Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

தமிழர்களின் வாழ்வை சொன்ன மலையாளப் படம்

வுனப் படங்களுக்கு மொழியில்லை என்று சொல்வார்கள். ஆனால், 1933-ல் வெளிவந்த 'மார்த்தாண்ட வர்மா' படத்தில் இடையிடையே ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் கார்ட் காட்டப்படுவதால் இதை மலையாளப்படம் என்றே கொள்ளவேண்டும். ஆனாலும் இது தமிழ் படம்தான் என்று சொல்பவர்களும் உண்டு.


இந்த படம் முழுவதும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடக்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானம்தான் கதையின் களம். தமிழர்களின் வாழ்வியல் கலாசாரம் பண்பாடு என்று எல்லாவற்றையும் பேசும் படம் இது. 

கி.பி.1729 முதல் 1758 வரை ஆட்சி செய்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நவீனமாக மாற்றியவர் மார்த்தாண்ட வர்மா. மன்னர் ராம வர்மாவின் இறுதி காலம் முதல் மார்த்தாண்ட வர்மாவின் பதவியேற்பு வரை வேணாட்டின் வரலாற்றை விரிவாக சொல்லும் திரைப்படம் இது. சி.வி.ராமன் பிள்ளை என்பவர் எழுதிய மார்த்தாண்ட வர்மா நாவலை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.   


மிகப் பெரிய ஆச்சரியம் என்னவென்றால் 1933-ம் வருடத்திலேயே மிகப் பெரிய கூட்டத்தை, பெரிய படையை படத்தில் காட்டியிருப்பதுதான். அந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய கூட்டத்தை திரையில் காட்டுவது சாத்தியம் இல்லாத ஒன்று. இதில் இன்னொரு ஆச்சரியம் படம் முழுவதும் வெளிப்புறங்களிலே படமாக்கப் பட்டிருப்பதுதான். 1970 வரை ஸ்டுடியோக்களில் 'செட்' போட்டு எடுக்கும் காலக்கட்டத்தில் எப்படி முழுப் படத்தையும் வெளியிலே எடுத்தார்கள் என்பது திகைக்கவைக்கும் உண்மை. 


மலைகள், நீரோடைகள், குகைகள் என்று பல இடங்களில் படம் பதிவாக்கப்பட்டுள்ளது. அதிலும் குகைகளுக்குள் டார்ச் லைட் வெளிச்சத்தில் படமாக்கியுள்ளார்கள். சினிமாவில் இன்று இடம்பெறும் அத்தனை சாத்தியங்களையும் அன்றே இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய தொழில் நுட்பங்களும் அன்றே இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளன. 

'லோ ஆங்கிள் ஷாட்' சர்வசாதரணமாக படமாக்கப்பட்டுள்ளது. சினிமாவின் அத்தனை சாத்தியக் கூறுகளையும் தொட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில் படம் எடுத்துள்ளார்கள். ஒலி இல்லை என்பதால் எல்லாவற்றையும் காட்சியாகவே சொல்ல முனைந்திருக்கிறார்கள். பொதுவாக மவுனப் படங்களில் இருக்கும் மிகப் பெரிய குறை என்னவென்றால் நடிகர்களின் நடிப்பு இயல்பாக இருக்காது. செயற்கையாக தெரியும். அந்த குறையும் இந்த படத்தில் இல்லை. இதில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே இயல்பபாக நடித்திருக்கிறார்கள். 


கதாநாயகன் நாயகியின் உதட்டில் முத்தம் கொடுப்பது இன்றைக்கும் கூட பரபரப்பான காட்சிதான். ஆனால், இந்த பரபரப்பான காட்சியை 1933-ல் எடுக்கப்பட்ட இந்த படத்திலே மிக இயல்பாக செய்துவிட்டார்கள். தென்னிந்திய மவுனப் பட உலகில் மார்த்தாண்ட வர்மாவுக்கு தனியிடம் எப்போதும் உண்டு. 

படத்தை முழுமையாக பார்க்க இங்கே சொடுக்கவும்..




20 கருத்துகள்

  1. அரிய தகவல்தான் நண்பரே திரைப்படத்தை காணப்போகிறேன் நன்றி
    தமிழ் மணம் 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் வருகைக்கும் முதல் வாக்குக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. பரபரப்பான காட்சியைக் கொண்ட திரைப்படம் பற்றிய பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புதிய, ஆர்வம் ஊட்டும் செய்தி. நன்றி.

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. படம் பற்றி அறிந்திருந்தாலும், பார்த்திராததால் இத்தகையத் தகவல்கள் அறிந்திருக்கவில்லை. இப்போது படத்தைப் பற்றித் தெரிந்து கொண்டோம். பகிர்விற்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா... வியப்பான செய்தி...
    படம் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  6. .தகவலுக்கு நன்றி! படத்தை அவசியம் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  7. திரு. செந்தில்குமார் சமீபத்தில்தான் நான் உங்க பதிவுகளை படிக்கிறேன் , வலைபதிவுகளை ஏன் படிக்கிறேனு இருக்கிற நிலைமையில் உங்க பதிவு அருமை அன்பரே.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை