Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

அமுக்குவான் பேய் இருப்பது உண்மையா..?


(தினம் ஒரு தகவலில் அமுக்குவான் பேய்ப் பற்றி வெளிவந்தபோது வானொலி இணையதளம் பத்திரிக்கை என்று மீண்டும் மீண்டும் பகிரப்பட்ட தகவல்களில் இதுவும் ஒன்று. அது இப்போது உங்களிடம்..)


ல்லோரும் எப்போதாவது ஒருமுறை இப்படியொரு அனுபவத்தை பெற்றிருப்பார்கள். அதாவது இரவில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ நம் மீது பெரிய பாறாங்கல்லை ஏற்றி வைத்து அமுக்குவது போல் தெரியும். நம்மால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் முடியாது.  குரல் கூட  வெளியே வராது. உடலை அசைக்கக் கூட முடியாது. கொஞ்ச நேரம் கழித்துதான் எதையுமே செய்ய முடியும். நாம் எழுந்து பார்த்தால் நம் அருகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஏன், அந்த அறையில் கூட யாரும் இருக்க மாட்டார்கள். யார் இதை செய்தார்கள் என்று குழம்பி போய் இருப்போம். மறுநாள் விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டால் அது அமுக்குவான் பேயின் வேலை என்பார்கள். நீங்கள் உயிரோடு பிழைத்தது பூர்வஜென்ம புண்ணியம் என்பார்கள். அந்த இடத்தில் படுக்காமல் வேறு இடத்தில் படுத்து தூங்குங்கள் என்று அறிவுரை மேல் அறிவுரையாக சொல்வார்கள். 


நகரங்களை விட கிராமங்களில் இந்த அமுக்குவான் பேய் மிக பிரசித்தம். உண்மையில் அமுக்குவான் பேய் இருக்கிறதா? அது உயிரை எடுக்கும் அளவுக்கு கொடூரமான பேயா? என்று ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டால், அப்படி எந்த பேயும் உலகில் இல்லை. அது ஒரு உடலின் சமநிலை பிறழ்வு என்கிறார்கள். 

பொதுவாக நாம் தூங்கும் போது உடலும் மூளையும் ஒரே நேரத்தில் ஓய்வெடுக்கும். இப்படி இரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் போது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அபூர்வமாக சில நேரங்களில் நாம் தூங்கிக் கொண்டிருக்கும் போது மூளை மட்டும் விழித்துக் கொள்ளும். நம் உடலோ தூங்கிக் கொண்டே இருக்கும். அப்போது நம்மால் எழுந்திருக்கவோ, பேசவோ, ஏன் கண்களை திறக்கக் கூட முடியாது. சிறிது நேரத்தில் நமது உடலும் விழித்துக் கொள்ளும் போது தான் நம்மால் எழுந்திருக்க முடியும். இந்த கோளாறை மருத்துவத்தில் 'தூக்க பக்கவாதம்' என்கிறார்கள். 

இது எப்போவாவது ஒரு முறை ஏற்படுவது அனைவருக்குமே இயல்பான ஒன்று. ஆனால், ஒருவருக்கு திரும்ப திரும்ப ஏற்பட்டாலோ, ஒருசில நாட்களுக்கு ஒருமுறை ஏற்பட்டாலோ அது மருத்துவரை சந்திக்க வேண்டிய கோளாறு. இது சிலருக்கு பிறவியில் இருந்தே தொடர்கிறது என்றும் கூறுகிறார்கள். 

இதை 'துயில் மயக்க நோய்' என்றும் கூறுகிறார்கள். இது பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி, தூக்கத்தில் மூச்சு திணறல் நோய் உள்ளவர்களுக்கு அதிகம் ஏற்படும் என்கிறார்கள். காதல் தோல்வி போன்றவற்றால் உருவாகும் ஏக்க நோய்களும் இது உருவாக காரணமாக இருக்கிறது. 

தூக்க பக்கவாத நோயை இரண்டு விதமாக பிரிக்கிறார்கள். ஒன்று தனிமைத் தூக்க பக்கவாதம், மற்றொன்று தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம். இதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு மனிதரின் வாழ்வில் எப்போதாவது ஒரு சில நிமிடங்கள் தோன்றி மறையக் கூடியது. இந்த அனுபவத்தைதான் எல்லோரும் வாழ்வில் ஒருமுறையாவது பெற்றிருப்பார்கள். இதனால் பிரச்சனை இல்லை.    

தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் அப்படியல்ல. அது பிரச்சனை தரக்கூடியது. இது ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக இருக்கும். இவர்கள் அடிக்கடி அமுக்குவான் பேய் தங்களை தாக்குவதாக சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்று நீடிக்கும். சில நேரங்களில் அந்தரத்தில் பறப்பதுபோல் தோன்றும். இது எல்லாமே இந்த நோயின் பாதிப்பால் உருவாவதுதான். இவர்கள் தான் மந்திரவாதிகளையும் சாமியார்களையும் தேடி போகிறார்கள். இது மருத்துவ கோளாறுதான். இதற்கு மருத்துவர்களைத் தான் நாட வேண்டும். 

துயில் மயக்க நோய் ஏற்பட உடல்நலக் குறைவுதான் காரணம். ஏவல், பில்லி, சூன்யம், அமுக்குவான் பேய் என்ற எதுவும் காரணமில்லை. அதனால் இதை மருத்துவமனைய்லே சிகிச்சை எடுத்து சரி செய்யலாம். அதைவிடுத்து மாந்திரீகம் என்று நினைத்து மந்திரவாதிகளை நாடுவது நோயின் தன்மையை மேலும் அதிகப்படுத்தவே செய்யும்.





38 கருத்துகள்

  1. திகில் படங்களோடு திருப்தியான விளக்கம். பதிவிற்கும், பகிர்விற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு
  2. வணக்கம் நண்பரே!! துக்க பக்கவாதம் "தெரியாத விசயம்! சிறந்த பகிர்வு சிறப்பு பதிவு! நன்றி

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. பொதுவாக இந்த அனுபவம் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும். இது இயல்பானதுதான்.

      நீக்கு
  4. நல்லதொரு விழிப்புணர்வுப் பகிர்வுங்க நிச்சயம் இந்த கருத்துகள் அனைவரையும் சென்றடைய வேண்டும். கடந்த மாதம் இந்த விழிப்புணர்வு இல்லாததாலே என் சிற்றன்னையை பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி ஒரு கூட்டம் பணம் ஐந்தாயிரம் வாங்கியதோடு அல்லாமல் வேப்பிலையால் தலையில் அடித்தே கொன்றுவிட்டனர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடப்பாவமே! இப்படிதான் அறியாமையை பணமாக்குபவர்கள் உலகில் நிறைய பேர் உள்ளனர். இதை 10 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்.
      வருகைக்கு நன்றி !

      நீக்கு
  5. வணக்கம் நண்பரே நலம்தானே.... சிறிது நாட்களாக காணவில்லையே என்று நினைத்திருந்தேன் காரணம் புரிந்து விட்டது தாங்கள் யாரை சந்திக்கப் போயிருக்கின்றீர்கள் 80
    நானும் பலமுறை இந்த நண்பரை சந்தித்து இருக்கிறேன் உடன் எழுந்து கோடரியை பக்கத்தில் வைத்துக்கொள்வேன் பிறகுதான் நிம்மதியாக தூங்கி இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே! நன்றி நண்பரே!

      நீக்கு
  6. நல்லதொரு பதிவு .பலரிடமும் பகிரப்படவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக பலரையும் சென்று சேரவேண்டும். நன்றி நண்பரே!

      நீக்கு
  7. அறியாத தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  8. நல்லதொரு விழிப்புணர்வு பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அறிந்த தகவல்தான். அனைவரும் அறிய வேண்டிய தகவலும் கூட.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  10. உடல் நலக் குறைவு தான் என்கிறியள்
    சரி,
    உள (மன) பலம் இருந்தால்
    இப்படி நிகழாதே!
    மருத்துவரைத் தவிர
    பிறரை நாடினால்
    நோய்கள் தான் நெருங்கி வருமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இங்கு மன பலம் இல்லாமலிருப்பது தான் பிரச்சனை.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  11. அமுக்குவான் பேய் போன்று நிறைய மனிதர்கள்
    அதே பெயரைச் சொல்லி அப்பாவி மக்களிடமிருந்து பணத்தை அமுக்கும் வேளையில்
    இது ஒரு நல்ல விழிப்புணர்வு மிக்க பதிவு. தொடர்ந்து இத்தகைய பதிவுகள் தங்களிடமிருந்து வெளிவர வேண்டும் என விரும்புகிறேன்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே,
      முயற்சிக்கிறேன்.
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  12. அறியாத செய்தியினைஅறியத் தந்துள்ளீர்கள் நண்பரே
    மக்கள் போதுமான விழிப்புணர்வின்றி
    மாந்திரிகர்களை நாடுவதுதான் வேதனை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  13. படங்கள் கலக்கல்! தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  14. ம்..ம் நல்ல விடயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. பதிவுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  15. தெரிந்த தகவல்தான். நண்பரே எங்கள் கிராமத்தில் இதை பேய் பிடித்திருக்கிறது என்று சொல்லி பௌர்ணமி/அமாவாசை அன்று பேயோட்ட மந்திரவாதியிடம் கொண்டு செல்லுவார்கள். பிரசித்தம். இதை அந்த மந்திரவாதிகள் நன்றாக தங்களுக்குச் சாதகமாக பணம் பிடுங்கிக் கொள்வார்கள்.

    கீதா: இது ஒரு மனம் சம்பந்தப்பட்ட ஒன்றே. சிக்மன்ட் ஃப்ருஆய்டின் இன்டெர்ப்ரிட்டேஷன் ஆஃப் ட்ரீம்ஸ் எனும் புத்தகத்தில் இதைப் பற்றி எல்லாம் மிகவும் அழகாகச் சொல்லி இருக்கிறார். இங்கு விவரித்தால் பதிவு போல் நீளும். மட்டுமல்ல ஆங்கிலத்தில் படித்திருப்பதால் அதைத் தமிழில் சொல்ல நிறைய வார்த்தைகள் தேட வேண்டும். மட்டுமல்ல அவரின் ஆங்கிலம் மொழி பெயர்ப்பது என்பது நிறைய நேரமும் உழைப்பும் தேவை.....

    நல்லதொரு பகிர்வு...நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல் அமர்க்களமான பின்னூட்டம். தெளிவான விளக்கங்கள். வருகைக்கு மிக்க நன்றி நண்பர்களே!

      நீக்கு
  16. நண்பரே உங்கள் புத்தகத்தை வாங்க வேண்டும் என்பதால் இதை முதலில் வாசிக்க வேண்டாம் என்று நினைத்தோம்...இங்கேயே வாசித்துவிட்டால் அப்புறம் புத்தகம்?!!!! அத்னால்..இருந்தாலும் வாசித்துவிட்டோம்....ம்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த தகவல் புத்தகத்தில் வரவில்லை. மொத்தம் 4180 தகவல்களில் 133 மட்டும்தான் புத்தகத்தில் வந்திருக்கிறது. இன்னும் 4000-க்கும் மேல் பாக்கி இருக்கிறது. அதனால் தாரளமாக புத்தகத்தைப் படிக்கலாம்.
      மிக்க நன்றி!

      நீக்கு
  17. பதில்கள்
    1. பேய் இருக்கா? இல்லையாங்கிறது பெரிய சப்ஜெக்ட். இப்போதைக்கு இப்படி ஏற்படும் அனுபவத்திற்கும் பேய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதுதான் இங்கு விளக்கப்பட்டுள்ளது.

      நீக்கு
  18. சில வருடங்களுக்கு முன்பு 2007 ஆம் வருடம் நாங்கள் சென்னையில் ஒரு அபார்ட்மெண்டில் குடியேறினோம் . 2 படுக்கை அறை கொண்ட அந்த வீட்டில் நான் அப்பா அம்மா எல்லோரும் ஒரே ரூமில் தான் தூங்குவோம் . அப்படி தூங்கும் போது தினமும் எனக்கும் என் அம்மாவுக்கும் அடிக்கடி இந்த அமுக்குவான் வந்துகொண்டே இருந்தது . நான் தினமும் என் அம்மா அப்பாவிடம் கூறி மிகவும் பயந்தேன் . தினமும் தூங்குகிற நேரம் வந்தாலே பயப்பட்டுவிடுவேன். பிறகு ஒரு நாள் மேல் வீட்டில் உள்ளவரிடம் பேசும்போது தான் தெரிந்தது அவரின் பெண் நாங்கள் வருவதற்கு 2 மாதங்களுக்கு முன் விபத்தினால் அகால மரணம் அடைந்துவிட்டார் என்று . நான் நடுங்கி பொய் விட்டேன் . அதே நாங்கள் பக்கத்தில் உள்ள என் அத்தை வீட்டிற்கு போய் தூங்கும் போது இந்த பிரச்சனை எனக்கும் சரி என் அம்மாவிற்கும் சரி வந்ததே இல்லை . இதற்காகவே நாங்கள் வேறு வீடு பார்த்து பொய் விட்டோம் . இதுவரை எனக்கு அமுக்குவான் திருப்பி வந்ததே இல்லை. ஆனால் அந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் பயமாகவே இருக்கிறது . இது மருத்துவ ரீதியாக தான் சரி செய்யவேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

    பதிலளிநீக்கு
  19. திரைப்பட புதிய 2016 பார்க்க ஆன்லைன்
    WATCH NOW==>>http://supermoviehdquality.blogspot.com/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை