தமிழகத்தில் நடைபெறும் மிகப் பெரும் திருவிழாக்களில் மதுரை சித்திரைத் திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழாவைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்றிருந்தேன். நேரமின்மையால் முடியாமல் போனது.
நண்பர் குணா அமுதனின் திருவிழா படங்கள் ஒவ்வொன்றும் கவிதை. அந்த கவிதையை கொண்டு படங்களுடன் கூடிய சிறிய திருவிழா பதிவு இது.
சித்திரைத் திருவிழாவின் நிகழ்வுகள் இங்கே படங்களுடன்.
திருவிழாவின் தொடக்கம் இந்த கொடியேற்றம்தான். கீழ்நிலையில் இருந்து உயர்நிலைக்கு மேலேறும் தத்துவத்தை எளிமையாக உணர்த்துவதே கொடியேற்றத்தின் நோக்கமாகும். உயிர்களுக்கு அருள்புரிய இறைவன் ஆயத்தமாக இருப்பதையும் கொடியேற்றம் அறிவிக்கிறது.
கர்ப்பக விருட்சம் மற்றும் சிம்ம வாகனம்
|
சங்கொலியுடன் ஊர்வலம் தொடக்கம் |
|
சித்திரைத் திருவிழா முதல் நாள் அணிவகுப்பு |
|
யானை முகன் முன்னே போக... |
|
காமதேனு பின் தொடர்கிறாள்! |
|
சிறுமிகளின் கோலாட்டம்.. |
|
இசைப் பாடலுடன் இளம் பெண்கள்... |
|
இது பெண்களின் தாண்டியா... |
|
கள்ளர் வேடமிட்ட பக்தர்கள் |
|
சிம்ம வாகனத்தில் மீனாட்சி |
|
கற்பகவிருட்ச வாகனத்தில் சொக்கர் மற்றும் பிரியாவிடை |
இறைவன் உலகின் ஆதாரம் என்பதை குறிக்கும் காட்சி இது. கர்ப்பக விருட்சகம் கேட்டதையெல்லாம் கொடுக்கும். மக்கள் எந்த வரம் கேட்டாலும் இங்கு கிடைக்கும் என்பதுதான் இதன் அர்த்தம். கேட்டதெல்லாம் கிடைத்துவிட்டால் மனிதனுக்கு ஆணவம் கூடிவிடும் என்பதால் அதை அடக்க அம்மன் சிம்ம வாகனத்தில் வருவதாய் இதன் நோக்கமாக உள்ளது.
அன்ன வாகனம் மற்றும் பூத வாகனம்
|
மங்கள மேளத்துடன் இரண்டாம் நாள் வீதி உலா |
|
கரகாட்டம்.. |
|
கையில் கிளியுடன் மீனாட்சி வேடத்தில் ஒரு பெண் |
|
அன்ன வாகனத்தில் மீனாட்சி உலா.. |
|
கருட வாகனத்தில் மீனாட்சி உலா..
|
|
சங்காரக் கோலத்தில் சிவபெருமான் பூத வாகனத்தில் வலம் |
|
தள்ளாத வயதிலும் பக்தர்களின் வியர்வையை விசிறியால் விரட்டும் முதியவர் |
|
சாமானியர்களின் பங்களிப்பு இல்லையென்றால் திருவிழா சுவைக்காது |
ஐந்து பூதங்களையும் மனிதன் அடக்கி வாழ்வில் முத்தி பெற வேண்டும் என்பதற்காக அய்யன் பூத வாகனத்திலும், நீரும் பாலும் கலந்திருந்தாலும் நீரை விடுத்து பாலை மட்டும் பருகும் அன்னம் போல் நல்லதும் கேட்டதும் கலந்திருக்கும் இந்த உலகில் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை விளக்குவதற்காக அம்மன் அன்ன வாகனத்திலும் வலம் வருவதாக ஐதீகம்.
ராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு
|
சப்பர உலா! |
|
காமதேனு வாகனத்தில் மீனாட்சி |
|
ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்.. |
இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா...
* * * * *
|
நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்.. |
வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சி
தங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ....
|
தங்கப்பல்லக்கு உலா... மக்கள் வெள்ளத்தில் ! |
|
உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை |
இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..
படங்கள் : குணா அமுதன்
ஆஹா, அற்புதமான படங்களும், செய்திகளும் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
நீக்குபடங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்நண்பரே
பதிலளிநீக்குதம +1
மிக்க நன்றி நண்பரே!
நீக்குவிழாவை நேரில் பார்த்த உணர்வுகள்...
பதிலளிநீக்குஅருமையான பதிவு
வாழ்த்துகள் நண்பரே...
மிக்க நன்றி நண்பரே!
நீக்குபடங்களும் விளக்கமும் அருமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி அய்யா!
நீக்குமீண்டும் மீண்டும், பார்க்க வைக்கும்,துல்லியமான தெளிவான படங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே!
நீக்குமிக மிகத் தெளிவான நிழற்படங்கள். திரு குணாஅமுதனுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஒவ்வொரு நாளின் வாகனம், உலாவிற்கு உங்கள் அற்புதமான தத்துவ ரீதியான விளக்கங்கள் மிக மிக அருமை நண்பரே/சகோ..
இன்னும் கிராமீய நடனங்கள், கலைகள் இருப்பது மிகவும் மகிழ்வாக இருக்கிறது. மக்கள் எவ்வளவு ஆர்வமாகக் கலந்து கொள்கின்றார்கள்! ஆச்சரிமாகவும் மகிழ்வாகவும் இருக்கின்றது.
பகிர்வுக்கு மிக்க நன்றி.
மதுரையில் இன்னும் பாரம்பரிய கலைகள் கொஞ்சம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பல திருவிழாக்களில் அது வெளிப்படும்.
நீக்குவருகைக்கு நன்றி நண்பர்களே!
அருமையான படங்களும் அழகான விளக்கமும்.படம் தந்த குணாவுக்கு இன்னொரு நன்றிகள்.
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!
நீக்குஒவ்வொரு வருடமும் பார்க்கவேண்டும் என்ற ஆசை. ஆனால் முடியவில்லை. தங்கள் பதிவு மூலமாகவும், தஞ்சையம்பதி பதிவின் மூலமாகவும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
பதிலளிநீக்குபார்க்கவேண்டிய ஒரு திருவிழாதான். வாய்ப்பு கிடைத்தால் தவறவிடாதீர்கள்!
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!
அருமை. புதூரிலும், ரேஸ் கோர்ஸ் காலனியிலும் இருந்து திருவிழாவை ரசித்த காலங்கள் நினைவுக்கு வருகின்றன. படங்கள் திறக்க நேரம் எடுத்துக் கொண்டாலும், ரசிக்க முடிகிறது.
பதிலளிநீக்குதம +1
கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும் இடமல்லவா மறக்க முடியுமா?
நீக்குவருகைக்கு நன்றி நண்பரே!
அருமையான பதிவு
பதிலளிநீக்குதொடருங்கள்
http://tebooks.friendhood.net/
நன்றி நண்பரே!
நீக்குபடங்கள் பேசும் பதிவு.....ரசித்தோம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே!
நீக்குஇதைப்போன்ற திருவிழாக்களையெல்லாம் இதுவரை நேரில் கண்டதில்லை.. இனியும் காணும் வாய்ப்புக் கிட்ட வழியில்லை.. இங்கே அழகான படங்களுடன் கூடிய பதிவின் வாயிலாய் நேரில் கலந்துகொண்ட நிறைவும் மகிழ்வும் கிட்டியது. நன்றி செந்தில்.
பதிலளிநீக்குமிக்க நன்றி கீதா, இன்னும் இந்த பதிவு வரும்.
நீக்குகருத்துரையிடுக