• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, பிப்ரவரி 14, 2016

  தினமும் 97 கிலோ பால் தரும் பசு

  சு என்பது பெண் மாட்டைக் குறிக்கும். ஆண் மாட்டைக் காளை என்றும் அதன் குட்டியை  கன்று என்று ம் அழைக்கிறார்கள். பசு மாட்டால் உயரமான படிகளில்  ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. இறங்குவதற்கு வசதியாக அதன் கால் அமைப்பு இல்லை. அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காததால் அதனால் மேலிருந்து கீழே படிகள் மூலம் இறங்கமுடியாது. 


  பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும். பசு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 முதல் 4 லட்சம் லிட்டர் வரை பால் கொடுக்கிறது. ஒரு நாளில் 10 முதல் 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும். சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணம் கொடுக்கும்.

  ஒரு நாளில் 6 முதல் 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 முதல் 8 மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்கு நேரம் தேவை. அசை போடும்போது நிமிடத்திற்கு சுமார் 40 முதல் 50 முறை தாடையை அசைக்க வேண்டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.

  ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 லிட்டர் சிறுநீரும், 15 முதல் 20 கிலோ சாணமும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய மாடாக இருந்தால் இந்த அளவு இன்னும் அதிகரிக்கும். பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கும்.

  மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது. பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால் அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன. மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத் தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.

  பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 முதல் 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும். கறக்கும் பசு மாடு நாளுக்கு சுமார் 40 முதல் 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பயன்படுகிறது. பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட். உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம் பசும்பால்.


  உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை 'ஹோல்ஸ்டைன்' இனத்தைச் சேர்ந்த மாட்டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது. ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலக சாதனை செய்த மாட்டின் பெயர் 'உர்பே' ஆகும். இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48 ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும். இப்படி பசுவைப் பற்றி ஏராளமான தகவல்கள் உள்ளன.  34 கருத்துகள்:

  1. மிக நன்றி .இத்தனை தகவல்கள் நான் படித்ததில்லை.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் வல்லிசிம்ஹன்,
    முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  2. சில புள்ளிவிபரத் தகவல்கள் நவீன இன மாடுகள் பற்றியது. அமெரிக்காவுக்கு இறைச்சிக்காக பிறேசிலின் வளர்க்கப்படுவது இந்திய இனமாமே!
   ஈழத்தில் ஆண் மாட்டை நாம்பன் எனவும் பெண் கன்றுகளை நாகு எனவும் சில பகுதிகளில் குறிப்பிடுவார்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் யோகன்,
    பயிர்களிலும் சரி, பசுக்களிலும் சரி சாதனைப் புரிவது எல்லாமே கலப்பின வகைகளே. இவைகளும் அப்படியே!
    தங்கள் வருகைக்கு நன்றி!

    நீக்கு
  3. அனைத்துமே இதுவரை அறியாத
   வியப்பிற்குரிய செய்திகள் நண்பரே
   நன்றி
   தம+1

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் நண்பரே,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  4. வித்தியாசமான, அறிந்திராத, அறிந்துகொள்ளவேண்டிய தகவல்களைத் தொடர்ந்து தரும் தங்களது எழுத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாருங்கள் அய்யா,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    நீக்கு
  5. பதில்கள்
   1. வாருங்கள் மது,
    தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி!

    நீக்கு
  6. நல்ல தகவல்கள் பசுவினைப் பற்றி. நல்ல பதிவு. எல்லோரும் அறியும் வண்ணம் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

   பதிலளிநீக்கு
  7. தாடையை அசைப்பது ஐம்பதாயிரம் தடவையா ?சரியாதான் சொல்லி இருக்காக ,மாடு அசை போடுற மாதிரின்னு :)

   பதிலளிநீக்கு
  8. Cross breed always powerful and strong. only in our human being we are dead against vanniyar vs dalith or so called high vs low

   devar vs dalith and hindu vs christ.

   but all under similar human being.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. இங்கிருக்கும் ஜாதிகள் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. எல்லாம் இவர்கள் வகுத்துக் கொண்ட உயர்வு தாழ்வுதான். இயற்கை வகுத்ததல்ல.

    இயற்கை வகுத்த மனித இனங்கள் உண்டு. அது வெள்ளையர்கள், மங்கோலியர்கள், நீக்ரோக்கள் போன்றவர்கள். மனிதனின் மிதமிஞ்சிய காமத்தால் இந்த இனங்கள் எல்லாம் ஏற்கனவே ஒன்று கலக்க ஆரம்பித்துவிட்டன. இல்லையென்றால் அமெரிக்கருக்கும் ஆப்பிரிக்கருக்கும் பிறந்த ஒபாமா நமக்கு கிடைத்திருக்க மாட்டார். உண்மையில் இனக்கலப்பு என்பதுதான். அதைவிட்டு ஒருசிலர் தங்களை உயர்வாக நினைத்து உருவாக்கிய இனங்கள் எல்லாம் உயர்வானது அல்ல.

    ஜாதி என்பது நமது சமூகத்தில் இருக்கும் ஒரு கேவலமான நடைமுறை! அது ஒழிந்தால்தான் நமது உண்மையான முன்னேற்றம் இருக்கும். சமூகத்தில் ஒரு பகுதியனரை அடிமையாகவும், ஒரு பகுதியினரை அரசராகவும் மாற்றுவது மாற்றமுமில்லை. முன்னேற்றமுமில்லை.

    நீக்கு
  9. நிறைய விஷயங்கள் தெரியப்படுத்தினீர்கள்...சகோ நன்றி

   பதிலளிநீக்கு
  10. அன்புள்ள அய்யா,

   பாலைப் பொழிந்து தரும் பாப்பா - அந்த
   பசு மிக நல்லதடி பாப்பா

   பசு பற்றி பல தகவல்கள் அறிந்து கொண்டோம்.

   நன்றி.

   த.ம. 9

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

    நீக்கு
  11. ஏறத்தாழ நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறதா ஒரு பசு. அருமையான தகவல்கள் தோழர். என் நன்றிக்குரியவர் நீங்கள்

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்