செவ்வாய், மார்ச் 22, 2016

எனது நேர்காணல்

பிரபல பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான திரு.முத்துநிலவன் அவர்கள் வலைப்பதிவுலகில் தனக்கென்று தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். சமூகத்தில் தீயாக பற்றி எரியும் பிரச்சனைகளை தன் வலைப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து எழுதுக்கூடியவர். பதிவுலகில் அவ்வப்போது புதுமையாக ஏதாவது பரிட்சித்துப் பார்க்கும் இளைஞர்.அவர் தற்போது மேற்கொண்டிருக்கும் ஒரு புது முயற்சிதான் இணைய எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அறிமுகப்படுத்துவது. அந்த புது முயற்சின் தொடக்கமாக எனது நேர்காணலை அவரது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுத்த கேள்விகள் மூலம் அனைத்து விவரங்களையும் வெளிக்கொணர்ந்து விடுகிறார். அதுவொரு இனிய அனுபவம்.!

நேர்காணல் மூலம் என்னைப் பற்றி பல விவரங்களை பதிவுலகுக்கு அறியச் செய்த அய்யா முத்துநிலவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!


எனது நேர்காணலை வாசிக்க இங்கே சொடுக்கவும்..நேர்காணல் குறித்த தங்கள் கருத்தை தவறாமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 

அன்புடன்,
எஸ்.பி.செந்தில்குமார் 34 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. முதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. முத்துநிலவன் ஐயாவின் தளத்தில் தங்கள் நேர்காணலைப் படித்தேன். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுகள்.

  தங்கள் நேர்காணலைப் படித்த பலர் தங்களை அடையாளப்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தது.
  தங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 3. நன்றி நண்பரே! என்னை இளைஞர் என்று சொன்னதை என் மனைவியிடம் படித்துக் காட்டினேன் ! தங்களைப் போலும் இளைஞர்களுடன் இருப்பதாலேயே என்னை எப்போதும் இளைஞனாகவே கருதிவருகிறேன். எனினும் “காதோரம் நரைச்சமுடி..” என்று பட்டுக்கோட்டை அவ்வப்போது வந்து கேலி செய்கிறான்! நிற்க.
  தங்களின் நேர்காணலின் வழியாக, இளைய பதிவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பதிவர்க்குமான செய்தி ஒன்றைக் கண்டேன். அது பதிவு எழுதுவோர், நேர்மை, உண்மை, எளிமை ஆகிய மூன்று மைகளில், தன் உழைப்பில் எழுதும் அரிய செய்திகள் அனைவராலும் கவனிக்கப்படும் என்பதே. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள், வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா நீங்கள் இளைஞர்தான். வயது என்பது உடலுக்கு மட்டும்தான். மனதுக்கல்ல. மனதில் இளைஞராக இருக்கும் வரை புதுப்புது ஆக்கங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். தாங்கள் புதுமையாக சிந்திப்பதால் இன்னும் பல ஆண்டுகள் இளைஞராகவே மிளிர்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 4. மறந்துவிட்டேன், நல்ல பதிவுகளைப் பாராட்டுவதே த.ம.வாக்களிப்பில்தானே இருக்கிறது. இதோ தங்களுக்காக த.ம.வா.3.

  பதிலளிநீக்கு
 5. தங்களின் பெரும் சிறப்பை அங்கே கண்டேன்
  தங்களின் உடன் நன்றி பாராட்டும்
  பெருந்தன்மையை இங்கே கண்டேன்
  வாழ்த்துக்களுடன்....

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் சகோ,

  சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள்,,,

  கூட்டாஞ்சோறு நான் நினைத்தது இந்தபொருள் தான்,, ஆனால் தாங்கள் வேறு ஏதேனும் நோக்கி வைத்து இருப்பீர்களோ என்று நினைத்தேன்,,,

  கூட்டாஞ்சோறு இன்னும் பல கலவையைத் தரட்டும், வாழ்த்துக்கள் சகோ,

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான கருத்துக்களுடன் உங்கள் நேர்காணல் அருமை ...வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு

 8. திரு முத்து நிலவன் அவர்களின் நேர்காணல் பேட்டியில் பேட்டி காணப்பட்ட முதல் பதிவராக ஆனதற்கு முதற்கண் வாழ்த்துக்கள். திரு முத்துநிலவனின் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தமைக்கும்பாராட்டுக்கள்! விரைவில் தமிழ்மண தரவரிசையில் முதலிடம் பெறவும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 9. வணக்கம் நண்பரே படித்து விட்டேன் தங்களுக்கு வாழ்த்துகள்
  த.ம.வ.போ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 10. கவிஞரின் பதிவில் தங்களின் நேர்காணலைப் படித்து மகிழ்ந்தேன் நண்பரே

  வாழ்த்துக்கள்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 11. அருமையான நேர்காணல். அங்கேயும் படித்து ரசித்தேன். பாராட்டுகள் செந்தில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே!

   நீக்கு
 12. தங்களது அழகான நேர்காணலும், ஐயாவின் பொருத்தமான மறுமொழிகளும் நாங்கள் உங்கள் இருவரையும் மிகவும் சிறப்பாக அறிந்துகொள்ள துணை புரிந்தன. இந்த நேர்காணல் மூலமாக எங்களது புரிதலில் நீங்கள் இருவரும் சற்று உயரிய நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றீர்கள். முதன்மையில் உள்ள ஒருவருடன் முதன்மையான நீங்கள் உரையாடுவது என்பதானது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் ஆழமான கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு
 13. நேர்மையான நேர்காணல் ..... மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. நேர்மையான நேர்காணல் ..... மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 15. நேர் காணலில் முதலிடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 16. தங்களின் நேர்காணல் அருமை செந்தில்! அங்கும் படித்துக் கருத்திட்டோம். அழகான கருத்துகள். குடும்பம் பற்றியும் தெரிந்து கொண்டோம். பாராட்டுகள். வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே!

   நீக்கு

இந்த ஆண்டு அதிக வாசிப்பு

சமீபத்திய பதிவு

ஊரடங்கில் ஒரு நீண்ட பயணம்..!

அது ஏப்ரல் மாதம் முதல் வாரம். 2020 ஆண்டு. கொரோனா  என்ற கண்ணுக்குத் தெரியாத அசுரன் மொத்த உலகையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்திருந்த காலம். இ...