Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

'ரத்தப் பணம்' பற்றி தெரியுமா..?!


'பிளாக் மணி' என்ற கறுப்புப் பணம் கேள்வி பட்டிருக்கிறோம், 'ஒயிட் மணி' என்ற வெள்ளைப் பணம் பற்றியும் கேள்வி பட்டிருக்கிறோம். 'பிளட் மணி' என்ற ரத்தப் பணம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா..? ஆனால் ரத்தப் பணம் என்பது 'கொலைகாரர்கள்' மொழியில் இருக்கிறது.


இந்த ரத்தப் பணத்திற்கு இடத்திற்கு தகுந்தபடி பல பெயர்கள் இருக்கின்றன. 'திய்யா', 'கிஸாஸ்', 'எரிக்பைன்', 'காலனாஸ், விரா', 'க்லொசிஸ்னா', 'மிமைசின்', 'ஸீர்', 'வெர்கில்ட்' இவையெல்லாம் ரத்தப் பணத்திற்கான மாற்று பெயர்கள்தான். 

கொலை செய்பவர்கள் தவறாக வேறு யாரையாவது கொலை செய்துவிட்டாலோ அல்லது பாதிக்கப்பட்ட நபராக இருந்தாலோ அவர்களுக்கோ அவர்களின் குடும்பத்தினருக்கோ கொடுக்கப்படும் நஷ்டஈட்டுத் தொகைக்குதான் இத்தனை பெயர்கள். 


இயேசு நாதரை காட்டிக்கொடுத்து 30 வெள்ளிக்காசுகளை வாங்கினான் யூதாஸ். இயேசு சிலுவையில் அறையப்பட்டப் பின் அவன் தன் தவறை உணர்ந்து குற்ற உணர்வு தாளாமல் வாங்கிய காசுகளை திருப்பிக் கொடுத்தான். அப்போது ஆட்சியாளர்கள் இந்த பணத்தை மீண்டும் கஜானாவில் வைக்கமுடியாது. இது ரத்தத்துக்கு கிடைத்த விலை என்று சொன்னார்களாம். அப்போது தோன்றியதுதான் 'ப்ளட் மணி' என்ற வார்த்தை. அதாவது ரத்தத்துக்கு ஈடாக கொடுக்கும் பணம். 


ஜெர்மனியில் 'வியர்கில்ட்' என்ற வழக்கம் நடைமுறையில் இருக்கிறது. 'வியர்' என்றல் மனிதன். 'கில்ட்' என்றால் பணம். ஒவ்வொரு மனித உயிருக்கும் அவர்கள் ஒரு விலையை நிர்ணயித்து இருக்கிறார்கள். அதன்படி தொழிலாளி உயிருக்கு விலை குறைவு. அரசனின் உயிர் என்றால் விலை அதிகம். அடிமைகளாக வாங்கப்பட்ட மனிதர்களை கொல்ல யாரும் யாருக்கும் பணம் தர வேண்டியதில்லை. இஷ்டம் போல் அவர்களை கொல்லலாம். அவர்கள் உயிர் பண மதிப்பற்றவை. 

இது மட்டுமில்லாமல், சில நேரங்களில் 'உயிருக்கு உயிர்' என்ற நடைமுறையும் இருந்தது. அதன்படி குடும்பத்தின் ஆண் வாரிசை யாராவது கொன்று விட்டால் கொன்றவரின் குடும்பத்தில் இருந்து ஒரு ஆண் வாரிசை தத்தெடுத்து தங்கள் குடும்பத்துக்குள் சேர்த்துக் கொள்வார்கள்  தேவாலயத்திலோ அரண்மனையிலோ ஒருவர் கொலை செய்யப்பட்டால், இந்த நஷ்டஈட்டு முறை எதுவும் செல்லாது. அவர்களுக்கு நேரடியாக மரண தண்டனை தான். 

இப்போதைய அரசியல்வாதிகளுக்கு 'ரத்தப்பணம்' கொடுக்கும் தகுதி இருக்க வேண்டும் என்பது கூடுதல் தகுதியை வைத்திருக்கிறார்கள் போல. அதனால்தான் பெரும்பான்மையான அரசியல்வாதிகள் ஊழல் வழக்கில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்களோ..! 



29 கருத்துகள்

  1. புதிய தகவல்கள் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  2. Blood Money.... தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில்..... உங்களை நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சி......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  5. அறியாத செய்தி அறிந்து கொண்டேன் நண்பரே
    தம =1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  6. தெரியாத தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  7. நல்ல பதிவு தெரியாதவற்றை தெரிந்துக் கொண்டேன் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. அறியாத தகவல்கள். அதாவது ப்ளட் மணி என்பது தோன்றியதன் கதை தெரியும். ஆனால் பிற விவரங்கள், பெயர்கள் எல்லாம் புதியது. பகிர்வுக்கு மிக்க நன்றி. இறுதி வரிகளை ரசித்தோம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  9. அன்புள்ள அய்யா,

    இரத்தப் பணம் பற்றி அறிந்து கொண்டேன்.

    த.ம. 7

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  11. தினம் தினம் புதுபுதுத்தகவல்களாய் தந்து அசத்துகிறீர்கள்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  12. அதியசமான தகவல்தான் நண்பரே
    த.ம.வ.போ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  13. அறியாத் தகவல்
    அறியத் தந்தமைக்கு
    நன்றி நண்பரே ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

      நீக்கு
  14. இது இஸ்லாமிய தேசங்களில் சாதாரண நடைமுறை. உதாரணமாக, ஒருவர், கார் ஓட்டும்போது இன்னொருவர் மீது மோதி அவர் இறந்துவிட்டால், உடனே ஜெயில்தான். (வெறும்ன அடிபட்டிருந்தாலும் இதே கதிதான்). இப்படி இறப்பை ஏற்படுத்தியவர்கள் வெளியே வர வாய்ப்பே இல்லை ஒன்றைத் தவிர. இறந்தவரின் குடும்பம், இத்தனை பணம் கொடு என்று கேட்டு, அதை வாங்கிக்கொண்டால், அவர் மன்னித்துவிடப் படுவார். இந்தப் பணம் இரத்தப் பணம். நிறைய சமயம், இறந்தவர் குடும்பம், தவறு செய்தவர் எத்தனை பணம் தருகிறேன் என்று சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாது. அப்படிப்பட்ட பட்சத்தில், ஜெயிலிலிருந்து வெளியே வர வாய்ப்பே இல்லை. சவுதியில், 'கண்ணுக்குக் கண்' என்ற நீதியும் உள்ளது. ஒருவரது உறுப்பை சேதப்படுத்திவிட்டால், சேதத்துக்குள்ளானவர்கள், சேதப்படுத்தியவருக்கு அதே சேதத்தை உண்டாக்குவது. அதுவரை, தவறு செய்தவர் ஜெயிலில்தான் இருக்கவேண்டும். அல்லது, சேதத்துக்குள்ளானவர், மன்னித்தால் வெளியே வரலாம். (இப்படித்தான் ஒரு இந்தியர் சவூதி மனிதரின் கண்ணைச் சேதப் படுத்திவிட்டதால், ஜெயிலில் பல ஆண்டுகள் இருந்தார். சேதத்துக்கு உள்ளானவர் மன்னிக்கத் தயாராக இல்லை. சவூதி மன்னர் இந்திய விஜயம் தீர்மானித்தபோது, அவர், சேதத்துக்கு உள்ளானவரை அழைத்தார். பணம் என்ன வேண்டுமோ ('நஷ்ட ஈடு) தரத் தயாராக இருந்தார். (இந்திய விஜய நல்லெண்ணத்தில்). அழைத்ததிலேயே, கண் சேதப்பட்டவர், தன்னை அந்த கதிக்கு உள்ளாக்கிய இந்தியரை மன்னித்துவிட்டார். அதனால் ஜெயிலில் இருந்து வெளியே வந்து இந்தியா திரும்ப அனுப்பப்பட்டார்.

    இந்த இஸ்லாமியச் சட்டம் சரியானதாகத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே! அறியாத பல தகவல்களை அறியத் தந்தீர்கள்.!

      நீக்கு
  15. செந்தில்,
    புதிய விவரங்கள் .. நிறைய இப்படி உபயோகமாக எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. ரத்தப்பணம் என்றால் கொலை செய்ய தரும் கூலி என்று நினைத்தேன். செய்தி வித்தியாசமானதாய் இருக்கிறது. மனித வாழ்க்கையின் பல வித கொடுமைகளில் இதுவும் ஒன்றா?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை