• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், மே 12, 2016

  'மே' மாத சுற்றுலா இதழ்  தேர்தல் பரபரப்பில் எங்கள் இதழ் பற்றிய பதிவெழுதவே மறந்து போனேன். இந்த மே மாத இதழை பதிவர்களுக்கான இதழ் என்றே சொல்லலாம். நம் பதிவர்கள் பலரும் தங்களின் பயண அனுபவங்களை சுவைப்பட எழுதியிருக்கிறார்கள். அதேபோல் பலரும் சந்தாதாரர்களாய் இணைந்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.  நாமெல்லாம் வெயிலில் இங்கே வாடி வதந்கிப்போய் இருக்க,.. நம் காதில் புகை வரும் விதமாக 'ஆட்டிப்படைத்த லண்டன் குளிரை'ப் பற்றி ஞா.கலையரசி எழுதியிருக்கிறார். தனது வெளிநாட்டு பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.  ஜப்பானில் ஒரு எரிமலையை எப்படி சுற்றுலாத்தலமாக மாற்றியிருக்கிறார்கள் என்பதைப்பற்றி விரிவாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார், சுமதி சுரேஷ். 'அடங்கிய எரிமலை மீது ஒரு பயணம்' என்ற கட்டுரை மூலம்.  அரசியலில் தேர்தல் சூடு பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலக்கட்டத்தில் அன்றைய அடிமை இந்தியாவில் பல அரசியல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்ட இடம் இது. விடுதலைக்கு வித்திட்ட அந்த வரலாற்று சின்னத்தைப் பற்றிய தனது அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம். 'அரசியலும் விடுதலையும்' கட்டுரையில் ஆனந்த பவனில் நாம் காணவேண்டிய சங்கதிகளை பட்டியலிட்டு சொல்கிறார். 


  முன்னொரு காலத்தில் விண்கல் ஒன்று வந்து பூமியில் விழுந்து பள்ளமாகிப்போன ஒரு இடம் இன்று சுற்றுலாவின் சிறப்பிடம். அதைப்பற்றிய அபூர்வ தகவல்களோடு ஒரு கட்டுரை வடித்திருக்கிறார், ஜெ.எஸ்.ஞானசேகர். பரவசம் தரும் 'விண்கல் உண்டாக்கிய ஏரி'  ஒரு வியப்பான தகவலே.  

  கண்ணாடிப் போன்ற தெளிந்த நீரில் படகில் பயணிப்பதே தனி ஆனந்தம்தான்.


  கிராமத்துத் திருவிழாக்களில் இது புதுவகை. தெய்வங்கள் தேரில் வலம் வருவதைத்தான் பார்த்திருப்போம். இந்த ஊரில் கண்ணாடிப் பல்லக்கில் சாமி ஒவ்வொரு ஊராக வருவது புதுமை. ஆனால், இந்தப் புதுமை ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நடைபெறுகிறது என்பதுதான் ஆச்சரியம்.   சாளுக்கிய மன்னர்களின் முதல் தலைநகரமான ஐஹோலேயில் உள்ள 125 கோவில்களில் சிலவற்றை இங்கு நாம் தரிசிக்கலாம். பலவற்றில் பூஜைகள் நடைபெறாவிட்டாலும், இவைகள் ஒரு அபூர்வமான கலைப் பொக்கிஷம்தான்.    வட கிழக்கு மாநிலங்களில் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகைப்பற்றி ஒரு தொடர் பதிவு. உலகில் அதிகம் மழைப் பொழியும் சிரபுஞ்சி பற்றியும் அதன் அருகே இருக்கும் சுற்றுலா தலங்கள் பற்றியும் விரிவான ஒரு அலசல். ஏராளமான அருவிகள், பங்களாதேஷின் பசுமை பள்ளத்தாக்கு என்று இயற்கையோடு ஒரு பயணம் இந்தக் கட்டுரை.


  சமணம், சைவம் என்ற இருபெரு ஆன்மிகமும் போட்டிப்போட்டு வடித்த குடைவரை கோயில்கள், புடைப்பு சிற்பங்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று போட்டிப்போடும் இடம் இது.  நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான இந்த கலைப் படைப்புகள் பலரும் அறியாதவை. அவற்றை உங்கள் பார்வைக்கு  வழங்குகிறோம்.   காதலியின் கரம்பிடித்தபடி வசீகரமான சுற்றுலா தலங்களுக்கு சென்று படங்களை எடுத்துக் கொள்ளும் இந்த ஜோடி மிகப் பிரபலம். அவர்களைப் பற்றிய ஒரு பதிவு!

  மேலும் வழக்கமான பகுதிகளுடன் இரவுநேர அருங்காட்சியகம் பற்றிய ஒரு பதிவும் உங்களை மகிழ்விக்க வந்திருக்கிறது. 

  தற்போது விற்பனையில்..!

  இதழ் தேவைக்கு இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    +91 94435 71391.  13 கருத்துகள்:

  1. இதழைப் பற்றிய விமர்சனம் கண்டேன். எனது கட்டுரை வெளியானது அறிந்து மகிழ்கின்றேன். நன்றி. சப்தஸ்தானத் திருவிழா பற்றி மகாமகம் மலர் 2004இல் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தஸ்தானத் திருவிழா நடைபெறுகிறது. அவற்றில் திருவையாற்று சப்தஸ்தானம் குறிப்பிடத்தக்கது. நன்றி.

   பதிலளிநீக்கு
  2. வாங்கிப்படிக்கத்தூண்டும் ஆவல் வெளிநாடுகளுக்கும் இதழ் அறிமுகம் செய்கின்றீர்களா ??

   பதிலளிநீக்கு
  3. சுற்றுலாப் பிரியர்களுக்கு பயனுள்ள இதழ்.ஆஹா ஏராளமான தகவல்கள் வாங்கிப் படிக்கிறேன்.

   பதிலளிநீக்கு
  4. கண்னைக் கவரும் படங்களுடன்
   அருமையான செய்திகளுடன் இதழ் அருமை
   கட்டுரை வரைந்த பதிவர்களைப் பாராட்டுவோம்
   நன்றி
   தம +1

   பதிலளிநீக்கு
  5. கண்களை கவரும் அற்புதமான விமர்சனம்
   உடனே அந்தந்த இடங்களுக்கு ஆசைதான்....

   பதிலளிநீக்கு
  6. எனது இணையப் பதிவொன்று அச்சுப் பதிவானதில் மிக்க மகிழ்ச்சி!

   நன்றிகளும் வாழ்த்துக்களும்.

   - ஞானசேகர்

   பதிலளிநீக்கு
  7. டாப் டக்கர் ... படங்களும் செய்திகளும் படிக்க தூண்டுகின்றன

   பதிலளிநீக்கு
  8. என் பதிவொன்றும் புத்தகத்தில் வந்திருப்பதில் மகிழ்ச்சி. தில்லி சென்றதும் புத்தகம் படித்துவிட்டு என பக்கத்திலும் பகிர்ந்து கொள்கிறேன்.

   பதிலளிநீக்கு
  9. ஏப்ரல் சுற்றுலா இதழை வாசித்தேன். சிறப்பாக இருக்கின்றது. வழ வழ தாளில் படங்கள் மிகவும் தரமாக இருக்கின்றன. மே மாத இதழில் என் கட்டுரையும் இடம் பெற்றிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. விரைவில் இதழை வாசித்துவிட்டு என் கருத்துக்களைப் பகிர்கின்றேன். மிகவும் நன்றி செந்தில்!

   பதிலளிநீக்கு
  10. அட மே மாத இதழ் செமையா இருக்கே. சகோ பயண பரபரப்பு, பல நிகழ்வுகளில் இருந்ததால் வாங்கவில்லை. சந்தா கட்ட என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுகின்றேன் என்று சொன்னீர்கள். சொல்லுங்கள் சகோ. நானும் அனுப்புகின்றேன். ஏப்ரலே இன்னும் முடிக்கவில்லை. நம் பதிவர்களின் கட்டுரைகள் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி.

   கீதா

   பதிலளிநீக்கு
  11. ஹாலிடே நியூஸ் இதழுக்கு என் தங்கை வீட்டில் சந்தாதாரர். இதன் மனதை மயக்கும் வடிவமைப்பு தமிழ் சிற்றதழ் வடிவமைப்புகளில் ஒரு மைல்கல். ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையில் இரசனையின் முக்கியத்துவத்தைச் சொல்லும் இதழ்.

   ஒரு தரமான இதழை தமிழுக்கு தந்ததில் நன்றி.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்