• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஜனவரி 25, 2016

  பயணம் முழுவதும் பரவசம்  ரு பயணம் உங்கள் கண்களைக் கட்டிப்போட்டுவிடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை உற்சாகத்தின் உச்சத்துக்கு கொண்டு போய்விடும் என்றால் நம்புவீர்களா? ஒரு பயணம் உங்களை குழந்தையாக மாற்றி குதூகலிக்கச் செய்யும் என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். மல்ஷெஜ் மலைப்பாதையில் பயணித்தால் இதெல்லாம் நடக்கும். அப்படியொரு அற்புதம் அந்த இடம்!


  ஒரு மலைப்பாதையே சுற்றுலாத்தலமாக உள்ளது இங்கு மட்டும்தான். மல்ஷெஜ் மலைத்தொடரின் பசுமை பாதை முழுவதும் நிறைந்திருக்கும். அதைப் பார்க்கவே கண்கள் போதாது. ஆனாலும் அந்த அழகை மேலும் பிரமிப்பாக மாற்றுகிறது ஒவ்வொரு திருப்பத்திலும் மலைமீது இருந்து கொட்டும் அருவியின் அழகும், நீரின் சலசலப்பும், இருண்ட குகைகளும், பசுமை பள்ளத்தாக்குகளும். மெய்மறக்க வைக்கிறது. இதுபோக ஐந்தரை அடி உயரம்கொண்ட ஃபிளெமிங்கோ பறவைகள் ஆங்காங்கே தென்படுவது மேலும் அழகுக்கு அழகு சேர்க்கிறது.

  ஃபிளெமிங்கோ பறவைகள்
  மலையின் உயரத்தில் இருக்கும் மல்ஷேஜ், மற்ற ஹில்ஸ்டேஷன்கள் போல் புகழ் பெறவில்லை. ஆனாலும் இந்த மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறையவேயில்லை. இங்கு பயணிப்பவர்கள் கட்டுச்சோறுக் கட்டிக்கொண்டுதான் பயணிக்க வேண்டும். ஏனென்றால், இங்கு ஹோட்டல்கள் இல்லை. அதனால் கட்டுச்சோறுதான் பசியைப் போக்கும்.


  மல்ஷெஜ் மலைத்தொடரில் பயணிக்கும்போது மறக்காமல் எடுத்துப்போகவேண்டிய சில பொருட்கள் இருக்கின்றன. இவைகள் இருந்தால்தான் உங்கள் பயணம் இன்னும் இனிதாகும். பைனாகுலர், கேமரா கட்டாயம் இருக்கவேண்டும். கூடவே எக்ஸ்ட்ரா மெமரிகார்டும், ஃபுல் பேட்டரி சார்ஜும் இருக்கட்டும். கேமராவில் படமாக்க அவ்வளவு இடங்கள் இங்கிருக்கின்றன.


  சொந்தக் காரில் நீங்களே செல்ஃப் டிரைவ் செய்து போவதைவிட வாடகைக் காரில் ஜம்மென்று அமர்ந்து போவதுதான் இங்கு நல்லது. சாலையில் கவனம் வைத்து காரை ஓட்டும்போது பல இயற்கை அற்புதங்கள் உங்கள் கண்களில் படாமலே போய்விடும். இந்த பிரமாண்ட அழகாய் ரசிக்க நீங்கள் கார் ஓட்டக்கூடாது. அமர்ந்து ரசித்து வரவேண்டும்.


  காரின் கண்ணாடிகளை ஏற்றிவிடுங்கள். பல இடங்களில் அருவிக்குள் புகுந்துதான் கார் போகவேண்டியிருக்கும். சாலை ஓரங்கள் முழுவதும் அருவிகள் இருப்பதால் பல அருவிகளில் ஆசைதீர குளிக்கலாம். அதுவும் ஒரு பரவசம்தான். அருவிக் குளியல் அதிகமான பசியை தூண்டிவிட கையோடு கொண்டு வந்த கட்டுச்சோற்றை சுவைத்து சாப்பிடும் போது கிடைக்கும் சுவையே அலாதிதான்.


  மலையின் உயரே இருக்கும் மல்ஷெஜ்ஜில் தங்குவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. மஹாராஷ்டிரா சுற்றுலாத் துறை இங்கு வருபவர்கள் தங்குவதற்காக 'ஃபிளெமிங்கோ ரிசார்ட்' என்ற ஒன்றை நடத்தி வருகிறது. முன்கூட்டியே அட்வான்ஸ் புக்கிங் செய்து கொண்டு போனால் இங்கு தங்கலாம். இருவர் ஓர் இரவு தங்குவதற்கு கட்டணம் ரூ.1,100-ல் இருந்து தொடங்குகிறது. (போன்: 022-22845678, 22852182)


  மும்பையிலிருந்து 160 கி.மீ. தொலைவில் புனே மாவட்டத்தில் மல்ஷெஜ் காட் உள்ளது. இங்கிருந்து 40 கிமீ தொலைவில் ஷிவ்னெரி கோட்டை உள்ளது. இதுதான் மராட்டிய மாவீரன் சிவாஜி பிறந்த இடம். அதனையும் பார்க்க மறவாதீர்கள்.


  வாழ்வில் மறக்க முடியாத அற்புதமான அனுபத்தை இந்த பயணம் தரும்.   ஷிவ்னெரி கோட்டை

  படங்கள்: கூகுள் இமேஜ்


  37 கருத்துகள்:

  1. பசுமையான படங்கள் அத்தனையும் அழகோ அழகு. மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் முத்தாய்ப்பான கருத்துக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  2. படங்களை பார்க்கையிலே மனதை கொள்ளை கொண்டு போகின்றது! தகவல்களும் சிறப்பு! பகிர்வுக்கு நன்றி!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு

  3. அருமையான படங்களையும் தாங்கள் தந்துள்ள தகவல்களையும் படிக்கும்போது அந்த இடத்தை உடனே பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அய்யா!

    நீக்கு
  4. புகைப்படங்களும் விளக்கவரைகளும் அருமை நண்பரே
   த.ம.வ.போ

   பதிலளிநீக்கு
  5. காணக் காணத் தெவிட்டாதப் படங்கள் நண்பரே
   நன்றி

   பதிலளிநீக்கு
  6. அருமையான ஒரு இடம் என்று படங்களைப் பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது. சிறப்பானதோர் இடத்தினைப் பற்றிய தகவலை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி வெங்கட்ஜி!

    நீக்கு
  7. ஒரு நாள் போய் விட வேண்டியதுதான் ,லொகேஷன் அருமை :)

   பதிலளிநீக்கு
  8. முதல் படத்திலிருந்தே அசர வைக்கிறது. திகிலான கவர்ச்சி, அசத்த வைக்கும் அழகான இடங்கள்.

   தம +1

   பதிலளிநீக்கு
  9. படங்கள் அசத்துதே!புகைப்படங்கள் அத்தனை துல்லியம்!
   முதல் படம் நிஜமாகவே அப்படி ஒரு பாதை இருக்கின்றதா எனும் கேள்வியை தருகின்றது!மலையும் மலைசார்ந்த இடமும் அதன் குளிர்ச்சியும் மனதுக்கு இதம் தருபவையே!இப்பதிவு உங்கள் தேடலில் கிடைத்ததா? சொந்த அனுபவமா செந்தில்குமார்?

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இயற்கையின் பிரமாண்டத்தை பலமுறை படமாக்க முடியாமல் தோற்றுப்போயிருக்கிறேன். அதன் பிரமாண்டத்தை கேமராவுக்குள் அடக்கவே முடியாது. வருகைக்கும் நன்றி நிஷா!

    நீக்கு
  10. ஒரு தடவை கண்டிப்பாக போகணும்ன்னு தோனுது. படங்கள் சூப்பர். அழகோ அழகு.தம + 1

   பதிலளிநீக்கு
  11. வெறுமனே சொல்லாமல் படங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  12. நேரே செல்ல ஆசையைத் தூண்டிவிட்டீர்கள்.நன்றி.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. பயணிக்க இதைவிட நல்ல இடம் இந்தியாவில் அவ்வளவாக இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு இடங்களில் இதுவும் ஒன்று! கண்டிப்பாக பார்த்து வாருங்கள்!

    நீக்கு
  13. பயணம் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிடுவது போல் தானே வண்டியோட்டிச் செல்லும்போது பயணத்தின் பல சிறப்பம்சங்களைத் தவறவிடக்கூடும். வசதியாக அமர்ந்து பயணிப்பதுதான் நல்லது. புதியதொரு இடம் பற்றிய தகவல்களுக்கும் படங்களுக்கும் மிகவும் நன்றி செந்தில்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இயற்கை அழகு நிறைந்த இடங்களை ரசிக்க நாம் டிரைவிங் பண்ணக்கூடாது. வருகைக்கு நன்றி கீதா!

    நீக்கு
  14. அழகான இடம். மனதை அப்படியே கட்டிபோட்டுவிடும் இடம். திரும்பவர மனமே இருக்காது. போகும் இடமெல்லாமும் அப்படியே. மல்ஜெஷ் காட் ஆங்காங்கே அருவியில் நனைந்து கொண்டே....கோட்டை, மல்ஷெஜ் அருவி, பிம்பல்கான் டேம் என்று பல...புனாவில் நெருங்கிய உறவினர் இருப்பதால் பயணம். புனாவிலிருந்து 3 மணி நேரப்பயணம். 120 கிமீ என்று நினைவு. காமெரா இல்லாத சமயம். எனவே மனதில் மட்டுமே. இப்போது தங்கள் புகைப்படங்கள் கண்டு மீண்டும் போக வேண்டும் என்று தோன்றிவிட்டது. பார்ப்போம் அமைகின்றதா என்று. (இப்படி இரு இடங்களில் முணாறு போகும் பாதையில் இரு அருவிகள் ரோட்டிலேயே இருக்கும். குளித்துவிட்டுச் செல்லலாம். சென்றதுண்டு. அதே போன்று அஹோபிலம் - 9 நரசிம்மர் கோயில்களுக்கும் ட்ரெக்கிங்க்..செல்லும் போது ஜோலா நரசிம்மரை அருவி வழிக் கடந்துதான் தரிசனம்...)

   அருமையான புகைப்படங்களுடன் அழகான ஒரு இடத்தைப் பற்றிச் சொல்லியதற்கு மிக்க நன்றி செந்தில் சகோ....

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!

    நீக்கு
  15. அருமையான பகிர்வு அவசியம் சென்று பார்கவேண்டும் நன்றி

   பதிலளிநீக்கு
  16. Shivneri Fort I hope once belonged to Veer shivaaji..
   by the way wonderful wonderful share bro

   keep up the good work
   vote +

   பதிலளிநீக்கு
  17. கோள்ள அழகு
   புகைப்படம் பார்க்கவை 2கண் பத்தல
   நேர்ல பாக்க 1000கண் வேணும் போல
   2வருடம் மும்பைல இருந்தும் தவரவிட்டது வருத்தம்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்