• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, ஏப்ரல் 15, 2016

  'கிரீன்விச்' நேரம்


  பூமி உருண்டை என்று விஞ்ஞான பூர்வமாக முடிவான பின் இந்த பூமி பந்தின் ஒரு பகுதியை தொடக்கமாகக் கொள்ள முடிவு செய்தனர். மேலும் இடத்தை சுலபமாக அடையளாம் கண்டுகொள்ள கடக ரேகை, அச்ச ரேகை போன்ற கற்பனை கோடுகளை உருவாக்கினர். இதில் மையக்கோட்டை '0' டிகிரி என வைத்தனர்.

  நேர மண்டலம்
  இதுதான் உலக நாடுகளின் நேரத்துக்கு ஆதாரமானது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கிரீன்விச் என்ற நகரின் மீது செல்வதால் இந்த கோட்டிற்கு அதே பெயரை வைத்தார்கள். நேரத்திற்கு 'கிரீன்விச் மெரிடியன் டைம்' என்று பெயர் இட்டார்கள். இதை சுருக்கமாக கிரீன்விச் நேரம் என்றார்கள்.  

  இந்த '0' டிகிரி 'லாங்கிடியூடில்' என்ன நேரம் காட்டுகிறதோ அதை மையமாக வைத்து தான் உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் தங்கள் நாட்டின் நேரத்தை டிகிரி வித்தியாசத்துக்கு ஏற்றபடி சரியாக கணக்கிட்டு வைத்துக் கொள்கின்றன.

  'கிரீன்விச் மெரிடியன் டைம்'
  இந்தியாவின் கடிகார நேரத்தை அலகபாத் வழியாக செல்லும் 82.5 டிகிரி லாங்கிடியூடை வைத்துதான் சொல்கிறார்கள். இந்திய நேரத்துக்கும் கிரீன்விச் நேரத்துக்கும் +5.30 மணி நேர வித்தியாசம் உள்ளது. அதாவது நமக்கு விடிந்து ஐந்தரை மணி நேரம் கழித்துதான் கிரீன்விச்சில் விடியும்.

  லண்டனில் இருக்கும் 'வெஸ்ட் மினிஸ்டர்ஸ் கிளாக்' என்பது உலகப்பிரசிதிப் பெற்றது. இதை பிக்பென் கடிகாரம் என்றும் சொல்வர். இந்த கடிகாரம் காட்டுவது கிரீன்விச் நேரத்தைத்தான். இதில் ஒரு மணிக்கு ஒரு முறை 'டிங்டாங்' என்று மணி அடிக்கும். இந்த மணிக்குதான் 'பிக்பென்' என்று பெயர். 

  பிக்பென்
  இந்த மணி ஓசையை பி.பி.சி. வானொலி தவறாமல் ஒலிபரப்பி வந்தது. சர்வதேச பயணம் மேற்கொள்ளும் போது புறப்பட்ட நாட்டின் நேரத்துக்கும், போய்ச்சேரும் நாட்டின் நேரத்துக்கும் வித்தியாசம் இருப்பதால் விமானங்களிலும் விமான நிலையங்களிலும் ஒரேவிதமான நேரத்தை கடைப்பிடிப்பார்கள்.

  ஆங்கிலம் எப்படி உலகின் பொது மொழியாக உள்ளதோ அது போல கிரீன்விச் நேரம் உலகின் பொது நேரமாக இருக்கிறது.

  * * * * *

      அன்புடன்,

     22 கருத்துகள்:

  1. கிரீன்விச் நேரம்
   அறியாத செய்திஅறிந்து கொண்டேன் நண்பரே
   நன்றி

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  2. தெரியாத சேதி....
   தெரியப் படுத்தியமைக்கு
   நன்றி நண்பரே .....

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

    நீக்கு
  3. நேரத்தில் இப்படியா....நம்ம நேரம் நல்ல நேரந்தான்....அரிய தகவல் அறியச் செய்தமைக்கு நன்றி நண்பரே...

   பதிலளிநீக்கு
  4. அறிந்த செய்திதான். என்றாலும் தங்கள் நடையில் தமிழில் அருமையாகப் பகிர்கின்றீர்கள். கிரீன்வீச் நேரத்தைப் பற்றி வாசிக்கும் போது எப்போதோ ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த நகைச்சுவைத் துணுக்கு நினைவுக்கு வருகிறது.

   லண்டன் விமானநிலையத்தில் ஒருவர் அருகில் இருந்தவரிடம் நேரம் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்கிறார். அதற்கு அருகில் இருந்தவர் நேரத்தைச் சொல்லுகின்றார். முதலாமவர் கேட்கிறார், "இஸ் இட் GMT"
   அடுத்திருந்தவர் "நோ. இட்ஸ் HMT"

   பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

   கீதா

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஜோக்கை வெகுவாக ரசித்தேன்.
    வருகைக்கு நன்றி சகோ!

    நீக்கு
  5. பயனுள்ள பகிர்வை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

   பதிலளிநீக்கு
  6. பாடப் பதிவு.

   எப்போது வந்தாலும் தவறாமல் தம வாக்கு அளித்து விடுவேன்!

   பதிலளிநீக்கு
  7. பயனுள்ள சுவாரஸ்யமான தகவல்களுக்கு நன்றி.

   பதிலளிநீக்கு
  8. விரிவான தகவல்கள்; நன்றி!

   சில திருத்தங்கள் தேவை!
   1. // இடத்தை சுலபமாக அடையலாம்//
   - "அடையாளம்"

   2. //இதை பிக்பென் கடிகாரம்//
   + என்றும் குறிப்பிடுவர்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. சரி செய்து விட்டேன் நண்பரே!
    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

    நீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்