Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

வலி அறியா குடும்பம்

டலில் ஏற்படும் வலி ஒரு ஆரோக்கிய கண்ணாடி. நமது உடலில் தோன்றும் பாதிப்புகளை உடனுக்குடன் அறிவிக்கும் எச்சரிக்கை மணி. வலி மட்டும் இல்லையென்றால் இத்தனை மருத்துவம் தோன்றியிருக்காது, மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்காது. எல்லா மருவத்துக்கும் அடிப்படை வலிதான். ஒருவேளை அந்த வலி நமக்கு இல்லையென்றால்  என்னவாகும்? நினைக்கவே வியப்பாக இருக்கிறதல்லவா. அப்படி ஒரு வலியில்லா குடும்பமும் உலகில்  இருக்கிறது.


இந்தக் குடும்பம் இருப்பது இத்தாலியில் உள்ள டஸ்கனிஸ் என்ற கிராமத்தில். இங்கு சென்று மாஸிடிஸ் குடும்பத்தைப் பற்றி கேட்டால் எல்லோரும் ஒன்றாக வந்து வழிகாட்டுவார்கள். இவர்கள் அவ்வளவு பிரசித்தம். அந்த குடும்பத்தில் இருக்கும் எவருக்கும் வலி என்ற உணர்வே கிடையாது. இந்த குறையும் இப்போது ஏற்பட்டதில்லை. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.   

அந்தக் குடும்பத்துப் பெண்ணான மொரியாவுக்கு தன்னுடைய சின்ன வயதில் காலில் அடிபட்டிருக்குமோ என்ற சந்தேகம் பெரிய வயதில் வந்தது. மருத்துவரிடம் சென்று பரிசோதித்துப் பார்த்தார். இரண்டு முறை கால் எலும்பு முறிந்திருக்கிறது என்றார். வலி என்ற உணர்வு இல்லாததால் எலும்பு உடைந்திருப்பதே அவருக்கு தெரியவில்லை. 


மொரியாவின் மூத்த மகள் நடீஸியா. இவருக்கு எவ்வளவு கடுமையான குளிரையும் தாங்கும் சக்தி இருக்கிறது. சொல்லப்போனால் அவருக்கு குளிர் என்பதே எப்படி இருக்கும் என்று தெரியாது. எப்படிப்பட்ட கடுங்குளிரிலும் சில்லிடும் குளிர்ந்த நீரில் இறங்கி நீச்சல் அடிப்பார். இவரின் தங்கை எலினாவுக்கு சுடுதல் என்ற உணர்வே கிடையாது. அதனால் சூடு தெரியாது. கொதிக்கும் உணவைக் கொடுத்தாலும் அப்படியே சாப்பிடுவார். 

மாஸிடிஸ் குடும்பத்தைப் பற்றி கேள்விப்பட்ட டாக்டர் ஜான் உட் என்பவர் இவர்களின் வீட்டுக்கு வந்தார். இவர் உலகம் முழுவதும் சுற்றி வலிகள் சம்பந்தமான பல ஆய்வுகளை செய்து வருகிறார். இவர் ஒரு 'ஜெனடிக்' விஞ்ஞானி என்பதால் மரபணு பற்றிய பல தகவல்களை கூறுகிறார். ஒரு மனிதனுக்கு வலி ஏற்படவில்லை என்றால் அதற்கு மரபணுதான் காரணம். அவர்களின் மரபணுவில் வலியை ஏற்படுத்தும் கூறுகள் இல்லை என்று அர்த்தம். அதனாலே அவர்கள் வலியை உணர்வதில்லை. 

நம் உடலில் இருக்கும் நூற்றுக்கணக்கான மரபணு கூறுகள் வலியை ஏற்படுத்தும் பணியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. நமது உடலில் இருக்கும் நியூரான்கள்தான் நமக்கு அடி பட்டால் அந்த தகவலை முதுகு தண்டு மூலம் மூளை தண்டிற்கும் அங்கிருந்து மூளையின் ஒரு பகுதியாக விளங்கும் 'கார்டெக்ஸ்' என்ற பகுதிக்கும் தெரியப்படுத்தும். இத்தனை செயல்கள் நடந்தால்தான் நமக்கு வலிக்கத் தொடங்குகிறது. மாஸிடிஸ் குடும்பத்துக்கு இந்த ப்ராசஸ் நடைபெறுவதில்லை. அதனால் அவர்களுக்கு வலிப்பதும் இல்லை என்று டாக்டர் ஜான் உட் கூறுகிறார். 

ஆனாலும் வலி அவசியமானதுதான்.




25 கருத்துகள்

  1. வலி அவசியமானது என்ற விஷயத்தை இந்தப்பதிவின் மூலம் மிகுந்த வலியுடன் உணர்ந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  2. எதிர்காலத்தில் வலி உணர்வில்லா மனிதன் உருவாக்கப் பட்டால் நல்லதுதானே :)
    ஒரு சந்தேகம் ,அந்த ஊர் தாய்மார்கள் பிரசவ வலியையாவது உணர்ந்து இருக்கிறார்களா:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊர் இல்லை, அந்த ஒரு குடும்பம் மட்டுமே வலியில்லாமல் இருக்கிறது. அவர்கள் பிரசவ வலியையும் உணரவில்லை.
      வருகைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு
  3. நிச்சயம் வலி இல்லா வாழ்க்கைக் கூட வேதனையானதுதான்!

    பதிலளிநீக்கு
  4. வித்தியாசமான குடும்பம் நண்பரே
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. வலியில்லாக் குடும்பம் பற்றி வலியுடன் படித்தேன். உடற்கூறு நிலையில் வலி தேவையே.

    பதிலளிநீக்கு
  6. ஆனாலும்...சுடுகின்ற,,பனிக்கட்டி கையில் வைத்து அதன் ஜில்லிப்பை ரசிக்கின்ற உணர்வு இல்லாத..வாழ்க்கையை ...?

    நமக்கு எல்லாம் வேணும்...
    அப்புறம் மரத்துக்கும் நமக்கும் என்ன வேறுபாடு...

    இந்த அதிசயத்தை நான் வரமாக அல்லாமல் சாபமாகவே உணர்கிறேன்...

    அறிமுகப்படுத்திய உங்கள் பணி உணர்வுக்கு(?) நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலியில்லாத வாழ்க்கை வேதனைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  7. புதிய செய்தி ....வலியில்லா வாழ்வு ...கடினமே ...

    பகிர்வுக்குக்கு மிகவும் நன்றி

    பதிலளிநீக்கு
  8. சிந்திக்க வைக்கும்
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  9. வியப்பைத் தரும் தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

      நீக்கு
  10. ஆச்சரியமான விஷயம்தான். பகிர்வுக்கு நன்றி. ஆனால் நமது உடலில் ஏற்படும், அல்லது ஏற்படப் போகும் நோய்களை அல்லது குறைபாடுகளை தெரியப்படுத்தும், எச்சரிக்கை மணியான வலி அவசியம் மனிதனுக்கு தேவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எச்சரிக்கை மணிதான் வலி. வலியில்லாத வாழ்க்கை வேதனைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
    2. எச்சரிக்கை மணிதான் வலி. வலியில்லாத வாழ்க்கை வேதனைதான். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. வியக்கவைத்த பதிவு! தங்களால் மட்டுமே இது போன்ற செய்திகளை தரமுடிகிறது!

    பதிலளிநீக்கு
  12. வியப்பான செய்தி.தகவலுக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  13. வலியே இல்லை என்றாலும் கஷ்டம்தான். பல நோய்களைக் கண்டறிதல் கடினம். உடல் பிரச்சனைக்கு வலிதான் எச்சரிக்கை தரும். இதுவும் ஒரு வலிதான்!!

    பதிலளிநீக்கு
  14. மரபு சம்பந்தப்பட்டது நீங்கள் சொல்லியிருப்பது இல்லையா...கான்ஜெனிட்டல் இன்சென்சிட்டிவிட்டி டு பெய்ன்(CIP-congenital insensitivity to pain) அல்லது காஞ்செனிட்டல் அனால்ஜெசியா (congenital analgesia) என்று சொல்லப்படுகிறது. ரொம்பவே அபாயகரமான ஒன்று இது.

    ஒரு சிலருக்கு மூளையில் எண்டார்ஃபின்ஸ் அதிகமானாலும் இந்நிலை ஏற்படும். இப்படிப்பட்டதற்குச் சிகிச்சை இருக்கிறது. ஸ்வீடனில் ஒரு கிராமத்தில் பலருக்கும் இருக்கிறதாம். இங்கும் கூட இருக்கலாம் ஆனால் வெளியில் தெரியவில்லையாக இருக்கலாம் இல்லையா...

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை