெயுடன் |
எது எப்படியோ தனது 33-வது வயதில் புருஸ்லீ இறந்து போனார். அவரது இறப்பை ரசிகர்கள் நம்பவே இல்லை. அதற்குப் பின் வந்த 'என்டர் தி டிராகன்' உலகம் முழுவதும் பட்டித்தொட்டிகளில் கூட வசூலை வாரி குவித்தது. இளைஞர்களை காரத்தே பைத்தியமாக மாற்றியது இந்த படம்தான்.
எப்படியோ ஒரு நோஞ்சான் இளைஞன் இறுதியாக ஹாலிவுட்டை வென்று விட்டான்.
புருஸ்லீயின் கல்லறை |
===
Im coming.....
பதிலளிநீக்குT.M. 1
வருகைக்கும் வாக்குக்கும் நன்றி மீண்டும் வாருங்கள் நண்பரே!
நீக்குநல்லதொரு தகவல் நண்பரே 'தி ரிட்டர்ன் ஆஃப் டிராகன் ''என்டர் தி டிராகன்' இரண்டு சினிமாவுமே நான் சின்ன வயதில் பார்த்து விட்டேன்.
பதிலளிநீக்குஇந்த படங்களை பார்க்காதவர்களை தேடிக் கண்டுபிடிப்பது அபூர்வம். அவ்வளவு தூரத்துக்கு ஹிட்டான படங்கள். மீண்டும் வருகைதந்ததற்கு நன்றி நண்பரே!
நீக்குஒரு சண்டை படம் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதென்றால் அது புரூஸ்லி படம்தான்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
தம+1
உண்மை நண்பரே!
நீக்குகாரத்தே என்றால் புருஸ்லீ ஞாபகம் தானே வருகிறது...
பதிலளிநீக்குபலரும் கராத்தே கற்றுக்கொள்வதற்கு காரணமே அவர்தானே!
நீக்குப்ரூஸ்லி பற்றி அறிந்துள்ளேன் ஆனால் இவ்வளவு விபரங்கள் தெரியாது. இன்று தான் முழு விபரமும் அறிந்தேன் நன்றி! தொடர வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ!
நீக்குஎப்படியோ ஒரு நோஞ்சான் இளைஞன் இறுதியாக ஹாலிவுட்டை வென்று விட்டான்.அதனால்தான் இவன் நடித்த படத்தை விடாமல் ஆங்கில சேனலில் போடுகிறார்களா....!!!
பதிலளிநீக்குஇருக்கலாம்..!
நீக்குப்ரூஸ்லி பற்றிய தகவல்களை இன்றே அறிந்தேன். பகிர்வுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குமிக்க நன்றி சகோ!
நீக்கு//எப்படியோ ஒரு நோஞ்சான் இளைஞன் இறுதியாக ஹாலிவுட்டை வென்று விட்டான்.//
பதிலளிநீக்குஉண்மைதான்
அது என்னவோ உண்மைதான் ஐயா!
நீக்குசெந்தில்,
பதிலளிநீக்குஅமெரிக்காவில் பிறந்த புருஸ்லீ ஹாங் காங் சென்று பின்னர் தன் டீன் ஏஜ் பருவத்தில் அமெரிக்காவுக்கு திரும்பி வந்து பல டி வி சீரியல்களில் சிறிய வேடங்களில் நடித்தவர். பலர் இவரது என்டர் தி டிராகன் படம்தான் முதலாவது என்று சொல்வார்கள். அது அவரது கடைசி படம். அவரது திடீர் மரணம் உலகையே சற்று உலுக்கியது என்ற சொல் மிகையில்லை. பல காரணங்கள் அவர் மரணத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. எல்லாமே மர்மங்கள். ஒரு சாமானிய ஆசிய இளைஞனின் புதிய சண்டை பாணி இன்றுவரை உலகை ஆக்கிரமித்துள்ளது என்பது மிக மிக ஆச்சர்யமான உண்மை. இவர் பிரபலப் படுத்தியது கராத்தே அல்ல. கங் பூ.
பதிவுக்கு பாராட்டுக்கள்.ஆனால் என்ன இன்னும் கூட நிறைய சங்கதிகள் நீங்கள் எழுதியிருக்கலாமே என்று தோன்றுகிறது.
தங்களின் கூடுதல் தகவலுக்கு நன்றி, எனக்கும் விரிவான தகவல்களோடு பதிவிட ஆசைதான். ஆனால் நீண்ட பதிவுகள் பலராலும் விரும்பப்படுவதில்லை. அதனால் குறைத்து விடுகிறேன். நானாக சென்று எடுக்கும் பேட்டிகள், பயணக் கட்டுரைகள் மட்டும் சற்று விரிவாக கொடுக்கிறேன். இருந்தாலும் அடுத்து வரும் பதிவுகளில் தங்கள் சொன்ன கருத்தையும் முயற்சிக்கிறேன்.
நீக்குதாமதத்தைப் பொறுத்தாற்றுங்கள் நண்பரே!
பதிலளிநீக்குஅறியாதன பல அறிந்து கொண்டேன்.
தங்களின் உள்ளிழுக்கும் நடையில்.
த ம 8
நன்றி.
வாருங்கள் நண்பரே, தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீக்குஇன்றைய தலைமுறை மறக்கத்தொடங்கிவிட்ட ஒரு அசாதாரண இளைஞனை பற்றிய நல்ல பதிவு.
பதிலளிநீக்குநண்பர் காரிகன் குறிப்பட்டதை போல புரூஸ் லீயின் மரணம் பற்றி பல ஊகங்கள்... அதே போல அவரது மகன் பிராண்டன் லீயும் ஒரு படபிடிப்பின் போது, பொம்மை துப்பாக்கிக்கு பதில் உண்மையான துப்பாக்கி வைக்கப்பட்டு, அதனால் சுடப்பட்டு இறந்தார் ! அதிலும் நிறைய மர்மங்கள் !
இன்று " நின்ஞ்சா கட்டை " என நம்மவர்கள் சொல்லும் " நான் சக்கு " ( இரண்டு ஒரு அங்குல கட்டைகள் மத்தியில் சங்கிலியால் பிணைக்கப்பட் ஆயுதம், என்பதுகளில் தமிழ் பட வில்லனின் அடியாட்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டது ! ) பாணி தற்காப்பு கலையை வளர்த்தவர் புரூஸ் லீ.
" ரிட்டர்ன் ஆப் த டிராகன் " படத்தின் படு பிரபல சண்டை காட்சியில் அவருடன் நடித்த சக் நோரீல் இன்றும் நடித்துக்கொண்டிருக்கிறார்...
அதே எழுபதுகளில், புரூஸ் லீக்கு மாற்றான ஒரு நடிகனை தேடிக்கொண்டிருந்த ஒரு இயக்குனரின் கண்ணில் பட்டான் ஹாங் காங் வீதிகளில் அலைந்துக்கொண்டிருந்த ஒரு துறுதுறுப்பான இளைஞன்... மீன்டும் ஒரு சகாப்தம் தொடங்கியது... அவனும் பின்னாளில் ஹாலிவுட்டை வென்றான்... அது ஜாக்கி சான் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எனது புதிய பதிவு : " பொறுமை என்னும் புதையல் ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/06/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நீண்ட பின்னூட்டத்துக்கும் நிறைய தகவல்களுக்கும் நன்றி நண்பரே! தங்கள் தளத்தை அவசியம் பார்த்து கருத்திடுகிறேன். தொடர்ந்து வாருங்கள் நன்றி!
நீக்குபுரூஸ்லி பற்றிய அதிகமான தகவல்களை அறிந்தேன். பள்ளி நாள்களில் எங்களை அதிகம் பாதித்த நடிகர்களில் இவரும் ஒருவர். அவருடைய முகபாவனை, வேகம், அதே சமயம் நிதானம், தடுப்பாற்றல், எச்சூழலையும் எதிர்கொள்ளும் பாணி போன்ற உத்திகளில் ஏதாவது ஒன்றை நாம் வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநிச்சயமாக அய்யா! எதோ ஒரு சூழ்நிலையில் அது பயன் படுகிறது என்பது உண்மை.
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
பதிவு மிகவும் சிறிதாக இருப்பதாகவே படுகிறது... இன்னும் நிறைய விஷயங்கள் எழுதியிருக்கலாம்.... இருந்தாலும் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குஆம், சற்று சிறிய பதிவுதான் இது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குப்ரூஸ்லி அதன் பின் கலக்கும் ஜாக்கிசான் இருவருமே எனக்கும் மகனுக்கும் மிகவும் பிடித்தவர்கள்.....ரிட்டர்ன், என்டெர் இரண்டும் நிறைய தடவை பார்த்ததுண்டு. அவரது மரணம் மர்மம்தான்.....பெரும்பாலும், ப்ரூஸ்லி, ஜாக்கிசான் படங்கள் என்றால் தேடித் தேடிப் போய் தியேட்டரில் பார்த்துவிடுவோம் நானும் எனது மகனும், கோயம்புத்தூரில் இருந்த போது. ஏன்? மகன் 2 ஆம் வகுப்பிலிருந்து கராத்தே கற்று வந்தான். அவனுக்கு கற்றல் குறைபாடு இருந்ததால், கராத்தே மைன்ட் பாடி கோஆர்டினேஷனுக்கு உ தவும் என்றும், பள்ளியில் கராத்தே வகுப்பில் சேர்ந்த போது அவன் மிகவும் நன்றாகச் செய்கின்றான் என்று மாஸ்டர் சொல்லவும் அவனுக்கு, பள்ளிக்கு வெளியே மாஸ்டர் எடுக்கும் தனி வகுப்புகளுக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படித்தான் அவனுக்கு பயிற்சி ஆரம்பித்தது. அதிகாலை 5 மணிக்கே க்ரவுண்டிற்குச் செல்ல வேண்டும். மிக நேர்த்தியாகச் செய்வான். பல பரிசுகள் ஆனால் அவனை கட்டா செய்ய மட்டுமே அனுப்புவோம். சண்டைப் போட்டிகளுக்கு அனுப்பியதில்லை. கட்டா டெமொ போட்டிகளில் மாநில அளவில் முதல் பரிசு வாங்கினான். பின்னர் மலேசியாவில் நடந்த உலக சேம்பியன் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டாலும், தமிழ் நாடு ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆதரவு தரவில்லை. அவனைத் தனியாக அனுப்ப முடியாது அப்போது அவன் 6 ஆம் வகுப்பு. னானும் உடன் செல்ல வேண்டும். ஒரு வாரம் பயிற்சி + போட்டு மலேசியாவில்...நிறைய செலவு ஆகும் என்பதால் செல்ல இயலவில்லை. பின்னர் ஒரு வருடம் அமெரிக்காவில் கணவரின் வேலை நிமித்தம் சென்ற போது உலகப் புகழ் க்ரான்ட் மாஸ்டர் யமாகுசியின் நேரடி சீடரான 8 டான் திரு கார்னல் வாட்சன் அவர்களிடம் பயிற்சி பெற்றான். 7 ஆம் வகுப்பில்...(னெட்டிலிருந்து கண்டுபிடித்து அவரைப் பிடித்தோம். நாங்கள் இருந்த பகுதியிலும் இருந்ததால் வாய்ப்பு) பின்னர் ப்ளாக் பெல்ட் 2 டான் வரை வந்தான் இந்தியாவில் சென்னையில் பயிற்சி....அதன் பிறகு அவனது கால்நடைப் படிப்பு எனவே தொடர முடியவில்லை.....
பதிலளிநீக்குஇதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. கற்றல் குறை பாடு உள்ள குழந்தைகளுக்கு இது போன்ற சில பயிற்சிகள் மிகவும் உதவுகின்றன. மைண்ட் பாடி கோஆர்டினேஷன், சுறு சுறுப்பு.....கட்டா செய்வது தியானம் செய்வது போலத்தான் மூச்சுப் பயிற்சியும் உண்டு. அது மூளைக்குத் தேவையான பிராணவாயுவை எடுத்துச் செல்லும். அது குறையும் போது சில குறைபாடுகள் ஏற்படும். னான் ஏற்கனவே ஒரு பதிவு எழுதி இருந்தாலும் இதைப் பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும் என்று ஒரு எண்ணம் உள்ளது.
கீதா
வாருங்கள் கீதா மேம்,
நீக்குகிட்டத்தட்ட ஒரு பதிவு எழுதும் அளவுக்கு விஷயங்களை சொல்லி இருக்கிறீர்கள். தங்களின் புதல்வர் இத்தனை உயரத்தை எட்டியவர் என்பதை படிக்கும் போது ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. கராத்தே பயிற்சி மூலம் கற்றல் குறை நீங்கும் என்பது புது தகவலாக இருக்கிறது.
மிக நீண்ட பின்னூட்டத்திர்கு நன்றி!
ஜாக்கிசானும் ஹாலிவுட்டைப் பிடித்துவிட்டாரே!
பதிலளிநீக்குஜாக்கிசானைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். கூடிய விரைவில் அதையும் பதிவிடுகிறேன். அவர் வாழ்வும் பல போராட்டங்கள் நிறைந்தது.
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
கேள்விப் பட்டிருக்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி அய்யா!
நீக்குகருத்துரையிடுக