Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மனிதர்களை அடையாளம் காணும் யானைகள்


யானைகள் புத்திசாலிகள் என்றொரு நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. அதை நிரூபிப்பதுபோல் இந்த ஆய்வு உள்ளது. ஒரு யானை தான் கேட்கும் மனிதர்களின் குரலை வைத்தே அவர்கள் ஆணா, பெண்ணா, வயதானவர்களா, சிறுவர்களா என்பதை கண்டறிந்து விடுமாம். அது மட்டுமல்ல அந்த குரலுக்கு சொந்தமானவர்களின் இனக்குழுவையும் கூட அடையாளம் காணும் திறமை யானைகளுக்கு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

ஆப்ரிக்க காட்டு யானைகள் மத்தியில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் விவரங்கள் 'ப்ரொசீடிங்க்ஸ் ஆப் த நேஷனல் அகாடமி ஆப் சயின்ஸ்' என்கிற அறிவியல் இதழில் வந்துள்ளன.  இந்த ஆய்வுகளை சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கேரன் மெக்கம்ப் மற்றும் முனைவர் கிரேமி ஷானன் ஆகிய இருவரும்  நடத்தினார்கள்.


ஆப்ரிக்க காட்டுயானைகளுக்கும் அந்நாட்டில் இருக்கும் மாடு மேய்க்கும் 'மாசாய்' இன மக்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல்கள் நடப்பது உண்டு. மாசாய் இனமக்கள் யானைகளை கொடூரமாக அடித்து விரட்டுவார்கள் அல்லது கொல்லுவார்கள். ஆனால் அதே ஆப்ரிக்காவைச் சேர்ந்த 'கம்பா' இன மக்கள் விவசாயிகள். இவர்களுக்கும் காட்டு யானைகளுக்கும் மோதல்கள் வருவதுண்டு. வந்தாலும் இந்த கம்பா இன மக்கள் பெரும்பாலும் காட்டு யானைகளை கொல்லுவதில்லை. விரட்டிமட்டும் விடுவார்கள்.

இந்த பின்னணியில், பரிசோதனையில் இறங்கிய சசெக்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மாசாய் மற்றும் கம்பா இனங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் குரல்களை தனித்தனியாக பதிவு செய்தார்கள். 'அதோ பாரு, அங்க பாரு! யானைகள் கூட்டம் ஒண்ணு வருது பாரு!' என்று இவர்கள் சொல்லுவதை தனித்தனியாக ஒலிப்பதிவு செய்தார்கள் விஞ்ஞானிகள்.


இந்த குரல்களை தனியாக வடிவமைக்கப்பட்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி ஆப்ரிக்க காட்டு யானைகள் இருக்கும் இடத்தில் அவற்றின் காதில் விழும் விதமாக சத்தமாக  ஒலிபரப்பினார்கள்.  இதில் 'மாசாய்' இன ஆண்களின் குரல்களை கேட்டமாத்திரத்தில் இந்த காட்டு யானைகள் எல்லாம் விரைவாக தத்தம் குடும்பத்துடன் ஒன்றுகூடி தம்மை தாக்கவரும் எதிரியிடம் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமான செயல்பாடுகளையும், சங்கேத ஒலிகளையும்  எழுப்பின. ஒருவித கலவர நிலையில் யானைகள் இருந்தன, 

இதேபோல் 'கம்பா' இன ஆண்களின் குரலை ஒலிபெருக்கியில் ஒலிபரப்பினார்கள். அப்போது யானைகள் முன்பைப் போல கலவரப்படவில்லை. எச்சரிக்கை ஒலியை மட்டும் விடுத்து, கவனத்துடன் மேய்ந்து கொண்டிருந்தன. இதன் மூலம் யானைகளுக்கும் மனிதர்களின் குரலை கண்டறியும் சக்தி உள்ளது என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

யானைகள் உண்மையிலேயே அதி புத்திசாலிகள்தான்..!  


23 கருத்துகள்

  1. யானைகள் பற்றிய எந்தச் செய்தியும் சுவாரஸ்யமானதுதான்.

    தம +1

    பதிலளிநீக்கு
  2. யானைகளின் அடையாளம் காணும் திறன் பற்றிய புதியாய் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. நம்மிடையே இருந்து மறைந்த நூலொன்று “ யானைநூல்“
    யானைகளின் இயல்பு, அதன் சாதி விசேடங்கள், யானையைப் பழக்கும் முறைகள், அவற்றிற்குக் கட்டளை இடவேண்டிய சொற்கள், யானை மொழி, போன்ற இன்னும், பல நுட்பமான விடயங்கள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன.
    பண்டைய இலக்கிய உரையாசிரியர்களின் மேற்கோள் வாயிலாக அவை தெரியவருகின்றன.
    தங்களின் பதிவு அதை நினைவு கூறச் செய்தது.

    த ம +

    தொடர்கிறேன் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்கள் சொல்லாத விஷயங்களே இல்லை. தொடாத சப்ஜெட் இல்லை. தற்போது நான் எழுதிக் கொண்டிருக்கும் நீர்வழிச் சாலை தொடரை படித்துப் பாருங்கள் நண்பரே, அது முழுக்க முழுக்க தமிழர்களின் நீர் மேலாண்மையைப் பற்றிதான் சொல்கிறது. தங்களைக்கூட அந்த தொடரில் குறிப்பிட்டிருக்கிறேன். தங்களால்தான் அது முடியும்.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  4. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்போல.... செய்திக்கு நன்றி! நண்பரே....

    பதிலளிநீக்கு
  5. அரிய தகவல்தான் நண்பரே ஆச்சர்யமாக இருக்கின்றது
    தமிழ் மணம் 7

    பதிலளிநீக்கு
  6. தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. யானைகளின் புத்திசாலித்தனத்தை , நம்ம தமிழ் படங்களில் நிறைய பார்த்து இருக்கிறோமே :)

    பதிலளிநீக்கு
  8. யானைகள் அடி புத்திசாலிகள் கேரளத்தில் யானைகள் அதிகமாயிற்றே அதுவும் கோயில்களில்...குருவாயூர் கோயிலில். மனித குணங்களைப் படிப்பதிலும் வல்லவர்கள் அவர்கள்...அழகான தகவல்கள் யானைகள் என்றுமே சுவாரஸ்யம்தான்..

    கீதா: யானைகளின் வாழ்க்கை முறையும் கிட்டத்தட்ட மனிதர்களை ஒட்டியதாகவே இருக்கும். அதிபுத்திசாலிகள் அதிலும் ஞாபகத் திறனும் அசாத்தியம் அவர்களுக்கு. நம் பஞ்சதந்திரக் கதைகளில் எல்லாம் சொல்லபடுமே. அது உண்மையே. இவர்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கின்றது...

    அருமையான பதிவு...ரசித்தோம்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம்
    வியக்கவைக்கும் தகவல் படித்து மகிழ்ந்தேன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை